Advertisement

முக்கிய சிக்னல்களில் ஆம்புலன்ஸ் வாகனம் போய் கொண்டே இருக்கலாம்! நவீன ஆட்டோமேடிக் கருவி வந்தாச்சு

கோவை : கோவை மாநகரில், போக்குவரத்து நெரிசல்களில் சிக்கும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற அவசரகால வாகனங்கள், எளிதாக செல்ல வழி ஏற்படுத்தும் வகையில், நவீன சிக்னல் தானியங்கி கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.கோவை மாநகரை உள்ளடக்கிய பகுதிகளில் அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு, சத்தி ரோடு, மருதமலை ரோடு, தடாகம் ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகள் உள்ளன. இந்த ரோடுகளில் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த, 54 சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதிக வாகன எண்ணிக்கை காரணமாக, இந்த ரோடுகளில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போதுள்ள சிக்னல்கள் 'டைமிங்' அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் போலீசாரே, சிக்னல்களை 'மேனுவலாக' இயக்கியும், போக்குவரத்து நெரிசலை சரி செய்து வருகின்றனர்.இதுபோன்ற நேரங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற அவசரகால வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. அவசரகால வாகனங்கள் செல்லும்போது, போலீசார் சிக்னலை அதற்கு ஏற்ப மாற்றியும், ரோட்டில் நின்று குறிப்பிட்ட திசையில் இருக்கும் வாகனங்களைஅனுப்பி வழிஏற்படுத்தியும் தருகின்றனர்.இந்நிலையில், சிக்னல்களை இயக்கும் 'சுவிட்ச்'களுக்கு பதிலாக, தற்போது நவீன தானியங்கி கருவிகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் சிக்கும் அவசரகால மற்றும் முக்கிய வாகனங்கள், குறிப்பிட்ட சிக்னலை எளிதாக கடக்க உதவும் என்று போலீசார் தெரிவித்தனர்.இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:போக்குவரத்து சிக்னல்கள், தற்போது சுவிட்ச் முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. அதிகளவு போக்குவரத்து நெரிசல் உள்ள இடத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு,வி.ஐ.பி., வாகனங்கள் சிக்கி கொண்டால், சுவிட்ச் முறையில் மாற்றி அனுப்புவது கடினம்.ஏனென்றால், உடனடியாக அவசரகால வாகனங்கள் சிக்கியுள்ள பகுதிக்கான சிக்னலை மாற்ற முடியாது. ஒன்று, இரண்டு என்று கடிகார அமைப்பு முறையில் தான் மாற்ற முடியும். இதன் காரணமாக அந்த வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படும்; நெரிசலும் அதிகரித்து விடும்.இதனை தவிர்க்க தற்போது நவீன 'ஆட்டோமெட்டிக் சிக்னல் கன்ட்ரோலர்' கருவி சிக்னல்களில் பொருத்தப்படுகிறது. இதன்மூலம் துரிதமாக அவசரகால வாகனங்கள் சிக்கியுள்ள பகுதிக்கான சிக்னலை இயக்கி விடலாம்.கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் தற்போது வரை, 15 சிக்னல்களில் இந்த 'தொடுதிரை' கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து சிக்னல்களிலும் இந்த கருவிகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

எந்தெந்த சிக்னல்கள்!அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் சந்திப்பு, எல்.ஐ.சி., ஜி.கே.என்.எம்., சந்திப்பு, லட்சுமி மில், நவ இந்தியா, எஸ்.ஓ., பங்க், பீளமேடு, பன்மால், ஹோப்காலேஜ், சி.எம்.சி., சிட்ரா சந்திப்பு, மேற்கு சரகத்தில், ஏ.ஆர்.சி., சந்திப்பு, சிந்தாமணி, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு ஆகிய இடங்களில், 'ஆட்டோமெட்டிக் சிக்னல் கன்ட்ரோலர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement