Advertisement

சமுதாயக்கூட கட்டணமும் ஜி.எஸ்.டி.,யால் உயர்வு

சென்னை:ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு காரணமாக, சென்னை மாநகராட்சி சமுதாய கூடத்திற்கு, மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள, 52 சமுதாய கூடங்களுக்கு, 2,000 - 25 ஆயிரம் ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இதற்கு மின்கட்டணம் போக, மீத தொகையை திரும்ப தரும் வகையில், குறிப்பிட்ட டிபாசிட் கட்டணமும் பெறப்படுகிறது.சமுதாய கூடங்களுக்கான வாடகையுடன், 15 சதவீதம் சேவை வரி வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்துள்ளதால், சமுதாய கூடங்களுக்கான வரி, 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடகையுடன், வரியும் சேர்த்து சமுதாய கூடத்திற்கு, கூடுதல் கட்டணத்தை, பொதுமக்கள் செலுத்த வேண்டியுள்ளது.தளவாட சாமான்களுடன், வாடகை கட்டணமும் இல்லாமல், ஏழை மக்கள் சமுதாய கூடங்களை, இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கப்படும் என, 2016 பிப்., 24ம் தேதி, ஜெயலலிதா பிறந்தநாளில் இருந்தே, இது நடைமுறைக்கு வரும் என மாநகராட்சி அறிவித்திருந்தது.ஆனால், சேவை கட்டணத்துடன் சேர்த்து, தற்போது கூடுதல் கட்டணத்தை, ஏழை மக்கள், சமுதாய கூடங்களுக்கு செலுத்த வேண்டிய நிலையே தற்போது இருக்கிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement