Advertisement

புதுச்சேரியில் முட்டல் மோதல்; மதுரையில் கெஞ்சல் கொஞ்சல்

மதுரை: மதுரையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் சந்தித்து, புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து ஜாலியாக பேசினர்.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. 'கவர்னரின் செயல்பாடுகளுக்கு பா.ஜ., பின்னணியில் உள்ளது' என காங்., குற்றம்சாட்டுகிறது.

சட்டசபைக்கு பா.ஜ.,வை சேர்ந்த மூவர் நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமிக்கப்பட்டனர். இதை சபாநாயகர் வைத்தியலிங்கம் நிராகரித்தார்.
இதனால், மோதல் உச்சத்தில் உள்ளது. இந்நிலை யில் விருது நகரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாராயணசாமி, புதுச்சேரி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அதேநேரம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா அங்கு வந்தார். நாராயணசாமி வருகை குறித்து தகவல் அறிந்து அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று சந்தித்து இருவரும் 20 நிமிடங்கள் பேசினர்.

இச்சந்திப்பு குறித்து காங்., நிர்வாகிகள் கூறியதாவது:
புதுச்சேரி அரசியலில் இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக உள்ள நிலையில், அதன் தாக்கமே இல்லாத வகையில் இவர்கள் இருவரின் பேச்சும் எதார்த்தமாக இருந்தது.''வாங்க தலைவரே...'' என அமைச்சர் வரவேற்று பேச்சை துவங்க, ''எங்களுக் குணு நல்ல... அம்மா...வை அனுப்பி வச்சிருக்கீங் களே... எம்.எல்.ஏ.,க்கள் நியமனத் தில் இப்படி பண்ணலாமா, பிரதர்,'' என நாராயணசாமி எதார்த் தமாக பேசினார்.

அதற்கு, ''எல்லாம் சட்டப்படி தான் நடக்குது. நீங்க உங்க முடிவை முன் கூட்டியே சொல்லலையா,''
என்றார். அதற்கு, ''நாங்க லிஸ்ட் அனுப்பிட் டோம் அதையும் மீறி நீங்க போட்டுருக்கீங்க இது தவறு இல்லையா,'' என நாராயணசாமி பதில் அளித்து, ''நிதி ஒதுக்கீட்டிலாவது நம்ம மாநிலத்தை கொஞ்சம் கவனிங்க பிரதர்,'' என்றார்.

இதற்கு அமைச்சர், ''நிதியெல்லாம் நீங்க சாமர்த்தியமா வாங்கி விடுகிறீர்களே...'' என ஜாலியாக பேசினர். இதன் பின் சில நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினர்.இவ்வாறு கூறினர்.

Advertisement
 

வாசகர் கருத்து (26)

 • Balakrishnan - Kanyakumari,இந்தியா

  ஆக நாட்டு முன்னேற்றத்தைப்பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை, மோடி நாட்டுல நல்ல பெயர் எடுத்திட கூடாதுனு ஒரு பெரிய கூட்டமே வேலை பார்க்குது. போய் புள்ளைகளை ஒழுங்கா படிக்க வைங்க, அப்புறமா வரலாற பேசுங்க...........

 • Balaji - Khaithan,குவைத்

  இதுபோன்ற சாதாரண சந்திப்புகளை இப்படி செய்தியாக போட்டு போட்டுத்தான் தமிழகத்தில் அரசியல் நாகரீகம் என்பது இல்லாமல் செய்யப்பட்டு விட்டது....... இன்னும் இதேபோன்று தான் அனைத்து பத்திரிகைகளும் செயல்படுகின்றன ......... இது வடஇந்தியாவில் நம் தமிழகத்தில் இருப்பது போன்று இல்லை...........

 • Marimuthu Govindaraj - chennai,இந்தியா

  இரண்டு வன்னிய தலைவர்கள் சந்தித்தால் சாதி என்பார்கள்? இரண்டு தேவர் தலைவர்கள் சந்தித்தால் சாதி? அனால் பிராமணர்கள், பிள்ளைமார்கள், நாடார்கள், நாயுடுகள், முதலியார்கள், கொங்கு கவுண்டர்கள், தலித்துக்கள்& சிறுபான்மை இனத்தவர்கள் சந்தித்தால் அது நட்பு என்பார்கள்? வேறு எதற்கு சந்திப்பார்கள் உறவுமுறை சந்திப்பு .எல்லா சாதிக்கும் சாதி பாசம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம்,திருமணம் ,கடன் வசதி சாதி பாசத்தில் நடக்கிறது. இது மக்கள் எல்லாருக்கும் தெரியும்.

 • DAVID DHAVARAJ - pondicherry,இந்தியா

  புதுச்சேரியில் தண்ணீர் பிரச்சினை கிடையாது. ஒரு சிறு மாநிலம் என்பதால் எதையும் எளிதாக செய்து முடிக்கலாம் . ரௌடிகள் கட்டபஞ்சயாத்து அதிகம் . குடிகாரர்களுக்கு சலுகைகள் அதிகம் .இரவில் வெளியூர் செல்ல பஸ் வசதியோ ரயில் வசதியோ சரியாக இல்லை .இன்னும் கொஞ்சம் அதிகமாய் இருந்தால் நலம். புரையோடிய ஊழல்,ரௌடிகளின் ஆதிக்கம் இவைகளில் இருந்து புதுவையை மீட்க இன்னும் நூறு கிரண் பேடிகள் வேண்டும்.ஆனால் கவர்னர் முதல்வர் சண்டை முடிவுக்கு வர முயற்சி எடுத்தால் நலம் .இவர்கள் சண்டையில் மக்கள் நலம் பாதிக்க கூடாது .தமிழ் நாட்டில் கவர்னர் இல்லை பிரச்சினை . புதுவையில் கவர்னர் இருந்தும் பிரச்சினை .

 • Shan - kuwait,குவைத்

  பேடி கட்டிங் வாங்கமாட்டார். நேர்மையான கவர்னர். மக்களுக்காக நல்லது செய்யணும்னு நினைக்கிறார் .

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  பேடி யை விரட்டாதவரை பாண்டிச்சேரி உருப்படாது என்பது மட்டும் உறுதி இதை பிஜேபி நன்றாக அறிந்துள்ளது நடவடிக்கை துவங்கிவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளதாம் \

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அரசியல் நாகரீகம் கருதி இருவரும் கத்தியை பின்னே வைத்து இருந்ததை நீங்கள் பார்க்கவில்லையா...

 • vasanthan - Moscow,ரஷ்யா

  இந்த நாராயணன் NR ஆட்சியில் கொடுத்த தொந்தரவுகள் எவ்வளவு. இப்பொழுது கெஞ்சுகிறார். மருத்துவக்கல்லூரி ஒதுக்கீட்டில் இவரும் இவர் கட்சிகளாலும் லஞ்சம் வாஙகி குவித்தார் அதற்கு கவர்னர் ஆப்பு வைத்துவிட்டார்

 • உண்மை விளம்பி - சிங்கப்பூர்,சிங்கப்பூர்

  இரு எதிர் கட்சி தலைவர்கள் பரஸ்பரம் இவ்வாறு பேசுவது நல்லது தான். குறையின்றுமில்லை. இதில்- மக்களின் பிரச்சினைகள், குறைகளை தீர்ப்பது என்பது பாதிக்காதவறை - இது ஓகே தான்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  பிரச்னையே நார சாமி கோஷ்டி அதிகமாக நிதி ஒதுக்கிக் கொள்வது தான் அதற்கு ஒத்துக்கொள்ளாத கிரண்பேதியை தடைக்கல்லாக நினைக்கிறார்கள் அவர்களுக்கு வேண்டியது கட்டிங் வாங்கும் கவர்னர் தான்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மாநிலத்துக்காக உழைக்கும் கவர்னரை பாராட்டாவிட்டாலும் தூற்றி வாராமல் இருப்பது நல்லது... ஆனால் பாண்டி முதல்வருக்கு மக்கள் / மாநிலம் முக்கியம் இல்லை...

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  இதுல என்ன சாமர்த்தியம் என்று புரியவில்லை, கழுவுற மீன்ல நழுவுற மீனாய் இருக்கீங்க,

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement