Advertisement

தேசிய போட்டிகளில் வென்றோருக்கு உபகரணங்கள்

சென்னை:தேசிய அளவிலான போட்டிகளில், பதக்கம் வென்ற வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.எனவே, 2016 - 2017ம் ஆண்டு தேசிய அளவிலான போட்டிகளில், 2016 ஏப்., 1ம் தேதி முதல், 2017 மார்ச் 31ம் தேதி வரை கலந்துக் கொண்டு, தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்.வரும், 25ம் தேதிக்கு முன், அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகியவற்றுடன், சென்னை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். விபரங்கள் அறிய, 044 - 2664 4794 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement