Advertisement

ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது

சென்னை: ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு கோர்ட் ஜெ., சசி , இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஜெ.,வுக்கு ரூ. 100 கோடி அபராதமும், ஏனையோருக்கு தலா ரூ. 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் விதிக்கு புறம்பாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்கவும் உத்தரவிட்டது.
இதன்படி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஜெ., சொத்துக்கள் இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு தரப்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி எந்தந்த சொத்துக்கள் என பட்டியலிடப்பட்டு வருகிறது. அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இது தொடர்பாக அறிவுரையை கலெக்டர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிகிறது.

அரசு கஜானாவில் சேர்க்கப்படும்மொத்தம் வழக்கில் சேர்க்கப்பட்ட 128 சொத்துக்களில் 68 சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டிருந்தது. முறைப்படி பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் அரசுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது அதனை விற்று அரசு கஜானாவில் பணத்தை சேர்த்து கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (128)

 • kandhan. - chennai,இந்தியா

  குடும்பமே இல்லாத இந்த அம்மையாருக்கு இந்த அளவுக்கு சொத்துக்கள் எப்படி வந்தது என்பது பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் மேலும் தமிழக மக்களை சுரண்டி (கணக்கில் காட்டாமல் சேர்த்தசொத்துக்கள் ) சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் உடனடியாக அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும் மேலும் இந்த ஆட்சியில் இருக்கும் அனைத்து அமைச்சர்களும் தாமாக முன்வந்து தங்கள் சொத்துக்களை கணக்கில் கொண்டுவந்து தமிழக மக்களுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கவேண்டும் அப்போதுதான் இவர்கள் நல் ஆட்சி செய்வதாக இருக்கும் செய்வார்களா ?? கந்தன் சென்னை

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  All her properties are to be confiscated,sold and added to the State's Kajana and sp for the bettement of the people.These all public looted properties and it is very right to go to the people.No need of giving her properties to her blood relatives as they were deserted her during her lives time. Not even a pin also should be left as that also looted from people.Except the people of Tamil made no one have right to enjoy her properties as they all ly looted from people during her rule and cheated the people by her attractive speeches.

 • Neelakantan Radhakrishnan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  singappore சேகர் லைன்இல் வரவும். கருத்து சொல்லவும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அந்த அம்மா மரணம் அடைந்து விட்டது எனவே சொத்துக்களை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கிறீர்கள்.. ஊரையே கொள்ளை அடித்து ஐம்பது தலைமுறைக்கு சொத்து சேர்த்த உயிரோடு இருக்கும் மலை முழுங்கி மங்காத்தாக்களை என்ன செய்வதாக உத்தேசம்...

 • truth tofday - india,இந்தியா

  இத்தனை சொத்தையும் ரயில்வே அல்லது மத்திய arusukku கொடுக்க வேண்டும் தமிழ் நாட்டுக்கு கொடுத்தால் தமிழ் மக்கள் adimaikoottam athai venakkividum karnatakavukku அல்லது ஆந்திராவுக்கோ கொடுப்பது நல்லது

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  உயிலை கண்டுபிடித்து அதன்படி நடக்கவும்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இந்த சொத்துக்களை விற்பதற்கு பதிலாக இந்த சொத்துக்களை உண்மையான, நிலமற்ற, வறுமையில் உழலும் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு பிரித்து கொடுத்தால், ஏழைகளின் மனம் குளிரும். இந்த நிகழ்வு, ஒரு சிறந்த படிப்பினையை உணர்த்துகிறது. அதன் மூலம் அவர்கள் இத்தனை சொத்துக்கள் இருந்த பின்னரும் அடங்கி ஒடுங்கிய உடல் புதைக்கப்பட்டது மத்திய அரசு வழங்கியிருக்கும் ஆறடி நிலத்தில். இன்னுமா புரியவில்லை தமிழக திருட்டு கழக திராவிட அரசியல்வாதிகளே?

 • jay - toronto,கனடா

  பெறோர்களே ,, இதை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லுங்கள் ,,, நேர்மையா உழைத்தது தான் நிற்கும் என்று ,,, இது ஒரு பாடம் ,,

 • Raamji - chennai,இந்தியா

  பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் அரசுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது அதனை விற்று அரசு கஜானாவில் பணத்தை சேர்த்து கொள்ளலாம். இதுபோல் மற்ற மாநிலங்களிலும் செய்ய முடியுமானால் வரவேற்க்க ஒன்றே. ஆனால் மிக வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஏலம்விட்டாலும் வாங்க பயப்படுவார்கள் சில சொத்துக்கள் புஞ்சை நிலங்கள் அவற்றை வழிகாட்டு மதிப்புக்கே வாங்க ஆளிருக்காது மற்றும் சில இடங்கள் பழைய உரிமையாளர்களால் வழக்கை சந்திப்பவை எனவே இந்த விவகாரம் அடுதத்தலைமுறைவரை தொடரும்

 • bhagavatgeetha -

  all gone back to from where it was taken.....

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  128 சொத்துக்களையும் கூட பறிமுதல் செய்யலாம் எப்படியும் மன்னார்குடிதான் வாரிக்கொண்டு போகப்போகிறது . அவற்றை விற்று அரசின் கடன் சுமையையாவது குறைக்கலாமே

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா.....பாடல் நினைவுக்கு வருகிறது.

 • srinivasan ranganathan - chennai,இந்தியா

  ஒருவர் மரணம் அடைந்தால் அவர்களது சொத்து முறைப்படி இறந்தவர் வாரிசுக்கு செல்லவேண்டும் வாரிசுகள் உரிமை கோரவேண்டும் அரசு முறைப்படி வாரிசுகளிடம் தான் சொத்துக்களை ஒப்படைக்க சொல்லவேண்டும் . எம் ஜி யார் இறந்தார் அவர் உயில் படி வாரிசுகளுக்கு சேர்ந்தது ஜெ விஷயத்தில் ஏன் இதெல்லாம் நடக்கவில்லை அவர் உயில் எழுதி வைத்தாரா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உருது செயாப்பட்டது அவைகள் இப்போது யார் உடைமையில் உள்ளது . இவைகள் ஏன் முறைப்படி நடக்கவில்லை ஒரு சிட்டிங் முதல்வர் அவர் சொத்துக்களுக்கே பாதுகாப்பு இல்லையே . சொத்துக்கள் வாரிசுகளிடம் உள்ளதா அல்லது கொள்ளையர்களிடம் உள்ளதா . இதில் நீதித்துறை உட்பட மௌனம் சாதிக்கிறதே இதில் இருந்து ஒன்று தெரிகிறது ஒரு கால் அவர் மரணத்திலும் மர்மம் உள்ளதா. அதனால்தான் வாரிசுகள் யார் என்பது வெளியில் வரவில்லையா. யார் யாரையோ காப்பாற்ற யார் யாரோ முயலுகிறார்களோ மௌனம் கலையவேண்டும் .

 • Rao - Doha,கத்தார்

  நல்ல முடிவு..எடுக்க வேண்டியது சுருட்ட வேண்டியது எல்லாம் செய்து முடித்த பின்.... நல்ல்ல்ல்ல்ல்ல முடிவு...

 • ரங்கன் -

  இதெல்லாம் நம்ம நாட்டில் உள்ள சொத்துக்கள்....இன்னும் சுவிஸ், பனாமா வங்கிகளில் எவ்வளவு போட்டுவைத்து போயிருக்கிறாரோ அம்மையார்? அதெல்லாம் அந்த வங்கிகளுக்கே சொந்தம்..

 • எல்.கே.மதி - Lalgudy,இந்தியா

  பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் அரசுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது அதனை விற்று அரசு கஜானாவில் பணத்தை சேர்த்து கொள்ளலாம். அப்பாடி.. இனி இரு கோஷ்ட்டிகளும் பொருளாளர் பதவிக்கு குடுமிப்பிடி சண்டை போட மாட்டார்கள்.பணமில்லா கட்சியில் எவர் பதவிய விரும்புவார்கள்?

 • rajai - madurai,இந்தியா

  எந்த அரசு? மதிய அரசா? மாநில அரசா? எந்த மாநில அரசு? விளக்கமா சொல்லலாம்ல? மக்கள் இப்பவாவது அளவுக்கு அதிகமா பணமிருந்தா என்ன ஆவும்ன்னு யோசிக்கணும்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  பல முக்கியஸ்தர்கள், பினாமிகள் வழியாக சொத்துக்கள் வைத்துள்ளதாக, பல செய்திகளில் சொல்லப்படுதே?. இந்த அம்மாவ நினைச்சா ..............

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  இதில் யாருக்கும்வருத்தம் இல்லை.

 • Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மிக சரியாக சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றால் ஜெயலலிதா முதல்வர் ஆனா பிறகு சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் ..அதுவே சரியானதாக இருக்கும்.அந்த அம்மா தான் மதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஆளு ஆச்சே ...

 • VELAN S - Chennai,இந்தியா

  அந்த சொத்துக்களெல்லாம் அரசு கஜானாவுக்கு வருமா , வராதா என்றால் வடிவேல் சொன்னா மாதிரி வருவும் ஆனா வராது என்பது போல் அரசு கஜானாவுக்கு வரும் சொத்துக்களை , அ.தி.மு.க மற்றும் அரசு அதிகாரிகள் கொள்ளை அடிக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை .

 • Koteeswaran Iyer - salem,இந்தியா

  கொள்ளை அடிப்பான் வள்ளலைப் போல ..............

 • kuruvi - chennai,இந்தியா

  சசிகலாவுடன் சேரும் முன்பே கோடீஸ்வரி ஜெ.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அம்மா 68 வருஷம் இந்த பூவுலகத்துல வாழ்ந்தாங்க..... சரிய்யா வருஷத்துக்கு ஒன்னு மேனி 68 சொத்துக்கள தமிழ் நாட்டுக்கு அர்பணிச்சிருக்காங்க..... என்ன ஓர் coincidence .....?

 • பிரபு - மதுரை,இந்தியா

  பறிமுதல் செய்யப்படும் சொத்து அரசுக்கு வந்தால் அது அதிமுக-வுக்கு வந்த மாதிரி தான். இன்னும் நாலு வருசத்துக்கு அரசாங்கமே அவுங்க தானே. கேட்டா அம்மா சொத்து பிள்ளைங்க எங்களுக்குத்தான் என்பார்கள்.

 • Rajappa - BANGALORE,இந்தியா

  அம்மா சொத்துக்கள் அரசுடைமையாகின்றன நல்ல விஷயம் ஆனால் அரசில் இருப்பவர்கள் அம்மா வழியை பின்பற்றுபவர்களாமே பேஷ் பேஷ்

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  உலகம் உருண்டை...அரசாங்க சொத்தை கொள்ளை அடித்தால், அது திரும்பவும் அரசு கஜானாவுக்கே வந்து சேரும்....

 • ramesh - chennai,இந்தியா

  சிலர் கருத்து கூறும் போது ஜெயலலிதா எதோ உத்தமர் போலவும் சசிகலா மட்டுமே கொள்ளை அடித்தார் என்று உண்மையை திரித்து கூறுகிறார்கள். ஒன்றும் இல்லாத சசிகலாவையும் அவர் குடும்பத்தையும் மற்றும் தனக்கும் சம்பாதிக்க வழி ஏற்படுத்தி கொடுத்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா வழி ஏற்படுத்தி கொடுத்ததால் தான் ஜெயலலிதாவும் சசிகலாவும் இவளவு சம்பாதிக்க முடிந்தது. எனவே ஊழலின் மூலகாரணம் ஜெயலலிதா தான். 68 சொத்துக்களை மட்டும் கைப்பற்றுவது சரியல்ல அணைத்து சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த வேண்டும்

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இருந்தும் கொடுத்தார், இறந்தும் கொடுக்கிறார் - மக்களுக்கு. அம்மான்னா அம்மாதான். ... Amma is always GREAT .....

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  நேத்து முந்தா நேத்து பீட்டர் ஜோன்ஸ் என்பவர் கொடுத்த பேட்டியில் - டைம்ஸ் டி.வி. - கோட நாடு எஸ்டேட் என்னிடம் அடி மாட்டு விலையில் அடித்து பிடுங்கப்பட்டது. அதில் கூட இன்னும் அவர்கள் ரூ. 5 கோடி தரவில்லை?? அந்த ப்ரொபேர்ட்டி இதில் சேரவில்லை என்று நினைக்கின்றேன். இந்த மாதிரி எல்லா ப்ரோபெர்டியும் இதே ரகத்தில் தான் பறிக்கப்பட்டது. 1 )எனது ஒரே கேள்வி இந்த அம்மா அம்மா என்று அரற்றும் 1.5 கோடி அ.தி.மு.க. கூமூட்டைகளுக்கு? உங்களைப் பெற்ற தாய் இந்த மாதிரி தான் செய்தாரா?? இல்லையென்றால் இந்த மாதிரி அரக்க குணம் உள்ளவர்களை எதற்கு அம்மா என்று அழைத்து அந்த புனிதமான உறவுக்கு இவ்வளவு களங்கம் விளைவித்தீர்கள்?

 • MANI DELHI - Delhi,இந்தியா

  நீதியின் பார்வையில் ஜெயலலிதா அவர்கள் குற்றவாளியானாலும் மக்கள் குறிப்பாக ஏழை பாழைகள் எல்லாம் இன்றும் அவர் மூலம் கிடைத்த இலவச சலுகைகளை மறக்க வில்லை. அடிமட்ட மக்களின் மனதில் இன்றும் அம்மா உணவகம் நிலையாக உள்ளது. இன்று சொத்துகள் கைப்பற்றும் நிகழ்ச்சியை பார்க்கும் போது உண்மையிலேயே இவர் பெயரில் இத்தனை சொத்துகள் இருக்குமா இல்லை அனைத்தும் இவரது பாதுகாவலர்கள் என்று சுற்றிவந்த குடும்ப நபர்களின் பெயரில் இருக்குமா. அப்படி என்றால் நஷ்டம் பினாமிகளுக்கு தானே. வருமானத்துக்கு அதிகம் என்ற சொத்துவிவரங்களை கூட்டு முயற்சி குற்றமாக கோர்ட் கருதும் பட்சத்தில், ஜெயலலிதாவிற்கு நூறு கோடி அபராதமும் மற்றவர்களுக்கு தலா பத்து கோடி அபராதமும் கொடுப்பது நியாயம் இல்லாதது போல் தோன்றுகிறது. கருணாநிதியின் விஞ்ஞான ஊழலினால் அவரது ரத்த சம்பந்த வாரிசுகள் பலனடைந்து விட்டனர். ஆனால் ஜெயாவின் சொத்துகள் அரசு எடுத்துக் கொள்வது என்பது அறிவிக்கப்படாத ரத்த பந்த உண்மை வாரிசுகள் இருந்தும் பிள்ளை இல்லா சொத்து கொள்ளையில் போன கதை ஆகிவிட்டது. உண்மையிலேயே மன்னார்குடி நபர்களின் சொத்துகளை தான் அரசுடமை ஆக்கி நாடு கடத்த வேண்டும். ஜெயாவின் உயில் எங்கோ இருக்கிறது என்று சொன்ன செவி வழி செய்தியின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை அந்த உயிலை தேடி விட்டு செய்தால், இது ஒரு உண்மையான முயற்சியாக அமையும். அப்படியே சொத்துகள் இணைக்கப்பட்டால் சரியான வாரிசுகள் இல்லாத நிலையில் முதலில் அதிமுக பொலிடிகல் டிரஸ்ட் தான் உரிமை கோர வேண்டும். இல்லையென்றால் இலவசங்களினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டும். கஜானாவில் இட்டால் அது Gandhi கணக்காக மாறும் என்பதில் ஐயமில்லை.

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  கோட நாடு எஸ்டேட் மிரட்டி வாங்கினதாமே..? அந்த வெள்ளைக்காரர் நேத்து டிவியில வந்து சொல்லுறாரு... பாவமா இருந்துச்சு...

 • நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ

  மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று சொல்லி தனக்காகத்தான் கோடி கோடியாக சொத்து சேர்த்து இருக்கிறார்.

 • நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ

  ஜெ க்கு தூத்துக்குடியில் எங்கே என்ன சொத்து இருக்கிறது?

 • Prabaharan - nagercoil,இந்தியா

  ஊழல் செய்பவர்களுக்கு ஒரு பாடம். இந்தியா முழுவதும் இது மாதிரி நடந்தால், இந்தியா ஏழை நாடு அல்ல

 • நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ

  ஜெ., சொத்துக்கள் இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு தரப்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே அரசுதான் ஜெயா போட்டோவை சட்டமன்றத்தில் மோடியை வைத்து திறக்க போகிறதாம். என்ன லாஜிக்கோ தெரியல.

 • கொடுக்கு - Singapore,சிங்கப்பூர்

  செய்தியின் தலைப்பில் பிழை இருக்கிறது , "ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்கள் பறிமுதல்" என்று இருக்கவேண்டும்

 • vnatarajan - chennai,இந்தியா

  128 சொத்துக்களில் மீதி 60 சொத்துக்கள் என்னென்ன அவைகள் யாருடைய பெயரில் இருக்கிறது. அதை அவர்கள் சொந்த பணத்தில் வாங்கினாரா என்ற முழு விவரமும் மக்களுக்கு தெரிந்தால் நல்லது.. தனக்கு என்று ஒரு குடும்பம் இல்லாதபோது ஜெ ஏன் சசிகலா விரித்த வலையில் விழுந்தார் என்று தெரியவில்லை ,

 • Sivasubramanian Chandramouli - Tiruppur,இந்தியா

  இந்த வகையில் அக்குடிமக்கள் எதிர் பார்ப்பது, ஜெயலலிதா தொடர்ந்து கருணாநிதி, ஸ்டாலின், admk dmk முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் 1967 பிறகு சேர்த்த சொத்துக்களை அரசு வசம் ஒப்படைக்க வேண்டும். மத்தியில் அனைத்து காங்கிரஸ் அமைச்சர்களும் உடனடியா தங்களின் சொத்துக்களை அரசு கஜானா வில் சேர்க்க வேணும்.

 • V.Ravichandran - chennai .,இந்தியா

  இதுதான் ரிஷி மூலம் , நதி மூலம் . அவர்கள் வாயால் கூறினார்கள் உங்களுக்காக நான், எனக்காக நீங்கள் இப்பொழுது மக்களிடமே சொத்து வந்துவிட்டது.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  வழக்கில் சேர்க்கப்பட்ட சுமார் 120 சொத்துக்களில் பாதி மட்டுமே சொத்துகுவிப்பு எனக்கூறி அவற்றை மட்டுமே ஜப்திசெய்ய கோர்ட் ஆணையிட்டுளள்து அதாவது மீதியுள்ளவற்றை சசி கும்பல் அனுபவிக்கத்தடையில்லை ஜப்தி செய்யப்பட்டவற்றிலும் பெரும்பாலும் மிரட்டல் மூலம் வாங்கப்பட்டவை என பிரச்னை உள்ளது பறிகொடுத்தவர்கள் கோர்ட்டுக்குப்போனால் போயஸ் வீட்டில் முதல் பாதியும் ஐதராபாத் சொத்தும் தான் தீபக் தீபாவுக்குப் போகும் பாவம்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  வாழ்நாளில் ஒரு கட்டத்துக்கு மேல், அம்மா, அம்மா என்று பயபக்தியுடன் அழைக்கப்பட்டாலும், இறந்த பிறகு இறந்தவருக்குண்டான ஈமக்கிரியைகளைக் கூட முறைப்படி பெற முடியாத ஆத்மா ..... இறந்த பின்னர் பாவ, புண்ணியங்களைத் தவிர வேறொன்றும் நம்முடன் வராது என்ற வார்த்தைகள் எத்தனை உண்மை

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இனிமேதான் "மக்களால் நான் .... மக்களுக்காகவே நான்" என்கிற அந்த வார்த்தைகள் நிறைவேறும் போலிருக்கே ....

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  எதோ திருடு போனதில் கொஞ்சம் பணம் அரசு கஜானாவுக்கு திரும்ப வருது... போனது பரங்கிக்காய்... வர்ரது சுண்டக்காய்...

 • N. Sridhar - Kanchipuram

  Palapaeru Varuernju Kolla Adicha Sothu Ippaduthaan Nyayama Arasaangathukuthaan Saerananum. Ethapaeu Ayaru Erunjidhae Ippathaan Manasu Kulirum. Vaazhga Aarasu

 • Paranthaman - kadappa,இந்தியா

  சசிகலாவை உடன் வைத்திருந்ததால் ஜெயா குற்றவாளி ஆனார். தனிப்பட்ட முறையில் ஜெயா குற்றவாளி இல்லை. ஜெயா செய்த மிக பெரிய தப்பு சசிகலாவை தம்முடன் நீண்டகாலம் தங்க வைத்தது.குற்றவாளியாக்கப்பட்ட ஜெயா குற்றத்தை தள்ளுபடி செய்ய யார் காலிலும் சென்று விழுந்து அழுது கெஞ்சவில்லை.அவர் விஞ்ஞான ஊழல் செய்யவில்லை. சசியின் சொல்லை கேட்டு நம்பி கெட்டதுடன் சசிகலாவினால் தன் உயிரையும் துறந்தார்.

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  ஆடுன ஆட்டம் என்ன பாடின பாட்டம் என்ன போகும் பொழுது யாரும் எதையும் எடுத்து கொண்டு போக முடியாது.வாழும் வரை சந்தோசமாக வாழ்ந்து விட்டு போவது நல்லது .

 • Balaji - Bangalore,இந்தியா

  தீபக், தீபா கோர்ட்டுக்கு செல்வார்கள்.

 • Balaji - Bangalore,இந்தியா

  சட்டப்படி செல்லாது?

 • sankar - Nellai,இந்தியா

  அப்ப கருணாநிதி சொத்தை எப்ப அள்ளலாம்?

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  சரியான முடிவு. ஊழல் செய்து சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கை. ஆனால் கட்டுமரத்திடம் இருந்து ஒரு கோவணத்தை கூட பறிமுதல் செய்ய முடியாது. சர்க்காரியா விசாரணை கமிஷன் குற்றம் சுமத்துவதற்கு முன்னரே விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவருக்கு அதன்பிறகு சொல்லியா தரவேண்டும்.

 • samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

  ஒவ்வொரு வினைக்கும் பிரதிவினை உண்டு

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இன்று எது உன்னடையதோ, அது நாளை, வேறு ஒருவனுடையது . நீ எதை கொண்டுவந்தால் இழப்பதற்கு. ?

 • karunchilai - vallam,இந்தியா

  டி எஸ்டேட் ?

 • karunchilai - vallam,இந்தியா

  maagfiyaavin soththukkal ?

 • sachin - madurai,இந்தியா

  இவரின் போட்டோ எல்லா அரசு அலுவலகங்களிலும் , முக்கியமாக போலீஸ் அலுவலகத்திலும் உள்ளது ...ஒரு குற்றவாளியின் போட்டோ ......

 • ganesha - tamilnadu,இந்தியா

  அப்படி போடு அருவாளை. ஊழல் செய்பவர்களை சப்போர்ட் செய்பவர்கள் எல்லாத்துக்கும் சப்பைக்கட்டு கட்டுபவர்கள் யாரையுமே காணோமே.

 • Rajathiraja - Coimbatore,இந்தியா

  மாநில அரசு கஜானாவுல சேருங்க. அந்த ரூ 570 கோடி கண்டைனர் மாதிரி மத்திய அரசு கஜானால சேர்த்துடாதீங்க

 • vijaycovai -

  super

 • sumo - chennai,இந்தியா

  Very pitty Arasu gajanavukku poi meum arasiyalvadhi gajanavukkey varumo

 • sheik musthafa - trichy,இந்தியா

  நல்ல ஒரு முடிவு மக்களுக்கு சென்று சேரட்டும்.

 • ARUN.POINT.BLANK -

  adadada...athu eppadi jayalalitha sothaangum? oor sothu ooruku meendum oorukku vandhadhu avalavu thaan. Dharmathin vaazhvuthanai soothu kavum athanai meendum dharmam vellum.

 • raman - Madurai,இந்தியா

  நல்லது . இதே மாதிரி காட்டுமரத்தின் சொத்துக்கள் பறிமுதல் எப்போது?. மற்ற ஊழல் பேர்வழிகள் சொத்துக்களும் அரசைச் சேர வேண்டும்.

 • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

  இது ஒரு முன்னுதாரணம். இதுபோல் ஊழல் செய்த அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நடக்க வேண்டும்.

 • rajan - Chennai,இந்தியா

  கட்டுங்கள், பீச்சில் மணி மண்டபம் கட்டுங்கள். அதற்கும் வோட்டு போட்ட மக்களின் பணத்தையே வீணாக்குங்கள். நாட்டை நாசமாக்குங்கள்.

 • stboopathy -

  இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. தேவையான அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு மீதியை அரசுக்கு கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.

 • sachin - madurai,இந்தியா

  இந்த லட்சணத்துல குற்றவாளி ஜெயாவின் போட்டோவை சட்டமன்றத்தில் திறக்க போகிறார்களாம் அதையும் ஊழல் எதிர்ப்பு மன்னன் என்று மார் தட்டி கொள்ளும் மோடி திறக்க உள்ளாராம் ....விளங்குமா இந்தியா ......( ஊழல் எதிர்ப்பு + ஊழல் ஆதரவு ) .........மிக பெரிய தலை குனிவு அதிமுக வுக்கு ...அதன் தலைவி இப்படி ஒரு குற்றவாளி ஆகி அவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யும் அளவுக்கு வந்தது ....இதிலும் கூமுட்டைகள் சொல்லும் மீசைல மண் ஒட்டாதது போல .....

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  பாஜக தான் தமிழகத்தை ஆள்கிறது....அதிமுக , கடைசியில் அமித்சா வின் எடுபிடியாக மாறிவிட்டது... சொத்துக்களை முடக்குவது நல்லது தான்...அப்படி முடக்கினால், இந்தியாவில் ஒரு அரசியல்வாதிக்கு கூட சொத்து மிஞ்சாது, பாஜகவினர் உட்பட... எடியூரப்பா, ஜனார்தன் ரெட்டி, கட்கரி, ராஜே, சவுகான், ராமன்சிங் - இப்படி நீண்டுகொண்டே போகும்... இதையும் மோடி செய்யணும்...அப்படின்னா பாராட்டலாம்...

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  ஒட்டு மொத்த சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். மேலும், இது போல் ஊழல் செய்து சொத்து சேர்த்த பலர் இன்னும் சுதந்திரமாக நடமாடி வருகிறார்கள். அவர்களையும் வளைக்க வேண்டும். இனி ஊழல் செய்ய அனைவரும் பயப்படும் நிலை வர வேண்டும்.

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  தக்காளி...பெரும் கொள்ளையா இருக்கும் போலயே......மைசூரு சுந்தரம்...இருக்கியாப்பா...? அழிபசி அன்னபூரணி சொத்து ...அனாமத்தா போகுதே.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement