Advertisement

சுதந்திர தினத்தில் ரஜினி கட்சி; நடிகைகள் மீனா, நமீதா ஆதரவு

சுதந்திர தினத்தன்று, புது கட்சி அறிவிப்பை வெளியிட, நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளார். கட்சிக் கொடியை, இரு தினங்களுக்கு முன் வடிவமைத்துள்ளார். ரஜினி கட்சியில் சேர, நடிகைகள் மீனா, நமீதா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரஜினி,
சமீபத்தில், தன் ரசிகர் களை சந்தித்தார். அப்போது, 'அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் போருக்கு, ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும்' என, அழைப்பு விடுத்தார்.

புதிய கட்சி அறிவிப்பு
இரு தினங்களுக்கு முன், வெளிநாடு சென்று உள்ள தொழிலதிபர் ஒருவரிடம், ரஜினி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, தன் கட்சிக் கொடியையும், அதில் இடம்பெறும், 'லோகோ'வையும் தெரிவித்துள்ளார். ஆக., 15ல், சுதந்திர தினத்தன்று, புதிய கட்சியின் அறிவிப்பை, அவர் வெளியிடத் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து, தனக்கு நெருக்கமான பத்திரிகை ஆசிரியரிடமும், ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதற்கிடையில், நடிகர், நடிகையரும், ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களில், நடிகைகள் மீனாவும், நமீதாவும், ரஜினி கட்சியில் சேர தயாராக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், ரஜினி கட்சி துவங்கினால், அதில் இணைவதற்கு, அ.தி.மு.க., முக்கிய புள்ளிகளும், துாது விடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா.,வை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும், ரஜினி கட்சிக்கு தாவலாம் என, கூறப்படுகிறது.

- நமது நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து (238)

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அன்னை நமீதா கட்சியினர் அன்று ரஜினி கட்சியினருடன் இணைவார்கள்..

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  Sankar .. trichy .. "யாதும் ஊரே ..யாவரும் கேளிர் " என்று கணியன் பூங்குன்றன் பாடியபோது மொத்த இந்தியாவிலும் தமிழ் தான் முதல் மொழி.. அப்போது கன்னடம் தெலுங்கு, மலையாளம் எல்லாம் கிடையாது..இன்று அப்படி இல்லை

 • மாரிமுத்து.க - சென்னை,இந்தியா

  எல்லாம் மாயை...

 • babu - tiruchi,இந்தியா

  படத்துக்கு பூஜை போட முடியாத போது தான் மக்களிடம் அரசியலில் பூசை வாங்க வந்த பூனை குட்டி

 • babu - tiruchi,இந்தியா

  அரசியல் சுத்த பட வேண்டும் என்று மேடைகளில் மக் களுக்கு முன் பேச வக்கு இல்லாமல் கேமரா முன் பேசி பழகி மக்கள் இதற்கெல்லாம் கண்டு கொள்ளாமல் போனால் எகிறுவதும் அறிக்கைகள் விடுவதும் பின்னர் மக்கள் கோப பட்டால் நடிப்பது எனது தொழில் சொன்னதை பேச வேண்டியது நடிகனின் கடமை என்று பிதற்றுவதும் வாடிக்கை யானது. இருக்கட்டும். தற்போது சிஸ்டம் சரியில்லை என்றதற்கு முன் நடிகர்கள் தங்கள் இஷ்டம் போல் நடித்ததை எல்லாம் மறந்து விட்டார்கள். நடிப்பு கோடிகள் ரசிகர் மன்றங்கள் டிரஸ்ட் பினாமிகள் இருக்கட்டும். ஒரு நடிகையோ நடிகனோ சினிமாவில் செய்யும் சேஷ்டையை ஒரு சாதாரண இளைஞனோ செய்து விட்டால் மக்கள் சொல்ல போவது என்ன ? பொருக்கி ரவுடி . அதே சமயம் சட்டத்தின் படி பார்த்தால் ஒழுங்கீநம் நடிகன் அடிப்பான் பந்தாடுவான் வெட்டுவான் குத்துவான் கொலை கூட காட்சியில் பார்க்கலாம. அங்கு சட்டமும் காவலும் தடங்கலாக வராது . ஆனால் வசனம் மட்டும் டப்பிங்கில் சத்தமாக வரும் . மொத்தத்தில் இப்படி தான் சம்பாதிக்க வேண்டும் என்பது போய் எப்படியாவது எதுக்கெட்டால் என்ன? யார் வேண்டுமானாலும் வரலாம் . வரட்டும் மக்கள் மன்றத்தில் வந்து அசிங்க பட்டு. இசையுடன் அரசியல் மக்களிடம் வசை பேசலாம் . பதில் நூற்றுக்கு ஒன்று

 • sankar - trichy,இந்தியா

  சீமான் அன்புமணி போன்றவர்கள் தமிழர்கள் என்று சொல்லி கொள்ளலாம் . ரஜினி மராட்டியர் தான் . ஆனால் அவர் தமிழ் நாட்டின் மாப்பிள்ளை . மகனை விட மாப்பிள்ளைக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும் . கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க சீமான் . ரஜினியை வர கூடாது என்று சொல்ல எவனுக்கும் எவருக்கும் தகுதி இல்லை முடிந்தால் மோதி ஜெயித்து கொள்ளுங்கள் . இல்லாவிட்டால் ஓரமாக பொய் உட்காருங்கள்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஒருவர், அனைத்து விதத்திலும், யோக்கியர், நேர்மையாளர், நாணயஸ்த்தர், நல்லவர், வல்லவர், மக்கள் மீது அக்கறை கொண்டவர், வரி ஏய்ப்பு லஞ்சம் ஊழலற்றவர், மாநில திட்டங்களை முன்னெடுத்து செல்பவர், சக மனிதரிடம் பேதங்கள் பார்க்காதவர், உயர் பதவியிலும் பண்பை கடைபிடிப்பவர் etc. என்று பொருந்தி வரும் தலைவர் எவரேனும், தமிழகத்தை ஆள்வதற்க்கு வந்தால், அது சிறப்பானதாக இருக்கும்தானே?.

 • சுதர்ஸன் - kathiramangalam

  ரஜினி அரசியலுக்கு வருவது சரியாக இராது எனக்கு தோன்றுகிறது.அவரது நல்ல பெயரையும் அவரே கெடுத்து கொண்டிருக்கிறார்

 • SaiBaba - Chennai,இந்தியா

  ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்பவர்களின் கவனித்திற்கு - வேற எந்த செய்திக்காச்சும் இத்தனை கமெண்ட்ஸ் கொட்டுதா? ரஜினி அரசியலுக்கு வர்றார் என்றதும் வேண்டியவன் வேண்டாதவான் எல்லாரும் இங்க தான் இருக்காங்க.

 • bal - chennai,இந்தியா

  ஏனப்பா. இளைஞர்களே இல்லையா இந்த தமிழ் நாட்டில் முதல்வராக. ஓய்வு பெற்றவர்களை எல்லாம் ஏன் அனுமதிக்கிறீர்கள்.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  விருப்புபவர்கள் அரசியலுக்கு வரலாம், திரு ரஜினி அரசியலுக்கு வரட்டும். இப்போதைய நிலையில் அ தி மு காவிற்கு திறமையான தலைமையை அம்மா விட்டு செல்லவில்லை. சசிக்கலா தலைமை ஏற்கும் வரை சற்று அக் கட்சி தொண்டர்களுக்கு குழப்பங்கள் இருக்கும். இப்போது அவர்களை தலைமை ஏற்பதற்கு ஆள் தேவைப்படுகின்றது. திரு ரஜினி வந்தால் அக்கட்சியிலிருந்து 10 சதவிகிதத்தை கைப்பற்றமுடியும். பொது மக்கள் வாக்குகளில் 5 சதவிகிதம் கிடைக்கலாம். கூட்டணியை பொறுத்து சில சதவிகிதம் கிடைக்கலாம். மொத்தத்தில் 15 - 20 சதவிகிதம் வரை பெற்று கௌரவமான இடத்தை பெறமுடியும்.

 • m.viswanathan - chennai,இந்தியா

  இந்த நாடு திருந்த வேண்டும் என்றால் கொஞ்சம் கடுமையாக இருந்தாலும் இராணுவ ஆட்சி ஒரு 10 ஆண்டுகளுக்கு தேவை . கண்டா அரசியல்வாதிகள் அராஜகத்தை விட இராணுவ அராஜகம் நம்மை பாதித்து விடாது . நாம் தான் அனைத்தையும் சகித்து பழகி விட்டோமே

 • SaiBaba - Chennai,இந்தியா

  தமிழனாய் பார்த்து திருந்தா விட்டால் ஊழலை ஒழிக்க முடியாது

 • K.Sugavanam - Salem,இந்தியா

  44 வருஷம் தமிழ் நாட்டுல இருக்குற ரஜினிகாந்தின் "தமிழை" விட 23 வருடம் கர்நாடகாவில் இருந்த ரஜினியின் "கன்னடம்", "ச்சன்னாக இதே"..அது ஹௌது ?

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Conductor Training Institute ஒன்ன ஆரமிச்சி அதுக்கு "மொதல்வர்" ஆயிடலாம்..... சீமானு, பாரதிராசா இவனுவெல்லாம் silent ஆயிடுவாய்ங்க.....

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  குஷ்பூ ?

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  We can not judge any one as Nallavan or Kettavan unless we give money to him whether he will return it with honest or not.So this man also.Normally the cenima heroes after they lost their market in ceni field and wanted to save and protect the uncounted money in safe way entering in politics in pretext of serving to the people. These all their gimmicks and magics of the so called actors. So many actors with the same intention started political parties in our state and neighbouring states and enjoyed few terms and got too much egos and proved and wanted to sit on CM'S chair in one go and failed tottaly and now they all addressless political clowns. The same fate this man also will meet in coming days if he starts a new political party in Tamil nadu now. The Visil Aduchann kunjugal only can not elect this man as CM of our state but majority of the people of our state. The all old and market loosened actors can only give him morale support but they can't make him CM of our state with their merely support.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  வைகோ தூது விடலியா ?

 • Suresh Ulaganathan - Bangalore,இந்தியா

  ரஜினி முதல்வர் பதவிக்கு வந்தால் , உடனே பா ஜ க காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து விடும். விவசாயிகள் கடன் ரத்து செய்து விடுவார். அவரின் அமைச்சர்கள் , அரசாங்க ஊழியர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள், மது அறவே இருக்காது. மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும். இப்படி எண்ணற்ற செயல்கள் ரஜினி வந்தால் நடக்கும் என்று எதிர் பார்க்கலாம். மாறாக ரஜினி வந்தால் நடிகர் சங்கம் கட்டடிடம் கட்டப்படும் , முன்னனணி நடிகர்களின் படங்கள் திருட்டு சி டியில் வராமல் தடுக்க படும் , நடிகர்களின் குடும்ப வாரிசுகள் கோடி கோடியாக சம்பாதிப்பார்கள் , அமைச்சர்கள் தவறு செய்தால் உடனே தண்டனை , விஜயகாந்தை போல பண்ரூட்டி அருகில் வைத்து கொண்டு ஆட்சி நடத்துவார் என்று யாரும் எண்ண வேண்டாம் ரஜினி ஒரு நேர்மையான வருமான வரி செலுத்துகின்ற சுத்தமான ஒரு இந்தியன் 62 வயதை கடந்தும் மக்கள் பணி செய்ய வந்துள்ளார் . ஏன் தமிழர்கள் தடுக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் தங்கள் வேலையை பார்க்கட்டும். வழி விடுங்கள்

 • GANESAN - chennai,இந்தியா

  2047 சுதந்திர தினமா ????

 • M ARAN - thanjavur,இந்தியா

  இருக்கின்ற ஒரு நல்ல நிர்வாக திறமை உள்ள, தமிழ்நாட்டை காப்பாற்ற தகுதி உள்ள ஒரு தலைவரை தேர்தெடுக்க துப்பு இல்லாத தமிழக மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கும் கேவலமான தமிழ் சமூகம் அதை விட முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் சில புறம்போக்கு ஊடகம் .....................இங்கேயே போகும் வருகிறவனை தூக்கி பிடிக்கும் தமிழகம் இருப்பவனை காலை போட்டு மிதிக்கும் தமிழகம்

 • indran - Chennai,இந்தியா

  ஒருசிலர் ரஜினியை பார்த்து உன்னுடைய சம்பளம் எவ்வளவு என்று கேட்க்கிறானுங்க, அந்த அறிவு கெட்ட முண்டங்களுக்கு, வருமான வரித்துறை இருக்கு அது பார்த்துக்கொள்ளும், உன்னோடைய வருமானம் எவ்வளவு என்று யாரிடமாவது சொல்வீர்களா, கட்சி நடத்துறோம் என்று சொல்லி அப்பாவி மக்களிடம் ஏமாற்றி பொழப்பு நடத்தும் எவனுங்கெல்லாம் அடுத்தவர்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கு. தலைக்கீழா நடந்தாலும் உங்களால் மக்களிடம் அன்பை பெற முடியாது ஆனால் வம்பை பெறமுடியும், தத்துவம் சொல்லிட்டா ஆட்சி பண்ணமுடியுமா அல்லது மக்களிடம் அன்பை பெறமுடியுமா, தத்துவத்திற்கும் ஆட்சி செய்வதற்கும் என்னங்கடா சம்மந்தம். 4 பழமொழி, 4 திருக்குள், 4 பாரதியார் பாட்டு போதுமா நாட்டை ஆள. மற்றவர்களிடம் அன்பாக இருக்கவேண்டும், முதலில் அதை கற்றுக்கொள்ளுங்கள், மனிதாக இரு, இந்தியனாக பழகு, தமிழனாக வாழு. இவனுக மட்டும் தான் தமிழன் மற்றவணுங்கெல்லாம் இங்கிலீஷ்காரனுங்களா?

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  டாஸ்மாக் நாட்டில் முதல்வர் ஆக வேண்டுமானால் அவன் தமிழனாக இருக்கக்கூடாது, எம்.எல்.ஏ. எம்.பி. மந்திரி வரை அடிமை கூலித்தமிழனாக மட்டுமே முடியும் என்பது 1967 ளிலிருந்து கண்கூடாகத் தெரிகின்றது. நடிகை என்றால் அதே கதை தான் ஒரு தமிழச்சி மேலே வர முடியாது ஒரு நடிகையாக. என்ன ஒரு பரந்த மனப்பான்மை உடையவர்கள் இந்த ஒரு வோட்டுக்கு ரூ. 5000 வாங்கும் டாஸ்மாக் நாட்டு மக்கள்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  டைமிங் சரியில்லையே? ஆகஸ்ட் 15 என்று சொன்னால் நினைவுக்கு வருவது இந்தியா இரண்டு துண்டாக்கப்பட்ட தினம் என்று. அதே போல் ரஜினி கட்சியும் ஆகும். ஆகவே ரஜினி யோசி, செயல்படு.

 • தமிழன் - சென்னை,இந்தியா

  இவர்கள் அரசியல் மேதை, இவருக்கு முதல்வர் பதவி. மீனாவும், நமீதாவும் அறிவியல் மற்றும் பொருளாதார மேதைகள் இவர்களுக்கு அமைச்சர் பதவிகள். ஆஹா, நினைத்தாலே புல்லரிக்கிறது.

 • VOICE - CHENNAI,இந்தியா

  முன்பு ஒரு சமயம் ரஜினி ரசிகரிடம் 5 ரூபாய் 10 ரூபாய்க்கு ரஜினி படம் போட்ட டாலர் கை காப்பு வித்த குடும்பம் தானே இவர்கள். தமிழ்நாட்டிற்கு வந்த சோதனை, வாங்க அரசியலுக்கு வச்சு செய்வாங்க 😊 மக்கள்.

 • Narendran Mohan - Chennai,இந்தியா

  எவன் வந்தாலும் ஒன்னும் ஆக போறதில்லை. மக்கள் நாமதாண்ட நேர்மையா இருக்கனும். இங்க கமெண்ட் போடும் எல்லாரும் முதல்ல பணம் வாங்காம வோட் போறிங்களா. தனி மனித ஒழுக்கம் எப்போ எல்லார்கிட்டயும் வருதோ அப்பதான் நாடு உருப்படும். அடுத்தவன் வந்துதான் காப்பாத்தணும்னு அவசியம் இல்லை.

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  இப்பவாவது கர்நாடகாகாரன் அங்கே இருந்து கொண்டு காவேரி தண்ணீர் தர முடியாது என்கிறான்.. இவர் முதல்வராயிட்டா தைரியமா இங்கே சென்னைக்கே வந்து காவேரி தண்ணீர் தர முடியாதுன்னு சொல்லிட்டு போவானுங்க..

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  கட்சிக்கும் ரசிகர்களுக்கும் கவர்ச்சி வேணாமா ...அதுக்குதான் இவங்க எல்லாம்

 • Indhuindian - Chennai,இந்தியா

  He didn't come to the rescue of his daughter and son in law when financial defraud cases were initiated against them He is not known to be benevolent and chari Does anyone expect him to sp his money in politics Tamils Awake and don't get fooled by these sort of characters

 • praj - Melbourn,ஆஸ்திரேலியா

  sss

 • balasubramanian - coimbatore,இந்தியா

  சுட்டுப்போட்டாலும் கர்நாடக மாநிலக்காரர் தமிழனுக்கு நல்லது செய்ய மாட்டார் .ஆனால் இப்ப இருக்கும் ஆட்சியாளர்களை விட சிறப்பாக செயல்படுவார் என்று கண்டிப்பாக நம்பலாம்

 • ரங்கன் -

  அப்புறம் என்ன? நமீதா நிதியமைச்சர்...மீனா கல்வியமைச்சர்...தனுஷ் உதவி முதலமைச்சர்.... ஜனகராஜ், மகேந்திரன், கவுண்டமணி, செந்தில், வஇவேலு, விவேக் போன்ற சினிமா எடுபிடிகளுக்கும் அமைச்சர், வாரியத் தலைவர் பதவிகள்... தமிழகம், லிங்கா, சிவாஜி படத்துல வர்ர மாதிரி ஓகோன்னு எங்கேயோ போயிடும்... தமிழனுக்கு கனவுகளுக்கு பஞ்சமில்லை...

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  வரட்டுமே, முதலமைச்சர் ஆகட்டுமே, ஏன் வருவதற்கு முன்பே நெகட்டிவ் கமெண்ட்ஸ், என்னவோ இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்த முதலமைச்சர்கள் எல்லோருமே பெரிய அறிவாளிகள் போலவும், நேர்மையானவர்கள் போலவும், தூய்மையானவர் போலவும் லஞ்சம் ஊழல் அண்டாதவர்கள் போலவும், இப்போது இவரு வந்தால் ஆகாது என்பது போலவும் குதிக்கவேண்டாம். அப்படியே மக்களும் கட்சி, அதன் கொள்கை, அதனால் வாழ்க்கைத்தரம், தொழில்வளம், விவசாயம், சுகாதாரம், கல்வி, சமூக நலம், சுற்றுசுசுழல் மேம்படுமா என்று ஆராய்ந்து பார்த்து வாக்களிப்பதை போல எதற்கு இந்த பம்மாத்து. வரட்டும், வந்து சர்விஸ் பண்ணட்டும், எத்தனை பேர் வந்தாலும் நாற்காலி ஒன்றுதான். தகுதி இருக்கோ இல்லையோ விஜயகாந்த், ஸ்டாலின், அன்புமணி, பன்னிர்செல்வம், சீமானெல்லாம் ஆசைப்படும்போது ரஜினிகாந்த் வந்தால் என்ன.வரட்டும், வந்து மக்களை சிந்திக்கட்டும், நாற்காலியை தருகிறார்களா, வேட்டியை உருவிக்கிட்டு துரத்துறாங்களா என்று பிறகு பார்க்கலாம்.

 • Jaganathan Vijayakumar - Chennai,இந்தியா

  Both Print and visual media are projecting elderly and useless Citi stars after their looting in cine industry & lack of cine roles in politics for money sack. Instead these media blocking good leader like Dr.Anbumani of PMK for the welfare of Tamilnadu like Yogi Adhiyanath of UP.

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  ஐயா அன்பு அவர்களே.நீங்கள் சொன்னதை எல்லாம் கன்னடக்காரனுக்குத்தான் சொல்லணும்..தமிழர்களின் பரந்த மனப்பான்மையால் தான் வெளி மாநிலத்தவன் எல்லாம் இங்கே சொகுசாக நடமாடுகிறான்.. ஒரு வருடம் நீங்கள் பெங்களூரு இல்லை மும்பை சென்று வசித்து வாருங்கள்....அங்கெல்லாம் நீங்கள் உங்களை இரண்டாம் தர குடிமகனாகத்தான் உணர்வீர்கள்...இங்கே வெளி மாநிலத்தவர்கல் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியும் இல்லை ?? அது நமது பரந்த மனப்பான்மையால் தான்...

 • A/N S.BALAMURUGAN - Salem,இந்தியா

  மக்களால் பெற்ற செல்வாக்கையும் , பணத்தையும் மக்களுக்கு கொடுக்க மனமில்லாதவன் தான் அரசியலுக்கு வரமுடியும் என்பதால் இவர் அரசியலுக்கு வருவார் என்பது மட்டும் புரியுது .

 • THOMAS LEO - TRICHY,இந்தியா

  இன்னுமா இந்த உலகம் நம்புது ... அட முட்டாளுகல ..... நாட்டுல எவ்வளவு பிரச்னை இருக்கு ....... வேலை போய் பாருங்கப்பா ......... .. கட்சி .... மண்ணைக்கட்டி......

 • Senthilkumar - Chennai,இந்தியா

  போதும்...தமிழ் நாட்டை நடிகர்கள் ஆண்டது போதும்...50 வருட திராவிட ஆட்சியை ஒழிப்போம். தமிழரையே ஆள வைப்போம். இனி ஒரு போதும் வேற்று மாநிலத்தவரை தமிழகத்தை ஆள விட மாட்டோம்...அடிமையையை இருந்தது போதும் ..பொங்கி எழு தமிழனே..வெல்வோம் தமிழராய்...வாழ்வோம் தமிழராய்..வந்தாரை வாழ வைப்போம்...ஆனால் இனிமேல் தமிழ்நாட்டை ஆள விட மாட்டோம்...

 • SUDHARSANAN - COIMBATORE,இந்தியா

  அந்த பத்திரிகை ஆசிரியர் யாருனு சொன்ன கொஞ்சம் பரவாயில்ல.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  நேரம் கெட்டுடிச்சி..முன்பு விஸ்கி காந்த்.....இப்போ கஞ்சா காந்த்....அவ்வளவுதான் வித்தியாசம் எதுவும் இல்லே...

 • Varun Ramesh - Chennai,இந்தியா

  கட்சி தொடங்கட்டும் ரஜினி. அவர் நிர்வாகத்திறன் கொண்ட நேர்மையாளரா என்பதெல்லாம் இப்போதைய பிரச்சனையல்ல. ஆனால், காவிரி பிரச்சனை, நீடித்து வரும் ஒரு நீண்ட கால பிரச்சனை. இன்றைக்கு தன்னை பச்சை தமிழன் என்று பறைசாற்றிக்கொள்ளும் கன்னடரான ரஜினி, அரசியலுக்கு வந்து, ஒரு வேளை ஆட்சியை பிடித்தால், காவிரி பிரச்னைக்கு தீர்வு காண கர்நாடகத்தை எதிர்த்து போராடுவாரா? அல்லது தனது கன்னட பாசம் மேலோங்கி செயல்பட மறுப்பாரா? ஏனெனில், இனி தமிழகத்தை எந்தக்கட்சி ஆண்டாலும் அண்டை மாநில பிரச்சனைகளில் தமிழன் ஏமாளியாக்கப்படுவதை சகித்துக்கொண்டிருக்க முடியாது. அதற்கு எதிரான போராட்டத்தை எந்த கட்சி துணிந்து முன்னெடுக்கிறதோ அந்த கட்சி தான் தமிழகத்தை ஆள வேண்டும். தமிழன் நடித்தான் என்பதற்காக ஒரு திரைப்படத்தை கூட அனுமதிக்க மறுக்கும் கன்னட வெறியர்களிடம் இனியும் தமிழன் சகிப்புத்தன்மை என்ற பெயரில் ஏமாந்துகொண்டிருப்பது நியாயமில்லை.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ரஜினி வரரோ இல்லையோ , இந்த சூழ்நிலை பல கட்சிகளின் உண்மை நிலைபாட்டை வெளிச்சம் போட்டு காட்டுகிறது ? எவ்வளவு வெறிபிடித்து திரியும் கூட்டம் இன்னும் இந்த technology யுகத்தில் தமிழன் என்ற போர்வையில் சுற்றி கொண்டு இருக்கிறது. நம் தமிழ்நாட்டுக்கு தற்போது ஊழல் அற்ற/தன்னலம் பாரா /பாகுபாடு இல்லாத/சுற்றும் அரவணைத்து நடக்க கூடிய ஆளுமை தேவை, அது எவரிடம் உள்ளதோ அவர்கள் ஆதரிப்பது நம்முடைய ஸ்மார்ட்னெஸ் அடங்கி இருக்கிறது. அதை ரஜினி செய்யமுடியும் என்றால் ஒரு வாய்ப்பு கொடுப்பது தவறில்லை. அனைத்து தரப்பு மக்களுக்கு நன்மை நடக்கணும் நினைக்கும் உள்ளம் இருந்தால் போதும்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  தமிழக கூத்தாடிகள் முன்னேற்ற கழகம், அல்லது தமிழக திராவிட கூத்தாடிகள் முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்தால் சிறப்பு.

 • SaiBaba - Chennai,இந்தியா

  தன் தவற்றை ஒத்துக்கொள்பவன் மஹாத்மா ஆகிறான். தன் தவறுகளை மேடையேறி ஒத்துக்கொள்ளும் தைரியம் ரஜினிக்கு இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு இருந்ததா? கருணாநிதிக்கு இருந்ததா? சோனியா ஒத்துக்கொள்ளட்டுமே, ஆமாம் நான் ஊழல் செய்தேன் என்று. ரஜினி வெளிப்படையான மனிதர். அவர் அரசியலுக்கு வர நாம் தான் தவம் செய்திருக்க வேண்டும். ரிஷி மூலம் நதி மூலம் பார்க்க கூடாது. நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும். நமக்கு நிறைய நல்ல மனிதர்கள் தேவை. இருக்கும் கொஞ்ச நஞ்ச நல்ல மனிதர்களையும் நாற வாயால் ஒதுக்கி விடாதீர்கள்.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  தனிக்கட்சி தான், ஆனால் பிஜேபியுடன் கூட்டு. இவர் முதலே அரசியலுக்கு வந்திருந்தாள் இந்தளவு எதிர்ப்பு இருந்திருக்காது, இப்போ வந்த சூழ்நிலை சரியில்லை, இவரை ஆட்டுவது பிஜேபி தான், இவர் டைரக்டர் சொன்னபடி நடித்துதானே பழக்கம். என்ன டைரக்டர் டிலிலியில் இருந்து ரிமோட் கொண்ட்ரோலில் ஆட்டுவிக்கிறார், ஆடாவிட்டால் வரும் வருமான வரி துறை,

 • SaiBaba - Chennai,இந்தியா

  முதல்ல ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரான்னு ஒரு விவாதம். அடுத்தது ஆகாதவங்க போகாதவங்க கிட்டேயெல்லாம், ரஜினி அரசியலுக்கு வரலாமா வேண்டாமான்னு ஒரு விவாதம். இதெல்லாம் மக்களுக்கு புரியாமல் இல்லை. எங்க நான் ஒன்னு கேக்கறேன், நம்ம தீபா அவங்க புருஷன் மாதவன் எல்லாம் கட்சி ஆரம்பிச்சாங்க அரசியலுக்கு வந்தாங்க, அப்போவெல்லாம் இப்படி கூவிகூவியா விவாதம் நடுத்துனீங்க? ரஜினி அரசியலுக்கு வருவதை முடிவெடுப்பது அவரின் விருப்பம். அவருக்கு ஓட்டளிப்பதா வேண்டாமா என்று முடிவெடுப்பது மக்களின் விருப்பம். இடையில் ஆகாதவர்களுக்கும் போகாதவர்களுக்கும் வேலை இல்லை. ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு சீமான் யாரு? இவரு ரஜினியைக்கேட்டுக்கிட்டா அரசியலுக்கு வந்தார் ? தைரியம் இருந்த ஒத்தைக்கு ஒத்தை நின்னு ரஜினியை தோக்கடிச்சு காமிக்கட்டும். எனக்கெல்லாம் சீமான் மேலையும் அவருடைய தமிழ் பற்று மேலையும் ஒரு மரியாதை இருந்திச்சு. ஆனா இப்போ ஒரு வாரமா அது குறைந்து விட்டது. மற்ற அன்புமணி, திருமா etc., பத்தி எல்லாம் நாங்கள் பேசக்கூட விரும்பவில்லை.

 • ராஜா -

  இவரெல்லாம் அரசியலுக்கு வந்து முதல்வராகிவிட்டால் வள்ளி படம் எடுத்த மாதிரி தான்

 • Vel - Chennai,இந்தியா

  கட்சி ஆரம்பிப்பதற்குள் கட்சிக்கு 2 கொள்கை பரப்பு செயலாளர்களா?

 • ராஜா -

  மக்களின் முன்னேற்றத்திற்கு என்ன திட்டங்களை வைத்துள்ளார்? அவரால் காவிரி நீர் கொண்டு வர முடியுமா? நதி நீர் இணைப்புக்கு ஒரு கோடி தருவதாக கூறி இருபது வருடங்கள் ஆகின்றது ஊரை ஏமாற்ற வேடம் போடுகிறார்

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  ரஜினி.. அவர் கட்சி கொடி.. லோகோ .. எல்லாமே காமெடிய யா இருக்கும் ...இவர் தேர்தலில் நின்னா கஞ்சா கருப்பு கூட இவரை தோற்கடிச்சுடுவார்.

 • IBRAHAM - RIYADH,சவுதி அரேபியா

  இவர் கட்சி ஆரம்பித்தால் விரைவில் காணாமல்தான் போவார் விஜயகாந்த் மற்றும் ராஜேந்தர் போல....இவருக்கு தமிழக மக்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்.

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  தன் ரசிகர்களிடம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்பக்கம் வராதீர்கள் என்று கூறிய ரஜினி அடுத்த நாளே முதலாளிகளிடம் பேசுகிறார். இதிலிருந்து இவர் எப்படிப்பட்டவர் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சினிமாவில் கோடி கோடியாக கறுப்பு பணம் வாங்கவில்லை என்று தான் வணங்குவதாக கூறும் ராகவேந்திரர் மீது கூட இவர் சத்தியம் செய்வார். ஒரு சதவிகிதம் தமிழக மக்கள் ஆதரவு கூட இல்லாமல்,தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையைப் பயன் படுத்தி கொள்ளைக்காரர்கள் துணை கொண்டு தமழகத்தை சூறையாட ரஜனி நினைக்கிறார். காவிரி பிரச்சினை, விவாசாயிகள் போராட்டம் மது அரக்கன் இவற்றைப் பற்றி வாயைத்திறக்காதவர், "ஜெ" மறைவுக்கு பின் "ஓடுமீன் ஓட ஒருமீன் வரும் வரை வாடியிருக்குமாம் கொக்கு " என்ற நிலையை எடுத்திருக்கிறார்". இந்தியாவை வெளிநாட்டுக்காரன் ஆள முடியாது. கேரளாவை மலையாளியும், கர்நாடகாவை கன்னடம் பேசுபவர்களும், ஆந்திராவை தெலுங்கர்களும் ஆளும்போது தமிழன் அல்லாதவர்கள் தமிழ் நாட்டை ஆள துணை போகுபவர்கள் துரோகிகளாகத்தான் இருக்க முடியும். இப்படிப்பட்ட துரோகிகள் தமிழ் நாட்டை சாதிய ரீதியாக கூறு போட தயங்கவும் மாட்டார்கள். இந்த நாட்டில் பணம் இருந்தால் போதும். பட்டம் பதவிகளை வாங்க முடியும். இப்போது பணமுதலைகள் துணையோடு முதல்வர் பதவி பெற ரஜனி துடிப்பது அவருடைய உள்மனத்தின் விகாரத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  உண்மையில் இவர் நேர்மை என்றால் சங்கர் படத்தில் நடிப்பதற்கு இப்போ எவ்வளவு சம்பளம் கொடுக்க பட்டது அது முறையாக வருமான வரித்துறையிடம் தெரிவித்து வரி செலுத்தினாரா அப்படி இல்லை என்றால் இவரும் அவர்களை போல தானே பின்னார் சிஸ்டம் சரியில்லை என்று கூற இவருக்கு என்ன தகுதி. இவர் ஆசையை பாருங்கள் இது நாள் வரை நான் தமிழன் என்று சொல்லாதவர் இப்போ நான் "பச்சை தமிழன் " நாம் என்னமோ சிகப்பு தமிழன் போல இது தான் பதவி ஆசை என்பது பதவிக்காக தமிழன் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார் இவர் சம்பாதித்த பணம் அனைத்தும் மும்பை கர்நாடக என்று தான் இன்வெஸ்ட் செய்துள்ளார் இருப்பதற்கு அமைதியான தமிழ்நாடு இன்வெஸ்ட் செய்வது வேறு மாநிலம் இவரை நாம் எப்படி நம்புவது, இகழ்ச்சி

 • Larson - Nagercoil,இந்தியா

  ரஜினியை எதிர்ப்பவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும், நல்ல அரசியல்வாதி வேண்டும் என்று விரும்பும் மக்களே, உங்களுக்கு யார் நல்ல அரசியவாதி என்று இன்று வரை தெரியவில்லையா, உங்களுடைய அறியாமையை புலம்பி பிரயோஜனமில்லை. நாம் ஓட்டு போட்டவர்தான் ஜெயிக்க வேண்டும், இதுதானே இப்போதைய பார்முலா, நல்லவரா கெட்டவரா என்பதெல்லாம் தெரியாது, நான் ஓட்டு போட்டவர் ஜெயித்தார் என்று அனைவரிடமும் மார் தட்டி கொள்ள வேண்டும். இப்படியாகிவிட்ட அரசியலில் நல்ல அரசியல்வாதி வேண்டும் என்று கூப்பாடு போட்டால் மட்டும் போதாது, சிறு துரும்பையாவது சமுதாயத்தில் கிள்ளிப்போட்டு நல்லவரை அனைவரும் ஒன்றாக தேட முயற்சிக்க வேண்டும், புதிதாக அரசியலுக்கு வருகிறவர்களுக்கு வழிவிட்டு நல்லவர்களை கண்டறிவோம்..

 • KarthikRadhakrishan -

  உங்களை தமிழன் இல்லை என்று கூறுகிறார்கள், அப்புறம் எதற்கு ஐெயலலிதா, எம். ஐி. ஆரை ஆளவிட்டார்௧ள்.

 • KarthikRadhakrishan -

  ரஜினி சார், இவங்க இப்படி தான். தமிழன், தமிழன் என்று செல்லி இவர்களும் செய்ய மாட்டார்கள். மற்றவர்களையும் செய்ய விடமாட்டார்கள். நீங்கள் அரசியலில் துணிந்து இறங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

 • Rajathiraja - Coimbatore,இந்தியா

  பதவி இல்லாமலேயே வளர்த்த நம் நாட்டிற்கு சேவை செய்து களைத்து போய் இப்ப பதவி மூலம் மேலும் தீவிரமாக தமிழ்நாட்டிற்கு சேவையை தொடர வரார் போலும்.

 • Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஏம்பா நல்லா இருந்த மனுஷனை உசுப்பி விட்டு அசிங்கப்படுத்துறீங்க ...ரஜினி அரசியலுக்கு வருவது அவர் விருப்பம் ..ஓட்டு போடுவது மக்கள் விருப்பம் ...வந்தா மலை போனா ...அவரு சம்பாரிச்ச காசை அழிக்க எவனோ திட்டம் போட்டு கிளப்பி விட்டுட்டான்...பாவம் ..அட்வைஸ் பண்ண சோ இல்லாம போனது ரஜினிக்கு பெரிய இழப்பு தான்...

 • T.Ramanathan - Colombo,இலங்கை

  Rajini Sir, if you have decided to get lost no force on earth can stop you. All the best.

 • Ganesh - Chennai,இந்தியா

  என்னை பொறுத்த வரை அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும், பல முனைப்போட்டியும், அணைத்து சமூக மக்களின் பிரதிநித்துவமும் சட்டமன்றத்தில் இருந்தால் மட்டுமே ஜனநாயகமும், நாடும் நன்றாக வளரும். ஜெயலலிதா என்ற தனி மனிதர் இருந்திருந்தால் இன்று டாஸ்மாக் மூடிய வேகம் நடக்குமா? மணல் அள்ளி விற்க அரசு முடிவெடுத்துருக்குமா? ஜல்லிக்கட்டு போராட்டமும் அந்த விளையாட்டும் நடந்திருக்குமா? இன்று பள்ளி கல்வித்துறையில் ஏற்படும் மாற்றம் நடந்திருக்குமா? ஒன்று நடந்திருக்கும் 1 ரூபாய் இட்லியோடு கொஞ்சம் கொத்தமல்லி சட்னி போட்ருப்பாங்க, நீங்களும் வாங்கி நக்கிட்டு அம்மா வாழ்கன்னு சொல்லிருப்பீங்க. ரஜினி என்ற தனி மனிதர் பின்பு போக சொல்லவில்லை, ரஜினியும் வரவேண்டும் என்று தான் சொல்கிறேன்

 • vinu - frankfurt,ஜெர்மனி

  மீனா கேரளா , நமீதா வடநாட்டு பெண்,ரஜினி மராட்டி/ கர்நாடக சூப்பர் காம்பினேஷன்.கண்டிப்பா நீங்க கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கணும். உங்களுக்கு ஆப்பு அடிக்கதை பார்த்து உன்னோட அல்லக்கைகள் ஏழு எட்டு ஜென்மத்திற்கு வாய் திறக்க கூடாது. நாங்கள் போருக்கு ரெடி. நீ ரெடி யா.உனக்கு தமிழனை பார்த்தால் கேனையான தெரியுதா.

 • Stalin - Kovilpatti,இந்தியா

  கருமம் எதோ தொழில் அதிபராம் அப்புறம் admk ல உள்ள மராட்டிய பெண் நமிதா , ஆந்திர பெண் மீனா நல்ல வாங்கடா டேய் பணம் உங்க சேவைல தீய வைக்க

 • Ranjith J - Coimbatore,இந்தியா

  Please do not come to politics, if want to do any good things for tamilnadu. Plz do like kamal sir, Rajini is cinema hero not a real hero.

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  மகிழ்ச்சி...நெகிழ்ச்சி...

 • ArunDasDev -

  ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்னால் அவர் தமிழ் மக்களுக்கு ஆதரவாக அவர் ஏதேனும் ஒரு பிரச்சனைக்கு நேரடியாக குரல் கொடுக்க வேண்டும்.. ஆனால் அவருக்கு அந்த தைரியம் இல்லை.. அவர் வழக்கம் போல் இமயமலைக்கு சென்றுவிடுவார்

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் கூத்தாடிகளின் கையில் சிக்கி சீரழிந்து கிடக்கின்றது மக்கள் ஒரு நல்ல தலைவனை தேர்தெடுக்கும் சந்தர்ப்பம் வருகையில் இன்னொரு கூத்தாடியா ? இந்த கூத்தாடிகளின் கூட்டத்திற்கு மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும் மீண்டும் ஒரு நடிகனை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தால் இதை விட தமிழகத்திற்கு பெரிய தலை குனிவு ஒன்றும் இருக்க முடியாது ஒரு கூத்தாடியை ஒரு பெரிய கோடீஸ்வரனாக்கிய தமிழ் மக்கள் தம் நாட்டை முன்னேற்ற தெரியாதா? இந்த கூட்டத்தின் துணிச்சல் அவர்களிடம் இருக்கும் அளவிடமுடியாத பணமும் போகட்டுமே ஜன நாயகத்தையே விலை பேசுகிறது

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  வாழ்த்துக்கள்,நல்லதே நடக்கும்.

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  இந்தாளு 1 கோடி, லாரன்சு 1 கோடி அப்புறம் இவரோட அல்லக்கைகள் எல்லாம் 1 கோடி தர்றேன், தந்தேன் ன்னு வெத்து விளம்பரம் பண்ணும் கூட்டம். ஆக இனிமே எவனும் நடிகன் அரசியல் பக்கமே வராத அளவுக்கு இவருக்கு கொடுக்கும் எதிர்ப்பு மற்றவர்களுக்கு பாடமா இருக்கணும்.

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  ரஜினி கட்சி துவங்கினால், அதில் இணைவதற்கு, அ.தி.மு.க., முக்கிய புள்ளிகளும், துாது விடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா.,வை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும், ரஜினி கட்சிக்கு தாவலாம் என, கூறப்படுகிறது.

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  ஆக இந்தாலும் ஆள் புடிக்கும் அதே அரசியல் வேலைதானா?

 • Raghavan - Chennai,இந்தியா

  Most of the leaders started afraid of Rajini entering the Politics. It is unfortunate Cho Ramaswamy is no more... and had he been there, he would have categorically supported his entry into Politics. It is clear that he was just waiting for both Jayalalitha & Kaligner to retire from Politics and since this has happened, as also, majority of People think that Rajini is an honest individual with Chrishma almost equivalent to MGR/Jayalalitha, he would definitely sweep the poll, subject to - his floating a new party/ new symbol etc., without joining so called BJP. Please don't compare him with Vijayakanth, who lost his reputation, skill, capability and was not able to captilise his position by syncronising with Jayalalitha. Except a few leaders in TN, most of other leaders are not any mass support and hold only their members support, which cannot exceed even few thousands and hence Rajini is the only choice. He has to draw his master plan and come out publicly without afraid of these local leaders.... All the best Rajini

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  ரஜனியை நம்பி ஆதரித்து எதிர்த்து இத்தனை பேர் கருத்து எழுதி உள்ளீர்கள் .ஐயோ பாவம் . ஆகஸ்ட் மாதம் அவர் இமய மலையில் இருப்பார்.கேட்டால் ஆன்மீகம் பற்றி ஒரு அறிக்கை வரும் .

 • Balaji - Bangalore,இந்தியா

  எல்லோரும் MGR ஆகமுடியாது. வயது ஆன நடிகர்களுக்கு அரசியல் ஒரு பொழுது போக்கு.

 • Arjun - Chennai,இந்தியா

  'நமீதாவும், ரஜினி கட்சியில் சேர தயாராக இருப்பதாகத் தெரியவந்துள்ளது' - மச்சான்ஸ் எல்லாம் 'மகிழ்ச்சி' :-)

 • Power Punch - nagarkoil,இந்தியா

  இவர் மட்டும் ஆட்சிக்கு வந்தா. தமிழ் நாடு நாறிடும்.. பெங்களூரு சென்னையில் தலை நகர் ஆகிடும்.. இன்னும் நிறைய உடுப்பி ஹோட்டல் திறப்பானுங்க.. எல்லா வியாபாரிகளும் கர்நாடகாவிலிருந்து வந்து இங்கு தொழில் தொடங்குவாங்க.. அதில் எவனும் தமிழன் இருக்க மாட்டான்.. ஹிந்தியையம் கன்னடத்தையும் கட்டாய பாடம் ஆக்குவார்..காவேரி தண்ணீர் வரவே வராது.. தமிழ் தன சுய மரியாதையை முழுவதும் இழந்து மற்ற மாநிலத்தவர் குறிப்பாக கன்னடத்தான் சிரிக்கும் அளவிற்கு இருக்கும்.. இவர் பிஜேபி யுடன் சேர்ந்து தமிழர்கள் மீது இரு முனை தாக்குதல் நடத்துவார்கள்.. தமிழகம் பின் தங்கியே இருக்க வேண்டும் என்று தான் இவர் செயல் படுவார். தமிழர்களே யோசியுங்கள்..

 • senthil - cbe,இந்தியா

  ஓ கதை அப்படி போகுதோ...

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  தொழிலதிபர் உள்ள வந்தாலே இவர் ஊழலற்ற ஆட்சி அமைத்து விடுவார் ??? ஹா..ஹா..ஹா.. ஏற்கனவே மத்தியில் தொழிலதிபர்கள் கையில் தான் ஆட்சி இருக்கிறது..நாடு படும் பாடு தெரியுமே

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  "ரஜினி கட்சி துவங்கினால், அதில் இணைவதற்கு, அ.தி.மு.க., முக்கிய புள்ளிகளும், துாது விடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா.,வை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும், ரஜினி கட்சிக்கு தாவலாம் என, கூறப்படுகிறது" இது செய்தியா ?? " என்று கூறப்படுகிறது " என்றால் யார் கூறினார்கள்..?? அப்படி எவனும் இவன் கட்சிக்கு தாவ மாட்டான்...

 • Pandiyan - Chennai,இந்தியா

  பக்கத்துக்கு மாநிலமான ஆந்திர மக்கள் திருந்திவிட்டார்கள் ...சினிமா தலைவர்களை ஒதுக்கி வைத்துவிட்டார்கள் ..அதற்க்கு ஒருநல்ல எடுத்துக்காட்டு ..தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவி அரசியலில் காலடியெடுத்துவைத்து பட்டபாடு நமக்கும் திரு ரஜினிக்கும் தெரியும் ..சிரஞ்சிவியிடம் இருந்து திரு ரஜினியும் ..ஆந்திரமக்களிடம் தமிழ்நாட்டு மக்களும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் ..கோடம்பாக்கம் TO கோட்டைக்கு என்ற நிலைமை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .. மக்களோடு மக்களாக பழகிய ..தமிழ்மக்கள் நிலைமை புரிந்த ஒரு நேர்மையான தலைவனிடம் தமிழ்நாடு ஒப்படைக்கப்பட்டால் நல்லது .. இதுநடக்குமா என்பது கேள்விக்குறியே ???

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ".....கண்டக்டர் வேலையும் கன்னட தேசமும் மறந்து போகுமா....?"

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  பொதுவாக, இன்றைய தமிழக அரசியலில், கருப்பு பணம் மற்றும் மனமெல்லாம் புத்தர் வேடம் பூண்டு வந்தால், அப்பாவி மிஸ்டர் பொதுஜனம் எப்படித்தான் உசாராவார்களோ?. அதனால, பொதுவாக தமிழக வளர்ச்சி என்பது அரோகரா கோவிந்தா எனலாம்.

 • Malaybhaskar -

  தமிழ் நாட்டு நிலைமை இப்படி ஆகிப் போச்சே...!!! காவிரி பிரச்சனை போது வாயத் திறக்காத ரஜினி தமிழ் நாட்டு மக்களை தூக்கி நிறுத்த போறாராம். இது எல்லாம் பிஜேபி லீலை மக்களே. ரஜினி உனக்கு அரசியல் பததி என்ன தெரியும். மக்களுக்காக நீ என்ன நல்லது செஞ்ச??!!!!

 • K.Sugavanam - Salem,இந்தியா

  யாருங்கோ அந்த தொழிலதிபர்? பலே கில்லாடியா இருப்பாரு போல..

 • K.Sugavanam - Salem,இந்தியா

  பெங்களூரு நண்பர்களை விட்டு சர்வே எடுக்க சொல்லி கீறாராமே...பாத்தீங்களா மக்களே.. அங்கேயும் கர்நாடகாவை தான் நம்புறாரு போல..

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  போர் என்று இவர் சொன்னது கட்சி ஆரம்பித்து தமிழர்கள் மேல் போர் தொடுப்பதை தான்.. தமிழர்களுக்கு இது இரண்டாவது சுதந்திர போர்

 • annaidhesam - karur,இந்தியா

  நடிகர்களிடம் தலைவரை தேடாதீர்கள் ..பிறகு அவர்கள் நடிக்கவே செய்வார்கள்.. படித்ததில் பிடித்தது...

 • Narayanan K S - Chennai,இந்தியா

  ஆனானப்பட்ட சிவாஜிகணேசன் ஜனதாதள கட்சியில் நிலைத்து நிற்க முடியவில்லை. ரசிகர்களின் பேச்சைக்கேட்டு அரசியலில் இறங்குவது சரியான முடிவாக தெரியவில்லை.

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  இருவரும் அவருக்கு இரு கண்கள் போல இருந்து செயல் படுவார்கள் ....அப்படித்தானே ரசிக சிகாமணிகளே

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஏற்கனவே தனுசால் தூக்கத்தை தொலைத்த ரஜனி இனி தூங்கவே மாட்டார்...

 • rajan -

  மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். தற்போதைய கட்சிகள் வளர விட மாட்டார்கள். மக்கள் ஆதரவு கிடைக்கும் கொள்கைகளை அறிவித்தால் வெற்றி பெறலாம்.

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  ஹும்.....கடைசி காலத்தில் கையில் உள்ள காசை செலவு பண்ண ஆசை வந்துள்ளது... செய்யட்டும்.. விஜயகாந்த்...... அரசியலில் காலூன்ற முடியவில்லை... அவரும் இருக்கிற காசை செலவு செய்தார். .எம்ஜிஆருக்கு பின் சினிமாக்காரர்கள் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை..ஜெயா எம்ஜியாரால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார்.. சினிமா நடிகையாக இருந்து நேராக அரசியலுக்கு வரவில்லை.. எம்ஜியாரும் திமுக தொடக்கத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டு வந்தார்.. ரஜினி ... இவர் அரசியலில் இருந்து ஒதுங்கி வந்தார்.. இவர் தமிழன் இல்லை அரசியலுக்கு வர கூடாது என்று சீமான் சொல்லுகிறார்..?. அவருக்கு இதை சொல்ல என்ன அருகதை உள்ளது.. தமிழ் நட்டு மக்கள் தான் இதை நிர்மாணிக்கணும்.. சீமான் அல்ல.. ரஜினியின் மனைவி தமிழ். மருமகன்கள் தமிழ்.. இதை விட வேறென்ன தகுதி வேண்டும்..?. குஷ்பூவை தமிழச்சியாக ஏற்று கொள்பவர்கள் ஏன் ரஜினியை எதிர்க்கணும்..?...இன பெருமை பேசி முக என்ன செய்தார்..? கொள்ளை அடித்தார்.. திமுக என்ற மாபெரும் இயக்கத்தை குடும்ப சொத்தாக மாற்றினார்.. இந்தஅரசியல்வாதிகள் தமிழினம் என்று பேசுவது கொள்ளை அடிக்க.. இனத்தை முன்னேற்ற அல்ல..

 • kj sethuraman - bangalore,இந்தியா

  Bad days are coming to TN and entrance of Rajani Kanth will destroy TN and already in Karnataka people say that if he supports TN in Kaveri water he will be boycotted in Karnataka. BJP will use him and discord him for ever. However he has a plenty of black money and many with black money are his friends. Means and Namithas are now going to rule TN. It is now citizen of TN to decide his entrance.

 • jay - toronto,கனடா

  காவேரி பிரச்சனையில் மௌனம் சாதிச்சது ,,, பீடாவில் உங்கள் இளைய மகள் அங்கத்தவர் இருப்பது ,,, மக்களிடையே கோபத்தை உருவாகும் ,,, இதுவே அரசியல் தலைவலியா மாறும் ,

 • aravind - chennai,இந்தியா

  வாழ்த்துக்கள், நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  வாயால் வடை சுடுவதில் வல்லவர்களான கழிசடை கழகங்களுக்கு ஐம்பது வருடம் கொடுத்தோம்....கண்ட பலன் என்ன...ஐந்து லட்சம் கோடி கடன்....நீர் மேலாண்மை பூஜ்ஜியம்....சாராயம் மட்டுமே ஆறாக ஓடுகிறது...இப்போது ஒரு வெற்றிடம்...இப்பவாவது நல்லவர்களை பதவியில் அமர்த்துவோம்....தமிழ் தேசியம், திராவிடம் பேசும் கயவர்களை விரட்டுவோம்....

 • sasi kumar - Doha,கத்தார்

  தமிழ் நாட்டிற்கு தேவை காட்சிகள் அல்ல. மக்கள் அரசியல் அறிவு பெற வேண்டும் . வெறும் பணத்திற்கு வோட்டு போடாமல் தங்களுது MLA தகுதி பார்த்து வோட்டு போடா வேண்டும் . Thiru.Sakayam. போன்றவர்கள் மக்களுக்கு விழிபுரனுவ செய்வது போல நிறைய பார் வேண்டும் .

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  ரஜினிக்கு அரசியலில் வர பல வருடங்களாகவே ஆசை உண்டு. ஆனால், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரையும் அவர் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் தற்போது இருவராலும் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம் இவருக்கு தற்போது சாதகம். எனவே அரசியலுக்கு வருகிறார். எல்லாம் சரி. இவர் அரசியலுக்கு வந்தால், என்ன என்ன செய்வார், எவ்வளவு நாட்களில் அவற்றை முற்றிலும் நிறைவேற்றுவார், ஊழல் இல்லாத அரசு மற்றும் அரசு ஊழியர் போன்றவற்றை உறுதியுடன் கூறிவிட்டு, பின்னர் வரலாம். வந்த பிறகு, செய்யமுடியாமல் முழிபிதுங்கி நின்று, பின்னர் ஆண்டவனை கைகாட்டி தப்பிக்க கூடாது.

 • SHANMUGM - Chennai,இந்தியா

  நாம் இதுவரை செய்த தவறு என்ன தெரியுமா ? சரியான தலைவனை உருவாக்க தவறியதின் விளைவுதான் கிட்டத்தட்ட ஒரு வருடமாக சனிபிடித்தார்ப்போல எவ்வளவு பிரச்சினைகள் . இனியாவது நல்ல தலைவர்களை கண்டு அவர்களுக்கு தோள்கொடுப்போம் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் இத்தோடு ஒழியட்டும் .இனியாவது ஜாதி ,மொழி ,மதம் ,இனம் பார்க்காமல் நமக்காக உண்மையாக இருக்க ஒரு தலைவனை உருவாக்குவோம் .

 • Velu Karuppiah - Chennai,இந்தியா

  இவர் கட்சி துவங்குவதற்கு முன் தமிழ்நாட்டில் உள்ள வறண்ட கம்மாய்களையும் ஊரணிகளையும் தமது ரசிகர் படையை வைத்து 2 மாத காலத்துக்குள் தூர் வாரி சுத்தம் செய்து தரட்டும்.5 லட்சம் மரக்கன்றுகளை பயிர் செய்யட்டும். குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை அந்த அந்த மாவட்ட ரசிகர்களைகளை குறைந்த பட்சம் செலவில் சீர் செய்யட்டும். சாலை ஆக்கிரமிப்புகளை காந்திய வழியில் ஒழுங்கு படுத்தட்டும். காவேரி மேலாண்மை அமைக்க குரல் கொடுத்து மிக பெரிய அறவழி போராட்டம் செய்யட்டும். இதை எல்லாம் செய்து விட்டு கட்சி ஆரம்பிக்கட்டும் நமக்கு ஒன்றும் நஷ்டமில்லை

 • Pannadai Pandian - wuxi,சீனா

  சினிமா பொழப்பு நாறிடிச்சு போலருக்கு அங்க துரத்தி விட்டுட்டாங்க இப்ப அரசியல்ல ஓடுது. விஜயகாந்த் மாதிரி பொழப்பு அரசியல் நாற போவுது என்பது உறுதி.

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  விதி வலியது... கடைசி காலத்தில் இவர் நிம்மதியாய் கழிக்க கடவுள் அருள் இல்லை போலும்... முன்பு ஒரு காந்து வந்து முட்டி மோதி பார்த்து ஆடி அசந்து போனார்... இப்போ ஒரிஜினல் காந்து ஒரு கை பார்க்கிறேன் என்கிறார்... பார்ப்போம் கூத்தை...

 • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

  கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் ...கிழவனைத் தூக்கி மனையில் வை என்பது போல் இருக்கே

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  இத்தனை வருடங்கள் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகள் என்னத்தை புடுங்கியது.... நாலரை லச்சம் கடனில் தமிழ்நாட்டை தள்ளியது....குடும்ப அரசியல் செய்தது, அடிமையாச்சி நடத்தியது, தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்கியது.. இதை தவிர வேறு என்ன செய்தது.....? நீங்கள் சகாயத்தை சேர்த்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.... செய்வீர்களா... செய்வீர்களா... செய்வீர்களா... அம்மா ஆன்மாவும் சாந்தியடையும்

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  கூத்தாடி கூட்டத்தை வைத்து கொண்டு ஜெயித்து விடலாம் என்று கனவு காணக்கூடாது. தமிழ்நாடு முன்னேற நல்ல சிந்தனைகளை சொல்லுங்கள் இளைய தலைமுறை உங்கள் பின்னால் வரும். சகாயம் அவர்களுக்கு பெரிய பொறுப்பைத் தந்தால் நீங்கள் தான் அடுத்த முதல்வர். கூத்தாடி கூட்டத்தை சேர்த்து கொண்டு கும்மி அடிக்கவேண்டாம், பிஜேபி யோடு சேர்ந்து தமிழ்நாட்டை நாசமாக்க நினைக்க கூடாது. தமிழ்நாட்டின் முக்கியமான தேவை ஊழலில்லாத, சமூக நலன் கொண்ட ஒரு தலைவன்.

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  இவரை சூப்பர் ஸ்டார் ஆகியதேய தவறு இப்போ cm வேறயா? ஒரு தமிழன் கர்நாடகாவில், கேரளாவில் cm ஆக வேண்டாம், ஒரு முன்னணி ஹீரோ வாக ஆக முடியுமா ? ஒரு டிவி காரன் கேட்க முடியுமா ? தமிழன் என்றாலே அடிமை ரத்தம் தான் போல . அதன் ஜெயா எல்லா தமிழரையும் காலில் விழ வைத்தார் .

 • Raju - jersi,யூ.எஸ்.ஏ

  பவர் ஸ்டார்,வடிவேலு மற்றும் விவேக் பயங்கர தமாஷ் தான் போங்க என்ஜோய் பண்ணுங்க மகிஸ்ச்சி

 • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

  மேல போட்டோல கருப்பு சட்ட போட்ட முதியவர் கை எடுத்து கும்புடுறாரே அந்த வயோதிகர் பேர் பேர் என்ன ? இந்த தள்ளாடும் வயதில் எதுக்கு இப்படி தலைக்கு மேல கும்புடுறாரு ?

 • Dynamo - Den Haag,நெதர்லாந்து

  தமிழர்களை வெளிநாட்டவர், அல்லது வெளி மாநிலத்தவர் தான் ஆள முடியும், அதுதான் தமிழகத்தின் தலை எழுத்து சோழ பாண்டியருக்கு பின் (13 ஆம் நுற்றாண்டுக்கு) தமிழர் அல்லாதவரே தமிழகத்தை ஆண்டுள்ளனர். எனவே தமிழக வரலாறுபடி, ரஜினியே தமிழகத்தை ஆழ்வார் போலும்..

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  தமிழகத்துக்கு தண்ணீர் தராத கர்நாடகனை தமிழ்நாட்டில் தூக்கிப்பிடியாமல் இருப்பது நல்லது .ரஜனி தமிழருக்கு என்ன செய்தார்? .தமிழுக்கு என்ன செய்தார்?இவர் ஒரு நடிகர் மட்டும்தான்.இவரை ஆதரித்தால் கருணாநிதி ஆட்சி செய்த மாதிரிதான் ஆட்சி செய்வார்.தமிழ்நாடு கர்நாடாகாவாக மாறிவிடும் .இன்று பாரதிராஜா விட்ட அறிக்கைகளை பார்த்தல் எல்லாம் தெரியும்

 • Rajappa - BANGALORE,இந்தியா

  ஆத்துல தண்ணி போகுது அவனவன் அள்ளி குடிங்கடா

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  வாழ்த்துக்கள் பலர் ரஜினியை விமர்சனம் செய்பவர்களிடம் ஒன்றே ஒன்று தான் சொல்கிறேன். மக்கள் சேவை செய்ய முன்வரும் எவரையும் பாராட்ட முன்வரவேண்டும். அப்படி பாராட்ட மனம் இல்லையென்றால், அமைதியாக இருங்கள். தயவுசெய்து தூற்றாதீர்கள். ரஜினி எளிமையான மனிதர். மக்கள் செல்வாக்கும், பணமும் கொண்ட எத்தனை பேர் எளிமையாக வாழ்கிறார்கள்? ரஜினி நிஜ வாழ்க்கையில் எளிமையாக வாழ்பவர். நல்லது செய்ய முன்வரும் அத்தனை பேரும் நல்லவர்களே. நம்பிக்கை தான் வாழ்க்கை. அடுத்தவரை தூற்றித்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலையில் இருக்கும் தமிழகத்தை ரஜினி மாற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்தால், நான் என்ன செய்வேன் என்று சொல்லி தான் ரஜினி அரசியலுக்கு வருகிறார். மற்ற அரசியல் தலைவர்களை தூற்றி அல்ல. நான் ரஜினி ரசிகன் துளிகூட கிடையாது. ரஜினியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. மாற்று அரசியல் கொடுப்பார். எதிர்கட்சிகளுடன், மத்திய அரசுடன் அல்லது பிற மாநில அரசுகளுடன் மோதல் போக்கை கொண்டு தான் அரசியல் நடத்த வேண்டும் என்பதில்லை. சாதூர்யமாக பேச்சுவார்த்தை நடத்தி, விட்டு கொடுத்து தான் சிறந்த நிர்வாகத்தை தர இயலும். பன்னீர் செல்வம் ஆந்திராவிற்கு சென்று, சந்திரபாபுவுடன் கலந்தோசித்து, தமிழகத்திற்கு தக்க நேரத்தில், தண்ணீர் வாங்கி வந்தார். இது போன்ற நிகழ்வுகள் தான், சாதுர்யமான அரசியல். எப்போதும் அடுத்தவர்களை குறை சொல்லிக்கொண்டு இருப்பவன், சிறந்த நிர்வாகி அல்ல. சிறந்த விமர்சகர். அதை தான் கெஜ்ரிவால் செய்து கொண்டு , மட்டமான அரசை தந்து கொண்டு இருக்கிறார். சீமான் இந்த லிஸ்டில் அடுத்த நபர். ரஜினி தமிழர் இல்லை என்றால் என்ன? அவர் இங்கிலாந்து காரராக கூட இருக்கட்டுமே? எத்தனையோ தமிழர்கள் இந்த தமிழகத்தை வஞ்சித்து விட்டார்கள். இங்கே இருக்கும் மணலை வெட்டி விற்கும், ஓட்டை விற்கும் தமிழர்களும் அதற்கு துணை போகும் தமிழ் தலைவர்களை விட, நல்லது செய்ய நினைக்கும் ரஜினி ஒன்றும் மோசமில்லை. தமிழகத்தில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளின் கையில், நமது தாய்மடியான மணலை விற்ற பணம் உள்ளது. எவரும் மனப்பூர்வமாக மறுக்க முடியாது. எந்த முட்டாள் சாமானிய தமிழனும் இதுவரை, எந்த கட்சிக்கும் தனது உழைத்த சம்பளத்தை நிதியாக கொடுக்கவில்லை. அனைத்தும் களவாடிய பணம் தான். நமக்கு சுதந்திரம் வாங்கி தரவேண்டும் என்று காங்கிரஸ் அமைப்பை ஏற்படுத்திய முதல் நபர் கூட ஏ ஓ ஹியூம் என்ற இங்கிலாந்து காரர்தான். இங்கிலாந்தில் உள்ள தனது சொத்தை விற்று தான், பென்னி க்யுக், நமக்காக அணை கட்டினார். தமிழகத்திற்கு நல்லது செய்ய முன்வரும் யாவரும், தமிழர்களே. இன்று தமிழகத்தின் தண்ணீர் மற்றும் இயற்கை காப்பாற்ற, பியூஸ் என்ற வடநாட்டு காரர் தான் பாடுபடுகிறார். "யாதும் ஊர் யாவரும் கேளிர் " என்று பாடிய இடத்தில, நாம் குறுகிய மனப்பான்மையுடன் யோசிக்க கூடாது.

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  மகிழ்ச்சி .... தமிழ்நாட்டில் ஊழலை வேரோடு அறுத்தெறியுங்கள்.....

 • Raju - jersi,யூ.எஸ்.ஏ

  வாழ்க வளர்க பாராட்டுக்கள் " தமிழ்நாடு முட்டாள்கள் கழகம் "

 • SaiBaba - Chennai,இந்தியா

  நமீதா, மீனாவா? வேண்டவே வேண்டாம். ரஜினி சார் - சகாயத்தை சேர்ப்பீர்கள் என்றால் பெருமை. நீங்கள் சென்னையை பார்த்துக்கொள்ளுங்கள், சகாயம் மதுரையை பார்த்துக்கொள்வார். நமீதா, மீனாவை எல்லாம் சேர்த்துக்கொண்டு உங்கள் பெயரைக்கெடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் தேர்தல் களம் இறங்கினால், இது வரை ஒட்டு போடாத 45% மக்கள் விரும்பி ஒட்டு போட முன் வருவார்கள். அனால் அதற்கு முன் நீங்கள் செய்துகொள்ள வேண்டிய அக்னி பரீட்சை அதிகம்.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  புதிய புரட்சி தலைவி அன்னை விந்தியாவும் ரஜினி கட்சியில் சேர்ந்து மந்திரி ஆக வேண்டும்.

 • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  போருக்கு தயாராகுங்கள் - பழம் பெரும் நடிகர் ரஜினிகாந்த் ............. ஒரு வேலை புருனே மன்னர் தமிழகம் மீது போர் தொடுக்க எண்ணியிருந்து அது இந்த கஞ்சனுக்கு/ ரஜினியிற்கு தெரிந்து இருக்குமோ ...........

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  சிவாஜி சார் கூட, திரு MGR உயிரோடு இந்த பொழுதே, அவர் கட்சி ஆரம்பித்திருந்தால், அக்கட்சி ஓரளவேனும் வெற்றிகளை பெற்று இருக்கும். ஒரு சக போட்டியாளனாக போட்டியிட்டு வெற்றி பெறுதல் என்பது ஒரு வகை. சந்தர்ப்பத்திற்க்காக காத்திருந்து போட்டியில் களம் இறங்குவது மற்றொறு வகை. முதல் வகையில் சக எதிரியை எளிதாக கணிக்க முடியும். இரண்டாம் வகையில் அந்த நிலை இருக்காதே?. ஆக கட்சிக்கு வெற்றியும் கிடைக்கலாம் (அல்லது) கட்சிக்கு செலவழித்த பணமும், கடலில் கரைத்த பெருங்காயம் போல ஆகலாம்.

 • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  அடுத்து கும்மாங்குத்து நடிகை ஷகிலா வின் ஆதரவும் தலைவர் " ஓட்ட வாயனுக்கே " .......

 • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  கட்சியின் பெயரை .... அகில இந்திய கஞ்சப்பிசினாரிகள் முன்னேற்ற கழகம் என்று வைக்கவும் (AIKMK )....அதுவே இவரின் குணத்துக்கு பொருந்தும் .....

 • sankar - trichy,இந்தியா

  ரஜினி வர வேண்டும் நல்லது செய்ய வேண்டும் . செய்யாவிட்டால் அவரையம் தோற்கடிக்கலாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement