Advertisement

கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை; மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி

புதுடில்லி:''ஈராக்கில், ஐ.எஸ்., பயங்கரவாதி களால் கடத்தப்பட்ட, 39 இந்தியர்களையும் மீட்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
மேற்காசிய நாடான ஈராக்கில், 2014ல், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், மருத்துவமனை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த, 39 இந்திய தொழிலாளர்களை கடத்திச் சென்றனர். அவர்களை மீட்க, வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், ஐ.எஸ்.,
பயங்கரவாதிகள், அவர்களை எங்கே கடத்திச் சென்றுள்ளனர் என தெரியாமல் இருந்தது.

ஐ.எஸ்., பயங்ரவாதிகளுக்கு எதிராக போர் நடத்தி வந்த ஈராக் மற்றும் அமெரிக்க கூட்டுப் படையினர், அவர்களின்கட்டுப்பாட்டிலிருந்து, மொசூல் உட்பட பெரும்பாலான பகுதிகள் மீட்கப்பட்டு விட்டதாக, சமீபத்தில் அறிவித்தனர்.

இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், டில்லியில் நேற்று கூறியதாவது:
ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் களின் குடும்பத்தினரை, மீண்டும் சந்தித்தேன். ஏற்கனவே, 10 முறை சந்தித்து, அவர்களுக்கு உறுதியளித்துள்ளேன்.

மொசூல் நகரை மீட்டு விட்டோம் என, ஈராக் அறிவித்ததும், வெளியுறவு இணை அமைச்சர், வி.கே.சிங்கை, ஈராக் அனுப்பி, இந்தியர்களை மீட்க, நடவடிக்கை எடுக்கும்படி கூறினேன். ஈராக் வெளியு றவு அமைச்சகத்திடம், வி.கே.சிங், இது பற்றி பேசிய போது, ஐ.எஸ்., பயங்கரவாதி களால் கடத்தப்பட்ட இந்தியர்கள், 39 பேரும், பதுஷா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்தது.

பதுஷா பகுதி, இன்னும், ஐ.எஸ்., பயங்கரவாதி கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அதை மீட்க, தொடர்ந்து சண்டை நடக்கிறது. பதுஷா பகுதி மீட்கப்பட்டதும், 39 இந்தியர்களையும் மீட்க முடியும். அவர்கள் உயிருடன் உள்ளதாக, மீண்டும் உறுதியான தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (7)

  • Ramesh Kumar - coimbatore,இந்தியா

    பாவம் சுஷ்மாவுக்கு மீட்பு பணியை தவிர வேறு வேலையே தரமாட்டேன்கிறார் அவர் தல.... பேசாமல் சுஸ்மாவுக்கு மீட்பு பணி துறை என்று ஒரு அமைச்சகம் உருவாக்கி அதன் ஏகபோக அமைச்சராக அவரை ஆக்கி விடலாம்....

  • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    இந்தியர்களை காப்பதில் சுஷ்மா எடுக்கும் நடவடிக்கை பாராட்ட தக்கது, வாழ்த்துக்கள் , ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்,

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    சீக்கிரம்.... அப்பறம்... ஆறுன கஞ்சி பழம் கஞ்சி ஆகிவிடும்...

  • அப்பாவி -

    இந்தியாவில் சரியான வேலை வாய்ப்புக்களை கொடுத்திருந்தால் அவிங்க ஏன் துபாயில் சுத்தம் செய்யுற வேலைக்குப் போகிறார்கள்? இல்லே அமெரிக்காவுக்குப் போக ஹெச்-1 விசாவுக்குப் பறக்கிறார்கள்?

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    ஐ எஸ் சில் சேருவதற்கென்றே மூர்க்க இளைஞர்கள் இராக் வேலைக்குப் போயிருக்கலாம் விசாரித்தபிறகு மீட்டாலே போதும்

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    அந்நிய தேசங்களில் இக்கட்டுக்கு உள்ளான இந்தியர்களுக்கு உதவுவதில் இவர்கள் இருவரும் பாராட்டும் விதத்தில் நடந்துகொண்டுள்ளார்கள்... அதை இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளும் அங்கீகரிக்கின்றன.. சுஷ்மாவும், விகே சிங்கும் தாங்கள் வகிக்கும் பதவிக்கு பெருமை சேர்ப்பவர்கள்...

    • JOKER - chennai,இந்தியா

      சுஷ்மாவும், விகே சிங்கும் தாங்கள் வகிக்கும் பதவிக்கு பெருமை சேர்ப்பவர்கள்... உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement