Advertisement

'வாய்ப்பை தவறவிட்ட ஸ்டாலினை புகழ்வதா?'

'அரசியல் சீர்திருத்தம்பற்றி பேசிய ரஜினி, அதை செயல்படுத்திவரும், பிரதமர் மோடியை
பற்றி குறிப்பிடாமல், துணை முதல்வராக இருந்தும், நிர்வாக சீர்திருத்தம் செய்யும் வாய்ப்பை தவறவிட்ட ஸ்டாலினை பாராட்டுவது சரியல்ல' என, பா.ஜ.,வினர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

இது பற்றி, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசைகூறியதாவது: அரசியல் சீர்கேட்டை பற்றி, ரஜினி பேசியுள்ளார். பிரதமர் மோடி, நிதி சீர்திருத்தத்திற்காக, பண மதிப்பிழப்பு திட்டத்தை அமல்
படுத்தினார். விடுமுறை கூட எடுக்காமல், ஊழலற்ற ஆட்சியை கொடுத்து வருகிறார். நிர்வாக சீர்திருத்தம் பற்றி பேசும் போது, ரஜினி அவரை குறிப்பிடவில்லை. ஆனால், துணை முதல்வராக இருந்தும், நிர்வாக சீர்திருத்தம் எதையும் செய்யாமல், கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட ஸ்டாலினை, சிறந்த நிர்வாகியாக இருப்பார் என, சோ கூறியதாக பேசியுள்ளார்; ஜாதி அரசியல் செய்யும் திருமாவளவன், அன்புமணியையும் பாராட்டி உள்ளார்.மேலும், தன்னை அரசியல் கட்சியினர் பயன்படுத்தியதாக ரஜினி கூறியுள்ளார். நாங்கள் அவரை அன்பு காரணமாக சந்தித்தோம்; ஆதாயத்திற்காக அல்ல. பா.ஜ.,வில் சேரும்படி, ரஜினியை, இதுவரை அழைத்ததில்லை.
குடி, சிகரெட்டுக்கு எதிராக, அவர் பேசியது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement