Advertisement

புதுச்சேரி அரசு விரைவில் கவிழும்?

புதுச்சேரி துணை நிலை ஆளுனர், கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் நடக்கிறது. காங்கிரஸ் அரசை, தினமும் குறை கூறி வரும், முன்னாள், ஐ.பி.எஸ்., அதிகாரியான கிரண் பேடி, யாருக்கும் பயப்படாமல் வேலை செய்யும் அதிரடி குணம் உடையவர். இவருக்கும், முதல்வருக்கும் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதும் இல்லை; பேசுவதும் இல்லை.இது குறித்து டில்லி வரை வந்து புகார் அளித்துள்ளார் நாராயண சாமி. பா.ஜ., தலைவர் அமித் ஷா, சமீபத்தில் புதுச்சேரி சென்று, கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து, ஆலோசனை நடத்தினார். அப்போது, 'இனிமேல் நாராயணசாமி அரசுக்கு தினமும் பிரச்னைதான்' என, கூறியதாக பேசப்படுகிறது.
அமித் ஷா தான் , பா.ஜ., தரப்பிலிருந்து, மூன்று எம்.எல்.ஏ.,க்களை நியமனம் செய்ய உத்தரவிட்டாராம். 'நாராயணசாமி அரசு ஊழலில் சிக்கியுள்ளது; விரைவில் கவிழும்; அதற்கான ஏற்பாடுகளை துவங்கி விட்டோம்' என, பா.ஜ., நிர்வாகிகளிடம் கூறினாராம், அமித் ஷா.
டில்லி வந்த நாராயணசாமி, உள்துறை மற்றும் நித்துறை அமைச்சர்களை சந்தித்து, 'கிரண் பேடி, ஏன் இப்படி நடந்து கொள்கிறார்; நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே' என கேட்டாராம். அதற்கு அவர்கள், 'நீங்கள் கோர்ட்டிற்கு போனால், உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்; இதைத் தவிர, நாங்கள் வேறேதும் செய்ய முடியாது' என, அவர்கள் ஆறுதல் கூறினராம்.
இதற்கிடையே, ஜனாதிபதி மாளிகையில் புதிய செய்தி அடிபடுகிறது. புதுச்சேரியில், ஆளும் கட்சியை சேர்ந்த, ஒன்பது எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்யக் கோரும் புகார், ஜனாதிபதிக்கு வந்துள்ளதாம்.எம்.எல்.ஏ.,வாக இருப்பவர்கள், அரசு நிறுவனங்களில் எந்த பதவியிலும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அந்த எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறி போகும். இந்த புகாரை, ஜனாதிபதி, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைப்பார். ஆனால், இம்மாதம் பதவி ஓய்வு பெறும் பிரணாப் முகர்ஜி, 'புது ஜனாதிபதி வந்து, இந்த புகாரைப் பார்த்துக் கொள்ளட்டும்' என, சொல்லி விட்டதாக, பேச்சு அடிபடுகிறது.

முக்கிய பிரமுகர் மகன் கைதாகிறார்எதிர்க்கட்சித் தலைவர்கள், தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்கி, வழக்குகளில் மாட்டியுள்ளனர். பா.ஜ.,வின் அடுத்த குறி, தமிழக அரசியல்வாதியின் மகன் என்கின்றனர். அந்த வாரிசு மீது, ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.
'விரைவில், சி.பி.ஐ., அதிகாரிகள், அந்த வாரிசு அரசியல்வாதியை கைது செய்வர்' என அதிகாரிகள் வட்டாரங்களில்சொல்லப்படுகிறது.

கல்யாண கலாட்டாகடந்த வாரம், டில்லியில் நடந்த ஒரு திருமண வரவேற்பு விழா, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி விட்டது.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மகளின் திருமண விழாதான், அது. பிரசாத், பீஹாரைச் சேர்ந்தவர். இவரது மகள், ஒரு தமிழரைத்திருமணம் செய்து கொண்டார்.டில்லி நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால், ஓட்டலில் இட நெருக்கடி ஏற்பட்டது; காரணம், வரவேற்பு ஹாலில், 500 பேருக்கு மேல் இருக்க முடியாது.
பீஹாரிலிருந்த வந்திருந்த அனைவரும், மேடை மேல் ஏறி விட்டனர். அமைச்சருடன், புகைப்படம், 'செல்பி' என எடுத்துக் கொள்ள, மணமக்களை யாருமே கண்டுகொள்ளவில்லை.
சில அமைச்சர்கள், மேடைக்கு சென்று, மணமக்களை வாழ்த்த முடியாமல் திரும்பி விட்டனர். திருமணத்திற்கு மாப்பிள்ளை தரப்பிலிருந்து, தமிழகத்திலிருந்து வந்தவர்களும், ஏமாற்றத்தையே சந்திக்க நேர்ந்தது.
'பிரதமர் மோடி, ஒரு நிகழ்ச்சி நடத்தினால் எப்படி அருமையாக நடத்துகிறார். அவரது அமைச்சரவையில் உள்ள ரவிசங்கர் பிரசாத், இப்படி செய்து விட்டாரே' என, சக அமைச்சர்கள் வருத்தப்பட்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

 • sam - Doha,கத்தார்

  இந்த கேடி ஆட்டம் ஒன்றும் செயல்படாது. புதுச்சேரி மக்கள் என்றும் பிஜேபி யை ஏற்று கொள்ள மாட்டார்கள்.

 • sam - Doha,கத்தார்

  எந்த வித பேமாளி தனம் பண்ணினாலும் நாராயணசாமி அரசை நிச்சயமாக தொடக்கூட முடியாது

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  கடந்த எழுபது வருடங்களாக பாண்டிச்சேரியை கொள்ளையடித்த அரசியல்வாதிகளுக்கு ஆப்பு வைக்க வேண்டும்.

 • tony vel - georgetown,கயானா

  பேடி தான் முதல்வர்போல் நடந்துகொள்வது , பாண்டிச்சேரியின் தனித்தன்மையை பேடி , பேடித்தனமாக கட்டுப்படுத்த பார்ப்பதும் மூன்று நியமன உறுப்பினர்களை இவர் இஷ்டத்திற்கு நியமனம் செய்வதும் , மோடி பேடியை அனுப்பி கலாட்டா பண்ண முயல்வது நாட்டிற்கு முன்னுதாரமாகிவிடும் .

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  நட்டு நாராயணசாமி பல்லை உடனே பிடுங்க வேண்டும் ஊழல் அரசியல் வாதிகள் எங்கிருந்தாலும் உடனடியாக களை எடுக்கவேண்டும். என்ன தைரியம் இருந்திருந்தால் மெடிக்கல் சீட்டுகளில் அவ்வளவு ஊழல்கள் செய்துவிட்டு நல்லவன் போல் புகார்வேறு செய்வான்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement