Advertisement

கமலுக்கு ஸ்டாலின் ஆதரவு; அமைச்சர்களுக்கு கண்டனம்

சென்னை: நடிகர் கமலை மிரட்டிய அமைச்சர் களுக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்டாலினுக்கு, கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு மீது, சமீபத்தில், நடிகர் கமல் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். 'குற்றச் சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா... ஆதாரம் இல்லாமல் கமல் பேசக் கூடாது. அவர் மீது அவதுாறு வழக்கு தொடர்வோம்'என, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நேற்று முன்தினம் கூறினார்.
அதுபோல, 'கமல் ஒரு ஆளே கிடையாது' என, அமைச்சர் அன்பழகனும், 'கமல் மீது
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என, அமைச்சர் சி.வி.சண்முகமும் தெரிவித்தனர். தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கமலுக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் கூறியதாவது: மக்கள் கருத்தை பிரதிபலித்த கமலை, சட்டத்தை காட்டி அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். ஆட்சியாளர்கள் தங்கள் மீதான விமர்சனங்களில் உள்ள உண்மை களை தெரிந்து, தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும்; அது தான் ஜனநாயக ஆட்சி.

கமல் மீது வன்மம் கொண்டு கருத்துதெரிவித்து, விமர்சிப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல். கமலின் கருத்து, தமிழக மக்களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். உடனே, கமல் தன்,
'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், 'அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

என் ஆதங்கங்களில் பல உங்கள் கோப செய்தி யிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர், தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது', என தெரிவித்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (65)

 • ராமசாமி - விருத்தாச்சலம்,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

  இந்த விஷயத்தில கமல் தான் சூப்பர் ஸ்டார் தமிழ் மக்கள் இதற்காக உங்களை ஆதரிப்பார்கள். இந்த மானங்கெட்ட மந்திரி பசங்க ஏதாவது தெரிஞ்சாதானே வேலை செய்வானுங்க எல்லாம் ஜாதியை வச்சி மந்திரியான முட்டாள்கள். மக்களே இதுல ஒன்றை கவனியுங்கள் கட்சி ஆரம்பிச்சி முதல்வர் ஆவேன்னு சொன்ன நடிகர் கப்சிப்ன்னு இருக்கார், ஆனா எதுலயும் சேர மாட்டேங்கிற நடிகர் பட்டைய கிளப்புறார்

 • Krish Swam - CHENNAI,இந்தியா

  கமல் உலக நாயகன் அல்ல ஒரு மஹா உளறல் நாயகன்.

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  வாசகர்களே நான் ஆரம்பத்தில் இருந்தே கூவி கொண்டு உள்ளேன் யாரும் நம்ப மாட்டேன் என்கிறீர்கள் ...எனக்கு இன்னும் சந்தேகம் தான் . திருடர்கள் முன்னேற்ற கட்சியில் இருந்து இவன் பணம் வாங்கியிருப்பானோ என்று .... திருடர்கள் முன்னேற்ற கட்சியின் சதிசெயல் ... திரு ரஜினி அவர்கள் அரசியல் பிரவேசத்தை தடுக்க இவன் உள்ளே இறக்கப்பட்டுள்ளான் .... admk இவ்வளவுகாலம் உயர் ஜாதி கையில் இருந்தது ... இப்பொது திருடர்கள் முன்னேற்ற கட்சின் நேரம் ... உயர்ஜாதிக்கையில் போய்விடும் . பாவம் தளபதிக்கு பணத்தை எண்ணதான் தெரியும் மக்களின் மனதை எண்ண தெரியாது

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  இந்த கமல் மாறனை ராஜாவை கனிமொழி பற்றி இல்லை மு.கருணாநிதி ஆட்சியில் நடந்த பற்றி ஒன்றும் பேசவில்லை - அண்ணாதிமுக ன்னா இவருக்கு இளைத்ததா கமல் மு.கருணாநிதி ஸ்டாலின் கூட்டம் உங்களுக்கு ஆதரவு சொல்லிவிட்டது இல்லையா இனி நீங்கள் வடிவேலு போலெ தான் முடிந்தது உங்கள் கதை

 • Balaji - Khaithan,குவைத்

  என்ன தான் கமல் அவர்கள் சொன்னது சரியாக இருந்தாலும் அதைப்பற்றி விமர்சித்து தான் யோக்கியன் என்று பறைசாற்றிக் கொள்ளவே தளபதி விழைகிறார் என்பது தெளிவாக தெரிகிறது..........

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  கமல் ரஜினியை பார்த்து சூடு போட்டு கொள்கிறார்... ரஜினியே எந்தளவு அரசியலில் நிற்க போகிறார் என்று தெரியாது... கமலின் ஒழுக்கம் கெட்ட தனத்துக்கு இன்றைய அரசியல் ஏதுவானது தான்... ஆனால் அவருக்கு சினிமா தெரிந்த அளவு அரசியல் தெரியாது... இவர் பேசுவது யாருக்கும் புரியப் போவதில்லை... இவர் தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச பேரையும் சிதைத்து கொண்டு ஓடப்போகிறார்... ஸ்டாலின் தலைமையில் அரசியல் விளங்காது... இப்பொழுது அவர் தன அப்பாவின் பேரைவைத்து குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார் ... தாத்தாவுக்கு பிறகு இவருடைய மதிப்பு இன்னும் கீழே போகும்..

  • Karuthukirukkan - Chennai,இந்தியா

   ஒழுக்கம் கெட்ட தனம் ?? இதுக்கு என்ன அர்த்தம் ஒழுக்க சீலரே ??

 • Snake Babu - Salem,இந்தியா

  //அஞ்சி அஞ்சிச்சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்பதற்கிணங்க எல்லோரும் பயந்து பயந்து வாய்மூடி அநியாயங்களை பொறுத்துக் கொண்டிருக்கையில் யாருக்கும் அஞ்சாமல் கருத்துக்கள் சொல்லி வரும் கமலுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் சொல்வது உண்மை. ஒவ்வொரு வாக்காளனும் ஒரு தலைவன் தான். நம் தமிழகத்தில் பிறந்திருக்கும் ஒவ்வொரு கருவுக்கும் உள்ள ஆற்றல் வெள்ளிடைமலை. America ஐரோப்பா ஆஸ்திரேலியா எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். திறமை, உழைப்பு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவை எல்லாம் கொண்டு ஒரு ஜீவன் உழைக்கிறது என்றால் அது நிச்சயம் தமிழன் தான். எங்கள் துறையில் பல மாநிலத்தவரோடும், பல நாட்டவரோடும் வேலை பார்க்கும் அனுபவங்கள் உண்டு. புனே வில் டீம் இருக்கும், சொல்லாமல் கொள்ளாமல் மூன்று வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு யாரிடமும் அனுமதி பெறாமல் செல்வார்கள். வேலை என்னவாகும் என்ற அக்கறை அவர்களுக்கு இல்லை. எவனோ சாகட்டும் என்ற எண்ணம் தான். ஆந்திராவில் டீம் இருக்கும், அவர்களுக்கு பணம் ஒன்று தான் குறி, ஒவ்வொரு ப்ராஜெக்ட்-க்கும் பதவி உயர்வு அல்லது வெளிநாட்டு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இரண்டும் இல்லை என்றால் அவர்கள் ஆபீஸ்-க்கே வர மாட்டார்கள். டெல்லியை எடுத்துக்கொள்வோம் - தன் குடும்பம், தன் பிரச்சினைகள், இவை தான் முக்கியம். ஆறு மணியானால் யார் எக்கேடு கெட்டாலும் போட்டு விட்டு சென்று விடுவார்கள். ஒரு வேளை தனக்கு சொந்தம் என்ற எண்ணமும் இல்லாதவர்கள். கேரளாக்காரர்கள் திறமையானவர்கள், ஆனால் அவர்களால் தமிழனின் வேகத்துக்கு உழைக்க முடியாது. எந்த பலனும் எதிர்பாராது நேரம் காலம் பார்க்காது கருமமே கண்ணாக உழைப்பவன் தமிழன். ஆனால் இந்த தமிழினம் மற்ற மாநிலத்தவரையும் நாட்டினரையும் நேசிக்கிறது. எனவே தமிழ் தமிழ் என்று சொல்லி ஏனைய சகோதர சகோதரிகளிடம் இருந்து தமிழனை பிரித்து விடாதீர்கள். இதற்கு சமீபத்திய ஏ. ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கலவரம் ஒரு உதாரணம். அவரை எல்லாம் மொழி என்ற வட்டத்துக்குள் அடைக்க முடியாது. தமிழ் தமிழ் என்று சொல்லி நம்மை மற்றவர்கள் வெறுக்கும் நிலைக்கு ஆளாக்கி விடாதீர்கள். நம்மை உலகம் மதிக்கிறது. நாம் மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்பவர்கள். தானே உண்டு மகிழ்பவர்கள் அல்ல. நம்மை தாழ்த்தி சுய கெளரவம், சுய நலம் என்ற வட்டத்துக்குள் யாரும் அடைத்து விட வழி வகை செய்யாதீர்கள். பாரையே ஆளத்தகுதி படைத்தவர்கள் நாம். எல்லோரும் இன்புற்றிருப்பதுவேயல்லால் வேறொன்றறியேன் பராபரமே.... /// அருமை அய்யா. நன்றி வாழ்க வளமுடன்

  • Thiyagarajan - Bangalore,இந்தியா

   யார் தமிழகத்தில் அஞ்சுகிறது, யார் யார் எல்லாம் அரசுக்கு எதிராக கருத்து சொல்கிறார்கள் இவர் சொல்லாமல் இருந்தால்தான் தப்பு

  • Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா

   இப்ப என்னதான் சொல்லவரிங்க கமல் பேச்சு மாதிரியே இருக்கே

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  எப்பா இங்கே திமுகவின் மீது தான் எவ்வளவு வெறுப்பு .. ஒரு நடிகரை சட்டத்துறை அமைச்சர் மிரட்டி பேட்டி கொடுத்து கொண்டு இருக்கிறார் .. அதை கண்டித்தால் , அதே திமுகவின் மீதே பொங்கல் .. இதே ஜெயலலிதா தானே 2011 தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர்களை துன்புறுத்துது திமுக என்று சொல்லி ஓட்டு கேட்டார் ?? ஆனால் இந்த ஆட்சிக்கு திமுக 100 மடங்கு பரவா இல்லை போல ..

 • Jaya Ram - madurai,இந்தியா

  காரியம் ஆகவேண்டும் என்றால் கழுதையின் காலை கூட பிடிப்பவர்கள் தான் இந்த திமுகக்காரர்களின் வழக்கமே ஏற்கனவே அப்பாவிற்கு 60 ஆண்டு சாதனை என்று கூறி ஒரு கூட்டணிக்கு வித்திட்டார் அதிலே சறுக்கல் போலும் இப்போ கமலுக்கு ஆதரவு தருவதன் மூலம் அவரது ரசிகர்களை தங்களுக்கு ஆதரவாக்கலாம் என்று திட்டம் போட்டு இக்கருத்தினை தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகன் நாடாளமுடியுமா என்று எம் ஜி ஆரை பார்த்து இவருடைய அப்பா கேட்டார்? ஆனால் இப்போ நடிகர்களை வைத்து அரசியல் செய்யும் அளவிற்கு தி முக இறங்கிவிட்டது ஏனெனில் அவர்களிடம், நேர்மையில்லை, பொதுவாழ்வில் தூய்மை இல்லை, முக்கியமாக கொள்கை என்பதே இல்லை, கேட்டால் மாநில சுயாட்சிதான் எங்கள் கொள்கை என்பர் ஆனால் இவர்களின் ஆட்சிகாலங்களில்தான் மாநிலங்களின் அணைத்து உரிமைகளும் பறிபோயின, முக்கியமாக தமிழகத்தின் நிலப்பரப்புகளில் ஒன்றான கச்சத்தீவு தமிழக மக்களின் கருத்துகேட்காமல் இல்லாமல் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது, இதேபோல் கல்வியிலும் நம்மை கேட்காமல் அவர்கள் இஷ்டப்படி நடந்து கொள்ள விட்டதின் விளைவு இப்போ நீட் தேர்வினை சந்திக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது, கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுவது போல் நம்முடைய வரிப்பணங்களில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவக்கல்லூரிகளில் நமது பிள்ளைகள் படிக்க வழியில்லாமல், வேறு மாநிலங்களில் இருந்து இங்கு படிக்க அனுப்புவார்களாம் நாம் அதை ஏற்று கொண்டு விரல் சூப்பவேண்டுமாம் இதை திமுக 1965 இல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் போல் நடத்தியிருந்தால் கூட மன்னித்திருக்கலாம் ஆனால் அதற்க்கு அறிக்கைகள் கூட இல்லை இவர்கள் தான் மீண்டும் ஆட்சியினை பிடிக்க நினைக்கிறார்கள், இன்னொரு செய்தி தற்போது குளம் தூர் வாருகிறேன் என்று கூறி அதில் உள்ள வண்டல் மண்களை எல்லாம் எடுத்து திமுகவினர் அங்கங்கே விற்பனை செய்வதாக கேள்வி இப்படி ஆட்சியில் இல்லாத போதே செய்கிறவர்கள் பின் எப்படி ஆட்சி நடத்துவாங்க வேண்டாமப்பா இவர்கள் ஏற்கனவே இவர்களால் கப்பங்கிழங்கை தின்றோம், கல்விக்கு கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கிறோம், குடிதண்ணீரை விலைக்கு, வாங்குகிறோம் இன்னும் இவர்கள் கையில் ஆட்சி போனால் என்ன தின்போம் என்ன குடிப்போம் என்பதே கேள்விக்குறியாகிவிடும்

  • Karuthukirukkan - Chennai,இந்தியா

   ஓஹோ ஆமா ஆமா கமலுக்கு ரசிகர்கள் பல கோடி பேர் இருக்கிறார்கள் .. அதை நம்பி தான் திமுக இருக்கு .. ஏன்யா இப்பிடி காழ்ப்புணர்ச்சி ??

  • Ramanathan V - chennai,இந்தியா

   உங்கள் கருத்து மிகவும் கேவலமாக உள்ளது. ADMK தமிழ் நாட்டை கொள்ளை அடித்து விட்டது. மேலும் மேலும் அந்த கட்சிக்கு ஆதரவு வேண்டாம். கட்ச தீவு, காவேரி பிரச்னை எல்லாம் இரு கட்சிகளும் ஒன்றா இருந்தபோது இருவராலும் செய்யப்பட்டது. முதலில் DMK இல் இருந்த அனைத்து திருடர்களும் ADMK கு MGR கொண்டு சென்று விட்டார். ADMK இரு அணிகளும் ஜனாதிபதி தேர்தலில் பிஜேபி கு ஆதரவு தெரிவித்து வோட்டு போட வேண்டாம். தமிழகத்தை புறங்கணித்த பிஜேபி கு எதற்கு இவர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள்.

 • PrasannaKrishnan -

  Both of you get out from my state.

 • PrasannaKrishnan -

  Both of you get out from my state.

 • PrasannaKrishnan -

  Both of you get out from my state.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  பாரட்டவேண்டிய விஷயம், இது போல அவருக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும், இல்லாவிடில் இந்த மிரட்டி பணம் பறிக்கும் அர்ஜுன் சம்பத் கோஷ்டி போன்றவர்கள், ஒரு பத்து ரௌடிகளை வைத்து காசு பறிக்க முயற்சி செய்வார்கள், கமலை ஆதரிப்போம், மிரட்டும் சக்திகளை புறக்கணிப்போம்

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

   எப்புடிங்க? விஸ்வரூபம் படத்துக்கு பன்னாங்களே அப்படி பண்ணா சும்மா இருப்பீங்க தானே?

  • Karuthukirukkan - Chennai,இந்தியா

   விஸவரூபம் பிரச்சனைக்கு மொத்த தமிழகமும் கமல் பின்னாடி தானே நின்றது ?? அதனால் தானே படமும் மாபெரும் வெற்றி பெற்றது ?

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

   எங்கே நின்றது, இதே கமல் அன்றைய பேட்டியில் சொன்ன வார்த்தைகளை நினைவில் கொள்க, இன்று மிக சுலபமாக சொல்லலாம், ஆனால் அன்று ?

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  விஸ்வரூபம் படத்திற்கு எதிர்ப்பு வந்த போது இவர்கள் மத வாதம் பற்றி பேசாதது ஏன் ??????

  • தலைவா - chennai,இந்தியா

   ஆமாம் விஸ்வரூபம் படத்தில் ஹிந்து மதவாதம் பேசியபோது ஸ்டாலின் எதிர்த்து இருக்க வேண்டும்.

  • sankar - trichy,இந்தியா

   படத்தை சரியா பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். தியேட்டரில் சுகிறீன்க்கு முதுகு காண்பித்து ப்ரொஜெக்க்டரை பார்த்து படம் பார்த்தீர்களா

 • S.L.Narasimman - Madurai,இந்தியா

  பொது வாழ்க்கையில் ஒழுக்கமில்லாத கமலகாசனுக்கு கருத்துக்கள் சொல்ல எவ்வளவு உரிமை இருக்கின்றதொ அவ்வளவு உரிமைகள் அமைச்சர்களுக்கும் இருக்கின்றது .

  • pvrn - riyadh,சவுதி அரேபியா

   கமலுக்கு ஒழுக்கத்தை பற்றி நீங்க சொல்ல வேண்டியதில்லை

  • SANKAR - calgary,கனடா

   பொது வாழ்வில் நடக்கும் உண்மையை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்... கமலஹாசன் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமை இல்லை...அவர் சொன்னதும் ஏதோ அவருடைய கற்பனையில் வந்ததல்ல... உச்ச நீதிமன்றம் சொன்னதைதானே சொல்லுகிறார்...

  • vinu - frankfurt,ஜெர்மனி

   கோல்டி நரசிம்மன் உன்னோடைய ஒழுக்கத்தை பற்றி கொஞ்சம் சொல்லு.

  • Karuthukirukkan - Chennai,இந்தியா

   அதென்ன ஒழுக்கம் ?? அதை யார் அளவு படுத்தி வெச்சிருக்கறது ?? நீங்க இப்பிடி தான் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது தான் ஒழுக்கமா ??

 • Rangarajan Pg - CHENNAI,இந்தியா

  நாளப்பின்னே திமுக மறுபடியும் ஆட்சிக்கு வரும் அவல நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டால் கமல் அவர்கள் இதே கருத்தை தானே கூறுவார்? திமுக ஆட்சியில் என்ன ஊழலே நடக்காதா? ஊழலை அரசியலில் அறிமுகப்படுத்தியவர்கள் அவர்கள் தானே. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்கள் பணத்தை திருடலாம் என்பதை நியாயப்படுத்தியவர் திமுகவின் தலைவர் கருணா தானே? அப்படி இருக்கும்போது இரும்பு துண்டு ஸ்டாலின் ஏன் கமலை ஆதரிக்கிறார்? அவர் ஊழலை எதிர்த்து பேசியதன் மூலம் திமுகவையும் தானே எதிர்த்து இருக்கிறார்?

  • SANKAR - calgary,கனடா

   உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா வழக்கில் "ஆக்டோபஸ் போல எல்லா துறையிலும் ஊழல் " என்று சொல்லி அவர் குற்றவாளி என்றும் நிரூபணம் ஆகியது... கலைஞர் மீது எந்த வழக்கும் இல்லை... அவர் குற்றவாளி என்று எந்த வழக்கிலும் தீர்ப்பாகவில்லை.. ஜெயலலிதா கண்ணில் விளக்கெண்ணெய் போட்டு தேடியும் எந்த குற்றமும் அவர் மீது கண்டுபிடிக்கமுடியவில்லை... பொய் வழக்கு போட்டு மூக்குடை பட்டார்... மற்றவர்கள் (அ தி மு க வினர்) வேண்டுமென்றே தாங்கள் தப்ப " அதோ திருடன்.. அதோ திருடன்.." என்று தி மு க மீது கதை கட்டலாம்.. அதுதான் இத்தனை காலமும் அரங்கேறுகிறது...ஆனால் அது முழுக்க முழுக்க ஆதாரமற்ற கட்டு கதை... அவர்களிடம் அதிகாரம் இருந்தும் பின் ஏன் கலைஞர் மீது வழக்கு தொடர படவில்லை...? 2G வழக்கும் எதிர்க்கட்சிகளின் நிர்பந்தத்தால் போடப்பட்ட வெட்டி வழக்கு..

  • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

   SANKAR - Calgary,கனடா கருணாநிதி ( என்கிற தட்சிணா மூர்த்தி )மீது எந்த வழக்கும் இல்லை .. எனவே அவர் நியாயத்தின் மறு உருவம்.. சர்க்காரியா கமிஷனை இழுத்துமூடவே இந்திராவின் கூட்டு தேவை பட்டது. கருணாநிதியின் ஊழலை மறைக்கும் சாமர்த்தியம் அதுவும் விஞ்ஞான பூர்வமாக என்பது உலகம் அறிந்த உண்மை .. ஆனாலும் நீ கனடாவில் உட்கார்ந்து கொண்டு(அதுவே உண்மையா இல்லை போலியா என்று தெரியவில்லை ஏன் என்றால் திமுக வில் கருணாநிதி முதல் மனுஷ்ய புத்திரன் வரை எல்லாமே போலிப்பெயர்கள் தானே ) இப்படி முட்டாள் தனமாக எழுதுகிறாயா இல்லை கண்முடித்தனமான திமுக உளுத்தம் பருப்பா என்று தெரியவில்லை .. உனக்கே இந்த கருத்தை எழுதிய பின்பு உன் மனசாட்சி குத்தியிருக்கும் அல்லது சிரிப்பு வந்திருக்கும்... பாவம் உன்னை மாதிரி மனநோயாளிகள் ...அதிமுக வினரைப் பார்த்து முட்டாள்கள் மாதிரி சிந்திக்க தெரியாத மக்களாக இருக்கிறீர்களே என்று சொல்லும் உம்மை மாதிரி ஆட்களுக்கு தமது யோக்கியதை என்ன என்று யோசிக்கும் சுய சிந்தனை இல்லை .. உலகின் ஒட்டுமொத்த அயோக்கிய தனத்தின் உருவம் தான் திமுக ..

  • Thiyagarajan - Bangalore,இந்தியா

   கருணாநிதி எல்லா தில்லாலங்கடியும் செய்யாதவர், ஸ்டாலின் ஒன்றுக்கும் ஆகாதவர் அதுதான் திமுக வரக்கூடாது என்று மக்கள் விரும்புகிறார்கள்

 • Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Every body knows that there will not be any 'Direct Proof' for corruption. It is clandestine operation.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஆனா ஸ்டாலின் பெங்களூரில் சசிக்கு முழு ஆதரவு போல. அதுதான் ஆள் வாயையே திறக்கவில்லை... பாருங்கள்... எவ்வளவு பணம் கை மாறியது... என்று தெரியவில்லை...

  • Thiyagarajan - Bangalore,இந்தியா

   உண்மைதான் இருவரும் ஒத்த நண்பர்கள்

 • rajan - kerala,இந்தியா

  அட சுடலை இது என்ன உங்க லஞ்ச ஊழல் அச்சன் கொள்கைக்கு எதிராக இப்படி ஓலமிடலாமா? எனவே சுடலை தம்பி இந்த கண்ணாடி கோலம் எல்லாம் ரொம்ப தத்ரூபமா இருக்கு சந்தோசம் ஆனால் ஊளை எதிர்ப்பது மட்டும் உங்க பரம்பரைக்கே செய்யும் துரோகம் என்பதை கனி ராசா உணர்த்துவாக, கேட்டு நடந்துக்கோங்க .

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  கருணாநிதி ஆட்சி காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் ஊழல் ஆரம்பித்து விட்டது என்று கமல்ஹாசன் சொல்லட்டுமே ...சுடலை ...என்ன சொல்கிறார் என்ற்று பார்ப்போம் ..அந்த அளவு தைரியம் இருந்தால் கமல்ஹாசனை பாராட்டலாம் ...

  • balakrishnan - coimbatore,இந்தியா

   ஊழல் என்பது இன்று நேற்று அல்ல அது மனிதன் தோன்றிய நாட்களில் இருந்தே இருந்து வருகிறது, திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஊழ் என்ற தலைப்பில் குறளை எழுதியுள்ளார், பண்டைய இதிகாசங்களில் இல்லாத திருவிளையாடல்களா , எல்லாமே நமது முன்னோர்கள் நமக்கு கற்று கொடுத்தவை தான், தேடிப்பார்த்தால் ஒரு சதவிகித யோக்கியன் கூட இந்தியாவில் இருக்கமாட்டான், ஓட்டுக்கு காசு வாங்குபவனும் ஊழல்வாதி தான், காசு கொடுப்பவனும் ஊழல்வாதி தான், அரசியல் கட்சி கூட்டங்களுக்கு காசு வாங்கிகிட்டு ஊர்வலம் போவோரும், கொடிபிடிப்போரும் ஊழல்வாதிதான்,

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   ஊழ் என்ற வார்த்தைக்கு ஊழல் என்று அர்த்தமா ? திருக்குறளை நீங்கள் படித்திருக்கிறீர்களா ? என்ன தான் நீங்கள் நடித்தாலும் உங்கள் மண்டை மேல் உள்ள கொண்டாய் உங்களை பின்தொடர்கிறது.

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

   @பாலகிருஷ்ணன், Speak for yourself ... காங்கிரேஸ்ஸயும் திமுகவையும் ஆதரிக்கறவன் எல்லா அயோக்கியத்தனத்தையும் நியாயப்படுத்துவான்... அதைத்தான் நீங்க பண்றீங்க... நாட்டில தப்பு பண்ணாதவன் பலர் இருக்கிறார்கள்... நீங்கள் ஆதரிக்கும் கட்சியில் வேண்டுமானால் இல்லை என்று சொல்லுங்க...

  • sankar - trichy,இந்தியா

   ஊழ் என்பது விதி ஊழல் என்பது திருடுவது ரெண்டுக்கும் வித்யாசம் தெரியாமல் பாலகிருஷ்ணன்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  திருட்டு முன்னேற்றக்கழகத்தின் பார்ப்பன பனியா எதிர்ப்பு நிலை என்றும் மாறாதுன்னு உங்க அப்பா முழங்குவாரே பனியா வம்ச கோபால கிருஷ்ண காந்தியும் பார்ப்பன கமலும் இப்போ உங்களுக்கு வேண்டியவர்களாகி விட்டார்கள் காலத்தின் கொடுமை பிழைப்பு அரசியல் .அடுத்ததா தமிழகத்திலும் அவ்வினங்களுக்கு எம் எல் ஏ சீட் தருவீர்களா?

  • balakrishnan - coimbatore,இந்தியா

   தேவைக்கு ஏற்ப அனைவரும் வெவ்வேறு முடிவை எடுக்கிறார்கள், பார்ப்பன எதிர்ப்பு என்பது என்றோ முடங்கி போய்விட்டது, அதுக்கு தேவையும் இல்லை, ஆனால் பெரியார் பார்ப்பன எதிர்ப்பு என்ற ஒன்றை கையில் எடுத்த போது அதற்கு தேவை இருந்தது, ஆனால் துரதிர்ஷ்டம் மகாத்மா காந்தி என்று இந்தியா முழுக்க மக்களால் போற்றப்படுபவரை அவர் ஜாதியை குறித்து பேசி உங்கள் முகத்தை அடையாளப்படுத்தியது, உங்களுக்கு ஒரு பிழைப்பு

  • Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   நீங்க DMK வினுடைய ஸ்லீப்பர் செல் ஆ............

  • vinu - frankfurt,ஜெர்மனி

   ஐ மார்வாடி தமிழலாம் கருத்து ஏழுதிறான் பா.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   ஜெர்மனியில் இருந்து வெள்ளை பாவாடை கும்பல் எழுதும்போது மார்வாடி எழுதுவதில் தவறில்லை.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

   காந்தி பனியா சாதி என்பதற்காக கருணாநிதியும் அவரது குரு மற்றும் கைக்கூலிகள் எத்தனை முறை பார்ப்பன பனியாக்களை ஒழிப்போமென கேவலமாக முழங்கினர் ? பாம்பையும் பார்பானையும் கண்டால் பாம்பை விடு பார்ப்பானை அடி என்று உளறியதும்தான் உங்களுக்கு இனிக்கும் அந்த அராஜகப் பேச்சுக்கள் சாதியொழிப்பின் அடையாளமாகத் தெரியும் அதே நாறவாய்கள் எத்தனையோ முறை ராஜாஜியை ராஜகோபாலாச்சாரியார் என்றும் காமராஜை நாடார் என்று குறிப்பிட்டபோது அது தவறாகத் தெரிந்திருக்காதே. ஏனெனில் இந்த துரோகி கூட்டத்துக்கு மட்டுமே மற்றவர்கள் சாதியை இழிவுபடுத்தும் அல்லது குறிப்பிடும் உரிமையுண்டு ஆனால் மற்றவர்கள் பேச்சு நடையில் காங்கிரசை கலைக்கச்சொன்னது பனியாவான காந்தியின் புத்திசாலித்தனம் எனப் புகழ்ந்தால் அது சாதிவெறி தவிர வேறேதுமில்லை என்னவொரு நடுநிலை?

  • தேச நேசன் - Chennai,இந்தியா

   ஆனால் முரசொலியில் பலமுறை ராஜாஜியை ஆச்சாரியார் என சாதியைக் குறிப்பிட்டு கரு நா நிதி எழுதியபோது அது சாதி அடையாளமாக உங்களுக்குத் தெரியவில்லை

  • sankar - trichy,இந்தியா

   ஆச்சாரியார் என்பது அவரை பெருமை படுத்துவது திமுகவினர் அதை தெரிந்து செய்திருக்க மாட்டார்கள்.

 • அப்பாவி -

  அமைச்சர் ஏதாவது சொன்னா அது தப்புன்னு சொல்றது.... ஒண்ணும் சொல்லலைன்னா, அமைச்சர்கள் மவுனம் ஏன்? என திருப்பி உசுப்பேத்துவது - இதெல்லாம் சுடலிக்கு கைவந்த கலை... எப்பிடியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற கனவில் மக்கள் தண்ணீரைக் கொட்டுவார்கள். ஒரு திமுக ஆட்சிக்கு 100 அதிமுக அரசுகள் மேல்.

  • Karuthukirukkan - Chennai

   இங்க வா .. போன 6 வருஷத்துல தமிழகத்தில் நடந்த நல்ல விஷயங்களில் ஒரு 10 சொல்லு பாப்போம் .. திமுக ஆட்சியை விட மேலாம் .. வாய்க்கு வந்ததை பேச வேண்டியது ..

 • ravi - chennai,இந்தியா

  அதிமுக அழியும் நாள் விரைவில் வரும்

 • ravi - chennai,இந்தியா

  கமலஹாசன் அவர்கள் சொல்வதில் ஒரு தவறும் இல்லை - ஜாதியை மதத்தை வைத்து அரசாங்கத்திடம் எல்லா சலுகைகளையும் பெறும்போது போகாத மானம் ஏதோ ஒரு வார்த்தை சொன்னதால் போய்விடுமா - அவர் இந்த ஆட்சியில் ஊழல் இருப்பதாக மறைமுகமாக சொல்கிறார் - அதில் தவறில்லையே - இந்த தேவையில்லாமல் கமல் அவர்களை மிரட்டும் அமைச்சர்கள் எல்லோரும் வருமானவரித்துறையின் நடவடிக்கைக்கு தயாரா - எல்லோரும் உத்தமர்களா - ஊழலே செய்யவில்லையா - ஊழலே செய்யவில்லை என்றால் ஏன் பயம் - நாள் ஒன்றுக்கு ஒரு ஊழல் வெளியாகிறது - ஊழலில் ஊறிய அரசியல்வாதிகள் தாமிரபரணியில் தொண்டு நிறுவனங்கள் தொண்டாற்றுகின்றன - அப்படி இருக்கும்போது எதற்கு சும்மா இருக்க ஒரு ஆட்சி - 2015 வெள்ளத்தின்போது மக்களே தான் தங்களுக்கு உதவிசெய்து கொண்டார்கள் - அப்படி என்றால் அரசாங்கம் எதற்கு - அமைச்சர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும் - ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உரிமை உள்ளது - அவரை முடக்க நினைத்தால் - அவர் ஜாதியை வைத்து அவரை அடக்கநினைத்தால் - அதிமுக காணாமல் போகும் - அழிவை நோக்கி இழுக்கப்படும் - ஜெயலலிதா இவ்வளவு கேவலமாக திரைத்துறையினரிடம் நடந்து கொள்வதில்லை - இந்த அமைச்சர்கள் தங்கள் ஊழலை மறைக்க குலைக்கிறார்கள் - கூவத்தூரில் ஒருத்தருக்கு கூட லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் - வெட்கமில்லாமல் ஏன் அவர்கள் ஜனநாயகத்தை ஏன் அங்கு அடகு வைத்தார்கள் - தைரியம் இருந்தால் மறுதேர்தலை அதிமுக சந்திக்கட்டும் - 40 சீட்டுக்கு மேல் அவர்களுக்கு கிடைக்காது - திமுக ஆட்சிக்கு வரட்டும் - ஜெய் ஹிந்த்

 • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

  எதிரிக்கு எதிரி நண்பன் என்ற காரணமோ?

 • Manian - Chennai,இந்தியா

  கமலுக்கும் 7 1/2 நாட்டு சனி புடிச்சச்சா?

  • தேச நேசன் - Chennai,இந்தியா

   அஷ்டமத்து சனியை ஏழரை சனியால் ஒன்றும் செய்யமுடியாது

  • தலைவா - chennai,இந்தியா

   ஆர் எஸ் எஸ் சொம்பே? என் கேள்விக்கு பதில் சொல்.. சமூகத்தில் சமநிலை வேண்டும் என்ற பெரியார் தேசத்துரோகி ஆனால் இட ஒதுக்கீடு நீக்க பட வேண்டும் என்கிற யோகி தியாகி அல்லவா? ஐயர்களும், ஆச்சரியர்களும், ஐயங்கார்களும் அலங்கரித்த பதவியை கக்கனுக்கு வழங்கிய காமராஜர் ஊழல்வாதி அல்லவா? எக்குலமும் ஒன்றாக வாழ வேண்டும் என்கிற தமிழ் சமத்துவ பூமியில் இல.கணேசன், சு.சாமி, சீதாராமன், ஆடிட்டர் இவர்களின் அதிகாரம் தூள் பார்க்கிறதே இதுதான் சமூக நீதியா? பசுவை யாரும் கொல்வதிலாய் இங்கே ஆனால் பசு பாதுகாப்பு என்பது பார்பனிசத்தின் வெளிப்படாது என்பதை ஒப்புக்கொள்கிறாயா?

  • sankar - trichy,இந்தியா

   ஓமந்தூரார் ராஜாஜி முதல் காமராஜர் கக்கன் பக்தவத்சலம் வரை யாரும் காசு திருடவில்லை. பெரியார் பரம்பரையில் வந்தவர்கள் தான் காசு திருடினார்கள் (அண்ணா தவிர) பெரியாரின் சமூக நீதி எந்தளவுக்கு இந்த நாதாரிகளை கொள்ளையடிக்க வைத்துள்ளது (சமுக நிதி காவலன் வீராங்கனை போன்றோர்கள் தான் ஊழலார் புரிந்தார்கள் என்பது வரலாறு). அந்தணன் என்பவன் அறவோன் (அற செயல் புரியும் எல்லோரும் அந்தணராய் அல்லது அந்தணர்களிடம் நேர்மை அதிகம் காணப்படும்) கக்கன் காமராசருக்கு அப்புறம் தமிழருவி மணியன் சோ தவிர ஒரு நல்லவனை காட்டுங்கள் பார்க்கலாம். இல கணேசன் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் நல்லவர்கள் தான்.

  • தலைவா - chennai,இந்தியா

   அந்த நேர்மையைத்தான் இப்போது நன்கு பார்க்கிறோமே?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஒவ்வொரு வாக்காளனும் தலைவன் என்பதெல்லாம் வெறும் பெனாத்தல்... முகவும், சசிகலாவும் குறைந்த விலையில் ஜனநாயகத்தை விலைக்கு வாங்கி பல காலமாக அடிமைகளை உருவாக்கி வளர்த்து வந்து இருக்கிறார்கள்... இவர்களிடம் கமல் சரணாகதி அடைவதை பார்த்தல் கமல் என்ற சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து விடுவார்கள் போல இருக்கிறது... கமல் நடிப்பதோடு நிறுத்திக்கொள்வது தமிழக கலாச்சாரத்துக்கு உகந்தது...

  • balakrishnan - coimbatore,இந்தியா

   ஓவ்வொரு வாக்காளனுக்குள்ளும் ஒரு தலைவன் இருக்கிறன் என்பது உண்மை தான், அந்த தலைவன் தான் ஆட்சியாளர்கள் அத்துமீறி செல்லும்போது அவனை வீட்டுக்கு அனுப்புகிறான், எத்தனை அடிமைகளை வளர்த்தாலும் ஜனநாயகத்தில் மக்கள் நினைத்தால் யாரையும் வீட்டுக்கு அனுப்ப முடியும், ஸ்டாலின் போன்றவர்கள் கமலுக்கு ஆதரவு கொடுத்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, இல்லாவிடில் இந்த அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் பத்து ரௌடிகளை வைத்து மிரட்டி காசு பிடுங்க பார்ப்பார்கள், இன்று நேற்று அல்ல பல ஆண்டுகாலமாக மனதில் பட்டதை வெளிப்படுத்துபவர் தான் கமல், தனக்கு அரசியலுக்கு வரும் என்னமோ திட்டமோ கிடையாது என்று தெளிவாக கூறிவிட்டார், அவர் என்ன முடிவு எடுக்கவேண்டும் என்பதை நீங்களோ நானோ முடிவு பண்ண முடியாது,

  • ravi - chennai,இந்தியா

   முட்டாள்தனமாக கமலை அசிங்கம் செய்கிறார்கள் - அவர் மாபெரும் கலைஞன் - அவருக்கும் சமுதாயம் செழிப்பாய் இருக்கவேண்டும் என்ற ஆதங்கம் இருக்காதா - இருக்கக்கூடாதா - வழக்கு போட்டால் - நூறு வழக்குகளை ரசிகர்களே போடுவார்கள் - அதிமுக அசிங்கப்பட்டு போகும்

  • ravi - chennai,இந்தியா

   யார் பேசினாலும் அவர் ஜாதியை பார்க்காதீர்கள் - கருத்தை பாருங்கள் - உத்தமர்கள் போல நடிக்காதீர்கள் - தமிழ்நாடு நிச்சயமாக நேர்மை தவறி தான் போகிறது - அமைச்சர்கள் அடித்துக்கொள்வதை விட கேவலம் ஜனநாயகத்தில் வேண்டுமா - எதிர்க்கட்சி காரர்களே தேவையில்லை - இந்த ஆட்சிக்கு - இதற்கு பொதுச்செயலாளர் வேறு - கம்பிக்கு பின்னால் - அதிலும் ஊழல் - போதாதா இவர்களின் ஈன செயல்களுக்கு சான்றுகள் - ஜெய் ஹிந்த்

  • Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   தி மு க அல்லக்கைகள் சத்தம் தாங்கல..

 • LAX - Trichy,இந்தியா

  தளபதியாரே.. உங்ககிட்டேருந்து இன்னும் அதிகமா எதிர்பாக்குறோம்.. 'தெருவில் கில்லி தாண்டு?? விளையாடும் சிறுவர்களுக்கு ஸ்டாலின் ஆதரவு தெருவாசிகளுக்கு கண்டனம்' என்பன போன்று.. யாரா இருந்தா என்ன..? வலியச் சென்று ஆதரிக்கிறது?? தானே முக்கியம்..?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement