Advertisement

அரசியலுக்கு வர மாட்டார் ரஜினி

அரசியலுக்கு வர மாட்டார் ரஜினி


ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வருவார், எப்போது தனிக்கட்சி ஆரம்பிப்பார், என தமிழ் மற்றும் தேசிய,'டிவி' சேனல்கள், அனல் பரக்க விவாதித்துக் கொண்டிருக்கின்றன. ரஜினிக்கும், மோடிக்கும் நல்ல நெருக்கம். எனவே, ரஜினிக்கு. பா.ஜ., உதவும். அவர் அரசியலுக்கு வந்தால், பா.ஜ.,வோடு கூட்டணி வைப்பார் என பலவிதமான செய்திகள் அடிபடுகின்றன.
ஆனால், பா.ஜ., தலைவர்கள், குறிப்பாக டில்லியில் உள்ளவர்கள் ரஜினியைப் பற்றி என்ன நினைக்கின்றனர்? கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அந்த தலைவர், ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அவ்வளவு உற்சாகமாக இல்லை. ரஜினி நல்ல மனிதர்; அவர் குடும்பத்தை மிகவும் நேசிப்பவர், மதிப்பவர். அரசியலில் வர வேண்டும் என அவருக்கு ஆசை இருக்கிறது. ஆனால், அவரது குடும்பத்தினர் இதற்கு எதிராக உள்ளனர்.
மேலும், ரஜினியின் இரண்டாவது மகள் திருமணத்தில் பிரச்னை. அந்த வழக்கு கோர்ட்டில் உள்ளது. இதனால் ரஜினிக்கு பணப் பிரச்னை என்றும் சொல்கின்றனர். தவிர, ரஜினியின் மனைவி, இவர் அரசியலுக்கு வரக்கூடாது என கண்டிப்பாக இருக்கிறாராம். இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம் என்கிறார் அந்த, பா.ஜ., தலைவர்.
மேலும், தமிழக, பா.ஜ., தலைவர்களும், கட்சி, ரஜினியை நம்பி இருக்கக் கூடாது, அவரால் ஒரு முடிவெடுக்க முடியாது. எனவே, அவரிடமிருந்து விலகியே இருங்கள் என, டில்லி தலைவர்களுக்கு கருத்து சொல்லியுள்ளனராம். இதனால்தான், டில்லி, பா.ஜ., தரப்பிலிருந்து ரஜினி விவகாரத்தில் வாய் திறக்காமல் அமைதியாக உள்ளனராம்.


துணை ஜனாதிபதி யார்?


துணை ஜனாதிபதி பதவிக்கு, அடுத்த மாதம், 5ம் தேதி தேர்தல்நடைபெற உள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை, எம்.பி.,க்கள் இதில் ஓட்டளிப்பர். காங்., மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து முன்னாள் சபாநாயகர், மீரா குமார் வேட்பாளராக போட்டியிட்டாலும், பா.ஜ.,வின் ஜனாதிபதி வேட்பாளர், ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறப்போகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார்கள் என்பது சஸ்பென்சாக உள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கடைசி நேரத்தில்தான், பா.ஜ., அறிவித்தது. அதற்கு முன் வரை பல பெயர்கள் அடிபட்டன. ஆனால், கடைசியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான சம்பவம், பா.ஜ., வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பா.ஜ., தலைவர் அமித் ஷா, அப்போது பீஹார் கவர்னராக இருந்த, ராம்நாத் கோவிந்திற்கு போன் செய்து, 'நீங்கள்தான் ஜனாதிபதி வேட்பாளர். பார்லிமென்ட் குழு முடிவெடுத்து விட்டது' என, சொன்னாராம். உடனே, கோவிந்த் மகிழ்ச்சியில் அழ ஆரம்பித்து விட்டாராம். அவரால் பேசக் கூட முடியவில்லையாம். 'என்ன சொல்வது என்றே தெரியவில்லை' என சொன்ன கோவிந்த்,
அமித் ஷாவிற்கும் பிரதமருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தாராம்.இப்படி கோவிந்த் விவகாரம் அமித் ஷா மற்றும் மோடிக்கு மட்டும்தான் தெரியும். மற்ற யாருக்கும் தெரியாது. இதே போலத்தான் துணை ஜனாதிபதி விவகாரமும் என்கின்றனர், பா.ஜ.,வினர். இந்த பதவிக்கு, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் பெயரும்
அடிபடுகிறது. பா.ஜ., கூட்டணிக்கு மெஜாரிடி இருப்பதால் இவர்களுடைய வேட்பாளர்தான் துணை ஜனாதிபதி ஆக முடியும்.


தமிழக அரசு திடீர் ஆர்வம் ஏன்?


தடை செய்யப்பட்ட, 'குட்கா' தமிழகத்தில் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. இது, பல காலமாக நடந்து வந்தாலும் திடீரென தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த திடீர் நடவடிக்கைக்குக் காரணம், பா.ஜ., தலைவர் அமித் ஷா என சொல்லப்படுகிறது. சமீபத்தில் தமிழகத்திற்கு வந்திருந்த அமித் ஷா, குட்கா விற்பனையை நேரடியாகவே பார்த்தாராம். தடை செய்யப்பட்ட குட்கா எப்படி இங்கே விற்பனையாகிறது என தன் கட்சிக்காரர்களிடம் கேட்டிருக்கிறார். அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தான் இதற்குக் காரணம் என சொல்லியிருக்கின்றனர்.
டில்லி வந்த அமித் ஷா மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவிடம் இந்த விஷயத்தைச் சொல்லி, உடனே நடவடிக்கை எடுங்கள் என உத்தரவிட்டாராம். மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததால், உடனடியாக தமிழக அரசு அதிகாரிகளிடம் குட்கா விவகாரத்தைப் பற்றி விவாதித்து எச்சரிக்கை விடுத்தாராம் அமைச்சர். இதனால்தான் உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது.
மேலும், குட்கா விவகாரத்தில் சம்பந்தப்படுள்ள அமைச்சர் அதிகாரிகள் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால், தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பூகம்பம் ஏற்படும் என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (11)

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  ரஜினி அரசியலுக்கு வராமல் இருந்தால் அவருக்கு நல்லது. அவர் அரசியலுக்கு வந்தால் தமிழக மக்களுக்கு நல்லது. அரசியலுக்கு வந்தால் பணம் நானும் பணம் பண்ண மாட்டேன், அடுத்தவரையும் பணம் பண்ண விடமாட்டேன் என்கிறார். தற்போதைய கால கட்டத்தில் இந்த வட்டம், மாவட்டம் இவர்களது பசிக்கு சொந்த பணத்தை கொடுத்து மாளாது.ஒரு கூட்டம் போடணுமா பைசா வை. ஒரு ஊர்வலம் போகணுமா பைசா வை. சொந்த பைசாவை செலவழிக்க மனமும், வசதியும் வேண்டாமா? அந்தக்காலத்தில் சொந்தபைசாவை செலவழித்து காமராஜருக்கு வேலைசெய்த நபர்கள் எல்லாம் தற்போது இல்லை. அரசியலுக்கு வந்தோமா, நாலு காசு பார்த்தோமா, (வயிற்றுப்பசிக்காகவாவது) என்பதுதான் இன்றய நிலை. இதை அவர் நன்கு உணர்ந்து கொண்டிருப்பார், அதனால்தான் இத்தனை தயக்கம்.

 • Krish Sami - Trivandrum,இந்தியா

  ஜோக்கர விடுங்கப்பா.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  //அரசியலுக்கு வர மாட்டார் ரஜினி// இந்த மொகரையை காட்டியாவது தாமரைக்கு நாலு ஓட்டாவது தேத்தலாமுன்னா அதுக்கும் வழியை காணாமே..

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  வந்துட்டாலும்.. கிழிச்சிடுவாங்களா?

 • அறிவுடை நம்பி - chennai,இந்தியா

  அவர் வந்தா நாம துரத்துவோம்....அதைவிட வேற என்ன வேலை நமக்கு........

 • LAX - Trichy,இந்தியா

  ரசினி தான் நடித்த ஒரு படத்தில் இவ்வாறு வசனம் பேசியிருப்பார்..:: 'ஒருத்தனுக்கு எந்திரிச்சே உக்கார முடியலயாம்.. அவனுக்கு 9 பொண்டாட்டிங்களாம்.. ஈதெப்புடியிருக்கு..' அவரது வசனம் அவருக்கே ரிப்பீட்டே..

 • kc.ravindran - bangalore,இந்தியா

  baner கட்டுவதற்கு ஆட்களுக்கு பஞ்சமே இல்லை. அதை நம்பி அரசியல் கட்சி உயிர் வாழாது.

 • Sandru - Chennai,இந்தியா

  ரஜினி நல்ல நடிகர், நல்ல மனிதர். ஆனால் மிகவும் சுயநலவாதி. தான் நடித்து வெளி வர போகும் படங்களுக்கு உச்ச கட்ட விளம்பரம் கொடுப்பதற்காகவும், வசூலை அதிக படுத்தவும் " நான் அரசியலுக்கு வர போகிறேன், நான் அரசியலுக்கு வரப்போகிறேன்' என்று வடிவேலு பாணியில் ஏமாற்று அறிக்கை வழங்கி மக்களை ஏமாற்றி வருகிறார். இவர் அரசியலுக்கு நிச்சயம் வரப்போவதில்லை. அப்படியே வந்தாலும் இவர் கதை கந்தலாக போவது உறுதி.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஜனாதிபதி தேர்தல் , GST என்று நாடே அல்லோலகல்லோலப் படுகிறது. ரஜினி ஆளையும் காணோம் வாய்ஸ் கூட கொடுக்கலை. இவர் தான் மக்கள் பிரச்னைகளுக்காக அரசியலுக்கு வருவாராம். உடாம சொல்லி சொல்லி ஏமாத்தறார்.

 • mohanasundaram - chennai,இந்தியா

  ஆம் திரு ஸ்ரீதர் நீங்கள் சரியாக கூறி உள்ளீர்.

 • N. Sridhar - Kanchipuram

  வந்தா என்ன, வரவில்லை என்றால் என்ன? We should look him as an entertainer only! Not as a politician, he's only a joker card!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement