Advertisement

ஜாதவின் கருணை மனுவை ராணுவத் தளபதி பரிசீலிக்கிறார்

இஸ்லாமாபாத்: 'உளவு பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவின் கருணை மனுவை, ராணுவ தளபதி பரிசீலித்து வருகிறார் ' என, பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவை, 46, கைது செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது. இது தொடர்பான வழக்கில், அவருக்கு தூக்கு தண்டனையை விதித்து, பாகிஸ்தான் ராணுவ கோர்ட் தீர்ப்பளித்தது. மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால், இந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு, சர்வதேச கோர்ட், தடை விதித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ சட்டத்தின்படி, தண்டனையை எதிர்த்து, ராணுவ தலைமை தளபதியிடம், குல்பூஷன் ஜாதவ் முறையிட்டுள்ளார்.

இந்த மனு குறித்து, பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல், ஆசிப் கபூர் கூறியதாவது:குல்பூஷன் ஜாதவ் கொடுத்துள்ள கருணை மனுவை, ராணுவ தலைமை தளபதி, குமர் ஜாவேத் பாஜ்வா பரிசீலித்து வருகிறார். தகுதியின் அடிப்படையில், எந்த பாரபட்சமும் இல்லாமல், அதில் அவர் முடிவெடுப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement