Advertisement

சசிகலாவுக்கு சிறப்பு வசதி; உதவிய தமிழக பிரமுகர்கள்?

சசிகலாவுக்கு, பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகள் கிடைக்க, தமிழக காங்., பிரமுகர்கள் சிலர், திரைமறைவில் உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், காங்., துணைத் தலைவர் ராகுல் அதிருப்தி அடைந்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலாவுக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், அதற்கு, சிறைத் துறை உயர் அதிகாரிகள், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டினார்.

உத்தரவுஇது குறித்து விசாரணை நடத்த, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், தமிழக காங்., கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர், சசிகலா வுக்கு சிறையில், சிறப்பு வசதிகள் கிடைக்க காரணமாக இருந்ததாகவும், அதற்காக, சிறை அதிகாரிகள் மற்றும் கர்நாடக மாநில காங்., பிரமுகர்களை ரகசியமாக சந்தித்து பேசியதாகவும், அம்மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து, காங்கிரஸ் வட்டாரம் கூறியதாவது: கர்நாடகாவில், விரைவில், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில், சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் அளிக்கப்பட்ட விவகாரம், அம்மாநில முதல்வரான, சித்தராமையா தலைமையிலான, காங்கிரஸ் அரசுக்கு தலை வலியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, ஜெ., மரணத்தில் மர்மம் உள்ளது என, சிலர் தரப்பில் செய்யப்பட்ட பிரசாரம் உண்மையாக இருக்குமோ என, கர்நாடகாவில் வாழும், 4 சதவீத பிராமண சமுதாயத்தினரும், 3 சதவீத ஓட்டுகளை கொண்டுள்ள தமிழர்களும் நம்புகின்றனர்.
இந்த நேரத்தில், சசிகலா விவகாரம் எழுந்துள்ளது, காங்கிரஸ் மீதான அவர்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது. அந்த அதிருப்தியை சாதகமாக்கி, 7 சதவீத ஓட்டுகளையும் தங்கள் பக்கம் திருப்ப, கர்நாடக மாநில பா.ஜ., மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் முற்பட்டு உள்ளன.

திரைமறைவு:இதற்கிடையில்,சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் கிடைக்க, கர்நாடக மாநில காங்., பிரமுகர்கள் மற்றும் சிறை அதிகாரிகளின் உதவியை, தமிழக காங்., பிரமுகர்கள் நாடியதாகவும், இது தொடர்பான திரைமறைவு வேலைகளில் அவர்கள் ஈடுபட்டதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
அதனால், சசிகலாவுக்கு ரகசியமாக உதவிய, தமிழக காங்., பிரமுகர்கள் குறித்து, விசாரணை நடத்த, கர்நாடக போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சசிகலாவுக்கு உதவிய, தமிழக காங்., பிரமுகர்கள் மீது, ராகுல் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.இவ்வாறு காங்., வட்டாரம் கூறியது.

- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (43)

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  காங்கிரஸ் கர்நாடகாவில் மண்ணை கவ்வ வேண்டும் , தென் இந்தியாவில் காங்கிரஸ் ( ஊழல் ) துடைத்தெறிய பட வேண்டும்.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  பாவம் தமிழகத்தில் தான் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கிறார்கள், இதிலாவது கொஞ்சம் பார்க்கட்டுமே.

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  ராகுலுக்கு தெரிஞ்சு என்ன ஆவப்போது கிடைக்கும் போது கல்லா கட்டவேண்டியது தானே .பொழைக்க தெரிஞ்சவங்க

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேற ஆளே கிடைக்கலையா? எல்லா கட்சியிலயும் ரெண்டு ரெண்டு வருஷம் இருந்த இந்த ஆளு தான் கிடைச்சாரா? கருமம்...அப்புறம் எப்படி கட்சி உருப்படும்..மிஸ்டர் பப்பு ?

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  இன்னும் 10 நாளைக்கு சின்னமா செய்திதான்... எப்படியும் விடுதலை ஆவது உறுதி.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இதில் சாதியை நுழைக்கவேண்டாம் ஜெயாவை எதிர்த்து வாதாடிய ஆச்சார்யா தனது சாதி என்பதற்காக ஜெயா மீது கருணையா காட்டினார்? இதுபோல கருணாநிதியை எதிர்த்து அவரதுஇனத்தார் வாதாடுவது நடக்குமா ?

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  திகாருக்கு அனுப்புவதே களி உண்ண வசதியாக இருக்கும்.

 • krishna - cbe,இந்தியா

  காங்கிரஸ் என்றாலே ஊழல் பேர்வழிகள் கட்சி என்றாகிவிட்டது.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  கர்நாடகா புகழேந்தி, திருநாவுக்கரசர், வேலுச்சாமி....இவர்கள்தான் கண்டிப்பாக இந்த உதவிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கணும்....

 • John - Chennai,இந்தியா

  திருநாவுக்கரசரின் வேலை..இவருக்கு மாபியா கும்பல் பல கோடிகள் கொடுத்ததாக தகவல்.. சாமி புரோக்கர் வேலை பார்த்ததாகவும் தகவல்..

 • christ - chennai,இந்தியா

  நாட்டில் லஞ்சம் தலைவிரித்து ஆடுது கொஞ்சநாளைக்கு ராணுவ ஆட்சி கொண்டுவந்தால் தான் சரிப்பட்டு வரும்போல

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  தேர்தலில் ஒரு சில 'கண்டெயினர்களை ' கொடுத்து உதவலாம் என்ற எதிர்பார்ப்பில் சின்னம்மாவுக்கு ஸ்பெஷல் கவனிப்புகள் இருந்திருக்கும். விரைவில் ரூபாவுக்கு தண்ணியில்லா காடு நிச்சயம் சித்தம்மைக்கு ஒரு பக்கம் சலுகை, மறு பக்கம் விசாரணை நாடகம், சித்த ராமையா தம்பி ராமையாவுக்கே அண்ணனாக இருக்கிறாரே

 • Shree Ramachandran - chennai,இந்தியா

  தமிழக காங்கிரசில் தான் "தங்கமான" ஒருவர் இருக்கிறாரே ஆ தீ மூ க உறுப்பினர். இனி தமிழக காங்கிரஸ் ஆ தீ மூ க மேல் உப்புமூட்டை ஏறும்.

 • Shanu - Mumbai,இந்தியா

  சசிகலாவுக்கு மறைமுகமாக உதவியது பிஜேபி.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நாவுக்கரசரின் நாவன்மை வென்றதோ...

 • rajan - kerala,இந்தியா

  சின்னத்தாய்க்கு தமிழக ஊழல் காங்கிரஸ் பிரமுகர்கள் சுடலையின் கூட்டணி தர்மத்தை மீறி அ.தி.மு.க ஒத்தாசையா இந்த சிறை கைதி சலுகை ஊழலில் ஈடுபட்டார்களா? எனவே சுடலை காங்கிரஸ் கூட்டணியை முதலில் உடைத்தெறிய வேண்டும். பாவம் இந்த ஆபீஸ் பாய் நிலைமை தான் திண்டாட்டம். சாப்டுகிட்டு இருந்த லாலி பாப்பை கை நழுவ விட்டுட்டன்.

 • sam - Doha,கத்தார்

  தமிழ் நாட்டில் காங்கிரஸ் என்ற கட்சி உள்ளதா? தலைவர்களை மட்டும் வைத்து கொண்டு ஒரு கட்சி இயங்குமா என்றால் அது தமிழ் நாட்டில் மட்டும் தான். திமுக விழித்து கொள்ள வேண்டும். சென்ற தேர்தலில் கற்றுக்கொண்ட படிப்பினையை ஸ்டாலின் உணர வேண்டும்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  எனக்கென்னவோ திருநா மீது தான் சந்தேகம் இன்னும் அதிமுகவில் சுரந்து முதல்வராகும் ஆசை விடவில்லை

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  காசுக்காக காங்கிரஸ்காரர்கள் நாட்டையே காட்டிக்கொடுக்க தயங்காதவர்கள்... இது சிறைதானே தாராளமாக புகுந்து விளையாடி இருப்பார்கள்... சித்தாராமையாவே மிகப்பெரிய கேடி... எதற்கும் சிறையில் இருப்பது சசிகலாதானா என்பதை உறுதி செய்வது நல்லது - டம்மிகளை ஏற்பாடு செய்து இருக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது...

 • LAX - Trichy,இந்தியா

  திருச்சி வேலுச்சாமி இப்போது என்ன 'சப்பை கட்டு' கட்டுவாரோ?

 • Manian - Chennai,இந்தியா

  திருடர்கள் , திருடர் சமுதாயத்துக்கு உதவி செய்வது நாடு முழுவதும் உள்ள தொழில் மரியாதை. அதைத்தான் நாங்களும் செய்தோம். அதில் குற்றம் காணலாமா ராகுல்? அம்மாகிட்டே கேட்டிருந்தால், வற்ற வரும்படியை கெடுத்துக்காதேன்னு நச்சுன்னு சொல்லி இருப்பாளே பேச்சுலர் அதனாலேதான் அரசியலுக்கு லாயக்கில்லைனாங்க பீஷ்மர் கதையை ஒனக்காகத்தான் வியாசரு எளுதினாரு

 • SaiBaba - Chennai,இந்தியா

  தமிழக காங்கிரஸ் திமுகவில் கூட்டணி. திமுக தலைவர் கருணா தலைமையில் சசிகலாவின் திருமணம் நடந்ததாக சொல்கிறார்கள். எப்படி கூட்டி கழிச்சு பார்த்தாலும் அதிமுக திமுக ஒண்ணாயிட்ட மாதிரி தான் தெரியுது.இவுங்க எல்லாம் ஓரணி, மக்கள் ஓரணி. மக்களே இனியாவது விழிப்போம். இந்த திராவிட ஏமாத்துக்காரர்களிடமிருந்து விடுபட இதுவே தருணம்.

 • vadivelu - chennai,இந்தியா

  ஜாதி பாசமுள்ள தலைவர்கள்.கட்சி பேதமின்றி துட்டுக்காக வேலை செய்பவர்கள்.

 • Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா

  Demonitization நடந்த பிறகு ரொக்க கையிருப்பு பெரும்பாலானோரிடம் இல்லை. இந்த வருடம் கர்நாடகாவில் தேர்தல். செலவு செய்ய ரொக்க பணம் வேண்டும். அதனால் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கும், தலைவர்களுக்கும் சசி குடும்பத்தினர் பெரிய அளவில் பணத்தை கொடுத்துள்ளனர். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் broker வேலை பார்த்துள்ளனர். இந்த செய்தி மார்ச் மாதத்திலேயே வந்தது. இப்போதுதான் இது மீண்டும் பேசப்படுகிறது. கர்நாடக போலீஸ் விசாரணை என்றால் தேர்தல் முடியும் வரை விசாரணையின் முடிவுகள் வெளியில் வராது. ஏனென்றால் அதில் காங்கிரஸாரின் பெயர்தான் அடிபடும். மோடியின் தலையீட்டால்தான் சசி உள்ளே செல்ல வேண்டி வந்தது என்று ஒரு சாராரின் எண்ணம் இருப்பதால், எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற வகையிலும் காங்கிரஸ் செயல்பட்டிருக்கிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement