Advertisement

கமல்ஹாசன் கொடுத்த விருது...மகிழ்ச்சியில் 'பசங்க' ராம்

கமல், விஜய், ஜீவா போன்ற 'ஹீரோ' க்களுடன் நடித்த பெருமை எனக்கு உண்டு என, நெகிழ்ச்சியோடு பேச்சை துவக்கினார் கும்பகோணம் ராம். கற்றது தமிழ், பசங்க, தமிழ்படம், விளையாட்டு பிள்ளை, வேங்கை, மார்க்கண்டேயன், வந்தான் வென்றான், ஜில்லா, கோலிசோடா, வஜ்ரம், பாபநாசம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மனம் திறக்கிறார்...
* சினிமா 'என்ட்ரி'...
என் தந்தை சிவராமகிருஷ்ணன் 'ஆக்ட்டிங்' இயக்குனராக பணிபுரிகிறார். அவருக்கு சினிமா வட்டாரத்தில் நல்ல பெயர் இருந்ததால், அவர் பரிந்துரையில், இயக்குனர் ராம் மூலம் படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது
* முதல்படம் ?
2007ல் 'கற்றது தமிழ்' என் முதல் படம். இதில் ஹீரோவின் சிறு வயது கேரக்டரில் நடித்துள்ளேன்.
* 'பசங்க' படத்தில் நடித்த அனுபவம் ...
எனக்கு 'தேசிய விருது' வாங்கித் தந்த படம். இதன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.
* பிடித்த ஹீரோ...
கமலின் தீவிர ரசிகன் நான், அவருடன் 'பாபநாசம்' படத்தில் நடித்ததை மறக்க முடியாது, 9 நாட்களும் அவருடன் தான் இருந்தேன். நடிப்பை பாராட்டி முதுகில் தட்டிக் கொடுத்தார். இதுவே எனக்கு கிடைத்த மிகப் பெரிய விருது.
* கவர்ந்த இயக்குனர்....
மணிரத்தினம், இவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை...
* ஹீரோவாக நடிக்க ஆசையா...
நான் உண்ணும் உணவு, அணிந்துள்ள ஆடைகள் எல்லாமே சினிமா மூலம் கிடைத்தது தான். நிச்சயம் வாய்ப்பு வரும்போது 'ஹீரோ'வாக நடிப்பேன்.
* அடுத்த படங்கள்..
'உத்தம வில்லன்' கேமரா மேன் ஷியாம்தத் இயக்கத்தில் மம்முட்டி தயாரிப்பில் தமிழ், மலையாளத்தில் தயாராகும் 'ஸ்ட்ரீட் லைட்' என்ற படத்தில் நடிக்கிறேன். இன்னும் பெயர் வைக்காத 3 படங்களில் நடித்து வருகிறேன்.
இவரை வாழ்த்த 99416 31763
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • velan - california,யூ.எஸ்.ஏ

    இந்த செய்தி கமல் அவர்களை பற்றி இல்லையென்றாலும் சில கருத்துக்களை ஏக்கத்துடன் பதிவு செய்வது அவசியம் இவர் பேசுவது மேலோட்டமாக பார்த்தால் புரியாது . ஆழ்ந்து யோசித்தால் தான் அதில் உள்ள நேரடி மற்றும் மறைமுக செய்திகள் புரியும் . படத்தின் டயலாக் கூட மிகவும் யோசித்து எழுதியிருப்பார் . பல இயக்குனர்கள் சில சப்ஜெக்ட் கதைகளை தொட மாட்டார்கள் . ஆனால் கமல் அவைகளை தைரியத்துடன் மிகவும் நேர்த்தியாக படத்தில் காண்பித்துள்ளார் . இன்னொரு முறை கமல் படங்களை பார்க்கவும் . புரியாத புதிர்கள் விளங்கும் . excellent kamalahaasan sir. keep it up . you have ed right creativity path.

  • Subramanian Srinivasan - valrokaiya ,இந்தோனேசியா

    மென் மேலும் வளர வாழ்த்துகள்.கமலைப் போல் சிறுவனாக நடிக்கவந்து அவரிடம் வாழ்த்தும் பெற்ற ராம் கமலைப்போலவே உயரங்களை எட்ட வாழ்த்துக்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement