Advertisement

முத்திரை தாள் மோசடி தெல்கிக்கு உதவியாளர்களாக சிறை கைதிகள்

பெங்களூரு: முத்திரை தாள் மோசடி வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வரும் அப்துல் கரீம்லால் தெல்கிக்கு, சிறைத்துறை விதிமுறைகளை மீறி, உதவியாளராக விசாரணை கைதிகள் நியமிக்கப்பட்டுள்ள, வீடியோ காட்சிகள் வெளியானதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முத்திரை தாள் மோசடி வழக்கில், அப்துல் கரீம்லால் தெல்கி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இவருக்கு, எச்.ஐ.வி., நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் உள்ளன. இதனால், கடந்த ஆறு மாதங்களுக்கு
முன், நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, தனக்கு உதவியாளர்கள் தேவை என்று நீதிமன்றத் தில் முறையிட்டார். நீதிமன்ற உத்தரவின்படி, 'வீல் சேர்' வசதியும், உதவியாளர்களும் வழங்கப்பட்டது.

சமீபத்தில், சிறைக்கு சென்ற,சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, பல முறைகேடுகளை கண்டறிந்துள்ளார்.இது தொடர்பாக, சிறைத்துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவுக்கு அளித்துள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

தெல்கி, தனியாக நடக்கிறார். ஆனாலும், அவருக்கு மூன்று முதல் நான்கு உதவியாளர்கள் அனுமதிக் கப்பட்டுள்ளனர். அவர்கள், தெல்கிக்கு, கால், கை, முதுகு, அமுக்கி விடுவது உட்பட பல வேலைகள் செய்கின்றனர்.
இந்த காட்சிகளை, நீங்களும், உங்கள் அறையிலிருந்து, கண்காணிப்பு கேமராவில் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தெல்கி போன்ற தண்டனை அனுபவித்து வரும் கைதி களுக்கு விசாரணை கைதிகள், உதவி செய்வது, சிறைத்துறை விதிமுறை மீறப்பட்டும், நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தவறு என்று, அதிகாரிகளுக்கு, 20க்கும் மேற்பட்ட முறை கூறியும், தொடர்ந்து நடந்து வருகிறது. தெல்கி, நன்றாக நடப்பதால், நீதி மன்ற கவனத்துக்கு கொண்டு சென்று, உதவி யாளர்களை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பரப்பன அக்ரஹாரா சிறை யில், தெல்கிக்கு ஒதுக்கப்பட்ட அறையில், மெத்தை மீது அவன் படுத்திருப்பதும், அருகில் ஒருவர் இருக்கும் வீடியோ காட்சிகளும், மீடியாக்களில் நேற்று வெளியானதால் போலீஸ்வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (25)

 • சுவாமி சுப்ரஜனாந்தா - Kualalumpur,மலேஷியா

  So in future all politicians and culprits can demand Parapana akrahara prison.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  ஆமா ஆமா இந்த மாதிரி இந்தியாவில் காசு குடுத்தா வசதி செய்து கொடுக்கும் முதல் மற்றும் ஒரே சிறை பெங்களூரு தான் ..

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  காவி கப்பிகள் காங்கிரசை திட்டி கொட்டுகிறார்கள். இதற்கு முன் ஆட்சியில் இருந்தது இதே காவி கப்பிகள் கட்சி தான். இந்த நிலைமை அபோதும் இப்படியே தான் இருந்துள்ளது. ஊழலில் உலகிலேயே முதல் இடத்துக்கு கொண்டுவந்த பெருமை இந்த காவிப் பண்டாரங்களின் ஆட்சியில் தான் என்பதை மறந்து கூவுகிறார்கள்..

 • Balaji - Khaithan,குவைத்

  பணம் படைத்தவன் சிறை சென்றாலும் சொகுசாகத்தான் இருக்கிறான் என்பதை இனி எதை வைத்து மறைக்குமோ கர்நாடக அரசு தெரியவில்லை...... இது அங்கு மட்டும் தான் நடக்கிறது என்று சொல்லவில்லை..... அனைத்து இடங்களிலும் இதுபோன்ற சட்ட மீறல்கள் பணம் படைத்தவர்களுக்காக நடந்து கொண்டு தான் இருக்கிறது............

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இவர்களே இந்த போடு போடறாங்களே, இனி மல்லையாவை வேற கூட்டிகிட்டு வந்து விசாரணை பண்ணி ஜெயிலில் போட்ட அவர் ஜெயில் உள்ளேயே ஒரு பாரே துறந்திடுவார்.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  பணம் பத்தும் செய்யும் என்பது எவ்வளவு உண்மை. உம்மைப்பிடித்த சனி என்னையும் சேர்த்துபிடித்தது என்கிற மாதிரி, சின்னம்மா கூட சிறையில் இருந்ததால் இவரும் மாட்டிக்கப்போகிறார்.

 • Krishnan Periyasamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

  இவங்களே இவ்வளுவுனா நம்ம சதிகலா எவ்வளவு சுகமா இருந்திருப்பாங்க...

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  மக்கள் செலவில் மஹா சொகுசுவாழ்க்கை அனுபவிக்கும் இடத்தின் பெயர்தான் 'சிறைச்சாலை '. புது இலக்கணம்

 • ARUL - chennai,இந்தியா

  படத்தில் இருப்பது சிறையா? பணக்கார விடுதி அறையா? காவல் துறையே இது முறையா? காசு பார்க்கின்ற வெறியா?

 • RL Nandhakhumar - coimbatore,இந்தியா

  இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அரசியலில் எல்லோருமே கூட்டு களவாணிகளாகி விடுகின்றார்கள்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  கர்நாடக சிறை சாலைகள் எல்லாம் கான் கிராஸ் அரசியல்வாதிகளுக்காக சிறப்பான முறையில் பரிமாறிக்கப்பட்டு மிகவும் சவுகரியமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆட்சி முடிந்தவும் அங்கு போய் ஓய்வு எடுக்க தயாராக வேண்டியது தான்.

  • K.Sugavanam - Salem,இந்தியா

   இந்த ஆட்சிக்கு முன் பிஜேபி ஆட்சி தானே.. அப்போதும் இதே நிலை தானே.. கார்ப் கிராஸ் அரசியல்வாதிகள் கூட அதே குட்டையில் ஊறிய மட்டைகள் தாமே..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டீங்க.. ஆனா தமிழ் நாட்டில் லஞ்சமாக சசி பெற்ற பணம் தங்களுக்கு தண்ணீரா செலவு செய்ய தேவை படுதா...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சித்தராமையா சித்த யோசித்து பாரய்யா... சிறைச்சாலை திருந்தும்இடம்... ஆனால் நீங்கள் செயது கொடுக்கும் வசதிகளை பார்த்தால் குடும்பம் நடத்தி குழந்தை குட்டிகளை பெற்று சுக வாழ்வு வாழலாம் போல உள்ளதே...உங்கள் காலடியில் நடக்கும் விஷயம் உங்களுக்கு தெரிய வில்லை என்றால்... பதவியில் இருந்து என்ன புண்ணியம்...

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   சீதாராமையா இரவும் பகலும் சிந்தித்து பார்த்து பார்த்து தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்."சிறைச்சாலை திருந்தும் இடம்... " என்பதை சொல்ல தான் ஒரு சாப்பாடு ஒரு லக்ஷம் ரூபாய் ஒரு டீ 25 000 ரூபாய் என்ற வகையில் சதியிடம் விற்று கண்டைனர்களை ஒவ்வொன்றாக கறந்து கொண்டு இருக்கிறார் போல இருக்கிறது. உண்மையில் நாலு வருடங்களில் சதியை பரம ஏழையாக்கி உண்மையை உணரவைக்க அவர் செய்திருக்கும் ஒரு தந்திரம். ஒரு மாத சாப்பாட்டிற்கு இரண்டு கோடி செலவழித்ததின் மூலம் தமிழன் என்பவன் செல்வத்தில் திளைக்கும் இனம் என்ற உண்மையை உலகமெல்லாம் பரப்பி விட்டார். சதி அக்கா நீ வாழ்க..உன் கொற்றம் வளர்க..

 • rajan - kerala,இந்தியா

  பாருடா இந்த கூத்தை. இது சிறைச்சாலையா அல்லது ஸ்டார் ஹோட்டலாடா? இந்த சிறை லஞ்ச ஊழலை முன் கூட்டியே தெரிந்து தான் யாரோ ஒரு கருப்பு ஆடு நம்ம சின்னத்தாய்க்கு ஐடியா கொடுத்து இந்த அக்ரஹார சிறைய தேர்ந்தெடுத்தாக. இப்போவாச்சு நல்ல பெரிய ஆப்பா பார்த்து இந்த சின்னத்தாயிக்கு வச்சு திகார் ஜெயில்ல அந்த பாஷை தெரியாத காட்டில கொண்டு விடுங்க இந்த ஊழல் கேடிய. கண்ணு வெளிய தள்ளணுமுல்ல. அங்கேயும் இந்த அதியமான் தம்பி தலையில துண்டை போட்டுக்கிட்டு உள்ள வர பார்ப்பான் விட்டுடாதீங்க.

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா.... அதே சமயத்தில் பிஜேபி ஆட்சி செய்தால் சட்டம் மட்டுமே தன் கடமையை செய்யும்.... ஹா ஹா...ஹா...

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   ஆகா வயிறெல்லாம் புண்ணாக ஒரு புளிச்ச ஜோக்கு சொல்றாராம்..ஜோரா ஒரு முறை கை தட்டுங்கோனா

 • Sundar Rajan - chennai,இந்தியா

  விலைபோனது சிறைதுறை மட்டுமல்ல ... நீதியும் தான் ...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  காங்கிரஸ் ஆண்டால் - இது என்ன பிரமாதம்.... சிறையையே சொர்க்கமாக ஆக்கி விடுவார்கள்... அவர்கள் அங்குதானே இனி போகவேண்டும்...

  • ஜெய சேகர் - ஆண்டிபட்டி,இந்தியா

   ஆமாம், பி.ஜெ.பி என்றால் இது மாதிரி வசதி எல்லாம் கொடுக்க மாட்டார்கள், ஒரே அடியாக விடுதலை செய்துவிடுவார்கள்.. நடிகர் சஞ்சய் தத்தை விடுவித்தது மாதிரி... போங்கடா...

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   ஜெயசேகரா... கண்ணே..விஷயம் தெரிந்தால் பேசு. இல்லையேல் கம்முன்னு இரு. சஞ்சய் தத்திற்கு கொடுத்திருந்த தண்டனை காலம் 5 ஆண்டுகள். 2013 ஆண்டில் கான் கிராஸ் ஆட்சி அவர் சிறையில் வேண்டா வெறுப்பாக அடைக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் தந்தையும் தாயும் கான் கிராஸ் அரசியல் வாதிகள் ( தந்தை சுனில்தத் கான் கிராஸ் எம்பி அம்மா நர்கிஸ் கான் கிராஸ் அரசியல்வாதி) சிறையில் அடைக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே பாதிக்கு மேலாக அதாவது 171 நாட்களை சிறைக்கு வெளியே பரோலில் வந்து கழிக்கிறார். இது நடந்தது கான் கிராஸ் சவாண் மாநில முதலமைச்சராக இருக்கும் போது. மட்டுமின்றி எந்த ஒரு கைதியும் நன்னடத்தையின் காரணமாக தண்டனை காலம் முடியும் முன்பே வெளியே வர முடியும். இதை சிறை நிர்வாகம், நீதிமன்றத்தின் அனுமதியோடு தான் செய்யும். குற்றம் சொல்வதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது நடைபெறுவது திராவிட திருட்டு கழக ஆட்சி அல்ல... பணத்தை பெற்று கொண்டு வெளியே விடுவதற்கு. மாறாக இந்தியாவின் சிறந்த மாநில முதல்வர்களில் ஒருவரான தேவேந்திர பட்நாவிஸ். ஆர் எஸ் எஸ் ஸ்வயம்சேவகர் ஆட்சி. . போங்கடா.....நீங்களும் உங்களின் கருத்துக்களும்.

 • Manian - Chennai,இந்தியா

  தமிழ் நாட்டுக்கு தண்ணி தர காசா வாங்குறோம்? காவேரி தண்ணிக்கு வேறே எப்படி சம்பாதிக்கரதாம்.? -வாட்டாள் நாக ராஜன்

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   வாட்டாள் நாகராஜன்..கர்நாடக சீ..மான்...இங்கு இவர் சீண்டி விடுவதை போல கர்நாடக ஆட்களை சீண்டி விட்டு தமிழர்களை குறி வைக்கும் அடியாள்.

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  டேய் டேய் அந்த போட்டோவை பார்த்தால் எல்லா வசதியும் உள்ளேயே இருக்கே, அப்புறம் இதுக்கு பேர் தண்டனையா? இல்லை மக்களாகிய எங்களுக்கு தண்டனையா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement