Advertisement

இதயம் துடிக்கும் போதே 600 அறுவை சிகிச்சை

சென்னை:இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் பைபாஸ் அறுவை சிகிச்சை, அரசு மருத்துவமனையில், ஐந்தாண்டுகளில், 600 பேருக்கு செய்யப்பட்டு உள்ளன.சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், இதய துடிப்பை நிறுத்தி செய்யப்படும் பைபாஸ் அறுவை சிகிச்சை, பல ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இதயம் துடிக்கும் போதே செய்யப்படும் பைபாஸ் அறுவை சிகிச்சை, நோயாளிகளின் அனுமதியுடன் செய்யப்பட்டு வருகிறது.இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டோர், 'டீன்' நாராயண பாபு, கண்காணிப்பாளர் நாராயணசாமி, நிர்வாக அதிகாரி இளங்கோ, இதய பேராசிரியர் மாரியப்பன் சந்தித்து பேசினர்.
டீன் நாராயண பாபு கூறியதாவது:இந்த அறுவை சிகிச்சையை, தனியார் மருத்துவமனையில் செய்யும்போது, 2.50 லட்சம் ரூபாய் முதல், ௪ லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஆனால், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், முதல்வர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம், இந்த சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இதயவியல் பேராசிரியர் மாரியப்பன் கூறியதாவது:இதயம் துடிக்கும் போது செய்யப்படும் அறுவை சிகிச்சையால், நேரம், மருத்துவமனையில் தங்க வேண்டிய நாட்கள், பின்விளைவுகள் மற்றும் பக்கவாதம் வருவது குறைவு. கடந்த ஐந்தாண்டுகளில், 600 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement