Advertisement

கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபி சத்யநாராயணாவும் மாற்றம்

பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனியாக சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தனி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக தரப்பட்டுள்ளது என கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.
சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் தான் இந்த பணத்தை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டினார். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரிக்க, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்த சூழ்நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா, பெங்களூரு நகர போக்குவரத்து பிரிவு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, கர்நாடக அரசு, இன்று( ஜூலை, 17) பிறப்பித்துள்ளது.
ரூபாவை தொடர்ந்து சசிகலாவிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த கர்நாடக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., சத்யநாராயண ராவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஏ.எஸ்.என்.மூர்த்தி சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (29)

 • Palanisamy PK - Chennai,இந்தியா

  அய்யா சத்யநாராயணா ராவ் அவர்களே. திருட்டு பயல் மோசடி தினகரன் தலைமையில் எங்கள் கூவத்தூர் கும்மாள எம் எல் ஏ க்கள் கேரளாக்காரிகளுடன் சசி அறையில் குத்தாட்டம் போட வருகிறார்கள்.

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  ஏன் எல்லாரும் அவர்களுக்கு பிடித்த கட்சியை வச்சே கருத்து கூறுகிறார்கள். அதனால்தான் யாரும் அரசியல்வாதியை எதிர்க்க பயப்படுறான். ஏன் அவனுக்கு என்று ஒரு வெட்டி கும்பல் குரல் கொடுக்க பின்னால் இருக்கு. அப்போ அவன் மீசையை முறுக்கதான் செய்வான். நேர்மையானவர் பம்மதான் செய்வார்கள். சரி இப்போ நான் கேட்கிறேன்... இப்போ நாம நம்ம கருத்தை பதிவு மட்டும் செய்கிறோம். வேறு என்ன செய்கிறோம்? ரோட்டில் இறங்கி அந்த நேர்மையான அதிகாரிக்கு குரல் கொடுக்க எத்தனை பேர் தயார்? இதே ஒரு அரசியல்வாதி என்றால்? பந்த் நடந்திருக்கும்.. பஸ்கள் எரிந்திருக்கும்.... அதிகாரிகளை குறை சொல்லாதீர்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஒரு மன்னார்குடி பெண்மணி உங்கள் எல்லோரையும் பணத்தால் வாங்கி விட்டார் என்பதை அறியும் பொழுது உங்களது பிரதாபம் தெரிகிறது...வாட்டாள் நாகராஜ் உங்கள் ஆளுகள் எவ்வளவு புத்திசாலிகள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்..

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  விற்பனைக்கு வரும் சிறைச்சாலைகள். தண்டனை என்பது குற்றவாளி தவறுகளை திருத்திக் கொள்ள கொடுக்கப்படும் சந்தர்ப்பம். இன்னும் கெட்டுப்போறேன் என்ன பந்தயம் என்று இருப்பவர்களுக்கு , இதெல்லாம் போதாது.

 • Balaji - Khaithan,குவைத்

  திருமதி ரூபாவை மட்டும் மாற்றி விட்டு இவரை மாற்றாமல் இருந்தால் தனக்கு கெட்ட பெயர் வரும் என்பதனால் தற்போது முதலில் நேர்மையாக இருந்தவரை மாற்றிவிட்டு தாமதமாக ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவரை (அதுவும் எந்தத்துறை என்று எந்தவொரு அறிவிப்பும் இல்லை) மாற்றியிருக்கிறார் கர்நாடக முதல்வர்.........

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  இவரை எங்கே மாத்துவானுங்க.... கதர் வாரிய தலைவர் பதவி ரெம்ப பவர்புல் ...அங்க போட்டால் ...இவரு தான் எல்லாம்...

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  "சசிகலா என்ன சுதந்திர போராட்ட தியாகியா " ன்னு எவ்வளவு வீரமா கேட்டாரு.. இப்புடி "ஆயி"ப்போச்சே....

 • Rajinikanth - Chennai,இந்தியா

  அடேய் ....ஊழல்பெருச்சாளிகளே .... மாற்ற வேண்டியது அவர்களை அல்ல ..நம்பி வாக்களித்த மக்களுக்கு நாமம் போடும் உங்களைத்தான் ... செப்பனிட வேண்டியது சிறைத்துறையை அல்ல... சீரழிந்து கிடைக்கும் உங்கள் சிந்தனைகளை .... நான் ஏற்கெனவே சொன்னது மாதிரி ரூபாவை மாற்றி விட்டார்கள்.. அதற்கு சப்பைக்கட்டாக சத்யநாராயணாவையும் மாற்றுவது போல ஸீன் கிரியேட் பண்ணியிருக்காங்க .... இது கூட தெரியாத பப்பாவா நாங்க ...?

 • anand - Chennai,இந்தியா

  தமிழக காங்கிரஸ் தலைவர் தான் ஜாதி பாசத்தால் எல்லா ஏற்படும் பண்ணி கொடுக்கிறதா கேள்வி.. உண்மையா?

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  சரீ..இனிமேலாவது சித்திக்கு மொத்த களி குடுப்பீங்களா...இல்லை இனிமேலும் முனியாண்டி விலாஸ் சாப்பாடு தானா? சீக்கிரம் சொல்லுங்க...நிறையா வேலை கிடக்குது....

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் உண்மை வெளிவரும் என்று நான் நம்பவில்லை...

 • vnatarajan - chennai,இந்தியா

  தனக்கு மேலே உள்ள ஒரு அதிகாரியின் மீது துணிச்சலாக குற்றம் சாட்டிய ரூபாவை பாராட்டத்தான்வேண்டும் இந்த விஷயம் வெளியே தெரியாமல் போயிருந்தால் நான்கு வருடத்தில் சசிகலா அம்மையார் அந்த சிறை கூடத்தையே விலைக்கு வங்கியிருப்பார். அந்த இடமும் ஒரு கொடநாடாக மாறியிருக்கும் சசிகலாவின் வாழ்க்கை ஒரு சினிமாவாக வந்தாலும் வரலாம் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தன மூளையை மட்டும் உபயோகித்திருந்தால் புகழ் ஏணியின் உச்சியிலிருந்து கீழே விழுந்திருக்கமாட்டார். ஆனால் சசியின் மூளையையும் கடன்வாங்கியதால்தான் அவர் புகழுக்கு ஒரு பெரிய கரும்புள்ளி விழுந்துவிட்டது.

 • Sekar KR - Chennai,இந்தியா

  இனி தமிழச்சிகிட்ட விளையாடாதே . ஆட்சியே ஆட்டம் கண்டிடும்.. நல்லவேளை எங்கம்மா கூடஇல்லை .

 • Sandru - Chennai,இந்தியா

  இந்த ஆளு கடந்த நான்கு மாதத்தில் நன்றாக செட்டில் ஆகி விட்டார்.

 • Baskar - Paris,பிரான்ஸ்

  இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் காங்கிரஸ்காரன் எப்போதும் கொள்ளை அடிப்பவனுக்கும் ஊழல் செய்பவனுக்கு கொலைகாரனுக்கு என்றுமே பக்க துணையாக இருப்பார்கள் என தெரிகிறது.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  சகாயத்தை ஜெயா தூக்கி அடிக்கலயா, அப்படி தான்... ரூபாவை இடமாறுதல் செய்ததால் யாருக்கும் சந்தேகம் வர கூடாதுன்னு சீக்கிரம் ரிடையர் ஆக போற சத்திய நாராயணனையும் இட மாறுதல் செஞ்சி இருக்காங்க...இதன் மூலம் பத்திரிக்கையாளர்களை அவர்கள் எதிர் கொள்ளலாம்..

 • rajan - kerala,இந்தியா

  சபாஷ் காங்கிரஸ் ஊழல் ஆட்சி கர்நாடகாவில் நல்ல கல்லா கட்டுது. விசில் ப்ளோயர்ஸ் க்கு எந்த பாதுகாப்பு இல்லை இந்த ஜனநாயகத்தில். இனி சீதாராமையாவை தான் இடமாற்றம் செய்யவேண்டும். கிக் அவுட்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இடமாற்றம் மற்றும் ஊழலை விசாரிக்க ஒரு குழுவை உள்ளூர் அதிகாரிகளை கொண்டே நியமித்தது எல்லாமே ஏமாற்று வித்தை தான்

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இனி ரூபாவும் அங்கு இல்லாததால் பதினைந்து நாளுக்கொரு முறை ஆட்களை மாற்றி அனைவரும் சம்பாதிக்க ஏற்பாடு செய்வார் சித்து. அவருக்கும் கமிஷன் வருமல்லவா? திருநாவும் சந்தோஷப்படுவார்.

 • குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா

  அப்புக்குட்டி அண்ணன் எங்கே இன்னும் காணோம்

 • R Sanjay - Chennai,இந்தியா

  நீயெல்லாம் ஒரு சிறைத்துறை டிஜிபி, படிச்சிட்டு இந்தமாதிரி பொழப்பு பொழைக்குறதுக்கு?

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  இவருக்கும் இனி பண வருமானம் உண்டு.

 • Anandha Kumar - Bangalore,இந்தியா

  வாங்கின ரெண்டு கோடி ரூபாய் எங்கே போச்சு?

 • Anandha Kumar - Bangalore,இந்தியா

  வெறும் இடமாற்றத்தால் எந்த பயனும் இல்லை. வேறு இடத்தில போய் அதே தப்பை மீண்டும் செய்ய போகிறார். செய்த தப்புக்கு தண்டனை என்று கொடுத்தால் தான் அடுத்த தடவை தப்பு செய்ய கூடாது என்ற பயம் இருக்கும். சரி, கர்நாடகாவில் நடக்கும் காங்கிரஸ் ஆட்சியில் எப்படி நியாயத்தை எதிர்பாக்க முடியும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement