Advertisement

துருக்கியில் மீண்டும் மரண தண்டனை : அதிபர் எர்டோகன் முடிவு

அங்காரா: துருக்கியில், மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்தப் போவதாக, அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.மேற்காசிய நாடான துருக்கியில், அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூலை 15ல், ராணுவ புரட்சி ஏற்பட்டது; இதை மக்களே முறியடித்தனர். இதில், 250க்கும் அதிகமானோர் இறந்தனர். புரட்சியில் ஈடுபட்ட 3,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டு, நேற்று முன்தினத்துடன் ஓராண்டு நிறைவு அடைந்தது. இந்த நாளை, ஜனநாயகம் மற்றும் ஒற்றுமை தினமாக கொண்டாட, பொதுமக்களுக்கு, துருக்கி அரசு உத்தரவிட்டது. இதையொட்டி, தலைநகர் அங்காரா, இஸ்தான்புல் உட்பட துருக்கியின் பல பகுதிகளில், பேரணிகள் நடந்தன.துருக்கி பார்லிமென்ட்டின் சிறப்பு கூட்டம் நடந்தது.

பார்லிமென்ட் கூட்டம் மற்றும் பேரணிகளில் பங்கேற்ற அதிபர் எர்டோகன் பேசியதாவது:துருக்கியில், 2004ல், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதை மீண்டும் அமல்படுத்த
விரும்புகிறேன். ஜனநாயகத்துக்கு எதிராக, துரோகம் செய்தவர்களின் தலைகளை துண்டிக்க வேண்டும். மரண தண்டனையை மீண்டும் அமல்படுத்த, மசோதா நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement