Advertisement

பேய் என்றால் எனக்கு பயம் : நடிகை சாய் தன்ஷிகா

மின்னலே பொறாமைப்படும் மெல்லிய தேகம்... நிலவே வியந்து பார்க்கும் 'பளிச்' முகம்... நடக்கும் நதியாய் திரைக்களத்தில் தன் அழகால் அதகளம் செய்யும் நடிகை சாய் தன்ஷிகா பேசுகிறார்...

* உரு படம் ?
ஒரு எழுத்தாளரின் மனைவியாக நடித்து இருக்கிறேன். திரில்லர் படமாக இருந்தாலும் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் படம். அதுவும் கொடைக்கானல் குளிரில் நடித்தது புதிய அனுபவம்.
* சண்டை காட்சி ?
நிறைய காட்சிகள் டூப் போடாமல் நானே, ரியலா பைட் பண்ணி இருக்கேன். கார் கண்ணாடியில் நான் மோதி விழும் காட்சிக்கு தியேட்டரில் பலத்த கைதட்டல் கிடைத்தது.
* கபாலிக்கு முன், பின் ?
தனிப்பட்ட முறையில் தன்ஷிகாவிடம் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் படங்களின் தேர்வை கொஞ்சம் மாற்றி இருக்கிறேன்.
* ரஜினி ?
எந்த காட்சியாக இருந்தாலும் ஒரே டேக்கில் நடிப்பார். பெரிய வசனங்களை கூட ஒரே டேக்கில் பேசி அசத்துவார். இதெல்லாம் ரஜினிக்கு சொல்லிக் கொடுத்ததே சிவாஜி தானாம். இவரை போல நானும் ஒரே டேக் நடிகையாக வருவேன்.
* 'ராணி' அம்மா?
'ராணி' படத்தின் கதை என்னை மிகவும் பாதித்தது. தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள அன்பை வெளிப்படுத்தக் கூடிய கதை. பெண்கள் எல்லாம் கண்ணீர்விடும் அளவிற்கு கதையில் சென்டிமென்ட் இருந்தது.
* போட்டி, பொறாமை...
அனுபவம் தான் ஒருவரை மாற்றுகிறது. 'பேராண்மை' படம் நடிக்கும் போது 5 பெண்கள்,
ஒரு நாள் கூட எங்களுக்குள் போட்டி, பொறாமை வந்தது இல்லை. கோபத்தை கொஞ்சம் குறைத்து நல்ல விஷயங்கள் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளேன்.
* பயம் இருக்கா...
பேய் என்றால் எனக்கு பயம். இருட்டினால் வெளியே தலைகாட்ட மாட்டேன்.
* உணவு விஷயத்தில்...
இஷ்டத்திற்கு சாப்பிட மாட்டேன். கட்டுப்பாடு உண்டு. ஆறு ஆண்டுகளாக 'டயட்' உணவு தான்.
* திருமணம் ?
திருமணமா... ஐடியா இல்லை, என் முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கிறது.
* அடுத்து வருவது...
குடிசை வாழ் பெண்ணாக 'விழித்திரு' படத்தில் நடிக்கிறேன். துல்கர் சல்மானுடன் 'சோலோ', படத்தில் நடனம் ஆடும் கண் தெரியாத பெண்ணாக வருகிறேன்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement