Advertisement

மைதானத்தின் சுவர் இடிந்து எட்டு பேர் பலி

டக்கார்: செனகல் நாட்டில், கால்பந்து போட்டி நடந்த மைதானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், ரசிகர்கள் எட்டு பேர் பலியாகினர்; பலர் படுகாயம் அடைந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டின் டக்கார் நகரில் உள்ள மைதானத்தில், நேற்று, இரு அணிகளிடையே, கால்பந்து போட்டி நடந்தது. இதைக் காண, ரசிகர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். போட்டி விறுவிறுப்பாக நடந்தபோது, ஒரு அணியின் ஆதரவாளர்கள், மற்றொரு அணி ஆதரவாளர்களை நோக்கி கல்வீசி தாக்கினர். இதனால், மைதானத்தில் மோதல் ஏற்பட்டது. பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டதால், பார்வையாளர்களில் சிலர், அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற முயன்றனர். அப்போது, மைதானத்தின் சுற்றுச் சுவர் இடிந்து, பார்வையாளர்கள் மீது சரிந்தது. இதில், கால்பந்து ரசிகர்கள், எட்டு பேர் பலியாகினர், பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணி நடப்பதால், மேலும் சிலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,இந்தியா

    போஸ்டரா ஒட்டிக்கணே போனா பொறவு என்னாகும்? போஸ்டர் ஒட்டறதுக்கு முன்னாடி நாலு ஆட்டை வாடகைக்கு வாங்கி போஸ்டரை துன்னவுட்டிருந்தா இந்த கதி வருமா-

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement