Advertisement

இந்தியா பரிதாப தோல்வி; ரசிகர்கள் சோகம்

ஓவல் : சாம்பியன்ஸ் டிராபி பைனல் இந்திய அணிக்கு மிக மோசமானதாக அமைந்தது. 'டாஸ்' வென்று தவறாக பவுலிங் தேர்வு செய்தது முதல் கடைசி வரை எதுவுமே சரியாக அமையவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறோம் என்ற நினைப்பே இல்லாமல் 'கத்துக்குட்டி' அணி போல மட்டமாக ஆடினர். கோஹ்லி, தோனி, யுவராஜ், ரோகித் சர்மா என அனைவருமே சொதப்பினர். பவுலர்களும் ஏமாற்ற, இந்தியாவின் கோப்பை கனவு தகர்ந்தது. ஜமான் சதம் கைகொடுக்க, 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

இங்கிலாந்தில் எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர்(மினி உலக கோப்பை) நடந்தது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி 'பவுலிங்' தேர்வு செய்து அதிர்ச்சி அளித்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் ருமான் ரயீசிற்கு பதில் முகமது ஆமிர் மீண்டும் இடம் பெற்றார்.

'சூப்பர்' துவக்கம் :பாகிஸ்தான் அணிக்கு பகர் ஜமான், அசார் அலி சேர்ந்து கலக்கல் துவக்கம் தந்தனர். 4 ரன்னில் கண்டம் தப்பிய ஜமான், அதற்கு பிறகு விஸ்வரூபம் எடுத்தார். மறுபக்கம் அசாரும் பட்டையை கிளப்ப, பாகிஸ்தான் அணி 9.2 ஓவரில் 50 ரன்களை கடந்தது.ஜடேஜா பந்தில் ஒரு ரன் எடுத்த அசார் அலி அரைசதம் எட்டினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜமானும் அரைசதம் கடந்தார். இவர்கள், இந்திய பந்துவீச்சை சிதறடிக்க, 'ஸ்கோர்' வேகமாக உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்த நிலையில் அசார் அலி(59) ஒருவழியாக ரன் அவுட்டாக, துாங்கி வழிந்த இந்திய ரசிகர்கள் லேசாக நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

ஜமான் சதம்:இதற்கு பின் ஜமான் ரன் மழை பொழிந்தார். ஜடேஜா, அஷ்வின் ஓவர்களில் பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்டார். அஷ்வின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி முதல் சதம் எட்டினார். பாண்ட்யா பந்தை துாக்கி அடித்த ஜமான்(114), ஜடேஜாவின் கலக்கல் 'கேட்ச்சில்' காலியாக, நிம்மதி பிறந்தது. அடுத்து பாபர் அஜாம் ரன் வேட்டையை தொடர்ந்தார். புவனேஷ்வர் 'வேகத்தில்' மாலிக்(12) அவுட்டானார். ஜாதவ் 'சுழலில்' பாபர்(46) சிக்கினார்.

கடைசி கட்டத்தில் ஹபீஸ், இமாத் வாசிம் சேர்ந்து விரைவாக ரன் சேர்த்தனர். நமது பவுலர்கள் தொடர்ந்து சொதப்ப, ரன் வேகத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஜாதவ் ஓவரில் ஹபீஸ், வாசிம் தலா ஒரு சிக்சர் அடித்தனர். புவனேஷ்வர் வீசிய கடைசி ஓவரில் ஹபீஸ் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 338 ரன்கள் குவித்தது. ஹபீஸ்(57), இமாத் வாசிம்(25) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆமிர் மிரட்டல்:கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு முகமது ஆமிர் 'வேட்டு' வைத்தார். சூதாட்ட சர்ச்சை, முதுகு பிடிப்பு போன்ற பிரச்னை களை கடந்த இவர் 'டாப்-ஆர்டரை' அப்படியே தகர்த்தார். இவர் 'வேகத்தில்' மிரட்ட, ரன் கணக்கை துவக்கும் முன், இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இவரது முதல் ஓவரில் ரோகித் சர்மா(0) அவுட்டானார். அடுத்த ஓவரில் இன்னொரு அதிர்ச்சி கொடுத்தார். மூன்றாவது பந்தில் கோஹ்லி கொடுத்த 'கேட்ச்சை' முதல் 'ஸ்லிப்பில்' நின்ற அசார் அலி கோட்டைவிட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கோஹ்லி வீணாக்கினார்.

அடுத்த பந்து, இவரது பேட்டில் பட்டு 'எட்ஜ்' ஆக 'பாய்ன்ட்' திசையில் நின்ற ஷதாப் கான் கச்சிதமாக பிடிக்க... ஆமிர் ஆர்ப்பரிக்க..கோஹ்லி(5) பெவிலியன் திரும்பினார். தவானும்(21), ஆமிரிடம் வீழ்ந்தார்.அடுத்து வந்தவர்களும் பொறுப்பற்ற 'ஷாட்' அடித்து வெறுப்பேற்றினர். ஷதாப் கான் வலையில் 'ரிவியு' முறையில் யுவராஜ்(22) சிக்கினார். ஹசன் அலி பந்தை வீணாக துாக்கி அடித்த தோனியும்(4) ஒதுங்கிக் கொள்ள, இந்தியா 13.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்து தத்தளித்தது. ஜாதவ்(9) ஏமாற்றினார்.

பாண்ட்யா ஆறுதல்:கடைசி கட்டத்தில் ஷதாப் கான் ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் அடித்த ஹர்திக் பாண்ட்யா, 32 பந்தில் அரைசதம் எட்டி ஆறுதல் அளித்தார். ஜமான் ஓவரிலும் இரண்டு சிக்சர் அடித்த இவர், 76 ரன்களுக்கு அவுட்டாக, இந்திய அணியின் கதை முடிந்தது. வீட்டிற்கு திரும்பும் அவசரத்தில் இருந்த ஜடேஜா(15) விரைவாக கிளம்பினார். அஷ்வின்(1), பும்ரா(1) நடையை கட்ட, இந்திய அணி 30.3 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.பாகிஸ்தான் சார்பில் முகமது ஆமிர், ஹசன் அலி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

அப்போ கங்குலி... இப்போ கோஹ்லிபைனல் போன்ற பதட்டமான போட்டிகளில் 'டாஸ்' வென்று 'பேட்' செய்வது தான் பாதுகாப்பானது. இதனை 2003ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த உலக கோப்பை பைனலில் அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி உணரவில்லை.' டாஸ்' வென்ற இவர், தவறாக 'பவுலிங்' தேர்வு செய்தார். இதனை பயன் படுத்திய பாண்டிங் சதம் அடிக்க, ஆஸ்திரேலியா 50 ஓவரில் 359/2 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 39.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, கோப்பையை கோட்டைவிட்டது. இதே போல நேற்று 'டாஸ்' வென்ற கோஹ்லி யும் தவறாக பவுலிங் தேர்வு செய்தார். இம்முறை ஜமான் சதம் அடிக்க, இந்தியாவின் கோப்பை கனவு தகர்ந்தது.

'நோ-பால்' பும்ரா:இந்திய அணிக்கு நேற்று 'வில்லனாக' மாறினார் பும்ரா. இவர், போட்டியின் 4வது ஓவரில் வீசிய பந்தை பகர் ஜமான் அடிக்க, அதை தோனி பிடிக்க, அவுட்டானார். ஆனால், 'ரீப்ளே'யில்' நோ-பால்' என தெரிய வர இந்திய ரசிகர்களின் இதயங்கள் நொறுங்கின. ஜமான் மீண்டும் களத்திற்கு திரும்பினார். அப்போது 4 ரன் எடுத்திருந்த இவர், கடைசியில் சதம் அடித்து இந்திய அணிக்கு தொல்லை தந்தார்.

பாடம் கற்றோம்:இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறுகையில்,''கோப்பை வென்ற பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள். எந்த அணியையும் வீழ்த்த முடியும் என நிரூபித்து காட்டியுள்ளனர். கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டனர். இத்தொடரில் எங்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இதனால், பைனலில் வீழ்ந்தாலும், முகத்தில் சிரிப்புடன் உள்ளேன். இந்த தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்,'' என்றார்.

மூன்றாவது முறை:சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக மூன்றாவது தோல்வியை பெற்றது. இதுவரை மோதிய 5 போட்டிகளில் பாகிஸ்தான் 3 (2004, 2009, 2017ல் பைனல்), இந்தியா 2ல் (2013, 2017ல் லீக் போட்டி) வென்றன.

ரூ. 14 கோடி பரிசு:சாம்பியன்ஸ் டிராபி பைனலில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு, கோப்பையுடன் ரூ. 14 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. தோல்வி அடைந்த இந்தியாவுக்கு ரூ. 7 கோடி பரிசு அளிக்கப்பட்டது.

இது சரியா ஜடேஜா:27வது ஓவரை ஹசன் அலி வீசினார். இதன் 3வது பந்தை அருகில் தட்டி விட்டு, ஒரு ரன்னுக்காக ஓடினார். பின், திடீரென நின்றார். அதற்குள், பாண்ட்யா ஓடி வர, இரு பேட்ஸ்மேன்களும் ஒரே முனையில் நின்றனர்.பந்தை பெற்ற ஹசன், 'பெயில்சை' தகர்க்க, பாண்ட்யா (76) பரிதாபமாக ரன்-அவுட்டானார். பவுண்டரி, சிக்சராக விளாசிய பாண்ட்யாவுக்கு வாய்ப்பு அளி்த்து, ஜடேஜா 'பெவிலியன்' திரும்பி இருக்கலாம். அப்படி செய்திருந்தால், இந்தியாவின் தோல்வி வித்தியாசமும் சற்று குறைந்திருக்கும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (110)

 • krishna - cbe,இந்தியா

  ரசிகர்களை ஏமாற்றி பிழைக்கும் இது போன்ற விளையாட்டுகளை, ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  கோச்சு ஹெட்மாஸ்டர் போல செயல்படுகிறார் என சொல்லி கோச்சுக்கு மதிப்பு கொடுக்காத 11 பன்னாடைகள் வண்டவாளம் தண்டவாளம் ஏறி இருக்கிறது..இது இந்திய அணியே இல்லை,அப்பிச்சி என்னும் பிரைவேட் கிளப்பின் அணி,,எனவே இந்தியா தோல்வி என்பதே தவறு .. இந்த பன்னாடைகள் இந்திய அணியும் கிடையாது,இந்த டீமுக்கு இந்திய அரசின் அங்கீகாரமும் கிடையாது..

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  பாக்கி அணி தம்மாத்துண்டு அணி. இதனையே வெல்ல முடியாதது கேவலம். இந்திய தற்போதைய அணியில், திறமையானவர்களுக்கு பிரதிநித்துவம் இல்லை. கும்பிளே -அஸ்வின் ஒரு அணி.்கோலி - யுவி ஒரு அணி. டோனி - ஜடேஜா ஒரு அணி. ரோகித் - பாண்டியா ஒரு அணி. இப்படி அதிமுக மாதிரி பல அணிகள் உள்ளன. கிரிக்கட் ஒரு சோம்பேறி விளையாட்டு. இதற்க்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை. ஒலிம்பிக்கில் ஒரு தங்க பதக்கம் வாங்க கூட திராணியற்ற இந்தியா, கிரிக்கெட்டை மட்டும் வென்று கிழிக்காமல் இருப்பதே உத்தமம். அன்றய போட்டியில் பாக்கி தோற்றவுடன் TV யை போட்டு உடைத்தார்கள். அதேபோல நேற்றும் வடஇந்திய மக்கள் நேற்று செய்துள்ளனர். பாக்கிகளும் வடஇந்தியர்களும் ஒரே மைண்ட் செட் உள்ளவர்கள், புத்தியில்லாதவர்கள் என்று இது பறைசாற்றுகிறது. ஆனால் தென்னிந்தியாவில் இதுபோன்ற சம்பவம் இல்லை. கிரிக்கெட்டை விட்டுவிட்டு, மற்ற விளையாட்டுகளில் இம்தியாவின் கவனம் திரும்பினால் தான், கோலி போன்றவர்களின் திமிர் மட்டும் அல்ல, கிரிக்கெட் என்ற மட்டமான மட்டை விளையாட்டினால் நமது இளைஞர்களின் கவனம் திசை மாறி உருப்படாமல் போவது குறையும்....

 • நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ

  'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி 'பவுலிங்' தேர்வு செய்து அதிர்ச்சி அளித்தார். 20000 கோடிக்கு இந்தியா அணி ஜெயிக்கும் என்று சூதாட்டம் மேட்ச் பிக்சிங் பண்ணின பிறகு எப்படி அதிர்ச்சி கொடுக்காமல் இருப்பான். பவுண்டரி, சிக்சராக விளாசிய பாண்ட்யாவுக்கு வாய்ப்பு அளி்த்து, ஜடேஜா 'பெவிலியன்' திரும்பி இருக்கலாம். 20000 கோடிக்கு இந்தியா அணி ஜெயிக்கும் என்று சூதாட்டம் மேட்ச் பிக்சிங் பண்ணின பிறகு எப்படி 'பெவிலியன்' திரும்புவான். நாம் தாம் நம் நாடு ஜெயிக்கும் என்று ரொம்ப ஆசைப்படுகிறோம். இவர்களோ கோடி கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு மேட்ச் பிக்சிங் பண்ணி கொண்டு வேண்டும் என்றே தோற்கிறார்கள். நமக்கு டென்ஷன் கொடுக்கிறார்கள். பேசாமல் கிரிக்கெட் பார்க்காமலும், இந்தியா ஜெயிச்சா என்று கேட்க்காமல் இருப்பதும்தான் நமக்கு நல்லது.

 • krishna - cbe,இந்தியா

  மேட்ச் பிக்சிங்

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக உலகத்திலேயே சிறந்த அணியாக விளங்குது .. இந்த ஒரு போட்டிக்காக வருத்தபட தேவை இல்லை .. எப்போதுமே வெற்றி பெற்று கொண்டு இருக்க முடியாது .. பாகிஸ்தான் ஒரு மிக மோசமான பேட்டிங் அணி .. நேற்று இவளவு ரன் அடித்தது தான் ஆச்சரியம் .. அமீரின் பௌலிங் அற்புதம் .. பெரிய இலக்கு இறந்தவுடன் பௌலர்கள் பயமில்லாமல் தைரியத்துடன் வீசினார்கள் .. நம் ஆட்கள் ஒரு 10 ஓவர் சுதாரித்து இருந்தால் பின்னர் அடித்து இருப்பார்கள் .. எப்போவுமே அடுத்த முறை இருக்கிறது .. துவண்டு விட தேவை இல்லை ..

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  தோற்றது வருத்தம்தான்.. இந்த அணிக்கு இந்த தோல்வி தேவைதான். அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே அவர்களை அவமதிக்கும் செயலை செய்த இந்த அணிக்கு, குறிப்பாக இந்த அணியின் காப்டெனுக்கு இந்த தோல்வி, அதுவும் சுளுக்கு எடுக்கும் வகையிலான தோல்வி தேவைதான்...

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

   ஆம்மாமாம், கும்பிளே , அஸ்வின், சாஸ்திரி, எல்லாம் ஒரு கோஷ்டி... இப்படி கோஷ்டி சேருவதால் தான் கப்பு வாங்கியுள்ளார்...

 • Veeraiyah[Modi Piriyan] - KUALA LUMPUR,மலேஷியா

  வாய் கிழிய பேசுவதிலும், ஊழல் செய்வதிலும் நாம் வல்லவர்கள். மற்றபடி எல்லாம் கனவுதான். ஒருவர் 5 ஆண்டுகள் குடியரசு தலைவராக இருந்து 5 வருடத்தில் இரண்டு கருணை மனுவைதான் பரிசீலனை செய்தாராம். மல்லாக்க படுத்துகிட்டு கனவு காணுங்க.

 • Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  தாய் நாட்டிற்காக விளையாடாத காசுக்காக விளையாடும் கபோதிகள். இவனால்தான் நாட்டின் மானம் போகிறது.

 • Kailash - Chennai,இந்தியா

  இது போன்ற சூதாட்ட நிகழ்ச்சியை பார்ப்பதில்லை. ஆனால் நேற்று ஒரு உறுத்தல் 2000 கோடி பெட்டிங் நடந்தது அதனால் இந்தியாவின் பேட்டிங் சரியில்லை. பாக் மற்றும் மற்ற நாடுகளை முன்பு 150 - 200 ரன்களில் மொத்தமாக சுருட்டிய நிகழ்வை பார்த்துள்ளோம். ஆனால் பாக் 350 ரன்களுக்கு மேல் கொண்டு வந்த போதே இது சரியில்லை என்று தெரிந்தது கார்பொரேட் வீரர்கள் (இந்தியா நாட்டு வீரர்கள் கபில் தேவ், காவஸ்கரோடு முடிந்தது) சூதாட்டத்தில் 2000 கோடி லாபம் பெற வீரர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இதுபோல சூதாட்ட விளையாட்டை மக்கள் தவிர்க்கவேண்டும்.

 • Indian - Vellore,இந்தியா

  ஆணவத்துக்கு கிடைத்த தோல்வி

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  நான் ஒரு ராசி இல்ல ராஜா என்கிற பாட்டு தான் நினைவுக்கு வருகிறது

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கிரிக்கெட்டை விளையாட்டை பாருங்கள் வெற்றி தோல்வி யாருக்கும் நிரந்தரம் இல்லை மாபியாக்கள் இதை ஒரு சூதாட்டமாக வைத்து நன்கு கொள்ளை அடிக்கிறார்கள்

 • dselva -

  பெட்டி வாங்கிட்டாங்களா! அப்புறம் ஏப்படி செயிப்பாங்க

 • chockalingam - Thenmappathu Thirupputhur,இந்தியா

  20000 கோடிக்கு இந்தியா தோல்வி சூதாட்டம்வென்றது

 • K.Baskar - Tiruvallur,இந்தியா

  இந்தியா அணிக்கு இந்த தோல்வி தேவைதான். ஆரம்பம் முதல் கடைசி வரை சொதப்பல். எப்போதும் எதிர் அணியை குறைவாக நினைக்க கூடாது.

 • Idithangi - SIngapore,சிங்கப்பூர்

  மக்களே இந்தியா நேற்று ஜெயித்து இருந்தால் இந்தியா தான் ஜெயிக்கும் என்று பெட் கட்டியவர்களுக்கு யார் பணம் கொடுப்பது..? போட்டியை விட்டு வெளியே சென்று இருக்க கூடிய பாக் அணியை யாரும் எதிர் பார்க்காவண்ணம் பைனலுக்கு அழைத்து வந்து இந்திய பாக் மேட்ச் வைத்து நன்றாக கலெக்ஷ்ன அள்ளி ஏற்கனவே இந்தியாவிடம் தோற்ற பாக் கண்டிப்பா ஜெயிக்காது என்று ஒரு புய்ல்டு அப் செய்து பல பேர் இந்தியா தான் ஜெயிக்கும் என்று பணம் கட்டி இருப்பார்கள். அவ்வளவு பேருக்கும் பணம் கொடுக்க முடியுமா..?

  • Rojapazham Chandran - Chennai,இந்தியா

   உண்மைதான் நண்பரே டாஸ் வென்று fielding தேர்வு செய்யும்போதே தெரிந்து விட்டது. தோற்பதற்காக விளையாட முடிவு செய்து விட்டார்கள் என்று. அதே போல் எல். பி. டபிள் யூ. ரெவியூ அப்பீல் பண்ணாமல் விட்டதும் உறுதி ஆகி விட்டது. 2000 கோடி சூதாட்ட பணத்தில் அடலீஸ்ட் நூறு கோடி இவர்களுக்கு தந்தால் போதுமே.

  • Stalin - Kovilpatti,இந்தியா

   மிகச் சரியாக சொன்னிங்க

 • sundaram - Kuwait,குவைத்

  20000 கோடிக்கு இந்தியா அணி ஜெயிக்கும் என்று சூதாட்டம் நடக்கும்போதே என் மனதுள் உறுத்தியது. இந்தியா அணி தோற்றால் சூதாட்டம் நடத்தியவருக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று. அதுதான் நடந்தது.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம், வெற்றி அடையும்போது தலைக்கனம் பிடித்து ஆடவும் வேண்டியதில்லை, தோல்வி அடையும்போது துவண்டு போவதும் வேண்டியதில்லை, விளையாட்டை விளையாட்டாக நினைக்க நமது மக்களுக்கு ஞானம் வரவில்லை

  • K.Sugavanam - Salem,இந்தியா

   இது விளையாட்டல்ல. சூதாட்டம்..விளையாட்டை கவனித்தவர்களுக்கு புரியும்.. இனியும் இந்த விளையாட்டை பார்க்க நேரத்தையும்,பணத்தையும் வீணாக்காதீர்கள்.

 • முக்கண் மைந்தன் - Seodaemun, Seoul,தென் கொரியா

  Makizhchchi......

  • Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ

   இந்திய தோற்றதற்கு, வெறி பிடித்த இந்திய ரசிகர்களும், அவர்களுக்கு ஆதரவாக அவர்களை திருப்தி படுத்த முடிவெடுக்கும் BCCI தான்.. ஏன் என்றால் - இப்போது இருக்கும் நிலையில், தோணிக்கும், யுவராஜுக்கும் நிச்சயமாக, டீமில், இடம் கிடையாது. ஆனால், வெறி பிடித்த ரசிகர்களுக்காக, அவர்கள் இருவரையும் சேர்த்து, இந்தியா தோற்க, அவர்கள் முழு காரணம் ஆகி விட்டார்கள். இன்னும் எவ்வளவு காலம்தான் தங்கள் ஹீரோக்களை ரசிகர்கள் ஆதரிப்பார்கள். இவர்கள் இருவரும், 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு முன்பே ஒய்வு எடுத்திருக்க வேண்டும். இதையேதான் ரசிகர்கள் டெண்டுல்கருக்கு செய்து, அவர் தன் நூறாவது சதத்திற்க்காக, 3 வருடம் அதிகமாக டீமில் இருந்து, பெயரை கெடுத்து கொண்டார். இந்தியாவில் நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள். இந்த பெரிய தலைகள், இடத்தை விட்டு கொடுக்காமல். BCCI யை மிரட்டி கொண்டு, இந்தியாவையும் தோற்க்கடித்தது, கிரிக்கெட்டை குட்டி சுவராக்கி விடுகிறார்கள். .நேற்றைய மேட்சில் கூட, யுவராஜுக்கும், தோணிக்கும் பதிலாக, ரஹானேவும், தினேஷ் கார்த்திக்கும் விளையாடி இருக்க வேண்டும். ஏற்கனவே, அமீர், 3 அருமையான பந்துகளை வீசி, முதல் மூணு பெரிய தலைகளை அவுட் ஆக்கி விட்டிருந்தார். பிறகு வந்த டோனி, யுவராஜ் பேட்டிங் செய்யும் பொது, சாதாரண பாகிஸ்தான் பௌலரிடம் திணறுவதை பார்க்கும் பொது, கேவலமாக இருந்தது. இனியாவது, BCCI பெரிய ஸ்டார் கிரிக்கெட் வீரர்களை அவர்கள் பெயருக்காக விளையாடாமல், இந்தியாவுக்காக, உயிரை கொடுத்து விளையாட, காத்திருக்கும், இளம் வீரர்களுக்கு சான்ஸ் கொடுக்க வேண்டும்.

 • Venkat - Chennai,இந்தியா

  டாசில் ஜெயித்த பிறகு, எப்போதுமே பைனல் மாட்ச் என்றால் பாட்டிங் செய்வதுதான் புத்திசாலி தனம். டாஸ் ஜெயித்திரா விட்டால் வேறு விஷயம். இந்தியா முதலில் பேட் செய்து இருந்தால், முன்பு பெற்ற வெற்றியின் சந்தோசத்தோடு டென்ஷன் இல்லாமல் பிரீயாக விளையாடி இருக்கலாம். முதலில் பேட் செய்து 150 எடுத்திருந்தால் கூட பாகிஸ்தான் 151 எடுத்திருக்கும். பாகிஸ்தானை முதலில் விட்டதால் அவர்கள் எடுத்த ரெக்கார்டு ஸ்கோரை பார்த்து டென்க்ஷனிலேயே பயந்து விளையாடி தோற்று விட்டார்கள். இதே மாதிரி தான் முன்பு ஒரு முறை உலக கோப்பை போட்டி பைனலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய சொல்லி அவர்கள் 425 எடுத்து விட்டார்கள். அதை பார்த்து மலைத்த இந்தியா 150ல் சுருண்டது. அதே தப்பைத்தான் இப்போதும் செய்து தோற்று இருக்கிறார்கள்.

  • P. SIV GOWRI - Chennai,இந்தியா

   வேண்டும் என்று தான் இந்த தவறை செய்தார்கள்.

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  துட்டு துட்டு மனி மணி...என்றுதான் சொல்லத்தோன்றுகிறது....கிரிக்கெட் சூதாட்டத்தில் கைமாறிய தொகை இரண்டாயிரம் கோடியாம்.....இந்தியா ஜெயிச்சா நூறு ரூபாய்க்கு நூத்தி நாப்பத்தெழு ரூபாயாம்.....பாக் ஜெயித்தால் முன்னூறாம்....பெட் கட்டறவனுங்க ஏமாற்றத்துக்கு ப்ரோகேருங்க என்ன வேணா செய்வானுங்களாம்...இப்ப கணக்கு போட்டு பாருங்க மக்க....ஜெயிக்கிறது லாபமா....தோக்கறது லாபமா?

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  விளையாட்டில் வெற்றி,தோல்வி சகஜமானது.ஆனால் இந்தியாவின் மிக மோசமான தோல்வி மன்னிக்க முடியாதது.கடைசி 20 -ஓவர்களை ஆடக்கூட இந்திய கிரிக்கெட்டில் ஆள் இல்லை என்பது நம்பும்படியாக இல்லை. இதெற்கெல்லாம் காரணம் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் சூத்தாட்டமே இந்திய கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டக்காரர்களின் வஞ்சக பண ஆசையில் விழுவது அசிங்கம்.ஒவ்வொரு பந்துக்கும் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.இந்தியா 250 -280 ரன் எடுத்து தோற்றிருந்தால் ரசிகர்கள் இவ்வளவு கொதித்திருக்க மாட்டார்கள்.ஒரு சாதாரண இந்தியனிடம் உள்ள நாட்டுப் பற்று இந்திய ,பணமுதலைகளிடம் இல்லாதது வருந்த தக்கது.

 • Mja Mayiladuthurai - chennai,இந்தியா

  இது கொஞ்சம் அதிமான சொதப்பல்தான் ..கிரிக்கெட்டை விட்டு பொழப்பைப்பார்க்கவேண்டும் இளைஞர்கள்... கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் ஒருநாள். அன்று இந்தியா கால்பந்தில் உலகத்தை மிரட்டும் ...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தோல்விதான் இமாலய வெற்றிக்கு அடித்தளம்...

  • Raman - kottambatti,இந்தியா

   அதுவே பாகிஸ்தான் என்றால்? இதுவே இந்திய வெற்றி பெற்றிருந்தால்?

  • P. SIV GOWRI - Chennai,இந்தியா

   இது வேண்டும் என்றே தோற்றது தான். இந்தியா வெற்றியை வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அடகு வைத்து உள்ளது

  • K.Sugavanam - Salem,இந்தியா

   தோல்விகள் இமாலய "வரவுக்கு" வாடிவாசல்..

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  பபுளிங் னு செலக்ட் ஆனாதுமே தெரியும் தோல்வி நிஷச்சாயம் என்று வென்றவனுக்கும் துட்டு தோற்றவனுக்கும் துட்டு பேக்குபோல ப்பாத்த அசத்துக்களுக்கே நஷ்டம்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  திறமைக்குப் பரிசு நியாயம் பாகிஸ்தான் கேப்டன் மேச் ஃபிக்சிங்கில் திறமையைக் காட்டிவிட்டார்

  • தலைவா - chennai,இந்தியா

   தேச நேசன் இது சாதாரண விளையாட்டு இதற்கும் தேசபக்திக்கும் சம்பந்தம் இல்லை ...இதே நாள் ஹாக்கியில் நாம் வென்றுள்ளோம் நீங்கள் உண்மையாக விளையாட்டையும் கிரிக்கெட்டையும் நேசிப்பவர் எனில் இப்போது ரசிகனாக இந்திய அணிக்கு நமது ஆதரவு தேவை வென்ற போது நமது அணி என்று ஆர்ப்பரிக்கும் நாம் தோல்வியையும் ஏற்று கொள்ள வேண்டும்...பாகிஸ்தான் ஜெயித்ததை ஜீரணிக்க முடியாமல் சூதாட்டம் என்பது சரியா? அப்போது லீக் போட்டியில் நாம் ஜெயித்தோமே அதுவும் சூதாட்டம் என்கிறீரா? இந்திய அணியினர் செல்வத்தில் யாதொரு குறையுமின்றி உள்ளனர் அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட வாய்ப்பே இல்லை...பாகிஸ்தான் அணியினர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இருந்தால் அதில் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை. கோஹ்லி சொன்னது போல சிறப்பாக விளையாடினால் எந்த அணியினரும் யாரை வேண்டும் என்றாலும் வீழ்த்த முடியும். இது விளையாட்டு அவ்வளவுதான் இது ராணுவ சண்டை அல்ல.

  • Hafees Ali - SUVA,பிஜி

   அட முட்டா பயலே...காசு வாங்கிகிட்டு தோக்கமுடியும், ஆனால் காசு வாங்கிகிட்டு ஜெயிக்கமுடியுமா அறிவாளியே?

  • P. SIV GOWRI - Chennai,இந்தியா

   இந்த மாதிரி ஒரு வெற்றி வேண்டுமா.

  • K.Sugavanam - Salem,இந்தியா

   ஆனால் நடந்தது வேறுவிதமாக இருக்கிறதே..

  • Krishna - Trichy,இந்தியா

   வென்ற போது நமது அணி என்று ஆர்ப்பரிக்கும் நாம் தோல்வியையும் ஏற்று கொள்ள வேண்டும்...பாகிஸ்தான் ஜெயித்ததை ஜீரணிக்க முடியாமல் சூதாட்டம் என்பது சரியா? அப்போது லீக் போட்டியில் நாம் ஜெயித்தோமே அதுவும் சூதாட்டம் என்கிறீரா? இது EVM இற்கும் பொருந்துமா தோழரே

  • தலைவா - chennai,இந்தியா

   EVM இல் இன்னும் எனக்கு புரியாத விஷயம் ஒன்றே ஒன்றுதான் அன்பரே? அது என்ன என்றால் எப்போது இயந்திர கோளாறு ஏற்பட்டாலும் ஆளும்கட்சிக்கு மட்டுமே வாக்குகள் விழுவது மாதிரி கோளாறு ஆகிறதே அது எப்படி என்பதுதான். இது மற்ற கட்சிகளின் ஆட்சியின் போதும் நடந்து இருக்கிறது.

 • spr - chennai,இந்தியா

  இன்று காலை நடைப்பயிற்சி செய்யும் பொழுது ரசிகர்களின் கோபத்தை உணர முடிந்தது இந்தக் கோபம் நம் அரசியல்வியாதிகளிடமும் காட்டப்பட்டால், சட்ட,மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட பணியினைச் சிறப்பாகச் செய்யவில்லை என்றால் மக்களின் கோபத்திற்கு ஆளாவோம் என்றறிந்தால், நம் நாடு என்றோ வல்லரசாகியிருக்கும் மக்கள் இன்னமும் உணரவில்லை கிரிக்கெட் ஒரு விளையாட்டு அதில் வெற்றி தோல்வி இயல்பு அது ஒரு சூதாட்டமாகவே நடத்தப்பட்டாலும் அதில் உண்டாகும் தோல்வியைக் குறித்த இந்தக் கோபம் தேவையில்லை இனியாவது இந்தியா ஒலிம்பிக் போன்ற உலகம் முழுதும் பிரசித்தி பெற்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

  • Ram Kumar - Bangalore,இந்தியா

   100 % தங்கள் கருத்து சரியானது. கிரிக்கெட் இல் தோற்றால் வரும் கோபம், இத்தனை நாள் மக்களை ஏமாற்றி பல்லாயிர கணக்கான கோடி சம்பாதித்து வைத்து இருக்கும் அரசியல்வாதிகளை பார்த்து வரவில்லை என்பதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. என்றைக்கு நாம் நல்லது கெட்டதை யோசனை செய்து, தப்பை எதிர்த்து கேட்க ஆரம்பிக்கிறோமோ அன்று முதல் நம்முடைய, இந்தியாவின் வளர்ச்சியை யாரும் நிறுத்த முடியாது.

  • K.Sugavanam - Salem,இந்தியா

   வாயால் வடை சுடுவார்கள் காணாமல் போவார்கள்..

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  உலகமெங்கும் விலை போகாத கிரிக்கெட் இந்தியாவில் மட்டுமே விலைபோகிறது. இந்தியா இல்லையென்றால் கிரிகெட் இல்லை. இந்திய கிரிகெட் வாரியத்தின் பணம் தான் எல்லா கிரிக்கெட் ஆடும் நாடுகளில் பாய்கிறது. கிரிக்கெட் ஒரு பொழுது போகாத சோம்பேறிகள் ஆட்டம். கால்பந்து உலகத்தில 203 நாடுகளில் ஆடப்படுகிறது. கிரிக்கெட் வெறும் ஆறு நாடுகளில் மட்டுமே. இன்று கிரிக்கெட் வெறும் சூதாட்டத்துக்காக மட்டுமே பயன்பட்டு வருகின்றது. இந்தியாவில் கிரிக்கெட் ஒழிவது நல்லது.

 • shanan -

  results for 6000 betting

 • Realman -

  Is cricket much important today. If we not seen cricket what is the issue. many daily issues are in life please media concentrate on this

 • thamilan - chennai,இந்தியா

  ரொம்ப மோசம், காசு பணம் அதிகம் சம்பாதிக்கும் இடமாக மாறிவிட்டதே இந்தியன் கிரிக்கெட். பிறகு எப்படி ஜெயிப்பார்கள். எதிரி அணி இடம் தோற்றபிறகும் கேப்டன் முகத்தில் எப்படி மகிழ்ச்சி வரும். மேட்ச் பார்த்த நமக்கு வேதனையா இருக்கே. மேட்ச் விளையாடியவர்கள் படு மோசம்மாக செயல் பட்டனர். இதுவே பாக்கிஸ்தான்ஆகா இருந்தால் இந்தமாதிரி வெளயாடியவர்களை கொண்டாட மாட்டார்கள். அனால் நாம் இந்த மாதிரி மொக்க பிழையெர்ஸ்கலை அதிகம் சம்பளம் கொடுத்தே கெடுத்துட்டோம். இதுல ஐ பி ல் மேட்ச் வேற சம்பாதிக்க வருஷ வருஷம் தவறாம நடத்துறாங்க. இனிமேல் திருந்துங்க வெளயாடுறவங்களுக்கு எதுக்கே இவளோ சம்பளம். இந்த பணம் எல்லாத்தையும் நதி நீர் இணைப்புகு பயன் படுத்துய்ங்க விவசாயம் செழிக்கும் எல்ல மக்களுக்கும் குறைந்த பணத்தில் நிறைவான உணவு கிடைக்கும்.

 • Mannathil Muralidharan - Singapore,சிங்கப்பூர்

  Change captain. Pandya to lead India. Ashwin and Jadeja to be sacked. Find better bowler than bumrah. Enough this change I think.

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  Over Confidence leads to accidents. அனுபவம் இல்லாத அணி என்று நினைத்து விளையாடி இருக்கிறார்கள் நமது ஆட்கள். என்ன கேட்டா நம்ம அணிக்கு இதெல்லாம் ஒரு பாடம்

 • JohnsonHenry -

  BEST SOLUTION WE HAVE TO BAN IPL

 • Rohini karthik - Chennai,இந்தியா

  Till last stage(finals)we should be patient,sincere and also should take good decision which not only beneficial for captain..its for our team,people and the country..should not be over confidence and be careless...decision making plays the lead role here,my opinion is we actually lost the winning match...im sorry if my opinion hurts anybody.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  யாகம் செய்தால் எல்லாம் வெற்றியா? கல்வியும், விளையாட்டும் முயட்சியின் பலன், இயற்கயின் சீற்றத்தை தணிக்க தான் யாகங்கள்.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  எங்கே அந்த இந்திய கோச், பாக். அலறுதுன்னு சொன்னார். இப்படியா அவரின் கோச்சிங்.

 • Hari Sankar Sharma - Chennai,இந்தியா

  சோகம் இல்லை....கோபத்தில் ரசிகர்கள்.... என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.... ஏற்றுக்கொள்ளலாம்.....தோல்வியிலும் வெற்றி கண்டிருக்கும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் வருமானம் அதிகமானால் வெற்றி என்று அர்த்தம் தானே

  • K.Sugavanam - Salem,இந்தியா

   ஆனால் விளையாடிய BCCI டீமுக்கு அந்த உணர்ச்சியெல்லாம் காணோமே..

 • Arivu Nambi - madurai,இந்தியா

  மேக் இன் இந்தியா .இதுதாண்டா ஸ்வச் பாரத்.6000 கோடி பெட் ,சும்மாவா.

 • Aarkay - Pondy,இந்தியா

  லூசு பசங்களோட நீங்க? எல்லாமே ஓவர் ஜெயித்தால், தலைக்கு மேலே வெச்சி கொண்டாடுவீங்க... தோற்றால், கல்லால் அடிப்பீங்க .... வெற்றியும், தோல்வியும், விளையாட்டில் சகஜம். 1983 உலகக்கோப்பைக்கு முன்னே, இந்தியா ஜெயித்ததே அத்தி பூத்தாற்போலத்தான். அங்கிருந்து, இன்று முன்னணி அணியாக உருவெடுத்ததற்கு, பெருமைப்பட வேண்டும். 8 அணிகள் பங்கேற்ற போட்டியில், இரண்டாம் அணியாக வந்ததே, ஒரு சாதனைதான். A.C. அறையில் காலை நீட்டி ஹாயாக அமர்ந்துகொண்டு, மேதாவி போல கமெண்ட் அடிப்பது சுலபம். இறங்கி, 145kmph வேகத்தில் வரும் பந்தை எதிர்கொண்டு பாருங்கள். Bullet வேகத்தில் எல்லைக்கோட்டை நோக்கி செல்லும் பந்தை, அதைவிட வேகமாய் ஓடி துரத்திப்பாருங்கள். அப்போது புரியும் எவ்வளவு கஷ்டமென்று. கால்பந்து போலவோ, ஹாக்கி போலவோ, ஒன்றரை மணி நேரத்தில் முடியும் ஆட்டமில்லை இது. நாள் முழுக்க வெயிலில் வேக வேண்டும், ஓட வேண்டும், பந்தை சரியாக இலக்கு நோக்கி வீசி எறிய வேண்டும். கண், கை, கால், தோள்பட்டை, knees, ankles என எல்லாவற்றிற்கும் வேலை. உடல் தகுதி பேணவேண்டும். நினைத்ததை சாப்பிட முடியாது. உல்லாசமாய் இருக்க முடியாது. விசேஷங்களுக்கு செல்ல முடியாது. நினைத்தபோது, விடுப்பு எடுக்க முடியாது. பின்னாலேயே, துரத்தும் competition. கொஞ்சம் அசந்தால், அணியில் இடம் பறிபோய் விடும். ஒருமுறை இடத்தை இழந்தால், மீண்டும் பிடிக்க ஆண்டுகளாகும். 130 கோடி மக்களில், 11 பேருக்கு மட்டுமே, அணியில் இடம். நம் அணி மட்டுமே எப்பவும் best ஆக இருப்பது எப்படி சாத்தியம்? மற்ற அணிகளும் முதலிடத்தை பிடிக்க முயற்சி செய்து கொண்டுதானே இருப்பார்கள்? ஒரு off day நமக்கு வரக்கூடாதா? நாமென்ன கடவுளா? அவர்களா கேட்டார்கள் உங்களை கடவுள் ஸ்தானத்தில் வைத்து பூஜை செய்யுங்கள் என்று? அஸ்வின் வேஸ்ட் கோஹ்லி தண்டம் என விமர்சனங்கள்... அஷ்வினுடைய ஒரு பந்தை, நம்மால் எதிர்கொள்ள முடியுமா? (அல்லது) கோஹ்லிக்குத்தான் ஒரு மெய்டன் ஓவர் போட இயலுமா?? கேட்டால், தேசப்பற்றாம் நாம் பணிபுரியும் துறையில் என்ன சாதித்தோம்? நாம் தேசத்தை முன்னுக்கு கொண்டு செல்ல? அஸ்வின், கோஹ்லி சம்பளம் கொடுத்தால் மட்டும், நாம் கிழித்துவிடப்போகிறோமா நம் துறையில்? வெற்றி தோல்விகளை சகஜமாய் ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்வோம் அன்றைய தினம் நன்றாய் ஆடிய அணியை, மனதார, பெருந்தன்மையுடன், பாராட்ட கற்றுக்கொள்வோம் அரசாங்கங்கள், சண்டையிட்டுக்கொள்ளட்டும். நாம், நட்பை விதைப்போம் மைதானங்களை போர்க்களங்களாக எண்ணாமல், விளையாட்டை, விளையாட்டாய் மட்டுமே பார்ப்போம்

  • V.MURALIDHARAN - udumalaipettai,இந்தியா

   ஹலோ பேட்டிங் FIRST செய்யாதது, ஜடேஜா வெளியே போகாதது, நோ பால் விக்கெட், FIRST TEN ஓவெர்ஸ் விக்கெட் இழக்காமல் பேட்டிங் , யௌவராஜ் கேட்ச் மிஸ் , ரன் அவுட் மிஸ் இது எல்லாம் தப்பு இல்லையா?

 • nambi kuwait - fahaheel,குவைத்

  worst

 • Murthy - Bangalore,இந்தியா

  120 கோடில தேர்வு செஞ்ச நல்ல ஆட்கள் கிடைப்பார்.. இங்கு 12 கோடில தேர்வு செஞ்சா எப்படி நல்ல ஆட்கள் கிடைப்பார்.

 • Nambikkai - Kent,யுனைடெட் கிங்டம்

  மட்டமான தோல்வி LEG BEFORE விக்கெட் இழப்பு ஏற்றுக்கொள்ளமுடியாது .அப்ப இன்னும் நாம் ஆரம்ப ஸ்டேஜியில்தான் இருக்கின்றோம் .ட்ரைனிங் போதாது .அசிங்கம்

 • Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா

  ஒரு தடவையாவது தோற்றால்தான் நம்ம ஆட்களுக்கு புத்தி வரும். என்னைக்கு இந்த கிரிக்கெட் போல இருக்கிற பைத்தியம் ஒழியுதோ அன்னக்கிக்கு கொஞ்சமாவது நம்ம இந்தியா விளங்கும்.

 • Global Citizen - Globe,இந்தியா

  கிரிக்கெட் என்கிற மாயை/தொழில் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதுவதை தவிர்த்துவிட்டு மீத்தேன் விஷயத்தில் கதிராமங்கலத்தில் உண்மையில் நடப்பதை மக்களுக்கு தெரிவிக்கவும்

 • ber - tuticori,இந்தியா

  வெற்றி தோல்வி வீரனுக்கு சகஜம் ஆனா கொவுரமா தோத்துருக்கலாம்

 • ber - tuticori,இந்தியா

  ஹர்திக் பாண்டியவை கேப்டன் ஆக்கவும் அவரும் விலை போகாமல் இருக்க வேண்டும்

 • Amanullah - Riyadh,சவுதி அரேபியா

  கிரிக்கெட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான்... இருப்பினும் நம் வீரர்கள் இறுதிப்போட்டிவரை இறுமாப்புடன் ஜெயித்து (லீக் மேட்சில் நம்மிடம் 'செம மாத்து' வாங்கிய) பாகிஸ்தான் டீமிடம் தோற்றது ஜீரணிக்கமுடியவில்லை...

  • Raman - kottambatti,இந்தியா

   விளையாட்டை விளையாட்டை பார்க்க தெரியாதே ஜென்மங்கள் இருக்கும் வரை இப்படித்தான் நடக்கும்..

 • Bala - madurai,இந்தியா

  அடடா , இந்தியா மட்டும் ஜெயிச்சு இருந்தா, நாளைல இருந்து நம்ம தான் வல்லரசு வட போச்சே

  • தமிழன் - சென்னை,இந்தியா

   ஏழைகள் மூன்று வேளையும் உணவு கிடைத்து சிபிட்சமாக வாழ்ந்திருப்பர். பாலாறும் தேனாறும் ஓடி இருக்கும்.

 • Bala - madurai,இந்தியா

  இன்னும் நாம ஆளுங்க இங்க உக்கார்ந்து கமெண்ட் போட்டுகிட்டு இருக்கு, எல்லாம் முடிஞ்சு , கோலி அடுத்த "மேட்ச்" ஆட போய்ட்டான், போயி பொழப்ப பாருங்கப்பா

 • Ram Kumar - Bangalore,இந்தியா

  இந்தியா ஒலிம்பிக் போன்ற உலகம் முழுதும் பிரசித்தி பெற்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்காவும், சீனாவும் ஒலிம்பிக் இல் ஏகப்பட்ட பதக்கங்களை வென்கின்றன. நாமும் அதை போல் வர அரசு ஒத்துழைப்பும் உதவியும் செய்ய வேண்டும். கிரிக்கெட் க்கு கொடுக்கும் முக்கியத்தை நாம் குறைக்க வேண்டும். ஹாக்கி புட்பால் யும் பார்க்க ஆரம்பிக்கலாம்.

 • VOICE - CHENNAI,இந்தியா

  கிரிக்கெட் வீரர்களுக்கு கோடி கோடியா கொடுப்பதற்கு கரணம் சூதாட்டம் தான். டிக்கெட் விற்ற பணத்தால் இவர்களுக்கு கோடிகோடியாக பணம் கொடுக்க வாய்ப்பு இல்லை. கோழி சாரி Kohliகூ 100 கோடி MRF நிறுவனம் வழங்கியது அது போல இவரின் அறக்கட்டளை லண்டனில் சேர்ந்த பெண் ஒருவர் இவரின் வரைந்த படத்திற்கு 2 .5 கோடி கொடுத்து வாங்கினார். சூதாட்டம் வரும் திருட்டு பணத்தை எல்லாம் இப்படி தான் கிரிக்கெட் வீரர்களுக்கு போகிறது என்று பேசிக்கொள்கின்றனர். ஹாக்கி 7 - 1 என்று இந்தியா பாகிஸ்தானை வென்றது ஆனால் ஹாக்கி வீரர் பலர் வறுமையில் தான் வாழ்கின்றனர்

 • அப்பாவி -

  இந்தியா பைனலில் வருவது முக்கியம்...இந்தியாவில்தான் ஏராளமான ஸ்பான்சர்கள் இருக்கிறார்கள். அது மூலம் பணத்தை அள்ளிவிடலாம். பாகிஸ்தான் பைனலில் வருவது முக்கியம்...அதன் மூலம் இந்தியாவின் கிரிக்கெட் வெறியர்களை உசுப்பேத்தி, கொம்பு சீவி காசு பாக்கலாம். இந்தியா தோல்வியடைவது மூலம், கிரிக்கெட் பெட்டிங்கில் மொத்தமாக அள்ளிடலாம். இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், பணம்தான் வென்றது, வெல்கிறது, வெல்லும். போங்க, போய் கிரிக்கெட் விளம்பரத்தில் வந்த பொருள்களை வாங்குங்கள்... அங்கே கிரிக்கெட் பெருசுங்க பணத்தை செட்டில் பண்ணட்டும்... சும்மாவ சொன்னாரு அமித் ஷா கிரிக்கெட் ஆட்டம் இந்தியாவுக்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையேயான நேரடி போட்டி இல்லைன்னு? புரிஞ்சவங்களுக்கு புரிஞ்சிருக்கும்.

 • reni - salem,இந்தியா

  எந்த தந்தையும் மகனை வென்றதில்லை...

  • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

   கருத்து ஆழமானது அரசியலால் குடும்ப பிரச்னை. எதையாவது சொல்லி மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.

  • Raman - kottambatti,இந்தியா

   யாரு தந்தை யாரு மகன்???? தந்தை மகன் என்றால் அப்புறம் ஏண்டா அடிச்சிக்கிறீங்க ???? வெங்காயம்

 • ranaraja - Kl,மலேஷியா

  Match fixing easyaa solalaam.paper 2000 crore sudhu attam vanthuchu,Apove ind Puttuka poguthu teriyum,ipo Enake 75 Lakhs Profit aiii,I ll enjoy)-:

 • muhammedrabeek -

  நிஜம்(சூதாட்டம்)வென்றது நிழல்(ரசிகர்கள் வீரர்களின் மேல் வைத்திருந்த நம்பிக்கை)தோற்றது

 • PrasannaKrishnan -

  Sowhat?Getbacktourbusiness.

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  கும்ப்ளேவை குறை சொன்ன கோஹ்லி எங்கே போய் மூஞ்சியை வைத்து கொள்ள போகிறார்... பாக் முன்னாள் கேப்டன் ஆமீர் சொகைல் சொன்ன மாதிரி (அவர் பல்டி அடித்துவிட்டது வேற கதை..) சூதாட்டம் நடந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.....கிரிக்கெட் பார்ப்பது கிரிமினல் வேஸ்ட்....அதற்கு பதிலாக ஏதாவது பழைய படம் பார்க்கலாம்....

 • Suresh Babu - Kudanthai,இந்தியா

  ஒரு கேவலமான தலைமையின் கீழ் இன்றைய இந்திய கிரிக்கெட் டீம் உள்ளது. கோலி பல கோடிகளில் லாபம் பெற்று வெற்றியை விரட்டுக்கொடுத்துவிட்டான். நம் பரம எதிரி பக்கிகளின் முன் இந்தியாவின் மானத்தை அடகு வைத்துவிட்டான். இவ்வளவு கேவலமாக விளையாடமுடியுமா என்று சாதாரண மக்கள் இவர்கள் முகத்தில் காறித்துப்ப வேண்டும். விளம்பரம் மூலம் பல கோடிகளில் வருமானம் வருகிறது...அது போதாதென்றுதான் மேட்ச் பிக்ஸிங்கில் விட்டுக்கொடுத்துள்ளான். பல கோடிகள் புக்கிகள் மூலமாக வந்திருக்கவேண்டும். BCCI ஒரு நடுநிலையான விசாரணையை செய்து உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும். பலரது கருத்துகளுக்கு ஏற்ப கோலி எந்த டிராபியையும் இனிமேல் வெல்ல முடியாது என்பதுதான் உண்மை. அடிமுட்டாள்களின் விளையாட்டுதான் இன்று நடந்தது. கேவல பிறவிகள்.

 • CMPRABHAKARAN,COIMBATORE -

  Over confidence of players and decision of Kohli to bowl first has resulted in this tragic defeat. The humiliating defeat is a national shame for which the captain and all the players are responsible. They are enjoying life at the cost of others.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  இன்றைய ஆட்டத்தில் நன்றாக ஆடிய அணி வென்றது... இதில் சோகப்பட என்னய்யா இருக்கு???? ரொம்ப நாளைக்கு பிறகு பாகிஸ்தான் அணி வீரர்கள் தைரியமா போய் அவங்க நாட்டில் இறங்க போறாங்க.... அவுங்க நிழலில் ஒளிஞ்சுகிட்டு ஊர் போய் சேரப்போகும் பாகிஸ்தான் ஹாக்கி அணி நிலைத்தான் பாவம்.... எது எப்படியோ நம்மாளுங்க விளம்பர அஸைன்மென்டுக்கு போகப்போராங்க... வழக்கம்போல நாம்தான் நாளைய அலுவலுக நேரத்திலேயும் கவலைப்படனும்...

  • senthil - cbe,இந்தியா

   உண்மையன ஒன்று..

  • Krishna - Trichy,இந்தியா

   மொஹமட் அர்ஷத் ஜி, முற்றிலும் உண்மை.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  கற்பனை உலகில் வாழ்வதை விட, உண்மையினை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும், நம் எல்லோருக்கும். உதாரணம்: எப்போது கிரிக்கெட்டில், மாட்ச் பிக்சிங் என்ற தகவல் வந்ததோ, அதிலிருந்து நான் ஒரு 10 நிமிடம் கூட தொடர்ச்சியாக லைவ் கிரிக்கெட்டை பார்த்ததில்லை. அதற்கு முன்பு, கிரிக்கெட்டில் நான் தீவிர ரசிகன்தான், டிவி வரும் முன்னர் சிறிய ரேடியோ செட்டில் ஒரு நாள் முழுக்க கிரிக்கெட் வர்ணனையை கேட்பேன். நான் அதிகம் விரும்பிய பிளேயர்கள் வெங்சர்க்கார் மற்றும் அமர்நாத் எனலாம்.

  • senthil - cbe,இந்தியா

   முற்றிலும் உண்மை.

  • sivan - Palani,இந்தியா

   நானும் அப்படியே அசாருதீனின் பிராடுத்தனத்துடன் என் கிரிக்கட் ஈடுபாடு முடிந்தது. தேவையில்லாத முக்கியத்துவம் கொடுத்து அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்குகிறோம். .. தோனி மேல் இருந்த மரியாதை எனக்கு விராத் கோஹ்லி மீது இல்லை. அது எப்படி கவாஸ்கர் போல முதல் ஓவரிலேயே அவுட் ஆவார்?

  • Suresh Babu - Kudanthai,இந்தியா

   இந்த கோப்பையும் பல கோடிகளுக்கு விலை பேசப்பட்டு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பீல்டிங், பேட்டிங், பௌலிங் என்று எதிலும் சரியாக விளையாடாத கேவலங்கள் நம் டீமில் உள்ளவர்கள். விளம்பர வருமானம் கணக்கில்லாமல் வருகிறது...இருந்தும் பண ஆசையில் கேவலமாக பக்கிகளிடம் காலில் விழுந்து கொடுத்துள்ளனர்....கோலியின் தலைமையில் இனி எந்த உலக கோப்பையும் கிடைக்கபோவது இல்லை.

 • Nawashkhan - Dammam,சவுதி அரேபியா

  லன்டன் ல பார்த்தா இரு அணி வீரர்களும் ஒன்னா கூடி கும்மாளம் அடிச்சுகொண்டு இருக்கு

 • senthil - cbe,இந்தியா

  இது என்னய்யா இவங்களோட விளையாட்டு.. கேவலம்... பவுலிங் இல்லை, பீலடிங் இல்லை என நினைத்து சரி பேட்டிங்-ஆவது இருக்கும் என நம்பி இருந்தால் அதுவும் இல்லை... கேவலம்....கேவலம்.....

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  பாக்கிஸ்தான் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

 • muthu -

  பாகிஸ்தான்க்கு உள்ள வெறி கொஞ்சம் கூட இந்தியாகாரன்க்கு யில்லை .

  • Sathish - Coimbatore

   சரியா சொன்னீங்க.

  • Sathish - Coimbatore

   இதை சாக்காக வைத்து அணில் கும்ப்ளேவை தூங்கிவிடுவார்கள் பாருங்கள். திறமையான வேகப்பந்துவீச்சை சமாளிக்க தெரியவில்லை. முஹம்மது ஆமீரை கண்டாலே தொடை நடுங்குகிறார்கள். இந்த தோல்வி நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும்.

  • Ramaswamy Sundaram - Mysore

   அன்னே நீங்க சொன்னதும்தான் யோசனை வருது...ஏற்கனவே கும்ப்ளேக்கும் கோஹ்லிக்கும் லடாய்....பார்த்தான் கோஹ்லி...இந்த பைனலில் தோத்தால் கும்ப்ளே அம்பேல்....அதனால்தான் ஐஞ்சு ரன்னோட ஏறக்கட்டி விக்கெட்டை தரவாத்துட்டான்.....நாம தான் முட்டாளாயிட்டோம்

 • ChandiranChandiran -

  இது ஒரு மோசமான ஆட்டம். சொதப்பல்

 • Nagai Nagarajan Swaminathan - Chennai,இந்தியா

  பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது மிகவும் வேதனையாக இருக்கிறது

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  எங்கள் மதசார்பற்ற சோனியா ஆட்சியில் இந்தியா தோற்றதேயில்லை. (இந்தியா தோற்றத்ததில் மின்னணு ஸ்கொர் இயந்திரம் சரியாக செயல்பட்டுள்ளது தெரிகிறது.) செல்லாநோட்டு  விவகாரத்தால் மனம்வெதும்பிய வீரர்கள் எப்படி சரியாக ஆடியிருக்கயியலும்? அடுத்த போட்டிகளுக்காவது இளந்தலைவர் ராகுலைக் கேப்டனாக அனுப்பித்தானாகவேண்டும்.

  • shahul - ,

   mahelche malaiel india,,,,,,

  • Anna Murugesh - lagos,நைஜீரியா

   மேட்ச் கும் மோடிக்கும் என்னடா சம்பந்தம். திறமை உள்ளவன் ஜெய்கிறான். உங்களமாதிரி ஆளுகள்தான் நாட்டுக்கே பிரச்சனை.

  • Solvathellam Unmai - Chennai,இந்தியா

   .....ஜெயித்து விட்டது .....

  • K.Sugavanam - Salem,இந்தியா

   மட்ட ரகமான கருத்து.

 • Raman - kottambatti,இந்தியா

  யாரு சோகமா இருக்கா? திறமைக்கு பரிசு.. அவ்வளவே. அது யாரை இருந்தாலும்.. அந்த மனப்பான்மை தான் நல்ல திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கும்.. ஜாதி, மதம், இனம், சிபாரிசு, ஆகியவை இருந்தால் இப்படித்தான் தோற்க நேரிடும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement