Advertisement

பிரதமருக்கு எதிராக வழக்கு; டில்லி கோர்ட் தள்ளுபடி

புதுடில்லி: 'ராணுவ அமைச்சகத்தில் நடந்த ஊழல் புகார் குறித்து, நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடியிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' எனக் கோரி, ராணுவ அமைச்சக முன்னாள் ஊழியர் தாக்கல் செய்த மனுவை, டில்லி சிறப்பு கோர்ட், தள்ளுபடி செய்தது.

ராணுவ அமைச்சகத்தில் பணியாற்றியவர், கே.என்.மஞ்சுநாதா. துறை ரீதியாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையால், பணியிலிருந்து மஞ்சுநாத், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். இதை, எதிர்த்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்த தீர்ப்பாயம், மஞ்சுநாத்தின் மனநிலையை பரிசோதிக்க, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, டில்லி சிறப்பு கோர்ட்டில் மஞ்சுநாத் தாக்கல் செய்த மனுவில், 'ராணுவ அமைச்சகத்தின், விமானப்படை தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வந்தேன். அலுவலகத்தில் நடக்கும் ஊழல்களை, சம்பந்தபட்ட உயர் அதிகாரிகளுக்கும், பிரதமருக்கும் கடிதம் மூலம் தெரிவித்தேன்; எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காதது பற்றி, பிரதமரிடம், சி.பி.ஐ., விசாரிக்க, உத்தரவிட வேண்டும்' என, கூறியிருந்தார்.

இந்த மனுவை, தள்ளுபடி செய்து, நீதிபதி, விரேந்திர குமார் கூறியதாவது: பிரதமர், லஞ்சம் வாங்கினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை என, மனுதாரர் கூறியுள்ளார். இதற்கு, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.இவ்வாறு நீதிபதி கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (6)

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

    IF ANYBODY TALKS AGAINST GOVT, HE IS PORTRAYING AS INSANE

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    பிரதமரின் கட்டுப்பாட்டில் தான் நீதிதேவதை உள்ளது...

  • அப்பாவி -

    மோடிஜிய ஏதாவது குறை சொன்னா அவருக்கு மனநிலை முடிவு கட்டுற அளவுக்கு நல்லா நீதியரசர்களை பழக்கியிருக்காங்க...

  • E-man - TVL,இந்தியா

    அய்யா மஞ்சு மோடி மேல வழக்கு போட்டீரே அவர் இந்தியாவுலதான் இருக்காரா ? நல்ல தேடிப்பாரு மஞ்சு? நீர் பார்த்தது அவருதானா இல்லை கட்டோஉட்டானு இன்னொரு முறை யோசனை பண்ணிப்பாரு

    • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

      எல்லாமே மோடி என்று நினைக்கும் பக்கிக்கு மனநிலை சரியில்லை என்றுதான் முடிவு செய்யவேண்டும்...

    • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

      காசிமணி சார்... அவர் மோடி மேல் ஊழல் புகார் கூறவில்லை... துறையில் நடக்கும் ஊழல் புகார் குறித்து விபரம் தெரிவித்தும் பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதான் நீதிமன்றத்தை அணுகிஇருக்கார் .... இங்கே மோடி மேல் குற்றச்சாட்டு அல்ல .. பிரதமர் மீது... அவர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்... பிரதமருக்கு புகார் அனுப்பி இருக்கார்.. கேஸூம் போட்டிருக்கார். அப்போ அவர் நியாயம் தேடுகிறார். ஆனால் நாம் வழுவாது இந்தியா.... இந்தியாவில் ஏதாவது நல்லது செய்யணும் என்று நினைத்தால்... கிடைக்கும் பரிசு இதுதான்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement