Advertisement

மிகப்பெரிய ஊழல்!

மஹாராஷ்டிராவில், முந்தைய, காங்., - தேசியவாத காங்., தலைமையிலான ஆட்சியில், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது; இதை, மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பொதுமக்களிடம் அம்பலப் படுத்துவோம்.

தேவேந்திர பட்னவிஸ், மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,

எங்களுக்கு பொருந்தாது!

இறைச்சிக்காக கால்நடை விற்பனைக்கு தடை விதித்து, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு, கோவா மாநிலத்துக்கு பொருந்தாது; ஏனெனில், கோவாவில் கால்நடை சந்தையே இல்லை; இருந்தாலும், மத்திய அரசு உத்தரவில், எங்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, கடிதம் எழுதுவோம்.

மனோகர் பரீக்கர், கோவா முதல்வர், பா.ஜ.,

பயங்கரவாதிகளுடன் கூட்டணி!

ஜம்மு - காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை நிகழ்வதற்கு, முதல்வர் மெஹபூபா முப்தி தான் காரணம். பயங்கரவாத அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து, மாநிலத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார். ஆனால், வெளியில், தேசபக்தி வேஷம் போடுகிறார்.

நரேஷ் அகர்வால்,மூத்த தலைவர், சமாஜ்வாதி

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement