Advertisement

மீண்டும் விசாரிக்கப்படும் போபர்ஸ் வழக்கு?

புதுடில்லி: காங்கிரசுக்கு தீராத தலைவலியாக உள்ள போபர்ஸ் பீரங்கி பேர வழக்கை மத்திய அரசு மீண்டும் விசாரிக்க உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்துஜா சகோதரர்கள்ராஜிவ் பிரதமராக இருந்த போது, போபர்ஸ் பீரங்கி பேர வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த வழக்கில் தொடர்புடைய இந்துஜா சகோதரர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க அப்போதைய மத்திய அரசு அனுமதி தராதது, சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மீறி, லண்டன் வங்கியில் இருந்த பல கோடி ரூபாயை, காங்., தலைவர் சோனியாவின் உறவினர் குட்ரோச்சி எடுத்து சென்றது போன்ற விஷயங்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளன.
பார்லிமென்ட்டின் பொது கணக்கு குழுவிற்கு ஒரு துணை பிரிவு உண்டு. மத்திய அமைச்சகங்களில் நிலுவையில் உள்ள விவகாரங்களை இந்த குழு விசாரித்து வருகிறது. இந்த குழு தான் இந்துஜா சகோதரர்கள் விவகாரம், குட்ரோச்சி விவகாரம் குறித்து, ராணுவ அமைச்சகம் மற்றும் சி.பி.ஐ.,க்கு கேள்வி எழுப்பி இருந்தது. இந்துஜா சகோதர்கள் மீது விசாரணை தொடர கூடாது டில்லி உயர்நீதிமன்றம், 2005ம் ஆண்டு மே 31ம் தேதி உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம் என மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையிடம் சி.பி.ஐ., ஆலோசனை கூறியது. ஆனால், அப்போது மத்திய அமைச்சர் பரத்வாஜ் தலைமையிலான மத்திய சட்ட அமைச்சகம் அப்பீல் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ., அனுமதி தரவில்லை. எனினும், வழக்கறிஞர் அஜய் குமார் அகர்வால் என்பவர் இதுபோன்ற மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.


குட்ரோச்சி விவகாரம்போபர்ஸ் வழக்கில், குட்ரோச்சி லஞ்சம் வாங்கி இருந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரித்த சுப்ரீம் கோர்ட், லண்டனில் உள்ள பி.எஸ்.ஐ., - ஏ.ஜி., வங்கியில் குட்ரோச்சி கணக்கில் இருந்த 3 மில்லியன் டாலர் பணத்தை முடக்கும்படி, 2006ம் ஆண்டு ஜன., 16ல் உத்தரவிட்டது. ஆனால், இது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள், பிரிட்டன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் முன், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட ஜன., 16ம் தேதியே குட்ரோச்சி வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் எடுக்கப்பட்டதாக இன்டர்போல் அமைப்பு ஜன., 19ல் தெரிவித்தது. இந்த விஷயத்தை பார்லி நிலைக்குழுவிடம் ராணுவ அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்தது. இதையடுத்து போபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என பார்லி நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (29)

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இன்னிக்கி நேதாஜி பிளேன் விபத்துல சாகலை இன்னு ஒரு பிரெஞ்சு செய்தி சொல்லுதே..என்ன செய்ய போறாங்க?திரும்ப விசாரிப்பு,ஆவண வெளியீடு இன்னு மீண்டுமா ?

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  வெறும் விளம்பரத்துக்காக மத்திய அரசு, இந்த வழக்கை மீண்டும் எடுத்திருக்கு, இதில் சம்பத்தப்பட்ட பலர் பரலோகம் போய்விட்டார்கள், பலர் நாட்டிலே இல்லை, இந்த நேரத்தையும் பணத்தையும் வேறு தேவைக்கு பயன்படுத்தலாம். குட்ரோச்சியின் பணத்தைவிட, உயிரோடு இருக்கும் மல்லையாவின் பணத்தையும், மல்லையாவையும் மீட்டுக்கொண்டு வாருங்க,

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  எப்படியெல்லாம் எத்தனை தடவை விசாரித்தாலும் முடிவு ஒன்றுதான். போதிய சாட்சியங்கள் இல்லாமல், வழக்கு தள்ளுபடி செய்யப்படும். அன்றே அத்தனை விஷயத்தையும் மூடியாகி விட்டது. ஆளைக்காணோம், ரெகார்ட் காணோம், போதிய சாட்சி வரவில்லை. சாட்சியங்கள் தடம்மாறி விடும். சும்மாவா , காங்கிரஸ் ஆச்சே,

 • yaaro - chennai,இந்தியா

  ஒரு காலத்தில் சில கோடி ஊழல் ஒரு அரசையே கவிழ்த்தது என நினைக்கவே நம்ப முடியாத ஒன்றாக இருக்கு . இன்னய தேதியில் பேப்பரில் "இருபது கோடி ஊழல் " என நியூஸ் வந்தா .."ஓ பரவாயில்ல இருபது கோடி தான்.." அப்படின்னு கவனிக்காம போற நிலைமைக்கு வந்திட்டோம். இது அன்னை சோனியாவின் மற்றும் தமிழின தலைவர்கள் கருணாநிதி ஜேஜே அவர்களின் சாதனை. இன்னொரு விஷயம் - போபோர்ஸ் நல்ல தரமான பீரங்கி தான். கமிஷன் அடிச்சது தான் தப்பு. மேற்குறிப்பிட்ட மூவர் - தரத்திலயும் கைய வெச்சு நாட்டை நாசம் பண்ணிட்டாங்க

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  என்னாது மறுபடியும் ஆரம்ப முதல் விசாரணையா? இதனால் என்ன லாபம்? மீடியாவுக்கு மட்டும் தான் லாபம்? அதில் ஊழல் செய்த 98 % மக்கள் காந்தி என்று சொல்லிக் கொள்ளும் நேரு குடும்பம் முதல் கடை நிலை ஊழியர் வரை இந்தியாவில் மற்றும் அயல் நாட்டில் எப்பொழுதோ மேலுலகம் சென்று விட்டனரே? இப்பொழுது பாக்கி இருப்பது அவர்கள் வம்சத்தார் மட்டும் தான்?? வேறே வேலையை பாருங்கய்யா?

 • ஜெய சேகர் - ஆண்டிபட்டி,இந்தியா

  மொத்த வியாபாரத்தில் புரோக்கர் commission 0.01 % என்பது நடந்து கொண்டு தான் இருக்கும், முன்பு தெரியாமல் வாங்கினார்கள், இப்போது சேவை கட்டணம் போட்டு அதற்கு சேவை வரி போட்டு வாங்கி கொள்கிறார்கள். அணைத்து நாடுகளிலும் இது நடைமுறையில் உள்ளது.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கிட்ட தட்ட எட்டு வருடங்கள் 95 கோடி செலவழித்து ரிப்ரோட் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இனி இதில் விசாரிக்கவோ விமர்சிக்கவோ எதுவும் இல்லை என்று ஒரே வரியில் ஊத்தி மூடியது. மீண்டும் இதை ஆரம்பித்து வயசான சிலருக்கு மக்கள் வரிப்பணத்தில் ஆபீஸ், கார், டூர் அயல்நாட்டுப் பயணம், கூடவே மக்களிடையே , காங்கிரசை பிடிக்கிறேன் பார், அழைக்கிறேன் பார் என்று ஒரு பிரச்சாரம் - இதற்காகத் தான் ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பித்தாலும் ஒரு புண்ணாகும் நடக்கப் போவதில்லை . ஸ்டார்ட் ம்யூசிக்..

 • Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா

  ஊழல் என்பது காங்கிரசுக்கு கைவந்த கலை

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  வாத்தியாருக்கு பாடம் எடுத்த கதையாகிவிடும் .. பதவியை விட்டு சென்றவுடன் உள்ளே தூக்கி போட்டு விசாரணை நடத்துவான் காங்கிரெஸ்க்காரன் இது சரித்திர உண்மை தரித்திரியங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதும் சரிதானா ?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பணம் யாருக்கு சென்றது என்று அறிந்தே ஆகவேண்டும்.. மக்களின் பணத்தை யார் சரியாக கையாளவில்லை, யார் கன்னமிட்டார்கள் போன்ற விஷயங்கள் கண்டிப்பாக மக்களுக்கு தெரிந்தே ஆகவேண்டும்...

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  இன்னும் ரெண்டு வ்ரஷதீலே தேர்தல் வர்ருது.... ஏதாவது செஞ்சு ஆகணும்.... அரசியல் புரியலைடா சாமி....

 • John Selvaraj - Dindigul,இந்தியா

  போபோர்ஸ் பீரங்கி ஊழலே 60 கோடிதான். யப்பா மோடி, அதுக்கு மேல பல கோடி செலவு பண்ணி விசாரிச்சாச்சு. நாட்டுல நல்லது ஏதாவது செய்ய பாருப்பா.

 • K Seetharaman - Chennai,இந்தியா

  இந்தியனின் வரிப்பணம் வீணடிக்கப் படுகிறது. இது ஓர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான். மதிப்பிற்குரிய பிரதமர் இதையெல்லாம் மறந்து நாட்டின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவேண்டும். திரும்பவும் விசாரிக்க போவதால் ஒன்றும் நடந்துவிடாது. சும்மா காங்கிரெஸ் மிரட்டலாம் அவ்வளோதான், நாட்டின் சாதாரண குடிமகனுக்கு ஒன்றும் பலனில்லை.

 • vasanthan - Moscow,ரஷ்யா

  ஆடிய ஆட்டத்துக்கு அழிவை நோக்கி வெகு வேகமாக செல்கிறது, அடுத்து ஊரையே அடித்து உலையில் போட்ட கழகத்துக்கும் வெகு விரைவில் சாவு மணி அடிக்க வேண்டும்.

 • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

  time waste . ஒழுங்கா ஆட்சி செயுங்கடா.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  போபோர்ஸ் வழக்கு ஒரு காமதேனு கற்பக விருட்சம் தோண்டத்தோண்ட வரும்

 • JeevaKiran - COONOOR,இந்தியா

  அதைவிட்டுவிட்டு, தற்போது நடந்த தலைமை செயலாளர் வழக்கு, ஆவின் பால் முறைகேடு வழக்கு, விஜயபாஸ்கர் வழக்கு, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, நித்தியானந்தா- ரஞ்சிதா வழக்கு போன்றவற்றில் விசாரணை செய்து தண்டனை வாங்கித் தாருங்கள்.

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  விசாரிக்கணும்ப்பா... விசாரிக்கணும்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement