Advertisement

பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயார் ஆய்வுக்கு பின் அருண் ஜெட்லி அறிவிப்பு

ஸ்ரீநகர்:''ஜம்மு - காஷ்மீர் எல்லையில், ராணுவம் தயார் நிலையில் உள்ளது. எந்த ஒரு சூழலை யும் எதிர்கொண்டு, எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க, வீரர்கள் துணிவுடன் உள்ளனர்,'' என, ராணுவத் துறைக்கு கூடுதல் பொறுப்பு வகிக்கும், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று கூறினார்.

அத்துமீறல்
ஜம்மு - - காஷ்மீர் மாநிலத்தில், இந்திய -- பாக்., எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி அருகே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
சமீபத் தில், நம் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்., ராணுவ வீரர்கள், நம் வீரர்கள் இரு வரை சுட்டுக் கொன்று, அவர்களின் தலைகளையும் துண்டித்து சென்றனர்.

இதற்கு பதிலடியாக,எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை ஒட்டி, பாக்., எல்லையில் அமைந்திருந்த பதுங்கு குழிகள் மீது, நம் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அடுத்தடுத்த தாக்குதலால், எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பு வகிக்கும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே ஆய்வு செய்தார்.

பின், ராணுவ உயரதிகாரிகளுடன், அவர் விவாதித் தார்.ஜம்மு -காஷ்மீர்மாநிலத்தில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்தும், அதை தடுக்க எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

எதிர்கொள்ளும்:பின், ராம்பூர் பகுதிக்கு சென்ற
அவர், அங்குள்ள வீரர்களுடன் கலந்துரையாடி னார். இது குறித்து, அருண் ஜெட்லி கூறிய தாவது:எல்லையில், நம் ராணுவம், எந்த ஒரு சூழலையும், துணிவுட னும், எழுச்சியுடனும் எதிர்கொள்ளும்; அதற்கு ஏற்ற வகையில் வீரர்கள் தயாராக உள்ளனர்.

ராணுவம், எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக் கும். ராணுவத்தின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (29)

 • K.Sugavanam - Salem,இந்தியா

  திறமையான பாதுகாப்பு அமைச்சர்..குறை கூறாதீர்கள்..இவ்வளவு திறமையான அமைச்சர் பல வருடங்களுக்கு அப்புறம் கிடைத்துள்ளது இந்தியா செய்த புண்ணியம்..VKK Menon கதை replicate ஆகாமல் இருக்க பிரார்த்திப்போம்.

 • Selva -

  Does he finance minister or defense minister

  • K.Sugavanam - Salem

   Both .

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இந்தியா பாகிஸ்தான் நாட்டை பழிசொல்லுவதும், பாகிஸ்தான் இந்தியாவை பழி சொல்லுவதும் வழக்கமாகி விட்டது. நடைபெறும் உண்மை செய்திகள் மறைக்கப்படுகின்றன. இந்த இரண்டு நாட்டு அரசியல்வாதிகளும் ஒருவரை ஒருவர் சவால் விட்டு மக்களை பயமுறுத்துவதே பிழைப்பாய் இருக்கிறது.

  • K.Sugavanam - Salem,இந்தியா

   Survival Tactics என சொல்கிறீர்களா ஜி..

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  என்ன சொல்றீங்க அய்யா ??? பண மதிபிழப்பு செஞ்சதால காஷ்மீரில் தீவிரவாதம் , கல் வீச்சு எல்லாம் ஒளிஞ்சிடுச்சுனு வாட்சப்பில உங்க கட்சியினர் டிசம்பர் மாதம் தொடங்கி மெசேஜ் அனுப்புனாங்களே ?? நம்ம ரூபாயை பாகிஸ்தான் கள்ள நோட்டு அடிச்சு தான் அவங்க பொழப்பே ஓடுது , அதையும் ஒரே அடியா மோடி நிறுத்திட்டார்னு வேற மெசஜ் வந்துச்சே ?? யாருக்குமே தெரியாம ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினோம் அதில் கால்வாசி பாகிஸ்தான் காலி.. இனிமே அவங்க துப்பாக்கி தூக்கவே பயப்படுவாங்கனு வேற சொன்னேங்களே அய்யா ?? பிறகு யார் கூட போரிட ராணுவ வீரர்களை இப்போ தயாரா இருக்க சொல்றீங்க ?? உங்களுக்கு ஒன்னும் தெரியாது , மோடியின் கடும் கடும் நடவடிக்கையால் பாக்கிஸ்தான் அழிந்து விட்டது .. இந்திய வல்லரசு ஆகி 6 மாசம் ஆச்சு ஜெட்லீ அவர்களே .. கண்ணா தொறந்து பாருங்க இந்தியாவை ..

 • Balaji - Khaithan,குவைத்

  பாதுகாப்பு விஷயத்தில் சிறிதளவும் பாரபட்சம் காட்டக்கூடாது....... அவர்களை உள்ளே வந்து தாக்குதல் நடத்தி செல்லும் வரை நாம் எதற்காக மவுனமாக இருக்க வேண்டும்...... தற்போது மீண்டும் ஒரு சர்ஜிக்கல் அட்டாக் செய்யவேண்டும்......... இதற்கு முடிவை எடுங்கள், வீரர்கள் எப்போதும் தயாராகத்தான் இருக்கிறார்கள்..........

 • Ramesh Sundram - Khazzan,ஓமன்

  உருப்படா பேச்சு இவர் மக்களால் தேர்ந்து எடுக்க பட்டவர் அல்ல இவர் ஒரு உதவாக்கரை அமைச்சர் . இவர் இப்படி தான் வீர வசனம் பேசி கொண்டு இருப்பர் பாதுகாப்பு துறையும் சரி நிதி துறையும் சரி இரண்டுமே தோல்வி தான் இவரால் ஏன் இன்னும் மோடி இவரை பதவியில் வைத்து இருக்கிறார் என்று தெரியவில்லை

  • r.sadagopan - ,

   யார் வந்தாலும் இப்படிதான்

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

   சற்று அதிகப்படியான பேச்சு இது.

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  தலீவா... அவர்கள் எப்போதும் தயார்தான்.... அவர்களை தடுப்பது இந்த வெட்டி அரசியல் பேச்சு..... அதிகாரம் உங்கள் கையில் உள்ளது.... கொஞ்சம் பிரியா விட்டு பார் தலீவா அப்போ தெரியும்.... ஆனா செய்யமாட்டே தலீவா..... கட்சி பாகுபாடு இன்றி எல்லா அரசியல்வாதியும் வாயில்தான் வடை சுடுவான்..... துப்பாக்கியை சுடமாட்டான் .... சுட விடமாட்டான்.... அப்புறம் எந்த நாத்தை புடுங்க.... அவன் தலையை புடுங்கிகிகிட்டேயேதான் இருப்பான் நாம் அறிக்கைவிட்டுக்கிட்டிதான் இருப்போம்... ராணுவத்தை கோமாளி ஆக்குவதுதான் உங்கள் வேலை. அப்போ என்ன னத்துக்கு வெளிநாட்டில் இருந்து நவீன ஆயுதங்கள் வாங்கீறீங்க? காசு சம்பாபதிர்க்க?..... எங்க கையை கட்டிப்போட்டு நாத்தை புடுங்க சொன்னா எப்படி? (நான் ஏதும் தவறா சொல்லவில்லை.... தினமலர் இந்த கருத்தை தணிக்கை செய்யக்கூடாது.... ஒரு முன்னால் ராணுவனின் குமுறல் இது...

  • K.Sugavanam - Salem,இந்தியா

   ராணுவத்துக்கே கிளாஸ் எடுப்பார் போல விட்டா..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இப்பிடியே சொல்லி சொல்லி உங்கள் தலைமுறையும் போய் விடும்... இதை வைத்து அரசியல் காமெடி செய்து கொண்டு இருக்க வேண்டியதுதான் .

 • Idli - Madras,இந்தியா

  மக்களால் நிராகரிக்கப்பட்டவர், அதே மக்களுக்கு எப்படி மந்திரியாய் இருக்கிறார் ?

  • s sambath kumar - chennai,இந்தியா

   மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் என்னத்த கிழிச்சாங்க ?. இவர் புத்திசாலி. நமக்குத்தான் நேர்மையானவங்களையும் புத்திசாலிங்களையும் புடிக்காதே. தண்டங்களை தானே காசை வாங்கிட்டு தேர்ந்து எடுக்கிறோம். இட்லி தோசைக்கு இதெல்லாம் புரியாது.

  • gafnbktec - doha,கத்தார்

   மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் என்னத்த கிழிச்சாங்க ? ராஜ்நாத்சிங்கையும், மோடியையும் சேர்த்து சொல்கிறீர்கள் என்று நினைக்கிறன். ஜெட்லீயின் நேர்மை, புத்திசாலித்தனம் உங்களுக்கு புரிகிற மாதிரி அவரை தோற்கடித்த பஞ்சாபி ஜனங்களுக்கு புரியவில்லை.ஆமாம் பஞ்சாபியர் எப்போது இட்லி,தோசை ஆனார்கள்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  புலி வருது .......

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பதில் அடி மட்டும் கொடுப்போம் என்பது ஆபத்தான அணுகுமுறை... அணுகுண்டை போட்டபின்னர்தான் திரும்ப தாக்குவோம் என்று சொல்வது அறிவீனம்... தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை முழு சக்தியையும் உபயோகித்து முதலில் அழிக்க வேண்டும்...

  • K.Sugavanam - Salem,இந்தியா

   போர் வரட்டும்...பார்த்துக்கலாம் என்பது மாதிரி..போரில் முதல் ஆதி கொடுப்பவர்தான் வென்றதாக நாமே பார்த்துள்ளோம் பாக்குடன்.1965 இல் பாக்கின் விமானப் படையை முதல் அதிரடி அடியில் செயலிழக்க வைத்ததை மறக்க கூடாது.

 • kundalakesi - VANCOUVER,கனடா

  ஜைட்லீ அடிக்கிற அடிய பாத்தா, மோடி க்ரிப்பு இவர் கையில இருக்குற மாதிரி தோணுது. ஒரே சமயத்துல ரெண்டு காஸ்ட்லீ குதிரை சவாரின்னா சும்மாவா? ( சொதம்பரத் தொட வக்கீலாச்சே)

 • vedru.varada - vannarapettai.. ,பெலாரஸ்

  நிதி துறையை சரியாக சமாளிக்க தெரியாத இந்த கோமாளிக்கு பாதுகாப்பு துறையா ?? இப்ப தான் தெரியுது, ஏன் நம்ம வீரர்கள் அடிவாங்குறாங்கன்னு

  • K.Sugavanam - Salem,இந்தியா

   ரெண்டு துறையும் இவர் கைகளில் தானே இருக்கு..

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  முதலில் பாதுகாப்பிற்கு தனி மந்திரியை அமர்த்தவேண்டும். அது எப்படி ஹிந்தி வாத்தியார் கணித பாடம் எடுக்க அனுமதிக்கலாம். நிதி அமைச்சரே பாதுகாப்பு மந்திரியும் கூடவாம். நல்லா இருக்கு. இந்த கூடுதல் ப்ரௌப்பு என்று தான் தற்காலிக நிரந்தர அமைப்பை வைத்திருக்கிறார்களோ? மோடி அங்கிளின் நிர்வாகத்தில் நான் காணும் பிழை நிர்வாக திறனின்மை என்றால் இது போன்றது தான்.

  • K.Sugavanam - Salem,இந்தியா

   அரசியல்ல ஹிந்தி வாத்யார்,கணக்கு வாத்தியார்னு எல்லாம் இல்லை.யாருக்கு கை ஓங்கி இருக்கோ அவங்க தான் கங்காணி.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

   கங்கானி?? ங்கே புதிய தமிழ் சொல். இல்லை இல்லை மிகப் பழைமையான அற்புதமான சொல்லாக இருக்கவேண்டும் . என் வாழ்வில் முதல் முறையாக இந்த சொல்லை படிக்கிறேன்? என்ன அர்த்தம்? ( கண்+காணி= கண்காணிப்பவர்= Supervisor)

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  இப்பிடியே வாயில வடை சுட்டு காலத்தை ஒட்டுங்க.....

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  சார் ஒரு சந்தேகம். இன்னும் எத்தனை வீரர்களை பாகிஸ்தான் கொன்று முடித்த பிறகு உங்கள் பதிலடி செயல்படுத்தப்படும்?

  • vedru.varada - vannarapettai.. ,பெலாரஸ்

   எத்தனை அல்ல.. எவ்வளவு நாட்கள்.... 2019 வரை இதே கதை தான் ஓடும்.. பிறகு தேர்தல் நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் அல்லது படம் காட்டப்படும்.. பிறகு பழைய கதை தான்.

 • Karthik - Pondy,இந்தியா

  எப்பவுமே பதிலடி கொடுக்க செய்யணுமா. முதலில் நாம என்னைக்கே செய்வோம். பேசாமல் எல்லாம் கட்சியிலும் வாய்யால் வாடா சுடும் நண்பர்களை கொஞ்சம் அனுப்புங்கள். வேண்டும் என்றால் எங்க கேப்டன் உதவி நாடுங்கள். அவரும் பறந்து பறந்து சுடுவார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement