Advertisement

பிரான்ஸ் பார்லி., தேர்தல்: மக்ரோன் கட்சி வெற்றி

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின், பார்லி., தேர்தலில், அதிபர் மக்ரோனின் என் மார்சே கட்சி அபார வெற்றி பெற்றது.

ஐரோப்பிய நாடான பிரான்சில், மே மாதம் நடந்த அதிபர் தேர்தலில், புதிய அதிபராக இமானுவேல் மக்ரோன், 39, தேர்வு செய்யப்பட்டார். பிரான்ஸ் நாட்டில், முதலில் அதிபரும், பின், எம்.பி.,க்களும் நேரடியாக, மக்களால் தேர்வு செய்யப்படுவர். இதில் வெற்றி பெற, 50 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பெற வேண்டும். யாரும், 50 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகள் பெறவில்லையெனில், முதல் இரண்டு இடங்களை பெறும் வேட்பாளர்களுக்கு இடையே, மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.

இந்நிலையில் இரு சுற்றுகளாக நடந்த பார்லி., தேர்தலில், மொத்தமுள்ள 577 இடங்களில், 355லிருந்து 425 இடங்கள் வரை கைபற்றிய அதிபர் மக்ரோனின் கட்சி பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பிரான்ஸில் அதிபர் மக்ரோன் முன்வைத்த புதிய பொருளாதார திட்டங்கள், பிரிட்டன் உறவு குறித்து கொள்கைகள் பார்லியில் எதிர்ப்பின்றி நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement