Advertisement

லியூவின் மனைவியை விடுவிக்க வலியுறுத்தல்

பீஜிங்: நோபல் பரிசு பெற்ற, மறைந்த எழுத்தாளர், புரட்சியாளர் லியூ ஜியாபூவின் மனைவியை, வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கும்படி, சீன அரசை, ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
சீனாவில் மனித உரிமைகளுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்ட, பிரபல எழுத்தாளர் லியூ ஜியாபூ, 61, அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். லியூ மீது அரசியல் புரட்சியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரின் மனைவியும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். கடந்த, 2010ல், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லியூ, இம்மாதம், 13ல் இறந்தார். லியூ மறைவுக்குப் பின்னும் கூட, அவரது மனைவியை, வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்காத சீன அரசுக்கு, உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உடல் நலக்குறைவால் அவதிப்படும், லியூவின் மனைவியை, வீட்டுக் காவலில் இருந்து உடனடியாக விடுவிக்கும்படி, சீன அரசை, ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள சீனா, லியூவின் மனைவி, வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்றும், அவர் எப்போதோ விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement