Advertisement

காவலர் மலிவு விலை அங்காடி திறக்காமல் இருப்பதன் ரகசியம்

'புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் மூடிக் கிடக்கும், காவலர் மலிவு விலை பல்பொருள் அங்காடியை, உடனே திறக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.மறைந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 32 மாவட்டங்களிலும், காவலர் மலிவு விலை பல்பொருள் அங்காடியை துவக்கினார். அங்கு, வெளிச்சந்தையை விட, 30 சதவீதம் விலை குறைவாக பொருட்கள் விற்கப்படுகின்றன.
சென்னை போலீசாருக்காக, ஆவடியில் மலிவு விலை பல்பொருள் அங்காடி துவக்கப்பட்டது. துாரம் அதிகம் என்பதால், அதன் கிளைகளை, பரங்கிமலை, புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் துவங்க முடிவு செய்யப்பட்டது.தற்போது, பரங்கிமலையில் மட்டுமே செயல்படுகிறது. புதுப்பேட்டையில், மலிவு விலை அங்காடி திறக்க கட்டப்பட்ட கட்டடம், பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், ஏற்கனவே காவலர் பல்பொருள் அங்காடி செயல்படுகிறது. இங்கு விற்கப்படும் பொருட்களில் லாபம் அதிகம். இதில் கிடைக்கும் தொகையில், அதிகாரிகளுக்கு, 'கட்டிங்' செல்வதாக கூறப்படுகிறது.இதனால், அதே வளாகத்தில், மலிவு விலை பல்பொருள் அங்காடி திறந்தால், காவலர் பல்பொருள் அங்காடியில் விற்பனை குறைந்து, 'கட்டிங்' பறிபோய்விடும். இதனால், மலிவு விலை அங்காடியை திறக்க அதிகாரிகள் முட்டுக்கட்டைபோட்டு வருகினறனர்.அரசு உடனடியாக தலையிட்டு, புதுப்பேட்டையில் மலிவு விலை அங்காடிக்கு கட்டப்பட்டு, பலஆண்டுகளாக மூடிகிடக்கும் கட்டடத்தை திறக்க உரிய நடவடிக்கை வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர். - நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement