Advertisement

மின்வாரியத்தில் ஜி.எஸ்.டி., பயிற்சி

சென்னை;ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக, மின் வாரியஅதிகாரிகளுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், நேற்று முன்தினம், ஜி.எஸ்.டி., வரி தொடர்பாக, வரி ஆலோசகர்கள் மூலம், அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.இதில், மின் வாரியத்தின் கணக்கு பிரிவுஅதிகாரிகள், வடசென்னை அனல் மின் நிலையம் மற்றும் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர்கள் என, 150 பேர் பங்கேற்றனர்.இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'ஜி.எஸ்.டி., வரி தொடர்பாக, மதுரை, திருச்சி, கோவை என, மண்டலம்தோறும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது' என்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement