Advertisement

' டிஜிட்டல் தென்றல் '- சாந்தினி

மெகா பிக்சல் கேமராக்கள் தேடும் பிக்காசோ ஓவியம் நீ...
ஸ்மார்ட் தியேட்டரின் திரைகள் விரும்பும் டிஜிட்டல் தென்றல் நீ...
உன் சிரிப்பில் சிந்தி சிதறும், சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் நீ...
நீ ஆல்ரவுண்ட் போகாமல், அழகிகள் உலகம் இயங்குவது ரொம்ப கஷ்டம்...
முன்பனி காலத்தின் புல்வெளியில் பறக்கும் மின்மினி நடிகை என்று எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்...அதற்கு சான்று சாந்தினி! ஜிலேபியின் இனிப்புடன் பேசுகிறார்...
* ஜீரோ சைஸ் ?
முதல் படம் இயக்குனர் பாக்யராஜின் 'சித்து பிளஸ் டூ' பண்ணும் போது 'பாடி பிட்னஸ்' ஐடியா எல்லாம் இல்லை. இந்த படத்திற்கு பின் நிறைய 'ஜிம்' போயி, இன்னிக்கு 'ஜீரோ சைஸ்' ரேஞ்சுக்கு நடிக்க வந்திருக்கேன்.
* கதை செலக்ஷன்...
நான் விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சிருக்கேன். அதனால, என்ன மாதிரி கதை, கேரக்டர்களை தேர்வு செய்ய வேண்டும் என்கிற டெக்னிக் தெரியும். அப்படி நான் நடிச்ச 'வில் அம்பு' படம் எனக்கு ஒரு ரீ என்ட்ரி.
* சினிமா டைரக்ஷன் ?
நான் விஸ்காம் படிக்கும் போது ஒரு குறும்படம் இயக்கினேன். அதுல பாக்யராஜ் பொண்ணு சரண்யா நடிச்சிருக்காங்க. சினிமா இயக்கும் அளவுக்கு இன்னும் டெவலப் ஆகல.
* குருநாதர் பாக்யராஜ்?
ரொம்ப கண்டிப்பானவர், தினமும் ஸ்கூலுக்கு போற மாதிரி தான் ஷூட்டிங் போவேன். கேமரா பயம் இல்லாம நடிக்க வைச்சார், சொந்த குரலில் டப்பிங் பேச கற்றுக் கொடுத்தார். அவரது மனைவி பூர்ணிமா கூட நிறைய காஸ்டியூம் டிப்ஸ் கொடுத்தாங்க.
* நடிக்கும் படங்கள்...
'ராஜா ரங்குஸ்கி', 'வண்டி', 'வணங்காமுடி', 'பல்லாண்டு வாழ்க', 'சதுரங்க வேட்டை 2', 'சீமை தண்ணி'...
* ரங்குஸ்கி, வண்டி ?
ராஜா - ஹீரோ, ரங்குஸ்கி - ஹீரோயின் அதான் 'ராஜா ரங்குஸ்கி', 'வண்டி' படத்தில் பைக் தான் சப்ஜெக்ட், 'வணங்காமுடி' போலீஸ் ஸ்டோரி, இதில் உங்க கேரக்டரில்(நிருபர்) நடிச்சிருக்கேன்.
* டபுள் ஹீரோயின்...
என் ரோல் நல்லா இருந்தா டபுள் ஹீரோயின் படங்களில் நடிப்பேன். 'வில் அம்பு' படத்துல கூட மூன்று ஹீரோயின்கள், அதுல என் நடிப்பு பெருசா பேசப்பட்டது. சினிமா விளம்பரங்களில் ஹீரோக்கள் படம் தான் பெருசா இருக்கும். நான் அதை விட படத்துல எந்த மாதிரி கேரக்டர்ல இருக்கேன்ணு தான் பார்ப்பேன்.
* ரிப்பீட் கேரக்டர்...
இதுவரை நான் பண்ணின கேரக்டர்கள் அடுத்த படங்களில் 'ரிப்பீட்' ஆனதே இல்லை. ஆனால், 'பாகுபலி' ரம்யா கிருஷ்ணன் ரேஞ்சுக்கு ஒரு படம் நடிக்க விரும்புறேன்.
* சமூக அக்கறை...
ஜல்லிக்கட்டு போராட்டத்துல பங்கேற்று வாய்ஸ் கொடுத்தேன். டுவிட்டர், பேஸ்புக்ல வீடியோக்களை தட்டிவிட்டேன்... ஆதரவற்ற குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்திருக்கேன், அவங்களுக்கு இன்னும் நிறைய உதவி பண்ணுவேன்...
iamchandini_12
Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement