Advertisement

ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நிறைவு

சென்னை : ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தமிழகத்தில் நிறைவடைந்துள்ளது. காலை 10 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பகல் 12 மணிக்கே ஓட்டுப்பதிவு நிறைவடைந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் 232 தமிழக எம்.எல்.ஏ.,க்களும் தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கேரள எம்.எல்.ஏ., அப்துல்லா ஆகியோர் சிறப்பு அனுமதி பெற்று ஓட்டளித்துள்ளனர். இதனால் மொத்தம் 234 ஓட்டுக்கள் தமிழகத்தில் பதிவாகி உள்ளது. தமிழக எம்.எல்.ஏ.,க்களில் கருணாநிதி ஓட்டளிக்கவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அவரது ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பாதிவான ஓட்டுக்களின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, இன்று மாலை 5 மணிக்கு விமானம் மூலம் டில்லி கொண்டு செல்லப்பட உள்ளது. புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு நிறைவடைந்த உடன், இரண்டு ஓட்டுப்பெட்டிகளும் சேர்த்து ஒரே விமானத்தில் கொண்டு செல்லப்பட உள்ளன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    வெட்டி செலவு , வெற்றி யாருக்கு என்று நன்கு தெரிந்தும்

  • K.Sugavanam - Salem,இந்தியா

    பிஜேபி யில் உள்குத்து இருக்கிறதா என்பது ஜூலை 20 அன்று தெரிந்துவிடும்..

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    அதிமுகவில் மூன்று அங்கங்கள் , இவை எப்படி வாக்களித்து உள்ளனர் என்பது ஐயமாக உள்ளது. வழக்கம் போல தி மு க எதிர் கட்சிக்குத்தான் ஓட்டளித்து இருக்கும் இதில் என்ன சந்தேகம். தமிழகத்தின் தலையெழுத்து எப்படி மாறும் என்பது இந்த ஓட்டெடுப்பின்மூலம் தெரியவரும். மாற்றி குத்தி இருந்தால் வரும் ஆப்பு.

  • Amma_Priyan - Bangalore,இந்தியா

    எதிர் அணியினருக்கு காசு மொத்தமாக முன்பே கொடுக்கப்பட்டு விட்டது

  • Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா

    அதிமுக உறுப்பினர்கள் எத்தனை பேர் செல்லாத ஓட்டு போட்டிருப்பார்கள். எத்தனை பேர் வாக்கு சீட்டை மடித்து சட்டை பையில் வைத்திருப்பார்கள் (முன்பு ஒரு முறை சேடப்பட்டி முத்தையா இப்படித்தான் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பின் போது செய்தார்)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement