Advertisement

வைகோவை கைவிட்டது மத்திய அரசு?

வைகோவை கைவிட்டது மத்திய அரசு?


ஒரு திருமணத்திற்காக மலேஷியா சென்ற வைகோவை, அங்குள்ள அரசு, நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்துவிட்டது. 'விடுதலைப் புலிகளுடன் வைகோவிற்கு தொடர்பு உண்டு. அவர் எங்கள் நாட்டில் ப்ளாக் லிஸ்டில் இருக்கிறார்' என, காரணம் காட்டி, சென்னைக்கு அவரை திருப்பி அனுப்பி விட்டது.
டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பேசிய போது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை, இப்படி நடந்ததாம்; அப்போது மத்திய அரசு தலையிட, வைகோ, மலேஷியாவிற்கு நுழைய அனுமதிக்கப்பட்டாராம். வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு ஒரு சிறிய பிரச்னை ஏற்பட்டால், 'டுவிட்டரில்' பதிவு செய்தால் போதும். உடனே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அந்த பிரச்னையைத் தீர்த்து வைப்பார்; டுவிட்டரில் பதிலும் போடுவார்.ஆனால், வைகோ விவகாரத்தில் சுஷ்மா எதையும் செய்யவில்லை; டுவிட்டரிலும் அமைதி காத்தார். வழக்கமாக படு வேகத்துடன் செயல்படும் அமைச்சர் அமைதியாக இருந்தது ஏன் என கேள்வி எழுப்பப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி, வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால், சுஷ்மா
இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.முன்பெல்லாம் அடிக்கடி டில்லி வந்து பிரதமரைச் சந்திப்பார் வைகோ. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, மாதம் ஒரு முறை டில்லி வருவார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதும் வந்து கொண்டிருந்தவர், மோடி பிரதமரான பிறகு, அதிகம் டில்லி பக்கம் வருவதில்லை. காரணம், பிரதமரின் அப்பாயின்ட்மென்ட் கிடைக்காதது தான். தவிர, மத்திய அரசு, வைகோவை முழுவதுமாக ஓரங்கட்டி விட்டது தான் உண்மை.


அடுத்த துணை ஜனாதிபதி யார்?


இந்த வாரம், பா.ஜ.,வும் எதிர்க்கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவிப்பர். அடுத்த மாதம், 17ம் தேதி, இதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஜூலை, 25ல், புதிய ஜனாதிபதி பதவியேற்பார். ஆகஸ்ட் மாதத்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதற்கும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும்.
துணை ஜனாதிபதி பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவர் தான் ராஜ்ய சபாவின் தலைவர்; அந்த சபையை நடத்துபவர். இப்போது, பா.ஜ.,விற்கு ராஜ்ய சபாவில் மெஜாரிட்டி கிடையாது. எனவே, இந்த அவையை நடத்துபவர், பா.ஜ.,விற்கு
ஆதரவாக செயல்படா விட்டால் பெரும் பிரச்னை ஏற்படும்.அன்சாரி மீது, மோடிக்கு கோபம். காரணம், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை ராஜ்ய சபாவில் தாக்கல் செய்ய அரசு விரும்பியது. இதனால் அவைக்குள் அடிதடி ஏற்படும்; சமாளிப்பது கடினம் என அன்சாரி மறுத்து விட்டாராம். மகளிர் மசோதாவை ராஜ்யசபாவில் காங்., கொண்டு வந்த போது, போலீசாரை அவைக்குள் வரவழைத்து, தாக்கல் செய்ய வைத்த அன்சாரி, நமக்கு மறுக்கிறாரே என மோடி கோபப்பட்டாராம்.
மோடிக்கு ஒருவரைப் பிடிக்கவில்லையென்றால், அந்த நபரை மறக்கவே மாட்டாராம். மழைக்கால பார்லிமென்ட் கூட்டத்தொடர் வழக்கமாக, ஜூலையில் நடைபெறும். ஆனால், இந்த முறை ஆகஸ்டில் நடைபெறும் என, பா.ஜ.,வினர் சொல்கின்றனர். அவை கூடும் போது, அன்சாரி பதவியில் இருக்கக் கூடாது என, பா.ஜ., தலைமை விரும்புகிறதாம்.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி, துணை ஜனாதிபதியாகலாம் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. எப்படியும் ஜெட்லி பிரதமராக முடியாது. நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், சட்ட அமைச்சர், செய்தி ஒளிபரப்புப் துறை என, அனைத்து முக்கிய துறைகளிலும் அமைச்சராக
இருந்தவர்… ராஜ்ய சபாவை நன்கு நடத்துவார் என, பா.ஜ., தலைவர்கள் சொல்கின்றனர்.திருடனுக்கு தேள் கொட்டினால்?

பல மாநில அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள், தங்களுடைய சொந்த மாநிலத்தில் பங்களாக்கள் வைத்திருந்தாலும், தலைநகர் டில்லியிலும் பெரிய தனி வீடுகள் வாங்கியுள்ளனர். இவர்கள் டில்லி வரும் போது இங்கு தங்குவர். மற்ற சமயங்களில் வேலைக்காரர்கள் பராமரிப்பில் இருக்கும். சில அரசியல்வாதிகள் தாங்கள் முறைகேடாக சம்பாதித்த பணத்தை இந்த பங்களாக்களில் வைத்துள்ளனராம்.
கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு மூத்த அமைச்சருக்கு, டில்லியில் இப்படி ஒரு பெரிய வீடு உள்ளது. இவர் அமைச்சர் பதவி மூலம் சம்பாதித்த பணத்தையெல்லாம் இங்கு தான் வைத்திருந்தாராம். சமீபத்தில் கணிசமான பணம் காணாமல் போய்விட்டதாம்; அதோடு வீட்டு வேலைக்காரியும் மறைந்து
விட்டாராம்.கடைசியில் எப்படியோ ஹரியானாவின் ஒரு கிராமத்தில் அந்த வேலைக்காரியைக் கண்டுபிடித்தனராம். அவள் வீட்டிலிருந்து கொஞ்ச பணம் மட்டும்தான் கிடைத்ததாம். எனக்கு எதுவுமே தெரியாது என வேலைக்காரி சாதித்தாளாம். போலீசுக்குப் போனால் மாட்டிக் கொள்வோம்.
கர்நாடகா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் அமைச்சரை, மோடி அரசு ஒரு வழியாக்கிவிடும் என்பதால் அமைதியாகி விட்டாராம் அந்த அமைச்சர். 'தேர்தல் செலவிற்கு பணம் சேர்த்து வைத்திருந்தோம். இப்படி ஆகிவிட்டதே' என, நொந்து போயுள்ளாராம் கர்நாடக அமைச்சர்.இதே போல், கர்நாடகாவிலிருந்து மிகப் பெரிய பதவியில் பணியாற்றிய அந்த அரசியல்வாதியின் டில்லி வீட்டிலிருந்து ஏறக்குறைய ஒரு கோடி திருடு போய்விட்டதாம்; யார் திருடினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம். ஆனால், போலீசுக்குப் போக வேண்டாம் என சொல்லி விட்டாராம் அந்த சீனியர் அரசியல் பிரமுகர். காரணம், நேர்மையாக சம்பாதித்த பணம் இல்லையாம்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (9)

 • நரி - Chennai,இந்தியா

  நல்ல அரசியல்வாதிகள் .....

 • Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்

  தமிழர்களை பொறுத்தவரை இலங்கை, இந்தியா, மலேஷியா போன்ற நாடுகள் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இதில் மத்திய அரசுக்கு எல்லா தொடர்பும் உள்ளது. மலேஷியா அரசும் இந்தியா அரசும் அவருக்கு விசா அனுமதி அளித்து பிறகு விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தி அவமானப்படுத்தியது நன்கு திட்டமிட்ட செயல். மத்திய அரசை இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு இப்போது உண்மை தெரிகிறது. தவிர வைகோ தனக்காக யாரிடமும் உதவி கேட்டவர் இல்லை. அதனால் தான் மிக தீரமாக இந்த 74 வயதிலும் 16 மணி நேரம் அந்த மண்ணில் உண்ணா நிலை இருந்து சென்னை திரும்பினார். வெட்கப்படவேண்டியது இந்தியா தான். அவர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் தான். அவர் மட்டும் அல்ல. அவருக்கு அழைப்பு விடுத்த அந்த நாட்டின் ஒரு மாநில துணை முதல்வரும் ஆதரவாளர் தான். ஆதரவாளர் என்பது வேறு. உறுப்பினர் என்பது வேறு. sick minded countries...

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மலேசிய அரசுக்கு கடும் கண்டனங்கள்

 • LAKSHMIPATHI - Thane,இந்தியா

  A person without common aim and a fish out of water. His connections with LTTE WERE known toMalaysian govt. and therefore he was refused entry. It is utter foolish to involve Sushmaji in this matter.

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இதில் மதிய அரசு ஒன்றும் செய்ய முடியாது , மலேசிய அரசு கூறும் காரணம் உண்மை, விடுதலைப் புலிகளுடன் வைகோவிற்கு தொடர்பு உண்டு. அவர் எங்கள் நாட்டில் ப்ளாக் லிஸ்டில் இருக்கிறார்' என, காரணம் காட்டி, சென்னைக்கு அவரை திருப்பி அனுப்பி விட்டது.///////சுஷ்மா உன்மையில் பாதிக்க படுபவர்களை உதவி செய்ய மறுப்பதில்லை,.

 • vns - Delhi,இந்தியா

  "வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு ஒரு சிறிய பிரச்னை ஏற்பட்டால், 'டுவிட்டரில்' பதிவு செய்தால் போதும். உடனே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அந்த பிரச்னையைத் தீர்த்து வைப்பார் டுவிட்டரில் பதிலும் போடுவார்.ஆனால், வைகோ விவகாரத்தில் சுஷ்மா எதையும் செய்யவில்லை டுவிட்டரிலும் அமைதி காத்தார். வழக்கமாக படு வேகத்துடன் செயல்படும் அமைச்சர் அமைதியாக இருந்தது ஏன் என கேள்வி எழுப்பப்படுகிறது".. வைகோ மத்திய அரசை அவருக்கு மலேசியாவில் அனுமதி வேண்டும் என்று கேட்டுக்கொண்டாரா ? மத்திய அரசை குறை கூறுவதர்க்கு எதற்கு நடக்காத நிகழ்ச்சிகளை பதிவு செய்கிறீர்கள். மத்திய அரசின் உதவி வேண்டும் என்றால் அதை வைகோ கேட்டு இருக்க வேண்டும். அல்லது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்று கூறும் முன்பு மத்திய அரசின் அங்கீகாரத்தைக் கேட்டாரா? வைகோவின் இந்திய இறைமண்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு கூட்டு நிற்க முடியாது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement