Advertisement

புறாவின் கண் புரைக்கு சிகிச்சை

சென்னையில், நேற்று முன்தினம் நடந்த, செல்லப் பிராணிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாமில், நாய், குதிரை மற்றும் புறா ஆகியவற்றுடன், உரிமையாளர்கள் குவிந்தனர். ஒரு புறாவுக்கு, கண் புரைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கால்நடைகளுக்கு எலும்பு முறிவு, தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை வழங்கப்படுகிறது. 2002ல், கண் சிகிச்சைக்காக தனிப்பிரிவு துவங்கப்பட்டது.அந்த பிரிவில் நேற்று, செல்லப் பிராணிகளுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடந்தது.இதில், நாய்கள் அதிகளவில் பங்கேற்றன. மெரினா கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபடும் குதிரைகளும், பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்டிருந்தன.
இது குறித்து, மருத்துவ கல்லுாரி கண் மருத்துவ நிபுணர் ரமணி கூறியதாவது:இந்த முகாமில், கண்புரை நோய், கண்ணில் நீர் வடிதல், விழிவெண்படல கருவி நோய், கண் சிவத்தல் என, பல்வேறு நோய்கள் கண்டறியப்பட்டன.ஒரு புறாவுக்கு, கண் புரைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 40க்கும் மேற்பட்ட நாய்கள், நான்கு பூனைகள், ஆடு, செம்மறியாடுகள் என, 52 செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவற்றில், சிலவற்றுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement