Advertisement

வடபழனி மேம்பாலம்: ஆலோசகர் நியமிக்க ஏற்பாடு

வடபழனி உயர்மட்ட மேம்பால சாலை திட்டத்திற்கு, ஆலோசகரை நியமிப்பதற்காக, அவசர ஏற்பாடுகளை நெடுஞ்சாலைத்துறை துவங்கிஉள்ளது.வடபழனி, நுாறடிச்சாலையில், என்.எஸ்.கே., சாலை, ஆற்காடு சாலை சந்திப்பில் நிலவும் போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் மூலம், 69.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.ஆனால், போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.
அரசு முடிவு
கோடம்பாக்கம் செல்லும் சாலையும், அசோக்பில்லர் செல்லும் சாலையும், தினமும், கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகின்றன. இதனால், அலுவலகம், கல்வி நிலையங்கள், பணி நிமித்தமாக செல்வோர், நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வடபழனி முதல் அசோக்பில்லர் வரை ஏற்கனவே, கட்டிய மேம்பாலத்தை விரிவுப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.இது குறித்த அறிவிப்பை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் என்ற முறையில், முதல்வர் பழனிசாமி, சமீபத்தில் வெளியிட்டார்.
அதிருப்தி
உள்ளாட்சி தேர்தலின்போது, சென்னைவாசிகளிடம் நற்பெயரை பெறவேண்டும் என, அரசு விரும்புகிறது. இப்பணிக்கு, திட்ட மதிப்பீடு தயாரிக்கும் முன்னேற்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக, ஆலோசகரை நியமிக்கும் பணிகளில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மூலமாகவே, இப்பணிகளுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க முடியும். ஆனால், ஆலோசகரை நியமித்து திட்ட மதிப்பீடு தயாரிக்க முடிவெடுத்துள்ளது அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. - நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement