Advertisement

புற்றுநோய் ஆராய்ச்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்

தாம்பரம்;புற்றுநோய் சிகிச்சைக்கு இணைந்து செயல்படும் வகையில், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையுடன் இணைந்து, ஆராய்ச்சி மற்றும் கூட்டு சிகிச்சை முறையில், புற்று நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பக்க விளைவு ஏற்பட்டோருக்கு சிகிச்சை அளிக் கும் வகையில், அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த புதிய ஒப்பந்தத்தில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர், பேராசிரியர், மருத்துவர் டி.ஜி.சாகர் மற்றும் தேசிய சித்த மருத்துவ இயக்குனர், பேராசிரியர், மருத்துவர் வி.பானுமதி ஆகியோர் கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு மருத்துவமனைகளும் இணைந்து, மார்பக புற்றுநோய், ரத்த புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு விதமான புற்றுநோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியிலும், கூட்டு மருந்து சிகிச்சையிலும் ஈடுபட உள்ளன.இந்நிகழ்ச்சியில், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் சார்பில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் புற்றுநோய் மருத்துவமனை சார்பில் பல்வேறு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement