Advertisement

மதுரையில் 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்குவதில் சிக்கல்:அரசிடமிருந்து கார்டுகள் வராததால் பணி பாதிப்பு

மதுரை;மதுரை மாவட்டத்தில் ஆறு கட்டங்களாக 4.94 லட்சம் 'ஸ்மார்ட் கார்டுகள்' மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அரசிடமிருந்து கார்டுகள் வராததால் மற்றவர்களுக்கு வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது.இம்மாவட்டத்தில் 9 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த கார்டுகளுக்கு பதில் 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கும் பணி ஏப்., முதல் நடக்கிறது. இதுவரை ஆறு கட்டங்களாக 4.94 லட்சம் 'ஸ்மார்ட் கார்டுகள்' மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் 'ஸ்மார்ட் கார்டுகள்' கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தபடி உள்ளனர்.
நுகர்வோர் கூறியதாவது: ஆதார் மற்றும் அலைபேசி எண்களை பதிவு செய்தவர்களுக்கும் 'கார்டுகள்' வரவில்லை. குடும்ப தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் ஆதார் எண்களை பதிவு செய்யும் போது விடுபட்டிருக்க வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டுகள்' அச்சிடப்பட்டிருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இ-சேவை மையங்களிலும் சர்வர் கோளாறால் 'ஸ்மார்ட் கார்டுகளை' பெற முடியவில்லை, என்றனர்.
உணவு வழங்கல் துறையினர் கூறியதாவது: எல்லா மாவட்ட ரேஷன் கார்டுகளுக்கு பதில் ஒரு கோடிக்கு மேல் 'ஸ்மார்ட் கார்டுகள்' சென்னையில் அச்சிடப்பட்டு வருகின்றன. இதனால் படிப்படியாக 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்படுகின்றன. ஆதார் மற்றும் அலைபேசி பதிவு செய்த அனைவருக்குமே 'கார்டுகள்' வழங்கப்படும். அவற்றை பதிவு செய்தவர்கள் அருகிலுள்ள ஆன்லைனில் 'ஸ்மார்ட் கார்டு' நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். எல்லா விபரங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் 'ஸ்மார்ட் கார்டுகளை' பெறலாம். உடனடியாக தேவைப்படுவோர் இ-சேவை மையங்களில் 30 ரூபாய் செலுத்தி 'ஸ்மார்ட் கார்டு' பெறலாம், என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement