Advertisement

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த 'பேஸ்புக்'

இஸ்லாமாபாத்: 'பேஸ்புக் கணக்குகளுடன், அதை பயன்படுத்துவோரின் மொபைல் போன் எண்ணை இணைக்க வேண்டும்' என, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை, பேஸ்புக் நிர்வாகம் மறுத்து விட்டது.

சமூக வலைதளங்களில் ஒன்றான, 'பேஸ்புக்'கில், ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். 'இ - மெயில்' முகவரி மூலம், பேஸ்புக்கில் சேருகின்றனர். இதில், தங்கள் எண்ணங்கள், கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மொபைல் எண்:



இந்நிலையில், பேஸ்புக் நிர்வாகத்துக்கு, பாகிஸ்தான் அரசு விடுத்த கோரிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: பேஸ்புக் பயன்படுத்துவோரில் சிலர், வெளியிடும் கருத்துக்களால், சமூகத்தில் மோதல் ஏற்படுகிறது; அது கலவரமாக மாறி, உயிர் பலி ஏற்படுகிறது; இதை தடுக்க வேண்டும். சர்சசைக்குரிய கருத்துக்களை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக, பேஸ்புக் கணக்குகளில், அதை பயன்படுத்துவோரின் மொபைல் போன் எண்ணை இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மறுப்பு:



ஆனால், பேஸ்புக் நிர்வாகம், இதை ஏற்க மறுத்து விட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு பேஸ்புக் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது: பேஸ்புக் கணக்கில், அதன் பயன்பாட்டாளர்களின் மொபைல் எண்ணை இணைப்பது சாத்தியமில்லை. இ - மெயில் முகவரி மூலம், கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய கருத்து என தெரிந்தால், அதை நாங்களே நீக்கி விடுவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (10)

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    வலைத்தளத்தில் எங்கு திரும்பினாலும் இவனுங்களே வந்து நிக்குறானுங்க , அதுவும் புனை, இணை, துணை பெயரில் . ஆடுறவன் பெயரை வேறு திருடு வைத்துக்கொள்கிறார்கள். இந்த திட்டம் கொண்டுவந்தால் மாட்டுவது முதலில் அவர்கள் தான்.

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

    இஸ்லாம் FBஐ அனுமதிக்கிறதா????

  • அப்பாவி -

    அவ்வளவு ரோசம் இருந்தா ஃபேஸ்புக்க பாகிஸ்தானில் தடை செய்யலாமே?

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நம்பர் தெரிந்தால் பாகிஸ்த்தானுக்கு எதிராக கருத்து சொல்லுபவர்களை போட்டு தள்ளவா...

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    உங்கள் நாட்டில் அது பிரச்சனை என்றால், நீங்கள் FB ஐ உங்கள் நாட்டில் தடை செய்யுங்கள், எதுக்கு அடுத்தவன் மூக்கில் கையை விட நினைக்கணும். மற்ற நாடுகளுக்கு பிரச்சனை இல்லை, பாகிஸ்தானுக்கு மட்டும் பிரச்சனை, சிலரின் இருப்பிடம் தெரிந்து போட்டு தள்ள வசதியாக இருக்கும் என்ற நினைப்பு.

  • Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா

    தவறான கருத்தை தெரிவித்தால் அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      ஏப்பா அரசுக்கு வேறு வேலை இல்லையா? உங்க பின்னாலே சுத்த,

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    மக்களின் சமூக எண்ணங்களை கூட நசுக்கவேண்டும் என்று செயல்படும் இஸ்லாமிய நாடுகள் சற்று சிந்திக்கவேண்டும்... மதம் மட்டுமே வாழ்க்கை அல்ல...

    • தலைவா - chennai,இந்தியா

      வர வர நாட்டுக்குள்ள எவன் எதை சொல்லணும்னு விவஸ்தையே இல்லாமல் போயிக்கினு இருக்கு..இங்கே பேஷா கருத்து சொல்ற காசி மத்தவங்கள பத்தி என்னைக்குமே கவல படல..கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் தவறுக்குதான் துணை போகும்..தன்னுடைய வலதுசாரி சித்தாந்தத்தை அடுத்தவர் மேல திணிக்கிற காசி கருத்து சுதந்திரம் அடுத்தவர் உரிமையை பாதிக்காத வரையில்தான் என்பதை உணர வேண்டும்.

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

    எப்படியும் முகநூல் சப்போர்ட் டீமில் பெரும்பான்மை முஸ்லிம்களே, அப்புறம் எதுக்கு கவலை படுறீங்க பாகிஸ்தான்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement