Advertisement

எடியூரப்பா வீட்டு கதவை தட்டிய போலீசார்

பெங்களூரு: பா.ஜ., மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவின் உதவியாளரை கடத்த முயன்ற வழக்கில் தொடர்புடையவரை தேடி, கர்நாடக பா.ஜ., முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவின் வீட்டின் கதவை நள்ளிரவில் போலீசார் தட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஈஸ்வரப்பா உதவியாளர்கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆனால், பா.ஜ.,வில் பெரும் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. எடியூரப்பா மற்றும் ஈஸ்வரப்பா இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. எனினும், கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா அறிவிக்கப்பட்டுள்ளார். இது, ஈஸ்வரப்பாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இச்சூழ்நிலையில், ஈஸ்வரப்பாவின் உதவியாளரை கடத்த முயற்சி நடந்தது. இந்த விவகாரத்தில் எடியூரப்பாவின் உறவினரும், உதவியாளருமான சந்தோஷுக்கு தொடர்பு உள்ளது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, சந்தோஷிடம் விசாரணை நடத்த, பெங்களூருவில் உள்ள எடியூரப்பா வீட்டுக்கு போலீசார் சென்றனர். அவர் வீட்டு கதவை தட்டியுள்ளனர். அங்கேயே ஒரு மணி நேரம் காத்திருந்த போலீசார், பின் விசாரணை ஏதும் நடத்தாமல் திரும்பி சென்றனர்.

எடியூரப்பா கோபம்நள்ளிரவில் தன் வீட்டுக்கு போலீசார் வந்ததால் கோபமடைந்த எடியூரப்பா இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். கடத்தல் முயற்சி விவகாரத்தில் ஆதாரம் என்று கூறப்படுவது எல்லாம் போலியானவை என அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். எனினும், எடியூரப்பாவின் வீட்டின் அருகே சீருடை அணியாத போலீசார் தங்கி இருப்பது இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கி உள்ளது.Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (29)

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  காங்கிரஸ் ஊடகங்கள் சித்தரிப்பது போல எடியூரப்பா ஒன்றும் கெட்ட​வர் கிடையாது.. தமிழ் நாட்டில் இருக்கும் கழகங்களை பார்க்கும் பொழுது இவர் ஆட்சி பன்மடங்கு மேல்... மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்.. தவிர நீதிமன்றமும் இவரை பல போலி வழக்குகளிலிருந்து விடுதலை செய்துள்ளது..

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  ரூபா என்ற அதிகாரி நேர்மையாக செயல்பட்டால் , பக்தாள் பாஞ்சு வந்து சொம்பு தூக்குறாங்க .. இங்கே போலீஸ் சந்தேகத்தின் பெயரில் கதவின் மேல் கை வெச்சதுக்கே கதறுறீங்க .. அதுவும் யாரு புனிதர் எடியூரப்பா உங்க கட்சியின் மற்றோரு தலைவரின் குடும்ப நபரை தூக்கியதற்கு .. நேர்மை என்றால் என்ன பக்தா ?? புதுசா விளக்கம் சொல்லுவீங்களே .. கேக்க நல்ல இருக்கும் சொல்லுங்க ..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தலைவர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்...

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  ஐயோ ஐயோ கொல்றாங்களே என்ற வசனம் ஒளிபரப்பப்படுமா

 • makkal neethi - TVL,இந்தியா

  சீத்தாராமைய்யா தேர்தலில் நிக்கமாட்டேன்னு சொல்லி டி ஆர் பி ஏத்துறாரு ..எடியூரப்பா போலீஸ் கூப்பிட்டு கதவ தட்ட சொல்லி டி ஆர் பி ஏத்துறாரு... உங்களுக்கெல்லாம் ஓட்டு போடும் இந்திய மக்கள் பாவம்டா

 • Balaji - Khaithan,குவைத்

  போலீசார் விசாரணைக்கு வர நேரம் காலமெல்லாம் நிர்ணயிக்க தேவையில்லை ....... ஆனால் விசாரிப்பதற்கு முறையான அனுமதி பெற்றிருந்தனரா என்பதை மட்டுமே சரிபார்த்திருக்க வேண்டும்......... இந்த செய்தியை படித்தால் கதவை நாடு இரவில் தட்டினாலும் அவர்கள் கதவை திறந்தது போன்று இல்லை....... பிறகு ஏன் மீண்டும் பதறுகிறார் என்பது தான் சந்தேகமாக இருக்கிறது...........

 • vnatarajan - chennai,இந்தியா

  எடியூரப்பாவை முன் நிறுத்தினால் கண்டிப்பாக பிஜேபி க்கு வெற்றி கிடைப்பது சந்தேகமே.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  கர்நாடகா மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் , தங்களுக்கு யார் வேண்டும் என்று முடிவு செய்வார்கள்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  புது டிக்ஷனரி தயாரிக்க வேண்டும் தமிழில். அதில் அரசியல்வாதி என்றால்- அயோக்கியன், கொலைகாரன், திருடன், ஊழல் மட்டுமெ செய்பவன், கற்பழிப்பவன், பொய் புனை சுருட்டு செய்பவன் ......................அந்த பக்கம் முழுவதும் விளக்கமாக எழுதப்படவேண்டும்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  மொத்தத்தில் சுதந்திரம் என்பது தவறானவர்கள் கைகளில் அகப்பட்டுக் கொண்டு தனி மனிதர்களுக்குள் இருக்கும் நாற்காலி சண்டையில் நாட்டை சீரழிக்கும் ஒரு நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது, வந்தே மாதரம்

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  அய்யகோ என்ன கொடுமை இது...பிஜேபி புனிதர் வீட்டில் போலீசா.....? காங்கிரசின் அழிவு காலம் ஆரம்பம்...... .இப்படிக்கு.......பக்த கேடிகள்.........

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  நான் பிஜேபி ஆதரவாளன் தான்... ஆனால்.... எதனாலோ. இந்த எடியூரப்பா மேல அவ்வளவு மரியாதை இல்லை...... வேறு ஒரு நல்ல தலைவரை அடையாளம் காட்டலாம்... சதானந்த கவுடா இவருக்கு எவ்வளவோ மேல்..

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ஊழல் எடியூரப்பாவையும், ஜனார்தன் ரெட்டியையும் வைத்து குப்பை கொட்டும் பாஜக, நேர்மை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல...உண்மையிலேயே ஊழல் இல்லாதவர்கள் என்றால் லோக் பால் சட்டத்தை GST போல ராவோடு ராவா கொட்டடித்து கும்மாளமிட்டு கொண்டுவரலாமே ?.. [ அல்லக்கைகள் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லமால் சந்துபொந்து இண்டுஇடுக்கு களில் ஒழிந்து கொள்வார்கள் ]

 • Shriram - Chennai,இந்தியா

  போலீசாரிடம் ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் சமர்ப்பிக்காமல் இவர் வீட்டுக்கு வந்து அதுவம் நடுராத்திரியில் ? தேவைதானா ? காங்கிரஸ் ராவுல் சொல்வதைக்கேட்டால் இப்படித்தான் ஏடாகூடாம் ஆகும்,

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  தொடர்புடைய நபர் வீட்டில் இல்லையென்றால் வீட்டை திறந்து காட்டுவதில் என்ன தயக்கம்? மேலும் எடியூரப்பாவுக்கு இடையூறை ஏற்படுத்தியதே ஈஸ்வரப்பாதான் என்றும் சொல்கிறார்கள்.

 • vasanthan - Moscow,ரஷ்யா

  கர்நாடகாவிலும் காங்கிரஸ் அழியப்போவதற்கு அடையாளம் பிரகாசமாக தெரிகிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement