Advertisement

காங்கிரசுக்கு கவலை தரும் சினிமா படம்

புனே: ' இந்து சர்க்கார்' என்ற இந்தி படத்திற்கு எதிராக காங்கிரசார் போர்க்கொடி தூக்கி உள்ளனர். எனவே, திட்டமிட்டபடி, ஜூலை, 28 ம் தேதி இந்த படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவசர நிலை குறித்த படம்பிரபல இயக்குனர் மதூர் பந்தார்கர் எடுத்து வரும், 'இந்து சர்க்கார்' என்ற இந்தி திரைப்படம், கடந்த 1975 ம் ஆண்டு முதல், 1977 ம் ஆண்டு வரை, நாட்டில் அவசர நிலை அமலில் இருந்த போது நடந்த நிகழ்வுகளை அடிப்டையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், மறைந்த பிரதமர் இந்திரா, அவரது மகன் சஞ்சய் ஆகியோர் பற்றி தகவல்கள் இடம் பெறுவது காங்கிரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. மும்பை காங்., தலைவர் சஞ்சய் நிருபம், இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு முன், தங்களுக்கு போட்டு காட்ட வேண்டும் என தணிக்கை வாரியத்திடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு, படத்தில் 12 இடங்களில் மாற்றம் செய்ய வேண்டும், இரண்டு விளக்க குறிப்புகளை வெளியிட வேண்டும் என கூறியிருந்தது. மேலும், ஆர்.எஸ்.எஸ்., அகாலி போன்ற வார்த்தைகளை நீக்கும்படியும் கூறப்பட்டது. இந்த படம், ஜூலை, 28 ம் தேதி ரிலீசாக உள்ளது.

நிகழ்ச்சி ரத்துஇந்த படத்தின் விளம்பரம்படுத்தும் நிகழ்ச்சி, கடந்த சனிக்கிழமை, மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் நடக்க இருந்தது. ஆனால், படக்குழுவினர் தங்கி இருந்த ஓட்டல் முன் உள்ளூர் காங்கிரசார் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், படகுழுவினர் ஓட்டலை விட்டு வெளியே வர முடியாமல் நிகழ்ச்சியை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. இச்சூழ்நிலையில் திட்டமிட்டபடி இந்த படம் ரிலீசாகுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (37)

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் சுயநலம் காரணமாக காங்கிரசுக்கு மீண்டும் வால்பிடிக்க துவங்கிவிட்டார்கள். மக்களுக்கும் அந்த நேரத்து துயரங்கள் நினைவில் இருக்காது. இத்தகைய சூழ்நிலையில் இந்தப்படம் வெளிவந்தால் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே எதிர்க்கிறார்கள். ஆமாம் கருத்து சுதந்திரம் என்று வாய் கிழிய பேசியவர்கள் எங்கே போனார்கள்?

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இந்து சர்க்கார் என்றால் நிச்சயமாக முஸ்லீம் நேரு காங்கிரசுக்கு டிசென்ட்ரி தான் வரும் வார்த்தையில்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  எப்படி கூட்ட கழிச்சு பார்த்தாலும் பாஜக ஆட்சியை விட, காங் ஆட்சி பரவாயில்லை ரகம்...காங் காலத்தில் விவசாயம் செழுமையாக இருந்தது ...பணம் புழங்கியது....ஆனால் பாஜக ஆட்சியில் எங்கும் வறுமை... வெறுமை... பொறாமை...குரோதம் ஆகியவை தான் மேலோங்கி உள்ளது....ஆக, பாஜக எத்தனை படம் தயாரித்து வெளியிட்டாலும், பாஜக சொல்வதை மக்கள் இனி ஏற்றுக்கொள்ள போவதில்லை...

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  உண்மையை சொன்னா சிக்கல் தான்

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  இது மிகவும் தவறு .. ஒரு அமைப்புக்கோ கட்சிக்கோ பயந்து ஒரு படைப்பை தடை செய்ய கூடாது .. அரசியல் மட்டும் அல்ல , மதம் , சாதி என அனைத்தையும் ஆராயும் படைப்புகள் வர வேண்டும் .. எதையும் தடுப்பது மூடத்தனம் ..

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  கான்கிராஸ் கட்சி ஒன்றை எதிர்க்கிறது என்றால் அது இந்த தேசத்திற்கு தேவையானது என்று அர்த்தம்.

 • john - chennai,இந்தியா

  Nneraya commeddy peiece comments poduthunga, anti indian

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  " இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு, படத்தில் 12 இடங்களில் மாற்றம் செய்ய வேண்டும், இரண்டு விளக்க குறிப்புகளை வெளியிட வேண்டும் என கூறியிருந்தது. மேலும், ஆர்.எஸ்.எஸ்., அகாலி போன்ற வார்த்தைகளை நீக்கும்படியும் கூறப்பட்டது".... அப்போ படம் ரிலீஸ் தாமதம் ஆவதற்கு எந்த ஒரு கட்சியோ, இயக்கமோ காரணமாக இருக்கமுடியாது... தணிக்கை குழு விதித்த நிபந்தனையை நிறைவேற்றிவிட்டுதானே படத்தை ரிலீஸ் செய்ய முடியும்....

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அவசர நிலையால் தப்பித்தவறி ஏதாவது நன்மைகள் விளைந்திருந்தால் அவை வெறும் பக்கவிளைவுகள்தான். நிஜமாகவே வறுமையில் வாடியவர்களும் சாமானியர்களுக்கு துளியாவது பலனடைந்திருந்தால் ஒன்பது பெரிய வடமாநிலங்களிலும் ஒட்டுமொத்தமாக காங்கிரசை விரட்டியிருக்கவே மாட்டார்கள் . உயர் அதிகாரிகளும் காங்கிரஸ்காரர்களும் செய்த அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஷா கமிஷனில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் இன்று கூட ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரையும் வெறுத்துப்போகச்செய்யும் அவசர நிலைக்காலத்தில் நடுநிலை ஊடகங்கள் மிரட்டப்பட்டு பத்திரிக்கையாளர்கள் கொடுமையாக தாக்கப்பட்டு உண்மை நிலவரங்கள் மறைக்கப்பட்டன. எல்லா செய்தி சேகரிப்பு நிறுவங்களும் கட்டாயப்படுத்தப்பட்டு சமாச்சார் எனும் ஒரே அரசு நிறுவனமாக்கப்பட்டன.ஊடகங்கள் கட்டாய சென்சாருக்கு உள்ளாக்கப்பட்டு எதிர்ப்புக்குரல்களுக்கு இடமிலலாமல் ஆக்கப்பட்டது. டிவி யம் ரேடியோவும் அரசிடம் மட்டுமே இருந்ததால் அவை நாள்முழுவதும் சொன்ன கோயபல்ஸ் பிராண்டு வளர்ச்சிப்பொய்கள் எதிர்கட்சியினரை வசைபாடியது ஆகியவற்றை தென்னிந்திய அறிவாளிகள் நம்பி அவசரநிலை நல்லதுதான் என நம்பி பேசியது இன்னும் ஆத்திரத்தை வரவழைக்கிறது. அன்று நானறிந்த பல சாதாரணர்கள் வழக்கு ஏதுமின்றி சிறையிலடைக்கப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டது இன்னும் அவர்களுடலில் வடுவாக சரித்திரம் சொல்கின்றன. உடல் ஊனத்தால் .பல நாட்கள் நடைபிணங்கள்போல் வாழ்ந்தனர் இவ்வள்வுக்குபிறகும் தானொன்றும் தவறு செய்யவில்லை சில அதிகாரிகள்தான தவறு செய்துவிட்டனர் என பச்சையாக பொய் மன்னிப்புக்கேட்டு இந்திரா நாடகமாடினார்.ஆனால் உளவுத்துறை மற்றும் போலீஸ் அல்லும்பகலும் அவரது உத்தரவின் பேரில் செய்த ஜனநாயகப் படுகொலைகள் எதிர்கட்சித் தலைவர்கள் அதுவும் சுதந்திரப்போராட்டவீரர்களை சிறையில் போட்டு அவர்கள் குடும்பத்தினரையும் கொடுமைகளுக்கு ஆளாக்கியது கொன்று குவித்தது ரகசியமில்லை. தன்னை பிரதமராக்கிய காமராஜரின் பேச்சுக்கள் அறிக்கைகளை வெளியிடவே தடைபோட்டார் இந்திரா அந்த வருத்தத்திலேயே ஜனநாயகம் செத்துவிட்டது இதற்கா சுதந்திரம் வாங்கினோம் என கண்ணீர் சிந்தி அந்தக் கர்மவீரரும் மரணித்தார் அதனை அறிந்து அஞ்சலி செலுத்த வந்து இந்திரா ஆடிய நாடகம் எக்காலத்திலும் மறக்க இயலாது இதற்குப் பிறகும் இந்திரா நல்லவர் என யாரும் கூறினால் அவரது மனநிலை சரியில்லை எனத்தான் சொல்லமுடியும் இந்தப்படத்துக்கு காங்கிரஸ் அடிவருடிகள் கேட்கும் தடையும் எமெர்ஜென்சி காலம்போலவே அராஜகம்தான் அப்போது கிஸ்ஸா குர்ஸிகா படத்தை அழித்ததுபோல இப்படத்தை அழிக்க இயலாது சென்சார் தடுத்தாலும் இணையத்திலாவது வெளிவரும் எனவே வீணான போராட்டத்தை யாரும் ஆதரிக்கவேண்டாம்

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஊடகங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மேதாவிகளால் ஒதுக்கப்பட்ட ஓவியாவுக்கு தான் மக்கள் மத்தியில் ஆதரவு அலை அடித்தது. அதே மாதிரியான சூழலை ஊடகங்கள் தெரிந்தோ தெரியாமலோ காங்கிரஸுக்கு உருவாக்கி வருகிறார்கள். அதன் பிரதிபலிப்பு அடுத்த தேர்தலில் தெரியும். சொந்தக்காசில் சூனியம் வைத்து கொண்டோமே என்று ஊடகங்களும் பக்தர்களும் நொந்து நூலாகப்போவது உறுதி.

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  கான் கிராசுக்கு ஆப்பு ஏற்கனவே வைத்தாகி விட்டது.

 • Indian -

  இந்தியாவின் இருண்ட காலம் மிசா மட்டுமல்ல அவர்கள் ஆட்சி செய்த 70 வருடமும் தான்

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அரசியல் ரீதியாக எதுவும் செய்ய இயலாதவர்கள் இப்போது சினிமா மூலமும் கதை திரிக்க ஆரம்பித்து விட்டார்கள்..

 • MANI DELHI - Delhi,இந்தியா

  காங்கிரஸ் சுதந்திரம் பெற்றது முதல் மக்களுக்கு தங்களுக்கு சாதகமான நிகழ்வுகளை மட்டுமே வரலாறாக சொல்லி இருக்கிறது. முழு வரலாறு வெளி வந்தால் மக்கள் இவர்களை உண்டு இல்லை என்று செய்து விடுவார்கள். இதனால் தான் இப்போதே போர்க்கொடி பிடிக்கிறார்கள். படத்தை பார்த்துவிட்டு மக்கள் கேள்வி கேட்டால் Rahul Gandhi மற்றும் Sonia அவர்கள் எங்களுக்கு இந்த வரலாறு தெரியாது என்று சொல்வத்தற்கும் வாய்ப்பு உண்டு

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  ஆர் எஸ் எஸ் சேர்ந்துதானே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்

 • vasanthan - Moscow,ரஷ்யா

  60 ஆண்டுகள் நாட்டை நாசம் செய்த காங்கிரஸிக்கு இனி 600 ஆண்டுகள் இருந்த காலம் தான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement