Advertisement

டி.ஐ.ஜி., ரூபா திடீர் மாற்றம்

பெங்களூரு: சசிகலாவுக்கு சிறையில் பல்வேறு வசதிகள் செய்து தர இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டுள்ளது என குற்றம் சாட்டிய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிறையில் சலுகைபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனியாக சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தனி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக தரப்பட்டுள்ளது என கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டி இருந்தார். சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் தான் இந்த பணத்தை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டினார். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரிக்க, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்த சூழ்நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா, பெங்களூரு நகர போக்குவரத்து பிரிவு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, கர்நாடக அரசு, இன்று( ஜூலை, 17) பிறப்பித்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (103)

 • உகதி -

  ரூபா மாற்றம் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு வேளை ஜெ உயிருடன் இருந்து சசியுடன் சிறையில் இருந்து இருந்தால் இதைவிட அதிக அளவில் சலுகைகள் கிடைத்திருக்கும். அந்த சூழலில் இது போல் நடந்து இருந்தால் வரவேற்று இருக்கலாம். ஆனா இப்போது எல்லாம் அரசியலாகவே தோன்றுகிறது.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  இவர் மட்டுமா மாற்றப்பட்டுள்ளார் ?? இவர் குற்றம் சுமத்திய மேல் அதிகாரியும் தான் .. அந்த மேல் அதிகாரிக்கு குற்றம் விசாரித்து முடியும் வரை எந்த பணியும் ஒதுக்கவில்லை .. ரூபாவுக்கு பணி ஒதுக்கி இருக்கிறார்கள் .. அந்த மேல் அதிகாரியும் ரூபா மீது குற்றம் சுமத்தியுள்ளார் .. தான் குடுத்த மெமோக்களுக்கு பழி வாங்க தான் இவ்வாறு கூறுகிறார் என்று .. அரசு எடுத்த நடவடிக்கை மிகவும் சரி .. சசிகலாவுக்கு ஆதரவா செயல்பட 35 கோடி வாங்கி இருக்கின்றனர் என்று பக்தா எழுதிருக்கின்றனர்.. ஜெயா சசிகலாவுக்கு எதிரா மேல் முறையீடு செய்யாம இருந்து இருந்தா 3500 கோடி கூட வாங்கி இருக்கலாமே ?? அந்த முழு அதிகாரம் கர்நாடக அரசுக்கு தானே இருந்தது ?? சித்தராமையா நேர்மையாளர் என்றோ , சிறையில் சலுகை கிடைக்காது என்றோ நான் சொல்லல .. இந்தியாவின் அத்தனை சிறைகளிலும் காசு இருந்தா என்ன வேணா கிடைக்கும் .. ஆனா கொஞ்சம் லாஜிக் ஓட பேசணும் ..

 • christ - chennai,இந்தியா

  இந்தியாவில் நேர்மைக்கு கிடைத்த பரிசு இதுதான் .வெட்கப்பட வேண்டிய விஷயம். இந்திய வல்லரசு என சொல்லி என்ன பயன் ? தீவிரவாதிகளை விட கொடியவர்கள் அடைக்கலம் புகுந்த இடம் அரசியல்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஊழலில் ஊறிப்போன ஒரு குற்றப்பின்னணி உடைய ஒரு பெண் குற்றவாளியை கேட்க தகுதி இல்லாத நீங்கள் ரூபாவை மாற்றியது நீங்கள் தவறு செய்ததை ஊர்ஜிதம் செய்கிறது...

 • Appu - Madurai,இந்தியா

  எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.. நேற்றும் முந்தைய நாளும் எனது கருத்தில் இதை தெரிவித்திருந்தேன்.. ஆனால் இவ்வளவு தடாலடியாக ஒன்றிரண்டு நாளில் நடக்கும் என்று நினைக்கவில்லை...

 • samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

  கர்நாடக முதல்வர் ஏன் தவறு செய்கிறார் இரண்டு கோடி வாங்கலில் அவரது பெயரும் இருக்கும் போல் தோன்றுகிறது

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இந்தியா உலகில் ஊழலில் முதலிடம் பிடிக்க எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு பாருங்க.. அதுக்கு சதிகலாவின் சேவை மகத்தானது. அது கூட முப்பது வருஷம் உல்லாசமா கொள்ளையடிச்ச ஜெயலலிதா தான் அதிமுக அடிமைகளுக்கு வழிகாட்டியாம். நாசமாப் போக..அந்த அடிமைகளை மிரட்டி ஒரு நாத்தம் பிடிச்ச கட்சி தனது வேலையை சாதிச்சிக்குது. அந்த நாத்தம் பிடிச்ச கட்சி தான் நாட்டை காப்பாத்தப் போகுதாம்.. பண்டாரங்கள் சொல்லிக்கிட்டு அலையிறாங்க.

 • Arumugam - Paris,பிரான்ஸ்

  நுதலை (தவளை) தன் வாயால் கெடும். தனக்கு கிரண்பேடி ஆதரவு தருவதை வெளிப்படையாக டுவிட்டர் செய்த இந்த பா ஜ க ஏஜன்டின் சேவை குஜராத் அல்லது உ பி க்கு தேவைப்படலாம்.

 • Balaji - Khaithan,குவைத்

  குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும்........ இதன் மூலம் அவர் தொடர்ந்து அங்கு இருந்தால் மேலும் மேலும் பல வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும் என்பதனால் தூக்கியடிக்கப்பட்டுள்ளார்........... நேர்மையாக இருப்பவர்களுக்கு இதுதான் (இந்தியா) ஆட்சியாளர்கள் தரும் மரியாதை...........

 • Shanu - Mumbai,இந்தியா

  இது எதிர்பார்த்தது தான். சசிகலா கும்பலை எதிர்ப்பவர்கள் சாக துணிந்தவர்களாக தான் இருக்க வேண்டும். இனி இந்த பெண்ணின் உயிருக்கும், இவரது குடும்பத்தின் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை. இது தான் இந்தியா.

 • srinivassane - karaikal,இந்தியா

  ஹையா நேர்மைக்கு கிடைத்த பரிசு.

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  கர்நாடக சிறைத்துறை டிஜிபியும் இடம் மற்றம் செய்யப்பட்டுள்ளார் ,அதே சமயம் டி.ஐ.ஜி. ரூபாவும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் வருகிறது .அதனால் பிஜேபி ஏற்கனவே ஊழலில் பங்கு பெற்று இத்தனை காலம் இருந்தாலும் புனிதர் வேடம் புனைந்து கர்நாடக அரசின் மீது தாக்குதல் நடத்தும் . காங்கிரஸ் பிஜேபி , JDS என்று மூன்று திருடர்களும் லஞ்சத்தை பங்கு போடுவது மாறப்போவதில்லை.

 • R Sanjay - Chennai,இந்தியா

  வகுப்பில் முதல் வரிசையில் உட்கார்ந்து ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை நன்றாக படித்து பிறகு வீட்டிற்கு சென்று மீண்டும் நன்றாக படித்து தாய் தந்தை உறவினர்கள் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் என்று அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து கஷ்டப்பட்டு IAS/IPS படித்து இந்த உயர் நிலைக்கு வந்தால். அதே வகுப்பில் கடைசி வரிசையில் அமர்ந்து ஆசியர் சொல்லிக் கொடுப்பதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு வகுப்பறையில் கவனம் செலுத்தாமல் வெறுமனே பெஞ்சை சில பல அங்குலங்கள் குறைத்துவிட்டு உடன் படிக்கும் மாணவிகளை கலாய்த்துவிட்டு ஒன்றுமே படிக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிவந்துவிட்டு வீட்டிலும் தாய் தந்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் "இது வீட்டிற்கு உதவாத தறுதலை" என்ற மானங்கெட்ட பெயரை சம்பாத்தித்து விட்டு பத்து பன்னிரண்டாம் வகுப்புகளில் பல கோட்டை விட்டபிறகு தருதலையாகத்திரிவது, அல்லது அதற்க்கு அடுத்த முயற்சியாக கல்லூரியில் சேர்ந்து முறையாக கல்லூரிப் படிப்பை முடிக்காமல் அனைத்து பாடத்திலும் தோல்வி கண்டு சினிமா தியேட்டர் பார்க்கென்று ஊர்ப்பொறுக்கி தனமாக சுற்றி இந்த ஜடம் ஒன்றிக்குமே உதவாது என்ற நிலைக்கு சென்றுவிட்ட பிறகு எதோ ஒரு கூத்தாடி /குடுமிப்புடி அரசியல் கட்சியில் சேர்ந்து பல பல முல்லை மாற்றங்கள்(ரி) வேலைகள் செய்து அவன் இவன் கையை பிடித்து MLA சீட்டு வாங்கி பிறகு அமைச்சர் முதலமைச்சர் ஆகி தான் உட்கார்ந்த கடைசி பெஞ்சிற்கு நன்றி நினைப்பது பிறகு தனக்கு தொல்லை கொடுக்கும் முதல் வகுப்பில் பாஸாகி IAS/IPS மாணவர்களை மட்டும் தனக்கு விருப்பம் போல் இந்தியால எங்கு வேண்டுமானாலும் தூக்கி இடம் மாற்றம் செய்து தான் பெற்ற கெட்ட பெயர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது. ஐயோ கடவுளே. இது தான் கலியுகம். திருமதி ரூபா அவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

 • Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ

  உண்மைக்கும் நேர்மைக்கும் இந்த கீழ்த்தரமான திருட்டு அரசியல்வாதிகள் இதை தவிர வேறு என்ன செய்வார்கள். கர்நாடகாவில் நீதி விலை போகும். நாம் நன்கு அறிந்தது. இன்று நேர்மை காணாமல் போய்விட்டது. எது எதற்க்கோ வரிந்து கட்டிக்கொண்டு வரும் உச்ச நீதிமன்றம் இதில் ஏன் மெளனமாக இருக்கின்றது. லஞ்சமும் ஊழலும் கர்நாடகாவில் தலைவிரித்து ஆடுகின்றது.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  சில கூமுட்டைகள் பாஜகவை வம்புக்கு இழுக்கின்றன... இதே போலீஸ் அதிகாரி தான் உமா பாரதியை கைது செய்தார், எடியூரப்பா அவர்களின் காவல் அளவை குறைத்தார் என்று இரண்டு நாட்கள் முன்பு வந்த செய்திகளை ஜே ஜே போன்ற சொம்பைகள் மறந்து விட்டனர்

 • Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  It is as expected since when the inquiry is announced, the subject individual is to be shifted for fair investigation. DGP is also to be shifted.

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  பிஜேபியின் கட்டளையை திறமையாக நிறைவேத்தினார்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  முதல்வரை கூட மதிக்காமல் பேட்டி கொடுத்த ரூபாவை குஜராத்துக்கு அல்லது UP க்கு மாற்றம் செய்யவேண்டும்.... அது தான் நல்ல தீர்ப்பு....

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  இன்னுடைய சேஷன் உருவாக்கப்படுகிறார்.... அரசாங்க வாகனங்களை போக்குவரத்து தவறு செய்தால் மற்றும் வழியில் நிறுத்தி வைத்தால் பறிமுதல் செய்யப்போகிறார்....

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  சுப்ரீம் கோர்ட் தூங்கிக்கொண்டிருக்கின்றதா???.மாற்றம் டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட் அப்போ சித்தராமையா, மற்ற மந்திரிகளின் கார் பேப்பர்கள் சரியாக இல்லையென்றால் அவர்கள் கார் ஜப்தி செய்யப்படும் ரூபாவினால். ன்ன ஏற்கனவே எச்சரிக்கை கொடுத்துட்டேன், ஜாக்கிரதை அரசியல் புண்ணாக்குகளே.

 • Vasanthakumar - Chennai,இந்தியா

  The Karnataka Chief Minister tries to save Sasikala, and solve this matter silently without taking any severe action against Sasikala.

 • kurinjikilan - Madurai,இந்தியா

  சாட்சிகளை எல்லாம் இடமாற்றம் செய்து CCTV காட்சிகளையும் அழித்தாகிவிட்டது..அது என்ன CCTV க்கும் சசி வாழ்க்கைக்கும் இவ்வளவு தொடர்பு ?. போயஸ் கார்டேனில் CCTV காணவில்லை..கொடநாட்டில் CCTV காணவில்லை..அப்பல்லோ ஆஸ்பத்திரியில் CCTV பிடுங்கிவிட்டார்கள்..இப்போது பரப்பன அக்ராஹாரம் சிறையிலும் CCTV காட்சிகள் அழிக்கப்படுகின்றன..பணம் பாதாளம் வரை பாயும் என்பது இதுதானோ ?..இங்கிருந்து ஒருவர் பெட்டியுடன் கிளம்பிவிட்டார்..விசாரணை அதிகாரிகளை சந்திக்க விசாரணை நியாயமா ? பெட்டி நியாயமா என்பதை எதிர்காலம் சொல்லும்..

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  பெண் புத்தி பின் புத்தி என்று சொல்வதற்கு உகப்பாக திருமதி ரூபா அவர்கள் நடந்தது உண்மைதானோ ? சரியான முகாந்திரம் ஆதாரங்களை விட்டுவிட்டு நேரடியாக மக்கள்மத்தியில் விவரித்தது இவரின் கடமை உணர்வுக்கு சரியானதல்ல . நேற்று இவர் சொல்லும்போது வீடியோ ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டது சொல்லி இவர் ஐ பி எஸ்க்கு தகுதியானவரா என்பதை வினவும் அளவுக்கு செய்துவிட்டாரோ ?

 • Baskar - Paris,பிரான்ஸ்

  சித்தராமையா சசியிடம் 35 கோடி பணம் வாங்கி கொண்டு ரூபாவை மாற்றி விட்டார். தேர்தல் செலவுக்கு பணம் தேவை அடுத்த முதல்வர் ஆகும் ஆசை ராமையாவை விடவில்லை. சசி அங்கு இருப்பதால் அவருக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  காச பார்த்தா பல்லிளிக்கிற காங்கிரஸ் இருக்கும்போது...

 • kc.ravindran - bangalore,இந்தியா

  ஹல்லோ நான்தாங்க. அந்தம்மா போயிட்டாங்க. நம்மகிட்டே விளயாடினா வுட்ருவாங்களா? நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. வச்சிடறேன் எவனாவது போட்டு வுட்ருவான்.

 • Sekar KR - Chennai,இந்தியா

  மானங்கெட்ட அரசு. அங்கே கவர்னர் என்ன செய்கிறார். போக்குவரத்து துறையிலும் உங்கள் ஊழலை வெளிகொண்டுவருவார். . சீதாராமைய பதவி விலகு. கர்நாடக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இவர் ஒரு பெரிய தவறை கண்டுபிடித்து இருக்கிறார் என்றால், அதை நிர்வாக ரீதியாக கொண்டு சென்றிருக்கவேண்டும், அதை விடுத்து நேரடியாக ஊடகங்களை அணுகியது மிகப்பெரிய தவறு தான், இவர் ஒரு அரசியல் தலைவர் போல செயல்பட்டது ஏன் என்று புரியவில்லை, இவர் தன்னிடம் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக சொன்னார், அதெல்லாம் என்ன ஆச்சு, அங்கே நிச்சயம் தவறு நடந்திருக்கும், ஒரு சாதாரண குற்றவாளியே காசு கொடுத்து சலுகைகளை வாங்கிக்கொள்கிறான், அப்படி இருக்கும்போது சசி தனக்கு வேண்டிய சலுகைகளை நிச்சயம் பெற்றிருப்பார், ஆனால் அதை கட்டுப்படுத்த, தடுத்து நிறுத்த இவருக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும்போது, ஏன் இவர் ஊடகங்களுக்கு செய்திகளை பரிமாறினார், ஒரு வேலை சசி க்ரூப்புக்கு சிக்னல் கொடுத்திருப்பாரோ

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  சசி சொல்லி சொல்லி அடிக்குது கர்நாடக கவருமெண்டை..... இனிமே....தமிழ் நாடு வழக்கை விசாரிப்பியா ..? விசாரிப்பியா ..? ன்னு.....ஹே.

 • natarajan kannan - chennai,இந்தியா

  உச்ச நீதிமன்றம் உடனே தலையிட்டு ரூபாவை மீண்டும் சிறைத்துறைக்கு மாற்றி மேலும் தவறு நடந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்க உத்தரவிடனும். இல்லையேல் கர்நாடகாவில் காங்கிரஸ் கோவிந்தா தான்.

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  டிஜிபியும் மாற்றப்பட்டுள்ளார். பிஜேபி கர்நாடகாவை ஆண்ட போது முன்னாள் துணை முதல்வர் , உள்துறை மந்திரி அசோக்கின் கையாள் தான் இந்த டி.ஐ.ஜி ரூபா . இவர் சிறைத்துறைக்கு மாற்றப்பட்டு 15 நாட்களில் பிஜேபியின் தூண்டுதலின் பேரில் சிறையில் சசிகலாவிற்கு விசேஷ சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதாக டிஜிபியின் இரண்டு மேமோவிற்கு பதிலடியாக குற்றம் சாட்டுகிறார். கர்நாடக முதல்வர் சித்தராமையா வின் காவல்துறை அதிகாரிகளின் மீட்டிங்கை புறக்கணித்து இவர் சிறைக்கு சென்றாராம் . அங்கு போதை பொருள்கள் , மற்றும் கைதிகள் உல்லாச வாழ்க்கை நடத்துவதை பார்த்தாராம் அதையெல்லாம் தன் கையில் உள்ள ஹாண்டி காமெராவில் படம் எடுத்தாராம் . சசிகலாவின் அறைக்கு சென்றபோது இவரது ஹாண்டி காமெராவில் பேட்டரி தீர்ந்துவிட்டதாம் .அதனால் அங்கு இருக்கும் ஒரு ஜெயிலர் ஒருவரின் கைபேசி காமெராவில் படம் எடுத்தாராம் . ஆனால் அதை அந்த ஜெயிலர் அழித்துவிட்டாராம். கதை கேட்பதற்கு நன்றாக இருக்கிறது சசிகலா எதிர்ப்பாளர்களுக்கு இனிப்பாக இருக்கிறது . இந்தியாவின் அனைத்து சிறைச்சாலைகளில் போதைப்பொருள் விற்பது , கைதிகளுக்கு கைபேசி , மது பானம் ,உல்லாச வாழ்க்கை பானம் பெற்றுக்கொண்டு தரப்படுகிறது. ஆனால் சசிகலாவையும், அம்மாவையும், கர்நாடக சிறையில் மற்ற கைதிகளை வைத்து இழிவுபடுத்தி அச்சுறுத்தி தங்கள் எண்ணங்களை நிறைவேற்ற பிஜேபி, காங்கிரஸ் ,திமுக ,கார்பொரேட் மாபியாக்கள் செய்த அடாவடி ,கொடுமைகளை சகித்துக்கொண்டு, எதற்கும் வளைந்து கொடுக்காது தமிழக நலன்களை காத்த இரும்பு பெண்மணிகளை , இன்று வஞ்சகத்தால் வீழ்த்த நினைக்கும் பிஜேபி மற்றும் காங்கிரஸ் நடத்தும் நாடகம் இது .மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகளை மூடி மறைக்கும் ஊடகங்கள் இதற்கு உடந்தையாக இருப்பது அவலம்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  எங்கப்பா கான்கிராஸ் அல்லக்கைகளை காணோம். லஞ்சம் வாங்கியவருக்கு பாதிப்பில்லை , ஆனால் உண்மையை கொண்டு வந்தவருக்கு இட மாற்றம். விசாரணை கூட அந்த அரசு அதிகாரிகளே ? சபாஷ் , சபாஷ், சித்தராமையா இத்தாலி சோனியாவின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படுகிறார்.

 • pugu - Paris,பிரான்ஸ்

  மினிமா அவர்கள் பல்லாண்டு காலம் பரப்பன அக்ராஹாரத்தில் தங்கி இருந்து இந்த தமிழ் சமுதாயற்துக்கு தொண்டு செய்ய வேண்டும்.... இப்படிக்கு மினிமாவின் உண்மை பக்தன்......

 • Sivagiri - chennai,இந்தியா

  சரீ . . . எல்லாத்துக்கும் பில் போட்டு GST - வசூல் பண்ணியாச்சா ? ? . . .PAID JAIL - ஆக மாற்றி . . தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி . . அனைத்திற்கும் பில் போட்டு GST - யும் சேர்த்து வசூல் செய்யலாம் . . . சாப்பிட்டதும் காசு கொடுக்காவிட்டால் மாவாட்ட சொல்லலாம் . . .

 • Sivagiri - chennai,இந்தியா

  ராகுல் பப்பி . . . காங்கிரஸ் கம்பெனி ஹிஸ்டரி இன்னும் டெவெலப் ஆக்கிக்கிட்டே இருக்கு . . .

 • Anandha Kumar - Bangalore,இந்தியா

  கர்நாடகாவில் நடக்கும் காங்கிரஸ் ஆட்சி எப்பேர்ப்பட்ட கேடு கெட்ட ஆட்சி என்பதை இப்பொழுது எல்லோரும் தெளிவாக புரிந்து கொள்ளலாம். நடந்த தப்பை சுட்டி காட்டியதுக்கு பாராட்டுவதுக்கு பதில் தண்டனை கொடுப்பது, கேடு கெட்ட காங்கிரஸ் ஆட்சியில் சகஜம் தானே.

 • vnatarajan - chennai,இந்தியா

  இரண்டு கோடி பணம் கடைசியாக யார் யாரிடம் போய் சேர்ந்தது என்பதை சிபிஐ கொண்டு விசாரிக்க வேண்டும் அப்போதுதான் சில அரசியல்வாதிகளும் சிக்கலாம் சத்யநாராயணாவை மாற்றுவதற்குப் பதிலாக ரூபாவையும் போட்டுக்கொடுத்த சில சிறை கைதிகளையும் மாற்றி விட்டார்கள் இதுதான் உண்மையான ஜனநாயகமா. வேடிக்கை தான் தமிழ்நாடு உயர் போலீஸ் அதிகாரியும் கர்நாடக உயர் போலீஸ் அதிகாரியும் ஒரே கரும்புள்ளிவரிசையில் நிற்கிறார்கள் ஓட்டுப்போட்டு மக்கள் தலை குனியவேண்டும்

 • லஷ்மி -

  இவ்ளோ விழிப்புணர்வு இருக்கும் காலத்துலயே இப்படி பண்றானுங்க... தவறு செஞ்சவர்களை சுட்டு தள்ளாத வரை திருந்தாது டா இந்தியா

 • Sivagiri - chennai,இந்தியா

  சனி பகவான் இருக்கும் இடமெல்லாம் . . . பார்க்கும் பார்வை எல்லாம் . . . சேரும் சேர்க்கை எல்லாம் . . . பாழ் . . .

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  இது ஒரு ஆயுதம் . டீல் என்னவாக இருக்கும் . "சசி பிரதிநிதி எடப்பாடி கர்நாடகா காரனிடம் காவிரி நீர் ஒரு சொட்டு வேண்டாம் , சசிகலாவை கவனித்து கொள்ளுங்கள் , ரூபாவை இடம் மாற்றுங்கள் " என்பதாக இருக்குமோ ? ஆக டீல் முடிந்தது , இனி சிறையில் உள்ள கைதிகள் எல்லாம் சசிக்கு உதவியாளர்கள் , சோம பானம் ஊத்திக்கொடுக்க, சசிமாதிரி கொலை கொள்ளை செய்த கைதிகள் , சமையலுக்கு சசி மாதிரி ஜெயா வீட்டுவேலை செய்தவர்கள் இப்படி நடக்கப் போவுது ? ஆனால் காவேரியில் நீர் மட்டும் கேட்கக்கூடாது ? சீத்தாராமையா சிறந்த அரசியல்வாதி .

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  அரசு துறையில் நேர்மையானவர்கள் பந்தாட படுவார்கள் ரூபாஜியும் அதில் விதி விலக்கு அல்ல

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  வீட்டு வேலைக்காரி .... அரசு வேலைக்காரரை அசால்ட்டா தூக்கிட்டா..... இந்தியா சூப்புற பவ்ர்ங்கோ.....

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  காங்கிரஸ் அரசு இதை தான் செய்யும், ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்கு இருக்கிறது, தெரியாத்தனமா ரூபாவை சிறைத்துறைக்கு நியமித்து விட்டது

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  சேர்ந்து 13 நாட்களுக்குள்ளாக மற்றொரு மாற்றம் என்றால் ,ரூபா அவர்கள் மேற்கொண்டு விஷயங்களை கிளரமுடியாமல்தடுக்கவே.ஒரு சிறைக்கைதி தொடர்புள்ள விஷயத்தில் அரசு அதிகாரியின்மீது,அதுவும்நேர்மையான ஒரு அதிகாரிமீது அரசின் நடவடிக்கை என்றால் எந்த அளவுக்கு கர்நாடக அரசில் ஊழல் புரையோடிப்போய் உள்ளது என்பது தெளிவாகப்புலனாகிறது. ரூபா அவர்களின் குற்றச்சாட்டுக்கள் உண்மையா இல்லையா என்று சொல்ல அரசுக்கு வக்கில்லை

 • anvar - london,யுனைடெட் கிங்டம்

  அடுத்து சசிகலாவை ரிலீஸ் செய்ய வேண்டியதுதான் பாக்கி 100 கோடி ரூபாயில் வேலை முடிந்து விடும்

 • மண்புழு - Faraway Land,அன்டார்டிகா

  வேஷம் போடாத சித்தராமையாவுக்கு ஒரு மெடல் குடுக்கணும். கொஞ்சம் நேர்மையா இருக்கற மாதிரி நடிக்கக்கூட தயாரில்லை.

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  கர்நாடக அரசின் உத்தரவையும் மீறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததால் ரூபா இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் சத்தியநாராயண ராவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மாற்ற படத்தின் காரணம் இதுதான்

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  எல்லா முதல் மந்திரிகளும் இப்படி தானே ஆதியோகி உத்திரபிரதேசத்தில் நேர்மையாக நடந்த பெண் அதிகாரியை நேபாள பார்டருக்கு மாற்றினார் கர்நாடக பரவாயில்லை அங்கேயே போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் இதில் கில்லாடி யோகி அதியநாத் தான்

 • Ram Babu - Trivandrum,இந்தியா

  பணம் பத்தும் செய்யும் . ட்ரான்ஸ்பெறும் பண்ணும் . வாழ்க ஜனநாயகம் .

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  இந்த அம்மா கொஞ்சம் ஓவரா தான் ஸீன் போட்டது இந்த அம்மா எடுத்த வீடியோ கிளிப்பிங்ஸ் ஐ ஒரு அதிகாரியிடம் கொடுத்து கோப்பி செய்ய சொன்னேன் அவர் அதை erase செய்துவிட்டார் இவ்வளவு பெரிய விஷயத்தை ஒரு IPS உண்மையிலே கோட்டை விடுவார்களா அதற்காக ஜெயினுள் நடப்பது இல்லை என்று சொல்லவில்லை இங்கே ரெட்டி காரு எந்த விதமான கவனிப்பில் இருந்தார் என்று போய் விசாரித்து பாருங்கள் லேப்டாப் மற்றும் சகல வசதிகள் அவ்வளவு பெரிய விஷயத்தை அவர் செல்போன் இல் எடுத்து இருக்கலாம் கேட்டால் ரிப்பேர் என்கிறார் ஒரு விசாரணைக்கு போகும்போது ரிப்பேர் இல்லா பொருளை கொண்டு செல்லவேண்டும் என்கிற சுய அறிவு இல்லை IPS தண்டிக்கப்படவேண்டியதில் தப்பே இல்லை ஏன் எனில் குற்றவாளியை தப்ப விட்ட காரணித்தினால் மாற்ற பட்டு இருப்பார் இனி வரும் காலங்களில் விழிப்புடன் இருக்க இந்த மாற்றம் உணர்த்தும்

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  இவ்வளவுக்கும் காரணம் திருநா ...

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  இப்படியான கர்நாடகத்திற்குத் தான், தி மு க வும் அதன் கூட்டமும் படையெடுத்து நீதிபதி குமாரசாமி அவர்களின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய வேண்டுமென்று மண்டியிட்டனர். டி ஜி பி சத்தியநாராயணா ராவ் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். டி ஐ ஜி ரூபா மீது அல்ல.

 • Raja Seb - Chennai,இந்தியா

  இந்த மாதிரி ஒரு கேவலமா மக்கள் மத்தியில் வாழவேண்டியது இருக்கு .... உண்மை என்னன்னு கண்டுபிடிக்க துப்பு இல்லாதவனுக ..... நம்ம நாட்ல நேர்மையா பணி செய்தாலே பணிமாற்றம் தான் ... அது பிஜேபி யா இருந்தாலும் சரி காங்கிரஸா இருந்தாலும் சரி அ தி மு க வா இருந்தாலும் சரி தி மு க வா இருந்தாலும் சரி இல்ல வேற எந்த கட்சியா இருந்தாலும் சரி ...

 • SasiKumar -

  வாழ்க அரசியல் நாயகம்

 • Rajendiran.P Thuvarankurichy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்

  நல்லவர்களுக்கு காலம் இல்லை என்பது இவரே உதாரணம்

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  அவர் ஜூன் 21ம் தேதிதான் சிறைத்துறை பதவியேற்றார்.... ஒரு மாதம் கூட ஆகவில்லை.... தூக்கிஅடிக்கப்பட்டார்... மேரா பாரத் மஹான்.... எந்த கட்சியும் யோக்கியன் கிடையாது... குஜராத்தில் இப்படி நேர்மையாக நடக்க நினைத்த ஒரு அதிகாரி இன்று வேலை போய் நாறி போய் கிடக்கார்.... இப்போ கேஸ் கொஞ்சம் சூடா இருக்கு....ஆறின பிறகு நாளை இவருக்கும் அதே கதிதான்...

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  நாடு எப்படி உருப்படும்? மோடி ஆட்சியிலா இப்படி? பிஜேபி சொம்புகள் இதற்கு பதில் சொல்ல வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது என்று எதிர் வாதம் வேண்டாம். மற்ற கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலத்தில் வருமான வரி துறை ரெய்டு நடத்த பிஜேபி க்கு அதிகாரம் இருக்கிறது, இதுபோன்ற அவலங்களை தட்டிக்கேட்க பிஜேபி க்கு அதிகாரம் இல்லையா....?

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா

  ஊழல் காங்கிரஸ் ஆட்சியில் வேறுஎன்ன எதிர்பார்க்க முடியும்.

 • smoorthy - bangalore,இந்தியா

  நேர்மையான அதிகாரிக்கு எந்த மாநிலமாக இருந்தாலும் கிடைக்கும் பரிசு இது போல தான் இருக்கும் / சத்தியத்திற்கு நேரும் சத்திய சோதனை /

 • manickam -

  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று ஆச்சரியம் ஒன்றும் இல்லை.இதனால் தான் யாரும் கடமையை செய்ய தயங்குகின்றனர்

 • Shanmugam - Manama,பஹ்ரைன்

  குற்றவாளிக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. நேர்மை நசுக்கப்படுகிறது. ஊழலே அரசு, ஊழலுக்காகவே அரசு.

 • S.prakash - Tiruchi,இந்தியா

  படிக்கவே வெட்க கேடாக இருக்கிறது. தவறு செய்தவர்கள் மீது நடவக்கை இல்லை, நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது. இன்னும் எத்தனை வருடம் தான் நாட்டை குட்டிச்சுவர் ஆக்குவார்கள்?

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  நாற பயலுக.....லஞ்சம் வாங்கினவனை தூக்கி அடிக்க துப்பில்லை....கான்கிராஸ் பாரம்பரியமே அது தான்..

 • Arivu Nambi - madurai,இந்தியா

  இந்த இடமாற்றம் அதிகாரத்தை திருட்டு அரசியல் வாதிகளிடம் இருந்து பறிக்கவேண்டும் .இந்த அதிகாரத்தை தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தால் ஓரளவுக்கு நாடு சீரடையலாம் .

 • thenaliraman -

  THIS IS WHAT SHE GOT IT, CONGRESS DONT LIKE WHO EVER HONEST, THIS CULPRITS RUIN THE COUNTRY LAST 50 YEARS, BJP MUST STEP IN AND GIVE HER COURAGES REPORT AGAINST SASIKALA & CONGRESS , I SALUTE HER ACTIONS,KEEP IT UP, jaihind

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சசிகலா சென்ற இடமெல்லாம் சதி...

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  இது எதிர்பார்த்ததுதான். இதன்மூலம் இவரது குற்றச்சாட்டு உறுதி செய்யப் படுகிறது. நீதிமன்றம் தலையிட்டால்தான் உண்டு

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  பணம் பத்தும் செய்யும்......

 • Jaya Ram - madurai,இந்தியா

  பணம் பாதாளம் வரை பாயும் என்பது இதில் காணப்பட்டுள்ளது, மேலும் நேர்மைக்கு கிடைக்கும் பரிசுகள் இதுதான் என அதிர்க்கரவர்க்கம் அரசியல்வாதிகள் நிரூபித்துள்ளனர்.

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  தெரிந்ததுதானே... நம்ம நாட்டில் நியாயமாக நேர்மையாக இருப்பவனுக்கு இந்த மரியாதைதான் கிடைக்கும்.... அதனால்தான் எல்லா அரசு அலுவலகத்திலும் ஊழல்... அதற்கு 90 சதவிகித காரணம் அரசியல்வாதி.... புழுவை விட கேவலமான ஜென்மங்கள் அவர்கள்.... (புழுக்களை கேவல படித்திவிட்டேனோ)

 • MumbaiNana -

  உ.பி. பெண் போலீஸ் மாற்றம் செய்த போது ஊளை இட்ட பயலுவ எல்லாம் எங்கே போனார்கள்????

 • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

  காசு கொடுத்து அடாவடி பண்ணி வோட்டு வாங்கி பதவிக்கு வந்து அஞ்சு வருஷமே இருக்குற பன்னாடைங்க கஷ்டப்பட்டு படிச்சு மெரிட்ல பதவிக்கு வர்றவங்களோட பணியை நிர்ணயம் பண்ணுதுங்க. என்ன கொடுமை

 • vasanthan - Moscow,ரஷ்யா

  அருமை நேர்மையாக வேலை பார்க்க ஆசைப்பட்டால் காங்கிரஸ் கட்சி கொடுக்கும் பரிசு. இந்த அமுல் பேபி பாபு வும், ராஜமாதாவும், காங்கிரஸ் சொம்புகளும் என்ன சொல்ல போகிறார்கள்.

 • Srinivasan - Srinivasan,இந்தியா

  Congress never win karnataka

 • K.Sugavanam - Salem,இந்தியா

  வழக்கமான கூத்து தானே..

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  மாப்பு அடிச்சுட்டானுங்கய்யா ஆப்பு.....நல்லவங்களு இது காலமே இல்லீங்க...நாதாரிகளுக்கும் திருட்டு மூஞ்சி மங்கம்மாக்களுக்கும் தான் காலம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement