Advertisement

வாய்ப்பை தவறவிட்ட ஸ்டாலினை புகழ்வதா?ரஜினி மீது பா.ஜ., காட்டம்

'அரசியல் சீர்திருத்தம் பற்றி பேசிய ரஜினி, அதை செயல்படுத்தி வரும், பிரதமர் மோடியை பற்றி குறிப்பிடாமல், துணை முதல்வராக இருந் தும், நிர்வாக சீர்திருத்தம் செய்யும் வாய்ப்பை தவறவிட்ட ஸ்டாலினை பாராட்டுவது சரி அல்ல' என, பா.ஜ.,வினர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
சென்னையில், தன் ரசிகர்கள் மத்தியில் நேற்று பேசிய ரஜினி, 'தமிழகத்தில் அரசியல் சீர்கெட்டு விட்டது. அதை சரிப்படுத்த வேண்டும்' என்றார். ஸ்டாலினை சிறந்த நிர்வாகி என்றதுடன், அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோரை யும் புகழ்ந்தார். ஆனால், பிரதமர் மோடி பற்றி எதுவும் சொல்லவில்லை. இது, பா.ஜ.,வின ருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது:அரசியல் சீர்கேட்டை பற்றி, ரஜினி பேசியுள்ளார். பிரதமர் மோடி, நிதி சீர்திருத்தத்திற்காக, பண மதிப் பிழப்பு திட்டத்தை அமல்படுத்தினார். விடுமுறை கூட எடுக்காமல், ஊழலற்ற ஆட்சியை கொடுத்து வருகிறார். நிர்வாக சீர்திருத்தம் பற்றி பேசும் போது, ரஜினி அவரைகுறிப்பிடவில்லை.

ஆனால், துணை முதல்வராக இருந்தும், நிர்வாக சீர்திருத்தம் எதையும் செய்யாமல், கிடைத்த வாய் ப்பை தவறவிட்ட ஸ்டாலினை, சிறந்த நிர்வாகியாக இருப்பார் என, சோ கூறியதாக பேசி உள்ளார்;ஜாதி அரசியல் செய்யும் திருமாவளவன், அன்புமணியை
பாராட்டி உள்ளார்.மேலும், தன்னை அரசியல் கட்சியினர் பயன்படுத்திய தாக ரஜினி கூறி யுள்ளார். நாங்கள் அவரை அன்பு காரணமாக சந்தித் தோம்; ஆதாயத்திற்காக அல்ல. பா.ஜ., வில் சேரும்படி, ரஜினியை, இதுவரை அழைத்த தில்லை. குடி, சிகரெட்டுக்கு எதிராக, அவர் பேசியது வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (92)

 • sivanesan - nagarkoil,இந்தியா

  " நாங்கள் அவரை அன்பு காரணமாக சந்தித்தோம்".. அப்பா .. ரஜினி மேல் இருக்கும் அன்பில் ஒரு துளி கூட நம் விவசாயிகளின் மேல் உங்களுக்கு இல்லையே...அது ஏன் ???? போய் வாயைக்கழுவு ....

 • kulandhaikannan -

  The problem with Rajni is that he always afraid of trouble makers. That is why he has praised the four leaders. In the same way, he invited Veeramani, Vaiko, D. Pandian, Thiruma etc to his daughters marriage, ignoring his loyal fans.

 • SaiBaba - Chennai,இந்தியா

  இத்தனைபேர் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதுன்னு வரிஞ்சு கட்டிக்கிட்டு நிக்கிறீங்களே,,அவர் இது வரைக்கும் யாரையாச்சும் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சொல்லி இருக்காரா? சரத்குமார், ராதிகா,குஷ்பூ, நக்மா, ராதா ரவி, கருணாஸ், ஏன் சசிகலா, தினகரன், தீபா etc., etc., எத்தனையோ பேர் அரசியலுக்கு வந்தாங்களேஅவங்களை எல்லாம் அரசியலுக்கு வரலாம் வரக்கூடாதுன்னு யாரையாச்சும் ரஜினி சொல்லி இருக்காரா? இல்லைஇத்தனை அரசியல்தலைவர்களும் அது பற்றி எல்லாம் கருத்து தெரிவித்திருக்கிறார்களா? அவர் அரசியலுக்கு வரட்டும், மக்களை சந்திக்கட்டும். ஒரு கட்டு மானத்தோடு மக்களை சந்தித்தால் அவர் வெற்றி பெறுவது உறுதி. தனக்கு பக்க பலமாக நேர்மையானவர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர் மக்களுக்கு அடையாளம் காண்பிக்க வேண்டும்.

 • வைகை செல்வன் - சென்னை,இந்தியா

  ரஜினி ஒரு நடிகன் .. அந்த அளவில் நிறுத்திக்கொள்வது அவருக்கு மரியாதை .. தமிழக மக்கள் இப்போது மாக்கள் அல்ல .. தெளிவாக இருக்கிறார்கள் ..

 • வைகை செல்வன் - சென்னை,இந்தியா

  indhiyan kumaru kooppaadu overaa irukkae..

 • skandh - chennai,இந்தியா

  தமிழகத்திலேயே சட்டத்தை மதிக்கும் ஒரே கட்சி ஆ தீ முல்லை கா . தலைமை எப்படியோ அப்படியே. தொண்டர்கள்.ஆன்மீகமும் ஆ தீ முல்லை காவே.எளிய தொண்டனும் பெரிய மனிதராகலாம் ஆ தீ முகாவிலேதான்.எம் எல் ஏ ஆகலாம், மந்திரிப ஆகலாம். முதல் மந்திரி ஆகலாம். ரஜினி ஏழைப்பங்காளர். நன்கு யோசித்து ஏழைப்பங்காளன் ஆகா முடிவெடுக்க வேண்டும்.ஆ தீ முல்லை கா வில் சேர வேண்டும்.ஆ தீ முருகா வை எம் ஜீ ஆர் , அம்மாவழியில் வழிகாட்ட வேண்டும். அதுவே ரஜினிக்கு சிறந்தது அவர் புகழ் நிலைத்து நிற்கும். நல்லவர் என்று.

 • sundaram - Kuwait,குவைத்

  இந்த ரஜனி ஜெயாவை எதிர்த்ததால் சன் டிவியும் திமுகவும் இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து விளம்பரப்படுத்தியது. பின்னர் இவரது படங்களுக்கு அதிக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன இதே சன் டிவியால். பின்னர் ரஜனி 25 என்று சிங்கப்பூரில் சிறப்பு விழாவினை சன் டி வி ஏற்பாடு செய்து ராஜனிக்கு பல கோடிகளை தாரை வார்த்து தானும் பல கோடிகளை சுருட்டிக்கொண்டது சன் டிவி. பின்னர் நன்றிக்கடனாக வாரம் தோறும் பாசத்தலைவனுக்கு பாராட்டு கூட்டம் நடந்தபோது தன் யாவாரத்தை பெருக்க எண்ணி ஒவ்வொரு வாரமும் மஞ்ச துண்டேந்தி ராஜனியார் கோவாலபுர குருமகா சந்நிதானத்தை நோக்கி பயணித்தார். இப்படியே இவருக்கு யாவாரா விளம்பரம் பெருகியதை தேர்தல் கமிஷனும் தன்பங்குக்கு இவருக்கு கையில் மை வைக்காமல் அனுப்புதல், இவர் வாக்களிக்கும்போது காணொளிக்கருவியை வாக்கு இயந்திரம் வரை அனுமதித்தல் என்றெல்லாம் செய்து இவரை பெரிய்ய்ய்ய மனிதன் ஆக்கியது. பின்னர்டீ குடிக்க இவர் வீட்டுக்கு தேடி வரும் அளவு நரேந்திர மோடியை உசுப்பியது. எப்படியாவது இவரை பாஜக கட்சிக்குள் இழுத்துவிடவேண்டும் என்று பாஜகவும், முயன்று பார்த்து தோல்வி அடைந்தது. இம்சை அரசியே பல முறை இவரை புகழ்ந்து அறிக்கை விட்டு எப்படியாவது இவர் பாஜகவுக்குள் வந்துவிடவேண்டுமென்று கனவு கண்டது உண்மை. ஆனால் அடிப்படையில் இவர் ஒரு தீவிர திமுக அனுதாபி. பாஜகவில் சேர்ந்தாலும் அங்கு இவர் திமுகவின் உளவாளியாக செயல்படுவார்.

 • Jhansi Jasan - chennai,இந்தியா

  உன்ன பத்தி புகழ்ந்திருந்தா சும்மா இருந்திருப்ப அதான உன் ஃபீலிங்கு...போதும் ரொம்ப பொங்காதீங்க பன்ரதெல்லாம் கேவலமான வேளை இதுல பேச்சு வேர உங்களுக்கு

 • Arumugam - Paris,பிரான்ஸ்

  தினகரனை தீட்டுவதுபோல் கொஞ்சம் ரஜினியை தீட்டினால், இந்த நடிகர் உடனடியாக உங்களுக்கும் வெண்சாமரம் வீசுவார். உங்கள் கட்சியிலும் சேர்ந்து விடுவார். இதை நீங்கள் முன்பே செய்திருக்கலாம்.

 • Mohan Nadar - Mumbai,இந்தியா

  ஊழலே செய்யாத சக்கரை குட்டிகள் ஜனாதிபதி தேர்தலில் வெல்ல எதுக்கு ஊழல் கட்சியின் ஓட்டுக்காக அலையுறீங்க

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  ரஜினியின் இந்த நாடகம் எதற்கு தெரியுமா.. எந்திரன் 2 .0 வெளி வரும்போது பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் பெரிய வற்றி பெறவேண்டும் என்பதற்காகவும் அரங்கேற்ற பட்டது..ரசிகர்களுக்கு அரசியலுக்கு வரப்போவதாக சொன்னால் தான் படம் பிரம்மாண்ட வெற்றி பெரும்..அதற்குத்தான் அவர்களுக்கு இந்த அல்வா ....இந்த நிகழ்ச்சிக்கு லைக்கா விடம் தனியே ஒரு அமௌன்ட் கறந்து விட்டிருப்பார்...

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  நஃபிஜேபி தமிழர் விரோத கட்சி மட்டும் அல்ல ....இப்போது ரஜினி விரோத கட்சி ஆகி விட்டது....

 • Balaji - Khaithan,குவைத்

  அனைத்து தலைவர்களையும் புகழ்ந்து பேசிவிட்டு இவர்கள் கட்சி சார்ந்தவர்களைப்பற்றி பேசாமல் விட்டது தான் இப்போது இவர்களின் ஆதங்கம்...... சற்று பொறுத்திருந்தால் இன்றோ நாளையோ அவர் கண்டிப்பாக பேசியிருப்பார் என்று தோன்றுகிறது....... ஏன்னெனில் தற்போதைய (அரசியலில் குதிக்கலாம் என்று கருதிய) சூழலில் அனைவரையும் அரவணைத்து செல்லவே இவர் விரும்புகிறார் என்று தோன்றுகிறது.......... எப்படியும் இவரது அரசியல் பிரவேசம் மற்ற கட்சியினரை பீதியடைய வைத்திருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத நிதர்சனம்.........

 • Sampath Kumar - chennai,இந்தியா

  நீங்க நல்லவங்க எல்லாரையும் பாராட்டலா செலெக்ட்டிவ் அமெக்னீசிய உள்ளவர்களை தான் பாராட்டுனீங்க நீங்க ஆக நீங்க தான் சூப்பர் செலெக்ட்டிவ் அம்னெசிய லீடர் வாழ்த்துக்கள்

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  ரஜினி வந்தால்தான் காவேரி தமிழகத்துக்கு நுழையும் . ரஜினி வந்தால்தான் குடிநீர் கிடைக்கும் . ரஜினி வந்தால்தான் வேலை கிடைக்கும் ? ரஜினி இதுவரை கர்நாடகாவிலிருந்து வந்து இங்குதான் இருக்கார் ? கோடிகளை குவித்துவிட்டு அதுக்கு மேல உக்காந்து இருக்கார் ? அதை குஞ்சு பொரிக்கவைக்க இப்பொது ஆள் தேடுறார் ? குஜால் புஜால் செய்து ஓடாத படத்தை ஓடவைக்கிறார் . இதுவும் வரவிருக்கும் டூப்பாக்கோர் ரஜினி படத்தை ஓடவைக்கும் ஒரு டூமில் விவகாரம் .அதை தமிழிசை தப்பா எடுத்துட்டார் ?அதுசரி சொர்ணாக்கா தமிழிசை , மோடி இதுவரை இந்தியாவுக்கு என்ன செய்துள்ளார் ? தமிழருக்கு தமிழக விவசாயிகளுக்கு என்ன செய்துள்ளார் ?வறட்சிக்கு என்ன கொடுத்தார் ? மோடியும் ,ரஜினியும் தமிழர்களை பொறுத்தவரையில் ஒன்றுதான் ? ஒருவர் பஸ் டிக்கெட் வித்தவர் சினிமா டிக்கெட் வித்து அதன் மூலம் பெருசாயிட்டார் இன்னொருவர் டி கடை வைத்தவர் இப்போது வரி பணம் வைத்து உலகம் சுத்தறார்.

 • SaiBaba - Chennai,இந்தியா

  ரஜினியைக் குறைகூறும் நீங்கள், உங்கள் சு.சாமி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறாரே, அவரை கண்டிக்க முடியவில்லையா?

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இறைவா..தமிழனை இவரிடமிருந்து காப்பாற்றுகிறீர்களோ இல்லையோ தயவு செய்து தமிழை இவரிடமிருந்து காப்பாற்றுங்கள்

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  50 % white ல..50 % black ல வாங்க முடிஞ்சுது இந்த ஸிஸ்டெத்துல தான் ன்னு இவருக்கு தெரியாதா ?? அப்போ தெரியலையா.. சிஸ்டம் கெட்டு போச்ச்சுன்னு ???

 • dharma - chennai,இந்தியா

  தமிழ்நாடு தலைவர்களை புகழ்கிறார்னு கான்டாயிடாதீங்க. ரஜினி கல்லா கட்டுறதுல கில்லாடி.முதல்ல ஜெயாவை கடுமையாக எதிர்த்தார்.அதன் பிறகு ஜெயா ரஜினியை பல முறை சீண்டியும் ஒன்று செய்யவில்லை மனுஷன் கூழை கும்பிடு போதே காலம் கடத்துகிறார்.இனி மோடி அடுத்து ராகுலை புகழ்வார்

 • gospelspeak -

  Rajini already started getting wrong footed with his comments. He must realise he is entering the very serious business of politics. otherwise he would surely end up like Vijaykanth.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  கொஞ்சம் கூட கூச்சப்படாம ஜாதி அரசியல் , ஊழல் ஒழிப்பு எல்லாம் எப்பிடிமா உங்களால மட்டும் பேச முடியுது ?? தெய்வ பிறவி .. சரி உங்கள எதுக்கு பிஜேபி தலைவரா ஆக்குனாங்க ?? அப்போவாது ஜாதி ஒட்டு எதாவது தேறும் என்று தானே ?? சரி ஜாதிக்கு ஊன்றுகோல் நம்ம மத தானே ?? அதையே வெச்சு பிழைக்கும் நாம் இதை பற்றி எப்படி பேசலாம் ?? ஊழலை வேற ஒழிக்குறாராம்.. கொடுமையான சிரிப்பு வெடி இதை விட வேறு ஏதாவது உண்டா ?? ஊழலை இன்னும் எளிதாக்க பல வழிகளை கொண்டு வரேல .. உங்க காதில இருக்க ஊழல் பெருச்சாளிகளையும் , உங்க அருமை கூட்டணி கட்சிகாரங்களையும் திரும்பி பாத்து பேசணும் ..

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  ஆட்டோகாரன் அசிங்க படுத்திட்டான் அவன் ஆட்டோ ஓனரையே

 • Vel - Chennai,இந்தியா

  நாங்கள் அவரை அன்பு காரணமாக சந்தித் தோம் ஆதாயத்திற்காக அல்ல. பா.ஜ., வில் சேரும்படி, ரஜினியை, இதுவரை அழைத்த தில்லை. ஆமா அக்காவுக்கு மீசையிலே மண் ஒட்டவில்லை.

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  சில கருத்துகள் எல்லாம் கேவலமா உள்ளது.... யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம் அதுதான் நிதர்சனம்... நானும் நீயும் கூட வரலாம்.... (என்ன எவனும் வோட்டு போட மாட்டான்)..... நான் அரசியல் பேசவில்லை.... டீ கடையில் வேலை செய்தவர் பிரதமர் ஆனா பெருமைப்படும் நாம்.... ஒரு நடிகன் அரசியலில் வந்தால் ஏன் இவளவு எதிர்ப்பு... கடைசியில் யாராகக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்போவது மக்கள்... ரிலாக்ஸ்.... (என்னை கேட்டால் அவர் அரசியலுக்கு வர வேண்டாம்.. ஏன்னா சினிமாவில் அந்த அந்த படத்துக்குதான் நடிக்கவேண்டும்.... அரசியலில் வந்தால் நித்தமும் நல்லவன் மாதிரி நடிக்கவேண்டும் )

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  இவ்வளவு பேசும் இவர்கள் ஜெயாவால் ரஜினிக்கு தொந்தரவு வந்தபோது அவரை காப்பாற்றியது மூன்றுபேர் ஸ்டாலின் கராத்தே தியாகராஜன் மற்றும் வெற்றிவேல் இவர்கள் அந்த நன்றி ரஜினிக்கு உள்ளது

 • sundaram - Kuwait,குவைத்

  ஆர் கே நகரில் நடப்பதாக இருந்த இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கலுக்கு முன்னாலேயே ரஜினி பகவான் கட் அவுட் கடவுள் எங்களுக்கு அருளாசி மொத்தத்தையும் அள்ளி அள்ளி வழங்கிட்டதாலே நாங்க ஜெயிச்சுப்புட்டோம்ன்னு தமிழ்நாட்டுல ஒரு அம்மணி கூவோ கூவுன்னு கூவினாங்களே, அந்த அம்மணி யாரென்று இந்த இம்சை அரசியாருக்கு தெரியுமா?

 • Kalyani S - Ranipet,இந்தியா

  "பா.ஜ., வில் சேரும்படி, ரஜினியை, இதுவரை அழைத்த தில்லை"............................... இனிமேலும் அழைக்க முடியாதபடி செய்துவிட்டார். ஒருவர் இமயமலை போய் நான் ஆன்மீகவாதி என்று காட்டிக்கொண்டவுடன் இந்தியாவில் உள்ள அனைத்து பாஜக தலைவர்களும் ரஜினி, இந்துத்துவா கொள்கைகளை பின் பற்றும் பாஜகவை ஆதரிப்பதாக கனவு கண்டு, இப்போது கனவு கலைந்தவுடன் பேந்த பேந்த விழிப்பது நன்றாக புலப்படுகிறது. ஆன்மீகமாவது, இந்துத்துவாவது............ உழைப்பே இல்லாமல் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்துள்ள ரஜினி பிழைக்கும் வழி தெரியாதவரா என்ன. தமிழ்நாட்டில் உங்களுக்கு உள்ள தகுதியை 2016 தேர்தலில் மக்களும், இப்போது ரஜினியும் உங்களுக்கு புலப்படுத்தி உள்ளார்கள்.

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  பிஜேபி உண்மை நிலவரத்தை அறிய வேண்டும்...இப்பல்ல எப்போதும் பிஜேபி தமிழகத்தில் காலூன்ற முடியாது..பி.ஜே.பி-யால் எந்த நேரத்தில் தமிழகத்தில் காலூன்ற முடியும்?.........பிஜேபியின் கொள்கை என்ன..?. மதவாதம், -இந்துத்வம் , இந்தி மொழி - .வடஇந்தியகாலச்ச்சரம்....இது தான் பிஜேபியின் டிரேட் மார்க்...தமிழகம் இவைகளை ஏற்குமா ..?.. ஏற்காது .. முஸ்லிம்களால் ஆளப்பட்ட வடஇந்தியாவில் தான் இந்துத்வம் விற்கும்..தமிழகம் மதம் செல்லுபடி ஆகாது..மற்றது இந்தி இந்தியென்றால் இந்தி மொழின்னு அர்த்தம் இல்லை..மொழி ஒரு கலசசரத்தை கொண்டது..இந்தி மொழி அடிமை களின் மொழி...தமிழர்களின் கலவச்ச்சரம் மேம்பட்டது..அப்படியிருக்கும் பொது தமிழர்கள் எதற்கு அடிமைகளின் கலசசரத்தை ஏற்பார்கள்...?....பிஜேபி தென் இந்தியாவிற்காக மாற வேண்டும். அப்படி .பிஜேபி மாறினால் கட்சியே இருக்காது..அதனால் தமிழக பிஜேபி ஆதரவாளர்கள் கட்சி மாறினால் அவர்களுக்கு நல்லது...இல்லை அவர்களும் காணாமல் போய்விடுவார்கள்..

 • sachin - madurai,இந்தியா

  இந்த வயதில் ரஜினி வருவது சரி இல்லை என்று தான் மக்கள் சொல்கிறார்கள் ....அவர் உடல் நிலை , முக்கியமாக மனநிலை காரணம் தினமும் இந்த அரசியல் வியாபாரிகள் எதாவது சொல்லி கொன்டே இருப்பார்கள் ...மத்தில இருக்கும் பூச்சாண்டி பா ஜா கா அரசாங்கம் தன்னுடைய குள்ளநரி வேலையை காட்டும் சி பீ ஐ மற்றும் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரி துறை இப்படி எதையாவது ஏவல் செய்து ரஜினி in நிம்மதியை கெடுப்பார்கள் ...

 • sachin - madurai,இந்தியா

  குற்றவாளி ஜெயாவை விட ...ஸ்டாலின் நிர்வாகம் சிறப்பு தான் .........( குற்றவாளி ஜெயா நிர்வாகத்தில் ஒரு மக்கள் திட்டம் கூட இல்லாமல் 3 லட்சம் கோடி கடன் வைத்து விட்டு போய் விட்டார் எது சிறந்த நிர்வாகம் ) ..........திமுக ஆட்சி காலத்தில் பல திட்டங்க வந்தன சிறப்பாக நடைபெற்றது ஆனால் கடன் 93 ஆயிரம் கோடி தான் ) ....அகா ரஜினி சொன்னது சரி தான் .....ஸ்டாலின் சிறந்த நிர்வாகி தான் ..........

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  தமிழ் மக்கள் இனி ஒரு எம்.ஜி.ஆர். செல்வி ஜெ ஜெ வழி ரஜினினியை ஆதரிப்பார்களா என்பது கொஞ்சம் நெருடலான விஷயம். எம்.ஜி.ஆர். செல்வி ஜெ ஜெ திராவிட கொள்கை வழி வந்து மக்களின் மனதில் இடம்பிடித்து பிறகு அரசியலில் ஜொலித்தவர்கள் ஜெயித்தவர்கள் ரஜினி அன்று 1996 செல்வி ஜெ ஜெ வை பற்றி கடவுளே ....... விமர்சம் மிக பெரிய அரசியல் வக்கிரம் இதே வார்த்தையை இதே ரஜினி மு.கருணாநிதிக்கோ, சோனியாவிற்கோ, இல்லை குறைந்தபட்ச்சம் ஸ்டாலினுக்கோ சொல்வாரோ நேற்று ரஜினி ஸ்டாலினை நிர்வாக திறமை என்று சொல்லும்போதே தெரிந்து விட்டது ரஜினி சினிமா ஹீரோ மட்டும் தான் நிஜவாழ்வில் மு.கருணாநிதி கூட்டத்தை பார்த்து பயப்படும் மனநிலையில் தான் உள்ளார் எம்.ஜி.ஆர். போலெ செல்வி ஜெ ஜெ வை போலெ மு.கருணநிதி கூட்டத்தை எதிர்த்து ரஜினி ஒரு வார்த்தை கூட சொல்லமாட்டேன் என்றால் தமிழ் மக்களே உஷார் நமக்கு மு.கருணாநிதியின் எந்த ஒரு ஏவல் தலைவரும் தேவை இல்லை முதலில் ரஜினி மு.கருணாநிதியை கூட்டத்தை தமிழ் மக்கள் துரோக அரசியலை பற்றி சொல்லட்டும் நான் நினைக்கிறேன் ரஜினி தேறமாட்டார் இவருக்கு குதிரை சவாரி குணம் தான் உள்ளது தமிழ் மக்களே காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். செல்வி ஜெ ஜெ பிறகு அண்ணாதிமுக என்ற ஒரு கட்சி அதோடு தமிழ் மக்கள் ஆதரவு சீமான், வேல்முருகன், வாசன், வளவன் என்று பாருங்கள் என்று ரஜினி ஸ்டாலினை நல்ல நிர்வாகி என்று சொன்னாரோ அன்றே அவர் மு. கருணாநிதிக்கூட்டத்தை பயப்படுகிறார் என்று தெளிவாகிவிட்டது எம்.ஜி.ஆர். செல்வி ஜெ ஜெ தங்கள் அரசியல் ஒரே ஒரு வரியில் முடித்தார்கள் மு.கருணாநிதி கூட்டம் எதிர்ப்பு அழிப்பு - உண்மையில் தமிழ் நாடு மக்கள் தமிழ் மக்கள் கொஞ்சம் யோசித்து பாருங்கள் நமக்கு எம்.ஜி.ஆர். செல்வி ஜெ ஜெ என்று இந்த இரு பெரும் தேவர்கள் கிடைக்கவில்லை என்றால் கண்டிப்பாக மு.கருணாநிதி தான் தமிழ் நாட்டை இன்றளவும் ஆண்டு, பிராண்டி, சுரண்டி, ஆக்ரமித்து, அத்துமீறி, சுயநல கூட்டத்தில், குடும்பத்தில் தமிழ் நாடு சின்னாபின்னமாகி போய் இன்றோடு பல ஆண்டுகள் தந்திருக்கும் தமிழ் மக்களின் காவல் தெய்வங்களாக எம்.ஜி.ஆர் செல்வி ஜெ ஜெ வந்ததால் தமிழ் நாடு இன்று இந்த அளவிற்கவது இருக்கிறது கொஞ்சம் யோசித்து பாருங்கள் மாறி மாறி வந்த ஆட்சிக்காலத்தில் எல்லாம் மு.கருணனைதி தமிழ் மக்களின் மண்ணையும் மானத்தையும் எப்படி எல்லாம் சீரழித்து சின்னாபின்னமாக்கினார் என்று. மு.கருணாந்திஹிக்கோ ஸ்டாலினுக்கு ஒரு அரசியல் ஆற்றலும் நிர்வாக திறமையும் இல்லை டாய் என்னவேண்டுமாலும் பண்ணிக்கொள்ளுங்கள் என் சீட்டுக்கு பதவிக்கு மட்டும் ஒன்றும் ஆகக்கூடாது - இது ஓன்று தான் மு.கருணாநிதியின் செயல்பாடு முத்திரை தமிழ் மக்களே, தமிழ் நாடு அரசே மு.கருணாநிதியின் ஆட்சி காலத்தின் எல்லா அரசு அணைகளை, செயல் திட்டங்கள் நடவடிக்கைகள் என்று எல்லாவற்றையும் மறு சீராய்வு செய்து பாருங்கள், மறு சீராய்வுக்கு உத்தரவிடுங்கள் எல்லாம் வெளியே வரும் தமிழ் நாடு அரசின் எல்லா துறைகளையும் சீரழித்தது மு. கருணாநிதி தான் இன்று போக்குவரத்து துறை இப்படி உள்ளதற்கு யார் காரணம் என்று உள்ளே போய் ஆராய்ந்து பாருங்கள் - விஷயம் புரியும் விவசாயிகளை இந்த துர் நிலைக்கு தள்ளியது யார் என்று தெரியும் தமிழ் நாட்டிற்கு ஒரு நல்ல அரசு செயலகம் கூட வராமல் செய்த பாவி இந்த மு.கருணாநிதி தமிழ் மக்களே மற்ற மாநிலங்களின் அரசு ஆட்சி பீடம் செயலகம் பாருங்கள் உண்மை தெரியும் தமிழ் நாட்டின் கிடைப்பதற்கரிய சொத்து ஆழிமுத்து தங்க தாரகை செல்வி ஜெ ஜெ என்ற வான் தனித்த தனி பொக்கிஷத்தை அழித்து போட்ட வக்ர புத்தி ஆள் மு.கருணாநிதி தமிழ் மக்களே நிதானமாக யோசியுங்கள் யாரை நிறுத்தவேண்டும் யாரை விரட்டவேண்டும் என்று உணர்ந்து செயல்படுங்கள் - அச்சு ஊடக, காணொளி மேதாவிகளின் பொய், புரட்டு, திரிபு பேச்சுகளுக்கு சிக்கி திசை மாறி விடாதீர்கள் - ஏதோ தமிழ் நாட்டில் ஸ்டாலின் மட்டும் தான் என்பதை போலெ ஒரு மாயை தோன்றம் செய்கிரார்கள் இத மேதாவிகள் ஏவல் வேலைசெய்கிறவர்கள் இவர்கள் தான்

 • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

  ஆமாங்க மோடியை பத்தி சொல்ல நெறய இருக்கு....இந்த மூணு வருஷ ஆட்சியில யாரும் ஊழல் புகார்ல சிக்கலை சந்தோசம்..அப்படின்னா லோக்பாலா கொண்டுவரலாம்? பின்ன ஏன் தயக்கம்? அதப்பத்தி பேசலாம்.. நாங்க ஆட்சிக்கு வந்த பாகிஸ்தான் ஊடுருவலை தடுப்போம் அப்படீன்னேங்க..ஆனா 234 வீரர்கள் உங்க ஆட்சியாளத்தான் செத்தாங்க..அதுக்கு ஒரு பெண் ப்ரா அனுப்பிச்சு உங்கள வாழ்த்துச்செ அதப்பத்தி பேசலாம்..இந்து தர்மம் என்ன சொல்லுது, பசிக்க கொல்லப்படும்போது கொலை பாவம் இல்லன்னு..ஆனா இங்கதான் மாட்டுக்காக மனுஷனா கொல்றோமே அதப்பத்தி பேசலாம். நிர்வாணமா விவசுயிங்க போராடனப்ப..வெளிநாட்டு பிளான் போட்டுட்டு இருந்தீங்களே அதப்பத்தி பேசலாம்..நிர்வாணமா பெண்கள் போராடுனாங்களே இது வாஜ்பாய் ஆட்சியில நடந்துச்சா? அத பத்தி பேசலாம்..கருப்பு பணம் ஒளிப்போம்ன்னுட்டு மக்கள் நடுரோட்டுல ஓட விட்டு 6 மாசம் டைம் குடுங்கன்னு சொல்லி இப்போ 6 மாசம் முடிஞ்சு போச்சே...அதைப்பதியும் பேசலாம்...இதைவிட ரொம்போ முக்கியம் இன்னும் தமிழ்நாட்டுக்கு கவர்னரை நியமிக்க குடுக்குறீங்க பாரு ஒரு லுக்கு..அதப்பத்தி பேசியிருக்கலாம்...தலைவர் மேல அதுனாலதான் கோவம் வருது..ஏன் தல இதைப்பத்தியெல்லாம் பேசல? தமிழ் ரொம்ப வறுத்த படுத்தே. பொதுவா ரஜினி தன நிலைப்பட்ட ஒவ்வொரு கலகட்டத்திலேயும் தெளிவா எடுத்திருக்கார். காமராஜர் காலத்தில் காமராஜர்..அவருக்கு எதிரானவர்..அப்படிங்கற நிலைப்பாடு தமிழகத்தில் இருந்துச்சு.. அடுத்து MGR காலத்துல கொஞ்சம் இடைவெளி வந்து..அவர் மறைவுக்கு பின் ஜெயலலிதா கலைஞர் அப்படிங்கற நிலைப்பாடுதான் மக்கள் எடுத்தாங்க இப்போ தமிழகத்திலே அந்தமாதிரி ஒரு மக்கள் மனம் கவர்ந்த தலைவன் இல்லை. கட்சிகள் இருக்கு ஆனா எல்லாம் ஓட்டுவங்கி குறைவாத்தான் வச்சிருக்கு. ஜெயலலிதா மேல எனக்கு பெரிய மரியாதை. அவர் ஆட்சியில நான் பாதுகாப்பை உணர்கிறேன். அவர் இருந்தப்போ அவளுவு பெரிய வருத்தம். கலைஞர் மீது பல குற்றச்சாட்டு எனக்கு இருந்தாலும் அவர் மேல மரியாதை மட்டும் குறையில. இவங்க பேச்சை கேக்கற்துக்கு பலர் தயாரா இருந்தாங்க..அவன்குளுக்கு அப்புறம் அந்த வெற்றிடம்..அத நிரப்பக்கூடிய அந்த கவர்ச்சி ஒரு மரியாதையை அது ரஜினியைத்தவிர வேறுயாரும் எனக்கு தோணல..இப்போ இருக்கறது ரஜினி, மற்றும் அவருக்கு எதிரானவங்க அவளவுதான்..இங்க தமிழன் அப்படீன்னு இனவுணர்வு, ஜாதிய உணர்வு அப்படிடீங்கறது எல்ல காலத்திலேயும் இருந்திச்சு. MGR இதே எதிர்கொன்றார், அவர் தமிழன் அப்படீன்னு நிரூபிக்க ஆய்வு கட்டுரையெல்லாம் வந்திச்சு. NTR அவர் கம்ப ஜாதிய சேர்ந்தவருன்னு அது முன்னிறுத்தி அவருக்கு எதிரே ஓட்டு சேகரிப்பு செஞ்சாங்க. இப்போ ரஜினி..ரஜினி தான் தமிழன்னு நிரூபிக்க ஆரம்பிச்ச ஆயுசுக்கும் போராடனும்..தமிழன்னு இன உணர்வுடன், கர்வத்துடனும் இருப்பது தப்பில்ல ..ஆனா இன வெறியோட இருப்பது... ஜாதி வெறியோட இருப்பது இரண்டுக்கும்பெரிய வித்யாசம் இல்லை. ஒரு உருவமே இல்லாத சாதி அமைப்பை வாழ வைப்பதற்காக, உயிருள்ள மனிதனை, அதுவும் காலம் காலமாக பீத்திக்கொள்ளும் அவன் சாதியை சேர்ந்தவனாக இருந்தால் கூட, தான் பெற்ற மகள் / மகனை கூட இழப்பதற்கு தயாராக இருக்கும் மனோபாவத்திற்கு இட்டு செல்லும் சைக்கோ மனநிலை தான் சாதி மற்றும் இன உணர்வு மறுக்க முடியுமா? தொண்டை அடைக்கும் துக்கமாக இருந்தாலும் சில மணி நேரங்களில் வெட்கமே இல்லாமல் வயிறு சோகத்தை மீறி சோறு கேட்கும், இதான் இயற்கை, இது மட்டுமே யதார்த்தம். இதை தாண்டி அனைத்துமே நாம் நமக்காக ஏற்படுத்தி கொண்டவை. அந்த ஏற்பாடு மனிதன் வாழ்வதற்கு இல்லாதவையாக இருந்தால் தூக்கி குப்பையில் வீசுங்கள். சாதியை ஏற்று கொண்டவன் எல்லாருமே சந்தர்ப்பம் கிடைக்காத கொலைகாரன் தான். கொலை செய்பவனும், அதை ஆதரிப்பவனும் ஒரே மாதிரியான ஆட்கள் தான்..ஜாதிய தூக்கியெறியாம நாம தமிழன் அப்படீனுக்கு உணர்வோடு பேசுறது நாமல்ல நாம கேலி போன்ற மாதிரி.... .இங்க தமிழன் அப்படீன்னு சொல்றவங்க கடந்த தேர்தலில் வந்து ஓட்டு போட்டுருக்கலாமே? ஏன் ஒட்டு சதவீதம் வெறும் 60 % மிச்சசம் 40 % பேர்? அவங்களுக்கு யாருக்கு ஓட்டு போடுறதுன்னா குழப்பம், எல்லாரும் ஒரே மாதிரின்னு விரக்தி, நாம ஒட்டு போட்ட மட்டும் மாறிடபோகுதுன்னு ஒரு எதிர்மறை எண்ணம்..இன்னும் பல காரணங்கள். கடந்த 40 வருட காலா தலைமுறை மாற்றத்தை யாரும் சரியா பயன் படுத்தாததால இன்றய தலைமுறை எப்பவுமே பகடி பண்ணிட்டு ஒரு வித வெறுப்பு மனநிலையுடன் இருக்கு. அதுதான் இணையத்தளத்தில நாகரீகமற்ற பேச்சு..இந்த எதிர் மனநிலையத்தான் ரஜினி அரசியல் லாபம் என்கிறார். இவர்களில் அரசியல் காட்சியையோ, வேற ஒரு நடிகரையோ சாராதவங்கள வெகு எளிதாக ரஜினி பக்கம் இழுக்கலாம். ஒரு வெளிப்படையான ஆட்சியை கொடுக்கரத்தின் மூலம்.. சிலவிஷயங்கள் நிறையப்பேர் திரும்ப திரும்ப அத பதிமட்டும் பேசுறாங்க...நான் ஒண்ணே ஒண்ணா மட்டும் இப்ப எடுத்து விளக்கறேன். சகோதரர் ஆறுமுகம் பழனியின் கருது காவிரி நீர் விவகாரத்தில் அவர் நிலைப்பாடு, காவிரி நீரை நாம் கிடைக்காதுன்னு வச்சுக்குவோம்..அப்போ நாம் என்ன பன்றது, ஒரு மாற்று வழி நாம யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..எனக்கு காவிரி தண்ணியே வேண்டாம். நிலத்தடி நீரை காப்பதுவோம், ஏறி குளங்களை தூர் வரி நீர் நிலைப்பாட்டை அதிகரிப்போம்..நதிநீர் இணைப்பு திட்டம் மணிலா அளவில் நடத்துவோம், விவசாயத்தை முன்னிறுத்துவோம். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழு மூச்சுல நடத்துவோம். கடலநீரை குடி நீர் ஆக்குவது போல கடல் நீரை கொண்டு விவசாயம் செய்யிற முயற்சில ஆராய்ச்சி செய்வோம்...இன்னும் பல. நான் நிபுணன் அல்ல. இது சாத்தியமா? அப்படின்னு கேக்காதீங்க..காவிரி நீர் பிரச்சனையா 1 இல்ல 2 வருஷத்திலே தீர்த்திட முடியாது. அப்பொடி ஒரு தீர்வுக்கு ஏன் ரஜினி ஒரு ஆரம்பக்கட்டமா இருக்க கூடாது? இது தான் நாங்க ரஜினி மேல வச்சுருக்க நம்பிக்கை..ஒரு முதல்வரா அவர் மீது நாங்க ஏற்படுத்துண்ண பிம்பம் இப்போ உயிர்த்தெழுந்திருக்கு. அவளவுதான்..இப்போ தான் கருவறையில் இருந்து வெளியில் வந்திருக்கு...ஆனா இந்த அரசியல் குழந்தை இப்போ இருக்கும் சூழ்நிலையில் தவழ ஆரம்பிக்கும் முன் ஓட வேண்டிய கட்டாயம். இது தான் ரஜினி முன் நிக்கும் சவால். அதைவிட்டு கருது சொலறவங்கெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. மனித பரிணாமத்தில் முக்கியமானது நிதானம் சிந்திப்பது கண நேரத்தில் தோன்றும் உணர்வை பரிசீலனைக்கு உட்படுத்துங்கள், அந்த புள்ளி மட்டுமே நமக்குமான வேறுபாட்டை பலநேரங்களில் நமக்கு உணர்த்தும்.

 • Rangarajan Pg - CHENNAI,இந்தியா

  அவர் மற்ற கட்சிக்காரர்களை புகழ்ந்து பேசியது காரணத்துடன் தான். தனது படம் வெளிவரும்போது ஏதாவது காரணம் கூறி அந்த படத்தை தடை செய்ய கோரி எந்த கட்சியும் கிளம்பி விட கூடாதல்லவா. ஆகவே தான் CRITICAL MIND உள்ள கட்சி தலைவர்களை பற்றி உயர்வாக பேசி இருக்கிறார்.

 • Rangarajan Pg - CHENNAI,இந்தியா

  அது ஒன்றுமில்லை, அந்த நேரத்தில் குடி போதையில் இருந்திருப்பார் ரஜினி. ஆகவே தான் வழக்கம் போல உளறி இருப்பார். கையில் சிகரெட்டை வைத்து கொண்டு அதை நன்கு ஆழமாக புகைத்து காண்பித்து அதன் தீமைகளை மக்களுக்கு விளக்கி இருப்பார். அவர் ஒரு மாமனிதர், தன்னை வருத்தி தமிழகத்தை உயர்த்த வேண்டி தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அது ஓடுவதற்கு வேண்டி அரசியல் பிரவேசம் எடுக்கிறார். ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார். படம் ஓடி வசூலை வாரி குவித்த பிறகு ரசிகர்களை மறந்து விடுவார். தானுண்டு தனது குடி உண்டு என்று இருப்பார்.

 • sundaram - Kuwait,குவைத்

  பா.ஜ., வில் சேரும்படி, ரஜினியை, இதுவரை அழைத்த தில்லை. அம்மணி இம்ஸை அரசியாரே, முதலில் நீங்கள் உதிர்த்த இந்த கருத்துக்கு பதிலை உங்கள் கட்சிப்பத்திரிக்கையான தினமலரிலேயே கண்டு பிடிக்கலாம். எத்தனை முறை எத்தனை வருடமாக கெஞ்சிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது புலனாகும்.

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  அவர் தமிழக அரசியல் பத்தி பேசினார்.... இங்கே மோடி எங்கே இருந்து வருகிறார்?..... யார் வாயை துறந்தாலும் மோடி துதி பாடவேண்டும் என்ற நோக்கு தவறு......

 • Rangarajan Pg - CHENNAI,இந்தியா

  ஸ்டாலின், அன்புமணி திருமா, சீமான் ஆகியோரை புகழ்ந்து பேசியதிலிருந்து ரஜினியின் தரம் நன்கு விளங்குகிறது. அது ஒரு கீழ் தரம் என்று தெரிகிறது.

 • பீ ஜெ பீ நேசன். - chennai,இந்தியா

  தமிழிசை சொல்வது " சீ சீ.. இந்த பழம் புளிக்கும் " கதை தான் ரஜினி அரசியலுக்கு வந்தால் இதை விட கீழ்த்தரமான விமர்சனங்கள் வரும்.. பொறுத்துதான் ஆக வேண்டும்.. இல்லை என்றால் ஓடி போக வேண்டும்..

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  MGR , ஜெயலலிதா,விஜயகாந்த் மீது இல்லாத விமர்சனமா ...அதை எல்லாம் உதாசீனப்படுத்தி விட்டு அவர்கள் அரசியலில் இருக்க வில்லையா .. பொது வாழ்க்கையில் இது சகஜம்.. இரன்டு நாள் மீம்ஸுக்கே இப்படி பொங்குகிறாரே.. இனி எதிர்காலத்தில் எப்படியோ .. இது தேறுகிற கேஸ் மாதிரி தெரிய வில்லை

 • Shanu - Mumbai,இந்தியா

  தமிழ்நாட்டில் பிஜேபியின் உண்மை நிலை மோடிக்கு புரியாது. தமிழக மக்கள் பிஜேபி ஏமாற்றும் காங்கிரீ போன்ற தேசிய கட்சியை ஏற்க மாட்டார்கள். அப்படி இந்த ரெண்டு கட்சியில் ஒரு கட்சி வந்தாலும், தமிழ்நாட்டின் தரம் போய் விடும் என்று தமிழக மக்களுக்கு தெரியும். தமிழ் நாட்டின் தனித்துவத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றால், தேசிய காட்சிகள் உள்ளே வர விட கூடாது. தென் இந்திய மக்கள் (தமிழ்நாடு, கேரளா , ஆந்திரா) அறிவானவர்கள்.

 • கூமுட்டை - Panchgani,இந்தியா

  ரஜினி பேசுவதிலெல்லாம் அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சி செய்வது மகா முட்டாள்தனம். ரஜினி தெளிவாகத்தான் உள்ளார். அவருக்கு என்ன பிரச்சனையோ ? அனால் ஒன்று . திருமிகு மோடி அவர்களுக்கு ரஜினியின் செர்டிபி கேட் எல்லாம் தேவையில்லை. ஒரு விஷயம் மோடிக்கு தமிழ் நாடு ஓட்டுப்போடாமலேயே தான் அவர் பிரதமரானார். ஆவார் . என்று தமிழ் நாடு உள்ள நிலையில் நமக்குத்தான் மோடி தேவை . தமிழக மக்கள் எனோ இதை காலம் காலமாக புரிந்து கொள்ளவில்லை . 67 க்கு பிறகு நம்மை ஆளும் கழகங்கள் நம்மை சுரண்டி பணக்காரர்களானார்களே தவிர ஏதும் செய்யவில்லை . காங்கிரஸோ அல்லது தேசிய கட்சிகளோ நம்மை ஆண்டிருந்தால் வளர்ச்சி இருந்திருக்கும் . அனால் கட்சிகள் தேசவிரோத , துவேஷ அரசியல் நடத்தி மக்களை மூளை ச் சலவை செய்து வைத்துள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இது போல் இல்லை

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  Rajinikanth is an opportunist, he will always support the party and leaders who will succeed in forthcoming elections. By ly supporting e based political leaders and mega corrupt political party leaders he has revealed his true colour. I hope he will not float any political party by taking high risk. He is not any development agenda to tamil nadu state. He never voiced for the major important causes of the state people. He wants to maintain his fans for the success of the forthcoming films. One of the retired judge has rightly pointed out the ignorance of the tamil people. We have completely ignored the leaders sacrificed their life for tamil people like, Kamarajji, Kakkanji and others.

 • கூமுட்டை - Panchgani,இந்தியா

  rajini

 • Ganapathy - Bangalore,இந்தியா

  பிஜேபி இந்த கருத்து மிக மோசமானது .எதிர் அணியில் இருந்தாலும் பாராட்டவேண்டிய விஷயத்தில் பாராட்டவேண்டும் என்ற புதிய சிந்தனை இப்போது எல்லா கட்சியினிடத்து உருவாகி உள்ளது. அதனால் ஸ்டாலினையோ ,அன்புமணியையோ பாராட்டியதில் குற்றம் காண்பது தவறு. மேலும் பாராட்டுகளை கேட்டு பெறுவது மிக கேவலம் . இதற்கு உள்ளாகவே ஹெச் ராஜா ,ரஜினி பெரியாரை ஆதரிக்கிற என்று கேள்வியை தொடுக்கிறார் . இது அதைவிட கேவலம் .தான் ஒரு கட்சியை தொடங்கும்போது ரஜினிக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவர்.யாரையும் பின்பற்றவேண்டிய அவசியம் இப்போது இல்லை . இப்போது உள்ள அரசியல் களத்தில், நல்ல சிந்தனையும் செயல்திறனும், ஆளும்திரனும் ,அனைவரயும் ஒருங்கிணைத்து போகும் வழியே தமிஸ்நாட்டிற்கு நல்லது . தீவிர மதவாதமோ, பாசிசமும் ,கம்முனிசமோ தேவையில்லை .பலதரப்பட்ட மக்கள் ,ஒன்றாய் வாழும் நாடு தமிழ்நாடு, இங்கே தீவிர மத மச்சரியங்கள் மற்ற மாநிலங்கள் போல இல்லை .எல்லாம் தமிழ் மொழியால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரஜினிக்கு அரசியலுக்கு வந்து தான் காசு, புகழ் சேர்க்கவேண்டும் என்பது இல்லை . குடும்ப வாழ்வில் ஒரு துறவி போல வாழும் ரஜினிக்கு மேற்கூறியவை தேவையும் இல்லை. ஆனால் பிரச்சனை என்ன என்றல், இவர்க்கு பின்னல் சேரும் கூடும், எல்லோரும் இவர் போல சிந்தனையுடன் இருப்பார்களா ? சந்தேகம் தான், கரணம் அரசியல் என்று வந்துவிட்டால்,அணிகளை கட்டுக்குள் வைக்க குண்டர் படையும், பொருளாதாரமும் தேவை, ஜெயலலிதாவின் பிரச்சனையும் இதுதான், அவருக்கு காசு பணம் தேவையில்லை, அனல் கட்சியை கட்டுக்குள் வைக்க சில நண்பர்கள் என்ற போர்வையில் உள்ள குண்டர்களின் துணை தேவைப்பட்டது, அவர்கள் அடிக்கும் லூட்டியில் இவரையும் ஒரு பங்காளி ஆகிப்போனார். கெஜ்ரிவாலின் கதையும் அதுவே, இல்லெயென்றால் ஒரு சாதாரண குரூப் -1 ஆஃபீசர் அல் ஒரு முதல் மந்திரி பதவி எடுத்தயெடுப்பிலேயே கிடைத்தாலும் சேர்மானம் சரியில்லை என்பதால் இதனை அவதூறு. இப்போது உள்ள சூழ்நிலையில் தேசப்பிதா வந்து கட்சி ஆரம்பித்தாலும் இந்த பிரச்னையை நேர்கொள்வார். அதனால் தான் அவர் காங்கிரசை கலைக்க சொன்னார். நன்றாக பாருங்கள் எல்லோரும் நேரு பின்னல் அணிதிரண்டனர் . காந்தி பின்னல் போனால் தெருவையே சுத்தம் செய்ய சொல்வுவர், சொந்த கக்கூசை கிளீன் பண்ண சொல்லுவார், சுதேசி பற்றி பேசுவார் ,கிராம நிர்வாகத்தை பலப்படுத்த சொல்லுவார், சாராயம் விற்க அனுமதிக்க மாட்டார். இவர் பின்னல் யார் போவார்கள், பன சேனா வாழ்க, பன சனா வாழ்க, நமோ வாழ்க, முக வாழ்க என்று தொண்டை கிழிய தட்டும் மனிதர்கள்ளூ அவ்வப்போது காசு அல்லது காசு கிடைக்கும் வழியை ஏற்படுத்தினால் ஒழிய அவர்கள் சொந்த வேலையே பார்க்க போய்விடுவார்கள். இதில் ஒரு வித்யாசம் தான் ரஜினி நேற்று கூறிய பண்டைய படை வீரர்களின் வழக்கை முறைகள் தேவை படும்போது வாருங்கள் மற்ற நேரங்களில் சொந்த வேலையோ, தொழிலையோ செய்யுங்கள், அதன் மூலம் பொருள் ஈட்டுங்கள் , என்னுடன் அரசியலுக்கு வந்தால்.உங்களால் காசு பார்க்க முடியாது என்பதே . இப்போது தேவை ஊரை அடித்து உலையில் போடும் கூட்டம் அல்ல, தீவட்டி கொள்ளைக்காரர்கள் அல்ல. தேவை வடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற மனதை உடையவர்கள், அது ரஜினியை இருந்தால் ரஜினி, ஸ்டாலினாய் இருந்தால் ஸ்டாலின் .வாசனை இருந்தால் வாசன், திருமா வை இருந்தால் திருமா... .உடனே ஏன் மோடியை இதில் உட்படுத்தவில்லை என்று கேட்காதீர்கள், அவர் இந்நாட்டின் முதல் மந்திரி, அவரை தமிழ்நாட்டின் முதல்மந்திரியாக்க முடியாது .

 • sam - Doha,கத்தார்

  முதலில் தமிழ் நாட்டிற்கு பிஜேபி ஏதாவது நல்லது செய்யட்டும். எல்லாவற்றிலும் முட்டுக்கட்டை. தமிழ் நாடு இன்றைய சூழ்நிலையில் எல்லாவற்றிலும் புறம் தள்ள பட்டு விட்டது. இதை விட்டு தமிழ் நாட்டில் தங்கள் வேர் உனலாம் என்று நினைத்தால் அது நிறை வேறுவது சந்தேகமே. இன்றைய தமிழ் நாட்டு பிஜேபி தலைவர்கள் எல்லாம் விதண்டா வாதம் பேசுவதில் தான் உள்ளார்கள். உருப்படியா தமிழ் நாட்டிற்கு எந்த உதவியும் இதுவரை செய்யவில்லை

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  காரணம் இல்லாமலா எலி அம்மணமாக ஓடும்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  உங்களை அவர் புகழாதது பற்றி சந்தோஷப்படுங்கள்... புகழ்ந்தால்... அவ்வளவுதான்... உங்களுக்கு மங்களம் பாடவேண்டியதுதான்...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  யார் அதிகாரத்துக்கு வர வாய்ப்புள்ளவர்களோ (தொளபதி அடுத்த முதல்வர் என்று இரஜினி நினைக்கிறார்) அவர்களுக்கு ஆதரவு என்பது ரஜினியின் நிலைப்பாடு... அதில் சமீபகாலத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை... பாஜக இரஜினியை நம்புவது வீண்....

 • Arumugam Palani - SALEM,இந்தியா

  அவர் அரசியலுக்கு வரட்டும் ..ஆனால் அரசியல் பற்றியும், தமிழ் நாட்டின் தலையாய பிரச்சனைகளை பற்றியும் அவருடைய கருத்துக்கள் என்ன என்பதை என்னைக்காவது வெளிப்படுத்தி உள்ளாரா? என்னிடம் திட்டம் உள்ளது என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம் .வியகாந்த் அப்படிதான் சொல்வார் ,,அவரின் செயல் பாடு பற்றி நாடறியும் ..முக்கியமாக கர்நாடகத்துடனான காவேரி பிரச்சனையில் அவரின் நிலைப்பாடு என்ன ? பல ஆண்டுகளாக நீடித்து இந்த நாட்டின் தலைமை நீதிமன்றத்தின் தீர்ப்பை துச்சமாக மதிக்கும் கர்நாடக பற்றி -அவர் பிறந்த மண்ணில் நின்று அவரால் கருத்து கூற முடியுமா? நான் பச்சை தமிழன் என்று கூறினால் மட்டும் போதாது ..அண்டி மாநிலங்களின் குறுகிய கண்ணோட்டத்தினை கண்டித்து அவரால் கருத்து கூற முடியாது ..சிஸ்டம் சரியில்லை என்று கூறும் அவரால் அதை மாற்ற அவரிடம் உள்ள திட்டங்களை பட்டியலிட முடியுமா? இந்த கால இளைஞர்கள் வெறும் வாய் பந்தலில் மயங்க மாட்டார்கள் .இத்தனை ஆண்டுகளாக வெறும் ஸ்டைல் பேச்சு பேசியே இளைஞர்களை குட்டிசுவராக்கிய இவர் எந்த கருத்தையும் பதிவு செய்யாமல் எல்லாவற்றையும் " மேலே இருப்பவன் " முடிவு செய்வான் என்பதை எத்தனை ஆண்டுகளுக்கு சொல்லி திரிவார் வெறும் பேச்சு கறிக்கு உதவாது ..திரு சீமான் சொல்வது போல நல்ல நடிகர்..ரசிக்கலாம் -அவரின் நடிப்பை..நாட்டை ஆள இந்த வயதான -அதுவும் உடல் நலிந்த நிலையில் தமிழ் நாட்டின் தற்போதைய நிலையில் அதன் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இவரின் உடலும் உள்ளமும் உதவாது ..

 • KrishnaMurthy -

  ரஜினி விட்டுக்கு ரைடு வரலாம் உஷ்சார்

 • udanpirappu3 - chennai ,இந்தியா

  எல்லோருடைய செயல்களை பாராட்டி சொல்வதில் கூட நயமாக கையாண்ட ரஜினியை பாராட்டத்தான் வேண்டும் .அவர்களோடு தான் அரசியல் செய்வார். நல்ல முடிவு . வாழ்த்துக்கள். BJP வாய்ப்பு பறிபோகிறதோ ??? திராவிட பாரம்பரியம் மற்றும் மொழியை காப்பாற்றினால் தமிழ் மக்கள் உங்களை கைவிடாமாட்டார்கள் என்பது திண்ணம்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அடுத்த படத்தை ஸ்மூத்தாக ரிலீஸ் செய்ய வசதியாகத்தான் ரஜினி இங்குள்ள சுல்லாண்டி காட்சிமுதல் திமுகவரையுள்ள இல்லாத தலைவர்களையும் பாராட்டினார் பிழைப்பு நடக்கவேண்டாமா? மற்றபடி கட்டாயத்தின்பேரில் குறைந்த சம்பளத்துக்கு கட்டுமரக் குடும்பப் படத்தில் நடித்த காயம் இன்னும் ஆறியிருக்காது

 • Mal - Madurai,இந்தியா

  Tamilians don't want actors and writers anymore. We want selfless people who know to work for the people and not act around. Modi ji went n talked , so many others wanted him to come to politics but actress nakma could only make him think about politics.... and take a step forward.... Let him do his job of acting in screens and not in stadiums/ mandapams. ...

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  அறையில் ஆடித்தான் அம்பலத்தில் ஆடவேண்டும். முதல் வீட்டு பிரச்சனையை தீர்க்கவும்.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இப்பதான் புரியுது எதுக்கு தமிழகத்தில் மட்டும் அரசியல்வாதிகளிடம் ரைடு நடத்தியது என்று, இவர்களை ஓரம் கட்டிவிட்டு பிஜேபி அனுப்பிய காலை தான் ரஜனி சார், இதுவரை அவரை அரசியலுக்கு வா? என்று கேட்டபோது வராமல் இருந்தார், இந்த வயதான காலத்தில் சினிமாவில் சரிவராது என்று தெரிந்து இப்போ அரசியலில் இணைய பார்க்கிறார், அவர் வருவது தவறில்லை, அவரை அவரின் ரசிகர்களில் பாதி பேர் அவருக்கு ஒட்டு போடமாட்டார்கள். அவரை நடிகராக, சூப்பர் ஸ்டார் ஆகா தான் பார்க்க ஆசைப்படுகிறார்கள். இதை என் அவர் உணரவில்லை, அப்போ உணர்ந்தவர் இப்போ அதை உணராதது ஏன்?இப்போ அவரின் பேச்சு தடுமாறுகிறது, நேற்று சொன்னார் தமிழர் ஏன் இப்படி கீழ்தரமானவர்கள் என்று, அவரின் படத்துக்கு டிக்கெட் விலைக்கு மேல் காசு கொடுத்து பார்க்கும் பொது மட்டும் தமிழன் என்னை வாழவைத்தவன் என்றார், இப்போ பேச்சு மாறுது, ஆனால் தமிழன் தமிழனை தலைவனாக வரவிடாவிட்டாலும், ஒருவனுக்கு கெடுதல் வரும் போது எச்சரிப்பான்.

 • naankabali - kovai,இந்தியா

  ஸ்டாலினை பற்றி ரஜினி சொன்னது மிதமிஞ்சிய கருத்து.அதுவும் சோ சொன்னதாக சொல்கிறார். எனக்கு தெரிந்து கடந்த 10 ஆண்டுகளில் துக்ளக் வாரஇதழிலோ அல்லது எந்தஒரு பொதுமேடைகளிலோ ஸ்டாலினை சிறந்த நிர்வாகி என்று சொன்னதே இல்லை. மேலும் அம்மையாரை தான் அவர் பலமுறை சிறந்த நிர்வாகி என்று சொல்லிருக்கிறார்.ஸ்டாலின் கலைஞரின் மகன் என்ற ஒரே காரணத்தில் மட்டுமே அவர் கட்சியில் இந்தளவுக்கு வந்திருக்கிறார் என்பதை மட்டுமே சோ மறுத்திருக்கிறார். அதாவது கனி,அழகிரி, இவர்கள் போல அல்லாது உழைத்து படி படியாக வந்திருக்கிறார் என்று பலமுறை சொல்லிருக்கிறார் . இது தான் உண்மை. இது தெரியாதோ அல்லது வழக்கம் போல் தானே குழம்பி உளறிருக்கிறார். திமுகவுக்கும் நிர்வாக திறமைக்கும் இருக்கும் வித்யாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம் போன்றது.

 • Karthik - Chennai,இந்தியா

  உலகின் தலை சிறந்த காமெடி "நாங்கள் அவரை அன்பு காரணமாக சந்தித் தோம் ஆதாயத்திற்காக அல்ல. பா.ஜ., வில் சேரும்படி, ரஜினியை, இதுவரை அழைத்த தில்லை.".உங்களின் ஒவ்வரு நடவடிக்கையும் அது ஆதாயத்திற்காக தான். காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க மாட்டேன் அது கர்நாடகாவின் தேர்தலை மனதில் கொண்டு தான். தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது சொன்ன கர்நாடக பிஜேபி டெல்லி மேலிடம் சும்மா இருந்த ரகசியம் என்ன. தமிழக விவசாயிகளை தமிழக மீனவர்களை கண்டுகொள்ளவில்லை. ஆனால் மேற்கு வங்கத்தில் போய் ஒரு வீடுயில் உணவு அருந்தினர். இதே பப்பு செய்யும் போது என்னமா கிண்டல் அடித்தீர்கள். நீங்கள் ஏன் செய்தீர்கள். அதும் ஆதாயத்திற்காக தான். நீங்கள் அழைத்த தில்லை ஆனால் வந்தால் நல்ல இருக்கும் என்று புகழ்ந்து சொன்னீர்கள். இதை தான் கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்று சொல்லுவார்கள். ரஜினி அவர்களும் மோடி அவர்களும் ஆதாயத்திற்காக தன்னை சந்தித்தார் என்று புரிந்துகொண்டார்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட போக்கா, நல்ல மளிகை கடை சரக்கு, தெருக்கோடியில் விற்க்கப்பட்டால் கூட, மக்கள் அக்கடையை தேடி சென்று மளிகை பொருட்களை வாங்குவார்கள். பிரதமர் மோடிக்கு இனிமேல்தான் விளம்பரம் வேணுமா?. ஒருவர் , அரசு சிஸ்டத்தை குறை கூறுமுன், அந்த அரசு சிஸ்டத்திடம், தன் பங்குக்கு, நேர்மையாக நாணயமாக, தன் வருவாய் கணக்கு காட்டினோமா என்று தனிமையில் சுயமாக கேள்வி கேட்டுக்க வேண்டும். சரியா?.

 • SaiBaba - Chennai,இந்தியா

  அவரு என்னதாங்க பண்ணுவாரு? இந்த நேரத்துல மோடியை புகழ்ந்து பேசினா உலகமே அவரு பா.ஜ.கவுல சேர்ந்துட்டாருன்னு முத்திரை குத்திடும். டீக்கடைல உக்காந்துக்கிட்டு இருக்கிற ரெண்டு பேர் கூட மணிக்கணக்கா அரசியலை அலசுறாங்க பேசுறாங்க, ரஜினி மட்டும் பேசக்கூடாதுன்னா என்னங்க அர்த்தம்? அவரு என்னதான் பண்ணுவார்? பா ஜ க மோடி மாதிரி ஒரு பொறுப்புள்ளவரை பிரதமராகக்கொண்ட கட்சி, அந்தகட்சியை சார்ந்தவர்கள் ரஜினி மோடியைத்துதி பாட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. மேலும் அவர் ஸ்டாலின், திருமா, சீமான் எல்லோரையும் புகழ்ந்ததற்கு காரணம், ரஜினி யாரையும் பகைத்துக்கொள்ள மாட்டார். நாத்தம்பிடிச்ச சேத்தை வாரி இறைக்கும் அரசியல் அவருக்கு வராது. நாகரீகமான அரசியல் என்றால் என்னவென்று தமிழகமக்கள் இனிமேல் தான் பார்க்க போகிறார்கள்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  ரஜினி அவரின் கருத்துக்களை தான் கூறியுள்ளாரே ஒழிய, ஒரு அரசியல்வாதியை போல பேசவில்லை. அவர் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. முக்கியமாக பிஜேபி யில் சேரவில்லை. அதற்கு முன்னரே, அவர் எப்படி ஸ்டாலினை புகழலாம்? என்று பிஜேபி காரர்கள் குறை சொல்ல கூடாது. ரஜினி அரசியலுக்கு வந்தாலும், சந்திரபாபு நாயுடு மாதிரி, மோடியுடன் இணைந்து பணியாற்றுவாரே ஒழிய, பிஜேபி கட்சியில் இணைய மாட்டார். அது தான் அவருக்கும் நல்லது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, பிஜேபி தலைவர்கள், தமிழர்கள் தியாகம் செய்ய வேண்டும், தேச துரோகிகள், ஹிந்தி மொழி கற்க வேண்டும், விவசாயத்தை அழித்துவிட்டு ஹைடிரோகார்பன் எடுக்க வேண்டும் போன்ற நல்ல நல்ல உபதேசங்களை தொடர்ந்து வழங்கி இருப்பதால், தமிழ்நாட்டில், பிஜேபி கட்சியில் ரஜினி இணைந்தால், பூஜ்யம் தான் கிடைக்கும். அதனால் தனி கட்சி ஆரம்பித்து, தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும். அவரின் மீது நம்பிக்கை உள்ளது. மத்தியில் உள்ள பிஜேபி கட்சியுடன் இணைந்து ரஜினி செயல்பட வேண்டும். இதைத்தான் பெரும்பாலான தமிழர்கள் விரும்புகிறார்கள்.தமிழ்நாட்டு பிஜேபி கட்சிக்காரர்கள் தான், ரஜினி பிஜேபி கட்சியில் சேர்ந்து, அவர்களை அமைச்சர்கள் ஆக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அது நடக்க போவதில்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement