Advertisement

சிங்கம் ஒன் டூ திரி...திரிவேதா...

உன் சிக்குபுக்கு ரயில் சிரிப்பில் இதயம் துடிக்குது எக்ஸ்பிரஸ் வேகத்தில்... கொள்ளை அழகு! வெள்ளைக்காரி, நீ நடிக்கலாம் ஷேக்ஸ்பியர் நாடகத்தில்; தென்றலாய் பிறந்து மயிலிறகாய் தவழும் நீ, மிதக்கலாம் மேகத்தில்!

ஜொலிக்கும் தங்கங்கள் எல்லாம் தங்கமென நினைத்து மோதும் உன் பாதத்தில்...
சுடர்விடும் தீபத்தின் திரியாய் நடிப்பில் ஒளிவீசும் நடிகை திரிவேதா மனம் திறக்கிறார்...
* சினிமா என்ட்ரி ?
விளையாட்டாக வந்து 'வேட்டைக்காரன்', 'சுறா' படங்களில் சின்ன கேரக்டர் என்ட்ரி ஆனேன்.
* நீங்கள் நடித்தது...
'சிங்கம் ஒன்', 'சிங்கம் டூ', 'சிங்கம் திரி' படங்களில் அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்து இருக்கிறேன்.
* நெக்ஸ்ட் ஹீரோயினா?
நடிகர் பொன்னம்பலம் இயக்கிய 'இடியுடன் கூடிய மழை' படத்தில் பேயா நடிச்சிருக்கேன். இன்னும் ரிலீஸ் ஆகலை, நீங்களும் வெயிட் பண்ணுங்க அழகான பேயை பார்க்க.
* நடிப்பு திறமை
எவ்வளவு தான் திறமையா நடிச்சாலும், சின்ன கேரக்டர்கள் தான் கிடைக்குது. அதுவும் பெரிய ஹீரோயின்கள் கூட நடிக்கும் போது என் நடிப்பு திறமை வெளியே தெரியுறதில்லை.
* 'பன்னீர் புஷ்பங்கள்' சாந்தி கிருஷ்ணா மாதிரி உள்ளீர்களே
ஆமா, நிறைய பேர் சொல்லி இருக்காங்க நடிகை சாந்தி கிருஷ்ணா மாதிரி இருக்கேன்னு. இன்னும் சிலர் அமலா, மீனா சாயலில் இருக்குறதா கூட சொல்வாங்க.
* உங்கள் பெருமை...
'சிங்கம் டூ' படத்தில் மனோரமாவுடன் கடைசி பிரேமில் நின்ற ஒரே நடிகை நான் தான்.
* நடிகர் சங்கம்
இன்றைய நடிகர் சங்கம் நல்லாவே இயங்கி கொண்டிருக்கிறது. ஆனால், என்னை போன்ற சின்ன ஹீரோயின்கள் கருத்துக்களை கொஞ்சம் கேட்கணும், திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்.
* பிரபலமாகும் சக நடிகைகள்...
பிரபலமானா என்ன, எனக்கு சந்தோஷம் தான்... நானும் ஒரு நாள் பெரிய ஹீரோயினா வருவேங்குற நம்பிக்கை இருக்கு.
* விரும்பும் ஹீரோ ?
அஜித் தான் நான் விரும்பும் ஹீரோ. செஞ்ச உதவியை சொல்லிக்காட்டி 'பப்ளிசிட்டி' தேடாத ஒரே நடிகர் இவர் தான்.
* சினிமா பாலிடிக்ஸ்...
அய்யோ... நிறைய இருக்கு 'நீ எல்லாம் ஏன் நடிக்க வரே'ன்னு கூட கேட்பாங்க. சிலர் தட்டிக் கொடுத்து பேசுவாங்க, பலர் மட்டம் தட்டியே பேசுவாங்க.
* நடிப்பு தவிர...
கர்நாடக சங்கீதம், பரதம், ஹிப்பாப் டான்ஸ் தெரியும். இப்போ டிவி சீரியல்களில் 'டப்பிங்' பேசும் வாய்ப்பும் கிடைச்சிருக்கு.
* முயற்சி தொடருமா...
கண்டிப்பா... ஒரே, ஒரு படத்தில் மட்டும் நான் பெரிய கேரக்டர்ல நடிச்சா போதும், தமிழ் சினிமாவுல ஒரு ரவுண்டு வருவேன். இது என்னோட 7 ஆண்டு போராட்டம் ஒரு நாள் வெற்றி வாகை சூடுவேன்...
trivetha1gmail.com

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement