Advertisement

புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ.,க்களின் நியமனம் நிராகரிப்பு!.. கிரண்பேடிக்கு கடிதம் அனுப்பினார் பேரவை தலைவர்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, மூன்று எம்.எல்.ஏ.,க்கள் நியமனத்தை, சபாநாயகர் வைத்திலிங்கம் நிராகரித்தார். இது தொடர்பாக,
கவர்னர் கிரண்பேடிக்கு, அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.


அதனால், கவர்னர் - ஆட்சியாளர்கள் மோதல், விஸ்வரூபம் எடுத்துள்ளது.புதுச்சேரி சட்டசபைக்கு, பா.ஜ.,வை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை, நியமன எம்.எல்.ஏ.,க் களாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது.தலைமை செயலர் மனோஜ் பரிதா, ஜூலை, 4ல், உத்தரவு ஆணையை மூவரிடமும் முறைப்படி வழங்கினார்.

இது, தலைமை செயலகம் மூலம், அரசு கெஜட்டிலும் வெளியிடப்பட்டது.பின், மூவரும், சட்ட சபையில் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து, நியமன ஆணையை காண்பித்து, பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரினர்.

'உரிய ஆவணங்களை சட்டசபை செயலரிடம் கொடுங்கள். அவர் ஆவணங்களை பரிசீலித்து, பதவியேற்பு குறித்து முடிவு செய்வார்' என, சபாநாயகர் கூறி அனுப்பினார்.இதையடுத்து, நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமிக்கப்பட்டவர்கள் குறித்த முழு விபரங்களை கேட்டு, சட்டசபை செயலர் மூலம், தலைமை செயலருக்கு சபாநாயகர் கடிதம் அனுப்பினார்.

விசாரணைஅந்த கடிதத்தில், 'நியமன, எம்.எல்.ஏ.,க்களாக தாங்கள் நியமிக்கப்பட்டு உள்ளோம் எனக்கூறி, மூவர் என்னிடம் வந்து, நியமன உத்தரவு ஆணையை காண்பித்தனர். அதில், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர் மட்டுமே உள்ளது.

கட்டுப்படுத்தாது'




'தந்தை பெயர், முகவரி உள்ளிட்ட எந்த விபரமும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட நபர் தான் நியமன எம்.எல்.ஏ.,வாக நியமிக்கப்பட்டவர் என, அடையாளம் காண்பது அவசியம். அதனால், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆளும் காங்., கட்சி தலையீட்டால், பதவி ஏற்பில் காலம் கடத்துவதாக, கவர்னரிடம் நியமன எம்.எல்.ஏ.,க்கள் முறையிட்டனர். அதை தொடர்ந்து, அன்று இரவே, ராஜ்நிவாசில், மூவருக்கும் கவர்னர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதற்கிடையில், மூவரின் நியமனத்தையும் ரத்து செய்யக் கோரி, காங்., - எம்.எல்.ஏ.,
லட்சுமி நாராயணன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நாளை விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களும், புதுச்சேரி சட்ட சபை செயலர் வின்சென்ட் ராயரை சந்தித்து, சட்டசபையில் தங்களுக்கு இருக்கை ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும் என, கடிதம் கொடுத்தனர்.

சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தொடர்பாக, கவர்னரின் செயலர் தேவநீதிதாஸ், சட்டசபை செயலர் மூலமாக, சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி இருந்தார்.

கவர்னரின் செயலரிடம் இருந்து வந்த கடிதத்தை பார்த்தசபாநாயகர் வைத்திலிங்கம், 'நியமன, எம்.எல்.ஏ.,க்களாக மூவர் நியமிக்கப்பட்டது குறித்து, அதிகாரப்பூர்வமான தகவல், சட்டசபை செயலகத்துக்கு வரவில்லை.

'எனவே, ராஜ்நிவாசில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதம், சட்டசபை செயலகத்தை கட்டுப்படுத்தாது' எனக்கூறி, கவர்னரின் செயலர் அனுப்பிய கடிதத்தையும், இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களையும் சட்டசபை செயலர் மூலம் சபாநாயகர் நேற்று அதிரடியாக திருப்பி அனுப்பினார். சபாநாயகரின் இந்த அதிரடி முடிவால், நியமன, எம்.எல்.ஏ.,க்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கிரண்பேடி விளக்கம்




இந்த தருணத்தில், இந்த விவகாரம் தொடர்பாக, இணையதளத்தில், கிரண்பேடி வெளியிட்டு உள்ள விளக்கம்:நியமன எம்.எல்.ஏ.,க் கள் விவகாரத்தில், யூனியன் பிரதேச சட்டம் பிரிவு 3 - 3ன் படி, தனக்குள்ள அதிகாரத்தில் மத்திய அரசு, புதுச்சேரி சட்டசபைக்கு, மூன்று நியமன
எம்.எல்.ஏ.,க்களை நியமித்துள்ளது.

இதுகுறித்த உத்தரவு ஆணை, தலைமை செயலருக்கு அனுப்பப்பட்டது. அதை பெற்ற தலைமைச் செயலர், புதுச்சேரி அரசிதழில் வெளியிட்டார்.அதன்பின், மூன்று பேரும், சபாநாயகரை சந்தித்து பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரினர். ஆனால், அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க தேதியை கூட சபாநாயகர் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக அவர்கள் மூவரும், எனக்கு எழுத்து மூலமாக புகார் தெரிவித்து, பதவிப் பிரமாணம் செய்யும்படி கோரினர்.

யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி என்ற முறையில், நான் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தேன். யூனியன் பிரதேச சட்டம் பிரிவு, 11ன் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பான முறையான தகவல், மத்திய அரசுக்கும், சபாநாயகர் அலுவலகத்திற்கும்
அனுப்பப்பட்டது. ஆனால், நேற்று நியமன எம்.எல்.ஏ.,க்கள் விவகாரம் தொடர்பான அனைத்து கோப்புகளையும், சபாநாயகர் அலுவலகம் திருப்பி அனுப்பி உள்ளது. நியமன, எம்.எல்.ஏ., க்கள் விவகாரம் தொடர்பாக, முறையான தகவல் தெரிவிக்கவில்லை என, காரணம் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியமன, எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்தில், மத்திய அரசு நியமித்து, புதுச்சேரி அரசு இதை அரசிதழில் வெளியிட்டு, சபாநாயகருக்கும் தகவல் தரப்பட்டதே உண்மை.
இவ்வாறு கவர்னர் தெரிவித்துள்ளார்.

மேலும், கவர்னர் செயலரின் சட்டசபை செயலருக்கு அனுப்பிய கடிதம், தலைமை செயலர் வழங்கிய நியமன ஆணை, அரசிதழில் வெளியிட்ட கடிதம் போன்றவற்றையும், இணைய தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கவர்னரும், சபாநாயகரும் தனித்தனியாக நேற்று டில்லி விரைந்துள்ளனர்.

'செல்லாக்காசுகள்' நாராயணசாமி ஆவேசம்




''புதுச்சேரி, காங்கிரஸ் ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது,'' என, முதல்வர் நாராயணசாமி பேசினார்.கவர்னர் கிரண்பேடியின் செயல்பாட்டை கண்டித்து, ஊசுடு தொகுதியில், காங்., சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: புதுச்சேரியில், தி.மு.க., - காங்., கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது. சேவை செய்வதாக கூறி, கவர்னர் கிரண்பேடி புதுச்சேரிக்கு வந்தார்.

ஆனால், மக்களாட்சிக்கு எதிராக, அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறார். காங்., ஆட்சி இன்னும் நான்காண்டு நீடிக்கும். யாரும் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரலாம் என, பகல் கனவு காண வேண்டாம். எங்களிடம் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் சேர்த்து, 23 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது. காங்., ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களும் செல்லாத காசுகள். அவர்களுக்கு சட்டசபையில் ஓட்டுரிமை கிடையாது.

இவர்களை கொண்டு ஆட்சி மாற்றம் செய்ய நினைப்பது பகல் கனவு.நியமன எம்.எல்.ஏ.,க்களை தான் பரிந்துரை செய்யவில்லை என கூறும் கவர்னர் கிரண்பேடி, அன்றே அதை தெரிவிக்காமல், புதுச்சேரி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகே இதுபற்றி கூறுகிறார்.

நியமன, எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க விளக்கங்களை கேட்ட சபாநாயகருக்கு உரிய விளக்கம் கொடுக்காமல், இரவோடு இரவாக, கவர்னர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது எந்த வகையில் நியாயம். இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (166)

  • Shree Ramachandran - chennai,இந்தியா

    நாசா தெரிந்து பேசுகிறார். தீ மூ கா மீது உப்புமூட்டை சவாரி செய்யும் காங்கிரஸ், கீழே விழ வேறு நேரம் ஆகாது என்று அவருக்கு தெரியும். இருந்தாலும் வீம்பு குறையவில்லை.

  • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

    வெற்றி வெற்றி வெற்றி கர்நாடகத்திற்கு பிறகு தென்னக மாநிலங்களில் பிஜேபிக்கு மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர் ஊழலில் ஊறித்திளைத்த காங்கிரசின் பாவச்செயல்களால் வெறுப்படைந்த மக்கள் இப்படி ஒரு தலைமையை இந்தியாவிற்கு கொடுத்துள்ளனர்.

  • G Mahalingam - Delhi,இந்தியா

    Last one year Congress was unable the candidates due to internal politics. Bjp took advantage just like Goa and Manipur

  • SANKAR - calgary,கனடா

    கிரண் பேடி ஒரு கவர்னருக்கு வேண்டிய பொறுமையும் நிதானமும் இன்னும் பெறவில்லை... நாளொரு மோதல் பொழுதொரு சர்ச்சை கொஞ்சமும் நன்றாக இல்லை... நியமன எம் எல் ஏ க்கள் பற்றிய விபரங்களை (ஆதார் அட்டையோ அல்லது , பெயர் , தகப்பனார் பெயர், வயது விலாசமோ) நியமன கடிதத்தில் கொடுத்திருக்கலாம்...அல்லது பிறகு விளக்கமாக கொடுத்து பிரச்சினையை முடித்திருக்கலாம்... தேவையில்லாமல் பதவி பிரமாணம் செய்து வைத்து ஈகோ பிரச்சினை பேடி என்று பெயர் எடுத்து விட்டார்கள்...

  • kulandhaikannan -

    நாசா ஒரு கட்டப் பஞ்சாயத்து பேர்வழி.

  • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

    நாராயண சாமி CM ஆக வந்த வழியும் சரியில்லை. உண்மையில் நமச்சிவாயம் முதல்வராக தேர்தெடுக்கப்பட்டு முதல்வராக பதவி ஏற்றிருக்க வேண்டும்.

  • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

    நல்ல வேளை தமிழ் நாட்டுக்கு பிஜேபி அரசாங்கம் ஒரு கவர்னரை போடவில்லை. இங்கேயும் நியமன MLA 234 பேரை கவர்னர் நியமித்து eps பதவிக்கு வேட்டு வைத்திருப்பார்கள்.

  • Ramesh Kumar - coimbatore,இந்தியா

    இதென்ன புதுசா ஸ்ரீனிவாசன்னு புது சொம்பு கிளம்பியிருக்கு.... அதுவும் கிரண் பேடி மேட்டருக்கு மட்டும் சொம்படித்திருக்கு......... ஒரு வேளை ஸ்ரீராம் சார் தான் பெயர் மாற்றி வைத்து கொண்டுள்ளாரோ... சே சே அப்படியெல்லாம் இருக்காது என்றே நினைக்கிறேன்....

  • Madurai Raja - Madurai,இந்தியா

    தேசத்தின் மீது நேசம் என்பது என்பது வெறும் மோசடி வேலை. பணம் சம்பாதிப்பதற்காகத் தான் அந்த தேசப்பற்று.

  • Joseph Chandran - Atyrau,கஜகஸ்தான்

    எங்க தலைக்கு தில்லை பார்த்தாயா?? ஹ்ஹ்ம் இதெல்லாம் தமிழகத்தில் நடக்குமா???

  • Appu - Madurai,இந்தியா

    புதுவை பாஜக கொள்கைப்பரப்பு தேச நேசன் - Chennai,இந்தியா அவர்களே... ஒட்டு மொத்த புதுவை கிரண்பேடி சங்க தலைவர் Srinivasan R - chennai, இந்தியா அவர்களே... செம்படிக்க திமுக அதிமுகவிற்கு மட்டும் இல்லை பாஜகவிற்கு புதுவையில் ஆள் உண்டு என்பதை நாங்கள் நம்பிவிட்டோம்.. நன்றி.. செத்த மைக்க ஆப் பண்றேளா? காது வலிக்குது...

  • Prabaharan - nagercoil,இந்தியா

    எவ்வளவு நேர்மையான, துணிச்சலான அதிகாரி என பெயரெடுத்தவர். இப்படி எடுபிடி ஆகி விட்டாரே

  • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

    காங்கிரஸ் சாபக்கேடு தான்....ஆனால் அதற்காக பிஜேபி சாப விமோசனம் இல்லை....அது இந்த நாட்டிற்கு இன்னொரு சாபம்...குறிப்பாக தமிழ் நாட்டிற்கு....அவ்வளவுதான்....

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    தேச நாசா... மத்தியில் ஆளுபவர் மஹாத்மா என்றால் ஏன் மாநிலத்திலும் ஆள்பவர் மஹாத்மாவாக இருக்க கூடாது.....

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

    எதற்கு தேர்தல் எல்லா உறுப்பினர்களையும் bjp-ஏ நியமிக்கட்டுமே ....

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    கிரண் மோடி அவர்கள்.....சாரி... கிரண் பேடி அவர்கள் பிஜேபியின் கட்சிப்பணியை இன்னும் செம்மையாக செய்ய வேண்டும்.. மீண்டும் அமித் ஷாவை வர வழைத்து அவரிடம் உபதேசம் கேட்க வேண்டும்....

  • Snake Babu - Salem,இந்தியா

    பிஜேபி நண்பர்களே இப்படியே பேசிகிட்டு இருங்கள். இப்படி இருந்தால் தான் உங்களை பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டு தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். டெபாசிட் வாங்குறது ரொம்ப கஷ்டம் நன்றி வாழ்க வளமுடன்

  • Sandru - Chennai,இந்தியா

    மாப்பு வச்சுட்டாங்கையா இந்த பேடிக்கு ஒரு பெரிய ஆப்பு.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    TNசேஷன் தேர்தல் கமிஷனரானபோது அதிரடியாக தனது பதவியின் நேர்மையான உண்மையான முழு அதிகாரத்தைக்காட்டி தேர்தலை சீர்திருத்தினார் அப்போது அவரை அடாவடி அயோக்கியன் திமிர் பிடித்தவர் அராஜகம் சட்டவிதிகளை மீறுகிறார் என்றெல்லாம் அரசியல்வாதிகளும் பொதுமக்களும் இகழ்ந்தனர் ஆனால் இப்போது அவர் கொண்டுவந்த சீர்த்திருத்தங்களாலதான் தேர்தல்கள் அமைதியாக மிக்க நேர்மையாக நடக்கின்ற்ன அதுபோல நேர்மையான சட்டப்படி நடக்கும் ஒரு துணை நிலை ஆளுநரை புதுச்சேரி பார்த்ததில்லை கிரணபேதி மூலம் முதன் முறையாகப்பார்ப்பதால் வித்தியாசமாகத் தெரிகிறார் .கிரண் திருத்தவேண்டியது புதுவை அரசியலை மட்டுமல்ல நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊழல்வாதி அரசியல்வாதிகளைச் சார்ந்திருக்கும் 99 %புதுவைப் பொதுமக்களையும்தானே?

  • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

    கிரண்பேடி இதெல்லாம் செய்வதாக மோடியிடம் சத்தியம் செய்ததால் கவர்னர் ஆக்கி அனுப்பிவைத்தார் மோடி . இப்போது படாத பாடு படுது. மோடி வேறு யுக்தி சொல்லிக்கொடுப்பார். அதுவரை டீவ்வீட் பண்ணுவார் .

  • raja - Kanchipuram,இந்தியா

    பதவி படுத்தும் பாடு. இப்பவே இந்த மாதிரி இந்த அம்மா பதவி கொடுத்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்கிறாரே. இவரது பதவி காலத்தில் எவ்வாறு எல்லாம் நடந்திருப்பார் என என்னும் போது நெஞ்சம் பதைக்கிறது.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    தேர்தல் கமிஷன் வரலாற்றை எப்படி டி என் சேஷனுக்கு முன் டி என் சேஷனுக்குப்பின் எனப்பிரிக்கிறோமோ அதுபோல புதுவையின் ஆட்சி நெறியை கிரண்க்கு முன்  கிரண்க்குப்பின் எனப் பிரித்துப்பார்த்து மகிழத்தான் போகிறார்கள். அதெப்படி தமிழ்நாட்டவர்போலவே புதுவை மக்களும் ஊழல் கொலை கொள்ளை அராஜக வாதிகளுக்கே மாறிமாறிவாக்களிக்கிறார்களோ? அவர்களுக்கும் கிரண் ஜனநாயகப் பாடம் எடுக்கப்போகிறார். ஊழலுக்கு அவர்வைக்கும் ஆப்பு எல்லா எம் எல் ஏக்களையும் அலறவைக்கிறதே.ஊழலில்லாவிட்டால் புதுவை மாநிலம் மற்ற மாநிலங்களின் வரிப்பணத்தில் அவலமாக வாழவேண்டியிருந்திருக்காதே. 

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    தெற்க்கே தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பி ஜெ பி அல்லாத அரசுகள் ஆட்சி செய்துகொண்டு உள்ளன. தெலுங்கானாவிலோ, அல்லது ஆந்திராவிலோ , பி ஜெ பி அரசின் தலையீடு இருக்கிறதா? கேரளாவில் பி ஜெ பி எதிர்க்கட்சியாக உள்ளதே, கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியில் எவ்வளவோ ஊழல் இருந்தும் பி ஜெ பி அதில் தலையிடவில்லை. கேவலப்பட்டுப்போன தமிழ்நாட்டில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு , டெல்லிக்கு சென்று மற்றவரை பற்றிய புகார்களை பி ஜெ பி தலைமையிடத்தில் போட்டுக்கொடுத்துவருகின்றனர். உடனே பி ஜெ பி அரசு தமிழகத்தில் தலையிடுவதாக புலம்பல்கள். இந்த இருபிரிவுகளும் கொடுத்துள்ள ஊழல் பட்டியலை வைத்துக்கொண்டு பி ஜெ பி நடவடிக்கை எடுத்துள்ளதா? அந்த ஊழல்களை பகிரங்கப்படுத்தக்கூட இல்லை. இன்றுவரை தமிழகத்தில் நடந்துகொண்டு இருக்கும் அநியாயங்களை வெறும் பார்வையாளராக மட்டுமே உள்ளது. நடைபெறும் ஊழல்களை தடுக்கவோ, அல்லது குடவலிகளை தண்டிக்கவோ முயலவே இல்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு கேட்டு பி ஜெ பி வேட்பாளர் சென்னை வந்து சென்றது மட்டுமே நடைபெற்றுள்ளது. ஆனால் அதற்குள் குத்துதே குடையுதே என்று ஒரே கூக்குரல் , திமுக மற்றும் பி ஜெ பி வெறுப்பாளர்களிடம் இருந்து பலத்த கூச்சல் , என்னவோ இவர்களின் பொருட்கள் சூறையாடிவிட்டதை போல. படு கேவலமாக இருக்கிறது .

  • yila - Nellai,இந்தியா

    "மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களும் செல்லாத காசுகள். அவர்களுக்கு சட்டசபையில் ஓட்டுரிமை கிடையாது." மிகச் சரி.....

  • Srinivasan - Chengalpattu,இந்தியா

    கிரண்பேடி மற்றும் பிஜேபி கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது.

  • suresh - chennai,இந்தியா

    டெல்லியில் ஆளுநரை கொண்டு கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி, அதே பாணியில் புதுவையிலும் நெருக்கடி. தமிழக அரசியல் குழப்பத்தில் ரெய்டு மூலம் நெருக்கடி, எதிராக இருந்த நிதிஷ் பனித்த மாயம் மோடிக்கே வெளிச்சம்.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    சாதுவான அஹிம்சாவாதிகள் புதுச்சேரி சட்டசபையில் நிம்மதியாக செயல்படமுடியாது. ஆளும் எதிர்க்கட்சி பாகுபாடில்லாமல்.கூட்டணி வைத்து ஊழல் கிரிமினல் வேலைகளும் செய்கின்றனர். எதிர்த்தால் நாட்களை எண்ணவேண்டியதுதான். இப்படிப்பட்டவர்களோடு சபையில் அறிஞர்களோ அஹிம்சாவாதிகளோ செயல்படமுடியாது. சபாநாயகராக இருப்பவரைப் பற்றி சொல்லித்தெரியவேண்டியதில்லை.அப்படிப்பட்ட மஹாத்மா அவர்.முள்ளை முள்ளாலெடுக்க இந்த மூவரைப்போட்டது நியாயமே. நியமனம் சட்டப்படி தவறென்றால் கோர்ட்டுக்குப்போகவேண்டிய நாராயணசாமி தெருவுக்கு வருவதிலிருந்தே அவ நேர்மையானவரல்ல. கிரண் அவர்களது நேர்மையான அணுகுமுறையால் ஆட்டயப்போடும் உரிமை பறிபோன ஆத்திரத்தில் பந்த் நடத்துகிறார் என்பது நன்கு புலனாகிறது. 

  • suresh - chennai,இந்தியா

    நியமன உறுப்பினர்களை கொண்டு புதுவை சட்டமன்றத்தில் கால் பாதிக்க முயலும் பாஜகவின் முயற்சி என்பது முழுக்க முழுக்க பதவி வெறியின் வெளிப்பாடு, அல்ப சந்தோசம், கேவலத்திலும் கேவலம் மகா கேவலம்.பின் வாசல் வழியே காலூன்ற பாஜக முயல்கிறது என்ற குற்றசாட்டை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.இந்த கேவலமான செயல் பாஜகவிற்கு தேவையா ?

  • Prabaharan - nagercoil,இந்தியா

    ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தால் இது மாதிரி எல்லா மாநிலங்களிலும் நியமன உறுப்பினர்களை நியமித்து நாங்களும் களத்தில் இருக்கிறோம் என குறுக்கு வழியில் காட்டலாம்

  • s.kumanan - Madurai,இந்தியா

    இவர் அன்னா ஹசாரே கூட இருந்தது மக்கள் நலனுக்காக அல்ல சுயநலனுக்காக என்பது இப்ப வெட்ட வெளிச்சமாகி விட்டது.அன்னா ஹசாரே பெயரையும் கெடுக்கின்றார். அரவிந்த் ஹெஜ்ரிவாலை கண்டித்த எச்சரித்த அன்னா ஹசாரே இவரது தரந்தாழ்ந்த நடவடிக்கைகளை கண்டிக்காது இருப்பது ஏன்? கண்டிக்க தவறுவாறேயானால் சீடரின் ரகத்தை சேர்ந்தவராகவே கருதப்பட்டு மக்களால் தூற்றப்படுவார்.

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

    சின்ன விஷயம் பள்ளியில் headmaster இருக்கலாம் அனால் மாணவன் தினமும் பார்ப்பது டீச்சர்ஐ தான் ஆனால் ஹெட்மாஸ்டர் உயர்ந்த்தவர் தான் ஆனால் மாணவனை படிக்க வைப்பது டீச்சர் தான். இங்கே பன்னீர்செல்வத்தை பேசவிடுகிறார்களா அதே கதை தான் அங்கே சுப்போஸ் அந்த மூடர் மூவர் சபையில் இருந்தாலும் பேச விடப்போவது இல்லை தினமும் பார்வையாளரை போல் வந்து போக வேண்டியது தான். வடக்கே துரத்தி அடிக்கப்பட்டவருக்கே அவ்வளவு என்றால் இங்கே மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவன் என்ன இளிச்ச வாயன என்ன

  • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

    BJP is more power hunger than Congress.

  • sam - Doha,கத்தார்

    yellam therinda adimedavi .

  • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    கேவலமான அரசியல்

  • Balaji - Khaithan,குவைத்

    எல்லாம் விதிகளின் படி நடந்திருந்தாலும், இந்த நியமன MLA மற்றும் MP பதவிகள் நாட்டுக்கு ரொம்ப அவசியம் தானா என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.. இதுவரை நியமிக்கப்பட்ட யாரும் தங்களின் பணியை அறிந்து செயல்பட்டதாக எந்த சான்றுகளுமில்லை.. இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படிகள் அனைத்து வீண்தான். சரியாக சபைக்கு வருவதையே செய்யாதவர்களுக்கு எதற்கு பதவி... இதற்கு சிறந்த உதாரணம் நம்ம டெண்டுல்கரும் ரேகாவும் தான் (இவர்களின் வருகைப்பதிவு வெறும் ஒற்றை இலக்கத்தில்). நியமனப்பதவிகள் உண்மையில் தேவைதானா என்று யோசிக்க வேண்டிய தருணம். மற்றபடி பாண்டியில் நடப்பது அரசியல் சடுகுடு மட்டுமே.. அங்கு ஆள்பவர்கள் ஒன்றும் யோகியமானவர்கள் அல்ல.........

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    ஒரு பக்கம் எல்லா அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் என ஒப்புக்கொள்கிறோம். மறுபக்கம் அவர்களுக்கு ஆதரவாக கருத்து போடுகிறோம் என்ன ஒரு பண்பாடு முதலிருந்து ஆராய்ந்தோமானால், எதனால் நட்டு நாராயணசாமிக்கு கோபம் வந்தது? மெடிக்கல் சீட்டுகளில் அவர் செய்த தில்லுமுல்லுகளை கிரண் தட்டிக்கேட்டார். நட்டுவின் பதிலோ இந்த விவகாரத்தில் தலையிட உனக்கு அதிகாரம் இல்லை என்பது தானே தவிர, ஊழல் செய்யவில்லை என்பதில்லையே? நியமன உறுப்பினர் விவகாரத்தில் கிரண் சற்று பொறுமையை கடைபிடித்திருக்கலாம் என தோன்றுகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு இவர்கள் ஓட்டு ஒன்றும் அவ்வளவு முக்கியம் இல்லையே? ஆனாலும் சட்டப்படி மத்திய அரசுக்கு உள்ள அதிகாரப்படி நியமன உறுப்பினராக யாரைவேண்டுமானாலும் அமர்த்தலாம். கோர்ட்டுக்கு சென்றால், நட்டுக்கு நட்டு கழண்டு விடும். மேலும் OFFICE OF PROFIT விஷயத்தில் நிறைய MLA கள் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே 27 AAP MLA கள் பதவிநீக்கம் செய்யப்படும் அபாயத்தில் உள்ளனர். பாண்டி MLA களும் அதில் போண்டி யாவது மோடி கையில் தான் உள்ளது. அடக்கி வாசிக்காமல் நட்டு உளறினான் என்றல் ஆட்டம் க்ளோஸ்

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    ஒரு எடத்துல காலடி வெச்சுதுன்னா அந்தெ எடம் வெளங்கிடும்....

  • Appu - Madurai,இந்தியா

    மத்திய அரசு நியமன எம் எல் ஏ என்று பாஜகவினரை திணிப்பது இன்று வேண்டுமானால் இனிக்கலாம்..வருங்காலத்தில் புதுவையில் பாஜக எழுந்து கூட நிற்க இயலாத நிலைமையாகிவிடும்..எப்படி எல்லாம் தில்லாலங்கடி ஆடுகிறார்கள்.

  • Gopal Thiyagarajan - Chennai,இந்தியா

    கவர்னர் கிரண் பேடியை பி.ஜே.பி. திருப்பி பெற்றுக்கொள்ள வேண்டும். இவரால் பி.ஜே.பி க்கு நிச்சயம் கேட்ட பெயர் வரும். இல்லை என்றால், புதுவை மற்றும் தமிழ் நாட்டு மக்களே தக்க பாடம் கற்பிப்பார்கள்.

  • narayanan iyer - chennai,இந்தியா

    இந்த காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்படும்

  • Shree Ramachandran - chennai,இந்தியா

    மத்திய அரசு சொன்னதை அவர் செய்தார்.

  • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    நீர் ஆம் ஆத்மீயிலிருந்து பி ஜெ பிக்கு பதவி சுகத்தை அனுபவிக்கத்தானே தாவிநீர்

  • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

    ஐயோ தமாசு கிளிமாஸுக்கு வந்துடிச்சி....முட்டிக்குங்க மோத்திக்குங்க...என்ன ஆவுது பாக்கலாம்....திருட்டுமுட்டாள்கள் கட்சியும் கபோதிப்பயலுவ காங்கிரஸும் எங்கே இருந்தாலும் இடைஞ்சல்தான்....அராஜகம்தான்....இவனுங்களுக்கு நியாயத்துக்கு ரொம்ப தூரம்.....பாத்துக்கிட்டே இரு

  • bala - Tuti,இந்தியா

    பக்தாள் எல்லாம் ஆரம்பிச்சுடுவாங்களே.......

  • Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    ஒரு திறமையான பெண்ணிடம் உன் வீரத்தை காட்டுகிறாய் வெக்கமாக இல்லை.

  • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

    என்ன மிடுக்காக இருந்த ஒரு அதிகாரி..... ஒரு கட்சிக்காரனும் அவரை சீண்டமுடியாது... அது அன்று.... இன்று?... கட்சியில் சேர்ந்ததால் கட்சி பணி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்....

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    sam. doha..இன்று காந்திமுதல் கலாம்வரை எந்த உத்தமர் தேர்தலில் நின்றாலும் டெபாசிட் வாங்குவதே கடினம். அதனால் அவர்கள் எப்பதவிக்கும் வரக்கூடாது என்பீர்களா? ஒரே ஒரு தொகுதியில் தோற்றவர் நாடு அல்லது மாநிலம் முழுவதுமுள்ள மக்களனைவராலும் நிராகரிக்கப்பட்டதாக அர்த்தமில்லை. இன்னும் சொல்லப்போனால் சுதந்திரகாலம் முதல் நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் தேர்தல் அரசியலில் செல்லாக்காசுக(or ளானவர்க)ளே . புதுச்சேரிப் பிரச்னை பற்றி கருத்தெழுதுபவர்களில் ஓரிருவர் தவிர மற்றவர்களுக்கு நியமன எம் எல் ஏக்கள் பற்றிய சட்டப்புரிதல் கொஞ்சமுமில்லை. 2011  இல் இதே காங்கிரசின் மத்திய அரசு இவர்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே முதல்வருக்கு சிபாரிசு செய்யக்கூட அதிகாரமில்லையென்றதை அறிவீரா?

  • Sandru - Chennai,இந்தியா

    ஏம்மா உனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி உன் (இல்லாத) மதிப்பை குறைத்து கொண்டு விட்டாய். இது போல எந்த கவர்னரும் கேவல பட்டதில்லை. உனக்கு இது சரியான பாடம்.

  • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

    நான் காங்கிரஸோ ,குறிப்பாக நாராயணசாமியோ ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள், நல்லவர்கள் என்று சொல்லவில்லை .ஆனால் இத்தைகைய செயல்கள் மூலம் பிஜேபியும் ,இழிசெயல்களில் காங்கிரசுக்கு இணையானது என்பது தெளிவாக தெரிகிறது.

  • balakrishnan - coimbatore,இந்தியா

    யாருக்கும் மக்கள் நலன் மீது எந்த அக்கறையும் இல்லை, நீ பத்தடி பாய்ந்தால் நான் இருப்பது அடி பாய்வேன், என்ற நிலை, இவங்க அதிகார வெறிக்கு பாதிக்கப்படுவது மக்கள் தான்

  • Solvathellam Unmai - Chennai,இந்தியா

    கிரண்பேடி தானாக ராஜினாமா செய்வது நல்லது

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    மோடி இதையெல்லாம் கண்டுக்க மாட்டாரா..?

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    ஆளுநரின் கட்டுப்பாட்டில் சபாநாயகரா...? சபாநாயகர் கட்டுப்பாட்டில் ஆளுநரா...... ?.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    பேதி மாநில கவர்னரா, இல்லை பாஜக கவர்னரா? எதற்காக இந்த எதிராளி போக்கு. இது தான் மேலாண்மையா? இந்தம்மாவை ஏன் சர்வீசில் வைக்காமல் ஜெயில் பாதுகாப்புக்கு வைச்சாங்கன்னு இப்ப தெரியுது.

  • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

    பாஜக ஆட்சியில்லாத(டெல்லி, மேற்கு வங்கம், பாண்டி மற்றும் பல) மாநிலங்களையும் ஆளுவதற்காக நியமிக்கப்பட்ட ஏஜென்ட்களே இந்த கவர்னர்கள்..... இந்திய அரசியலின் சாபக்கேடு....

  • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

    கிரண் பேடி பாண்டி கவர்னரா? அல்லது பிஜேபி யின் அரசியல் அஜெண்டா? கவர்னர் பதவிக்கே ஒரு கரும்புள்ளி....

  • G.Prabakaran - Chennai,இந்தியா

    கிரண் பேடி வேண்டும் என்றே தேர்ந்தெடுக்கப் பட்ட அரசிற்கு குடைச்சல் கொடுத்து அவர் பெயரை கெடுத்துக் கொள்கிறார்.

  • rajan - kerala,இந்தியா

    மக்கள் ஆட்சி என்கிறார்களே அது என்ன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் நலனுக்காக அரசை நிர்வகிக்க வேண்டும். ஆனால் இங்கே பதவிக்கு வந்த உடனே இவனுக முதலில் தொடங்குவது ஊழல் பின்பு அதை எப்படி எல்லாம் கட்டிக்காத்து என வழி தேடுவது. இப்படியே 5 வருடத்தை ஓட்டுவானுக. இடையில இவனுக்களை தட்டிக் கேட்டால் நான் மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவன் என கூவுவானுக. பண்றது ஊழல் அதை எவனும் தட்டி கேட்க கூடாது என்பது தான் ஜனநாயகமா என்னும் நிலைக்கு கொண்டு போய்டுவானுக இந்த பொன்னாடை போர்த்தின பன்னாடைகள். எனவே இவனுக்களை தட்டி கேட்க ஒரு ஆள் தேவை. அது இந்த பாண்டியில் அரங்கேறுது. அரங்கேறட்டுமே.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    நியமன எம் எல் ஏக்கள் ஜனாதிபதி தேர்தல் தவிர மற்றவற்றில் வாக்களிக்க முடியும் என்பது கோர்ட் தீர்ப்பு. தனக்கே மெஜாரிட்டியில்லாத போது இதே காங்கிரஸ் நியமன எம் எல் ஏக்களை வாக்களிக்கவைத்து பிழைத்தது மறக்குமா?

  • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

    எல்லாம் சரிதான். நியமன MLA க்கள் BJP கட்சியை சார்த்ந்தவாராயிருக்க வேண்டுமென்று அரசியல் சாசனதில் இருக்கிறதா என்ன? முன்னவே இந்த காங்கிரஸ் ஆட்சியில் எந்த முன்னேற்றமுமில்லை என மக்களின் ஆதங்கம். இதுல இது வேற.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் என் ஆர் காங்கிரசும் ஆட்சியிலிருந்தபோது 2011 இல் இதே நாராயசாமி மாநில அரசுக்கோ முதல்வருக்கோ நியமன எம் எல் ஏக்களை சிபாரிசு செய்யயும் உரிமைகூட கிடையாது என்று கூறினார் (ஏனெனில் அப்போது ஆண்டது அவரின் எதிர்க்கட்சி )இப்போது மத்திய அரசுக்கு உரிமையில்லை என்கிறார் என்ன வேடிக்கை ? ஆகமொத்தம் நாராசாமி ஆட்சிக்கு வந்ததே ஆட்டயப்போடதான் அதற்குத் தடையாக உளளதால் கிரண் மீது கோபம் ஆத்திரம் பொத்து கொண்டு வருகிறது

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    நமக்கும் ஒரு கிரண் பேதி தேவை . அவர் போல நாராயணசாமியால் சட்டப்பிரிவை மேற்கோள் காட்டமுடியவில்லையே ஏன்??

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    பேடியின் இமேஜ் கிழிந்து தொங்கி விட்டது. பொறுப்பென்று வந்தால் தான் ஒருவரின் செயல்பாடு புரியும்.

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    அன்று காங்கிரசும் தி.மு.கவும் பாண்டிச்சேரியில் செய்த அதே ஜனநாயக படுகொலையை இன்று பா ஜ க செய்கிறது........ யாருக்கும் வெட்கமில்லை...

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    தனி மாநில அந்தஸ்து இல்லாத வரைக்கும் இந்த பிரச்சனை இருந்துகொண்டேதான் இருக்கும். அப்புறம் நம்ம தமிழிசை என்ன சொல்ராங்க அவங்களை பேட்டி எடுக்கலயா நீங்க

  • Ram -

    கிரன் மேடிக்கு இதெல்லாம் தேவையா?

  • Raman - kottambatti,இந்தியா

    சரியான ஆப்பு. நினைத்ததை எல்லாம் செய்யலாம் என்ற நினைப்பு.. பதவிக்கு வந்த கொஞ்சம் நாம் ஓவரா வேலைபார்த்து படம் காட்டிச்சி .. இப்ப என்ன ஆச்சி? வெறும் அரசியல் பண்ணுது.. சின்ன மாநிலம் . ஆனாலும் தைரியம் நிறைய.. நம்ம ஆளுங்க எதுக்கும் லாயக்கில்லை..

  • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

    சட்டம் என்ன சொல்லுகிறதோ?>>>>

  • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

    மாண்புமிகு சாமிஅவர்களே இன்னும் பதினைந்து நாள்களில் ஓர் நல்லதீர்வு வந்துவிடும். எல்லாஅரசியல் வாதிகளும் சேவைசெய்யவே பதவிக்கு வருகின்றனரா? பலத்தால் சேர்க்கவே வருவதாக மக்கள் நிடனைக்கிறார்கள்>>>எது சரி????

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    துளியூண்டு மாநிலம் பாண்டிசேரி. அதன் முதல்வருக்கு இருக்கும் தைரியத்தில் ஒரு சதவிகிதம் கூட இல்லாமல் போன முன்னாள், இந்நாள் தமிழக முதல்வர்களை நினைத்தால் தமிழக மக்கள் எவ்வளவு பரிதாபத்திற்கு உரியவர்கள் என்று புரிகிறது.

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    மக்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுக்கு தான் உண்மையான அதிகாரம் மக்களாட்சியில் உள்ளது. கவர்னர் நியமித்த MLA களுக்கு ஓட்டளிக்கும் அதிகாரம் இல்லை. புதுச்சேரியில், தைரியமாக நாராயணசாமி செயல்பட்டு வருகிறார். சிபிஐ ரெய்டுக்கு பயந்து, எடுபிடி பழனி கதிராமங்கலத்தில் மீத்தேன் எடுக்க ரகசியமாக ஒத்துழைப்பது போன்று செயல்படவில்லை. மாநில ஆட்சியில் மூக்கை நுழைக்க, மத்திய அரசிற்கு உரிமை இல்லை. கவர்னர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கிரண் பேடி அவரின் அதிகாரத்தை உணர்வது நல்லது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement