Advertisement

அரசாணை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு

புதுடில்லி : நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு தமிழக அரசு 85 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த அரசாணையை சென்னை ஐகோர்ட் கடந்த வாரம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Edwin - Tirunelveli, Tamil Nadu,இந்தியா

    முதுகெலும்பு இல்லாத தமிழக அரசியல்வாதிகள் இருக்கும் வரை ஓட்டளித்த தமிழக மக்களுக்கு இந்த அடிமை நிலைதான் போலும். CBSE சிலபஸ் தான் என்றால் எதற்க்காக State Board என்ற கல்வி முறை இந்த தமிழ்நாட்டுக்கு தேவையா . மேலும் அதற்கு ஒரு கல்வி மந்திரி, மாநில முதல் மந்திரி என்ற பதவிகள் எதற்கு.

  • Sasidaran - Chennai,இந்தியா

    மாநில அரசாங்கம் சிபிஐ ரைடில் இருந்து தப்புவதற்காக சும்மா முறையீடு பண்ணுவதாக நடிக்கிறார்கள் .. நடித்தே மாணவர்கள் வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள்.. உண்மையில் தமிழகத்திற்கு நீட் தேவையே இல்லை.. ஆந்திர தெலுங்கானா போல நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு இருக்க வேண்டியது தான்.. அதுவே சரி..அதுதான் மாநில நலனுக்கு நல்லது ..அதிமுக அரசாங்கம் செய்வது எல்லாமே நாடகம் .. உண்மையிலே அதிமுக அரசிக்கிற்கு தமிழக நலனில் அக்கறை இருந்தால் ஒன்னு நீட் வேண்டாம் என்று மொத்தமாக வெளியே வந்து விட வேண்டும் ..இல்லை ஜனாதிபதி தேர்தலில் எங்கள் வாக்கு வேண்டும் என்றால் நீட் பிரச்சனைக்கு வழிவகை ஏற்படுத்தலாம்.அதெல்லாம் விட்டுட்டு சும்மா பாசாங்கு செய்கிறது.. தமிழகத்தில் நிறைய மேதாவிகள் எல்லாம் ஏதோ CBSE தான் சிறந்தது .. மாநில கல்வி முறை கீழ்தரமானது என்று கூறிக்கொண்டு உள்ளார்கள் .. மாநில கல்வி முறையில் படித்து தான் தமிழக மருத்துவர்கள் இத்தனை ஆண்டுகளாக தமிழகத்தை காப்பாற்றி கொண்டு உள்ளார்கள் ...தமிழகம் மருத்துவத்தில் தலை சிறந்து விளங்குகிறது. உண்மையிலேயே CBSE சிறந்தது என்று சொல்வது எந்த அளவுக்கு உண்மை? 2006 வரை தமிழகத்தில் நுழைவு தேர்வு இருந்தது.. அப்பொழுது CBSE படித்த மாணவர்களால் ஏன் அந்த நுழைவு தேர்வில் மார்க் எடுக்க முடியவில்லை .. அதனாலேயே CBSE இல் இருந்து மாநில கல்வி முறைக்கு மாறியவர்கள் ஏராளம்.. ஆக கல்வி முறையில் ஒன்றும் இல்லை.. அந்த நுழைவு தேர்வு எந்த கல்வி முறையின் அடிப்படையில் நடத்தப்படுகிறதோ ,அதில் படித்தவர்கள் நல்ல மதிப்பெண் வாங்க முடியும்.. அவ்வளவே.. இங்க CBSE அடிப்படையில் NEET தேர்வு வைத்தது தான் பிரச்னை.

  • Jaya Ram - madurai,இந்தியா

    அதாவது நீதி என்பது ஒருநாட்டிற்காக ஒரு கிராமத்தினை தியாகம் செய்யலாம், ஒருகிராமத்திற்காக ஓர் வீட்டை தியாகம் செய்யலாம், ஒரு வீட்டிற்காக ஒரு நபரை தியாகம் செய்யலாம் என்பது. ஆனால் இங்கோ எங்கோ ஒருவன் வழக்கு தொடர்ந்தான் என்பதற்காக இந்த நாட்டில அனைத்தினையும் மாற்றுவது விந்தயிலும் விந்தையே. சுதந்திரம் பெற்ற நாள்முதல் மத்திய அரசிற்கு 15 சதவீத இடம் தந்து கொண்டிருக்கிறோம் இதில் அவர்கள் யாரை வேண்டுமென்றாலும் சேர்த்துக்கொள்ளலாம் ஆனால் தற்போது அனைத்து இடங்களும் எங்களுக்குத்தான் நாங்கள் தான் தேர்வு செய்வோம் உங்களுக்கு அந்த உரிமையில்லை என்றால், நீங்கள் தனியாக மெடிக்கல் காலேஜ் கட்டி அதில் ஆட்களை சேர்த்துக்கொள்ளுங்கள் எங்கள் வரிப்பணத்தில் கட்டிய காலேஜ்களில் ஏன் தலையிடுகிறீர்கள், மேலும் இதை போலவே எங்கள் வரிப்பணம் உங்களுக்கு எதற்கு கொடுக்கவேண்டும் என்றால் ஒத்துக்கொள்வீர்களா ஏற்கனவே கூறியுள்ளோம் படேல் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த இந்தியாவை உருவாக்கினார் அதை நீங்கள் சிதைத்துவிடாதீர்கள் நீங்கள் அவருக்கு சிலை வைக்கும் முன்னர் ஒருமை பாட்டிற்க்கே கேள்விக்குறியாக்கிவிடுவீர்கள் போலிருக்கிறது.வீரபாண்டியன் கட்டபொம்மன் படத்தில் ஒரு வசனம் வரும், எங்களோடு வயலுக்கு வந்தாயா, களை பரித்தாயா, நாற்று நட்டாயா,அல்லது எங்கள் குல பெண்களுக்கு மஞ்சளரைத்து கொடுத்தாயா மானம் கெட்டவனே எதற்கு கேட்கிறாய் வரி,வட்டி, கிஸ்தி என்று அப்படி இப்போது நாங்கள் மத்திய அரசினை பார்த்து கேட்கவேண்டி வரக்கூடிய சூழ்நிலையினை உருவாக்கிவிடுவார்கள் போல் இருக்கிறது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement