Advertisement

நிர்மலாவுக்கு என்னாச்சு?

சமீபத்தில், டில்லியில், ஒரு முக்கியஆலோசனைக் கூட்டம் நடந்தது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மற்ற அமைச்சர்கள் பியுஷ் கோயல், தர்மேந்திரபிரதான் ஆகியோர் இந்த கூட்டத்தில்
பங்கேற்றனர்.
அங்கு வந்த, மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவின் மகள், அமைச்சர் ஜெட்லியிடம், 'நிர்மலாவிற்கு உடல்நிலை சரியில்லை; மிகவும் சீரியஸாக உள்ளது. நொய்டாவில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்' என,தகவல் சொல்லிவிட்டுச் சென்றார்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெட்லி, விஷயத்தை மற்ற அமைச்சர்களிடம் கூறினார். 'இரண்டு நாட்களுக்கு முன் கூட நிர்மலாவைச் சந்தித்தேன்; நன்றாகத்தானே இருந்தார்; என்னவாயிற்றோ தெரியவில்லையே' என கவலையுடன்கூறினார்.
அமைச்சர்கள் பியுஷ் கோயல் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர், 'நாம் அனைவரும் மருத்துவமனைக்கு செல்வோம்' என கூற, ஜெட்லியும், 'வாருங்கள், அனைவரும் ஒரே காரில் போவோம்' என, அவர்களை, தன் காரில் அழைத்துச் சென்றார்.அப்போது, ஜெட்லியின் மனைவியிடமிருந்து போன்வந்தது. அவரிடம், 'அமைச்சர் நிர்மலா, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டுள்ளார்; அவரை பார்க்கத் தான் செல்கிறோம்' என்றார், ஜெட்லி.

'இந்த விஷயத்தை உங்களுக்கு யார் கூறியது' என, ஜெட்லி யின் மனைவி கேட்க, 'மகேஷ் சர்மாவின் மகள் தான் கூறினார்' என்றார்.'மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது, நம்ம வீட்டு வேலைக்காரி நிர்மலா; மகேஷ் சர்மா தான் அவளை மருத்துவமனையில் அனுமதித்தார். இந்த தகவலை தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள்' என, கோபத்துடன் ஜெட்லியிடம் கூறினார், அவரது மனைவி.உடனடியாக, காரை திருப்பும்படி, டிரைவரிடம் கூறினார் ஜெட்லி. மற்ற அமைச்சர்கள், 'ஏன்' என, கேட்க, 'மருத்துவமனையில் இருப்பது, என் வீட்டு வேலைக்காரி நிர்மலா; அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்ல' என, விஷயத்தை கூற, அனைவரும் அசடு வழிந்தனர்.

தமிழகத்தை அடுத்து மேற்கு வங்கம்தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலரிடம் வருமான வரித்துறை அதிரடிச் சோதனை நடத்தியது. இதனால், அ.தி.மு.க.,வின் இரண்டு கோஷ்டியினரும் அடிக்கடி டில்லி வந்து, பா.ஜ., மேலிடத்திற்கு மரியாதை செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.

இது குறித்து, அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறுகையில்,'அமைச்சர்கள் அனைவருக்கும் எதிராக மத்திய அரசு, அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துள்ளது. மோடிக்கு எதிராகப் பேசினால், அமைச்சர்களின் கதி, அதோ கதி தான்' என்றார்.தமிழகத்தை அடுத்து, மத்திய அரசின் குறி,- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாய்ந்துள்ளது. இவரது அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பலர், ஏற்கனவே சிட்பண்ட் மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலுக்கும் சென்று வந்துள்ளனர்.

இதுநாள் வரை, மம்தாவை நெருங்க முடியாமல், அவரது கட்சிக்காரர்களை மட்டுமே தொட முடிந்தது. ஆனால், இப்போது, மம்தாவை நெருங்க, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.,க்கு புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.வெறும் பேப்பரில் மட்டுமே நிறுவனங்களைத் துவங்கி, கோடிக்கணக்கில் ஹவாலா பண பரிமாற்றம் செய்துள்ளாராம் மம்தாவின் நெருங்கிய உறவினர் ஒருவர்.

விரைவில் இந்த உறவினர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்படலாம். இந்த உறவினர் மீது வழக்கு பாய்ந்தால், மம்தா மிகவும் பாதிக்கப்படுவார் என சொல்லப்படுகிறது.மேலும், இந்த பணப் பரிமாற்ற விவகாரத்தில், மம்தாவுக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை தொடரலாம். மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் பலம் குறைந்த நிலையில், பா.ஜ.,வை பலப்படுத்த, இந்த அதிரடிச் சோதனை உதவுமென, அந்த கட்சி தலைவர்கள் நம்புகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Shree Ramachandran - chennai,இந்தியா

    நிர்மலா சீதாராமன் போல ஒரு பெண்மணி தமிழகத்தின் முதல்வராக வந்தால் தான் சீராகும். ஆனால் மருத்துவரும் மற்றோரும் "சமூகநீதியை"காட்டி எதிர்ப்பார்கள். மற்றும் ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் கொள்ளை அடிக்க முடியாது.

  • kc.ravindran - bangalore,இந்தியா

    அரசியல்வாதிகள் என பலரிடம் வருமான வரித்துறை அதிரடிச் சோதனை நடத்தியது. இதனால்..... குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் என்றும் நிம்மதி எது?

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    சபாஷ் எதோ மமதா பிடிபட்டால் சரி. ஒழிந்தது என நிம்மதி பெருமூச்சு விடலாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement