Advertisement

சீனாவில் சர்வதேச யோகா தினம்

பெய்ஜிங்: மூன்றாவது சர்வதேச யோகா தினம் சீனாவில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் மோடியும், சீனப் பிரதமர் லீ கேகியாங்கும் இணைந்து செய்த யோகா பயிற்சிக்கு பிறகு சீனாவில் யோகா மிகப் பிரபலமடைந்து விட்டது. சீனா இந்தியாவுடன் இணைந்து ஐ.நா., அவையில் ஜூன் 21 ஆம் தேதியில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட ஆதரவளித்தது.
மன்மோகன் சிங் பண்டாரி எனும் இந்தியர் தனது சீன மனைவியின் யானுடன் இணைந்து யோகா பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். பூங்காக்களில் யோகா கற்றுத்தரப்படுவது சகஜமாக காணப்படும் காட்சியாகும். யோகா சீனா முழுவதும் இலவசமாகவே கற்றுத்தரப்படுகிறது. ரிஷிகேசத்திலிருந்து சென்றுள்ள பண்டாரிக்கு சீனா முழுவதும் யோகாப் பள்ளிகள் உள்ளன. இந்திய துாதரகத்தில் உமேஷ் பாபு எனும் யோகா சிறப்பு
ஆசிரியர் ஒருவர் உள்ளார்.
இந்திய துாதரகம் ஜூன் 20 ஆம் நாள் முக்கிய நிகழ்வை நடத்தவுள்ளது. முதல் முறையாக சீன இளைஞர்கள் சிலருக்கு யோகா பயிற்சியளித்து அவர்களை யோகா துாதர்களாக செயல்பட வைக்கும் முயற்சியும் செய்யப்படுகிறது. துாதரகம் 12 நகரங்களில் 12
நிகழ்ச்சிகளை நடத்தி 20,000 பேரை பங்கேற்க வழி
செய்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement