Advertisement

ரூ.45 கோடி செல்லாத நோட்டு வருமான வரித்துறை ஏற்க மறுப்பு

சென்னையில் சிக்கிய, 45 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளை ஏற்று விசாரணை நடத்த, வருமான வரித்துறை மறுத்துவிட்டது.
சென்னை, கோடம்பாக்கத்தில், தண்டபாணி என்பவர் வீட்டில் இருந்து, 45 கோடி ரூபாய்
மதிப்பிலான, செல்லாத ரூபாய் நோட்டுகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, பைனான்சியர் கிலானி என்பவரிடம் விசாரணை நடந்துவருகிறது. மேலும், வருமான வரித்துறை யினரையும், சென்னை போலீசார் நேற்று சந்தித்து பேசியுள்ளனர்.

இது தொடர்பாக, வருமான வரித் துறையினர் கூறியதாவது:செல்லாத ரூபாய்நோட்டுகளுக்காக, பிப்ரவரியில், மத்திய அரசு தனி சட்டம் இயற்றியுள்ளது. அதன்படி, செல்லாத ரூபாய் நோட்டு வழக்கில், ரிசர்வ் வங்கி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, எங்களை பொறுத்தவரை வெறும் காகிதம்;
அதை ஏற்க முடியாது. ரிசர்வ் வங்கியும், சென்னை போலீசாரும் தான், இதுபற்றி விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (28)

 • Jebamani Mohanraj - Chennai,இந்தியா

  பணத்தை பிடித்தால் போதாது. அந்த பணம் யார் பணம் எப்படி சம்பாதித்தது என்று கண்டு பிடித்தால் நலம்.

 • Visu Iyer - chennai,இந்தியா

  ஆண்ட 570 கோடியையும் சேர்த்து தானே

 • Jhansi Jasan - chennai,இந்தியா

  என்னம்மா சமாளிக்குரானுங்க மோடி பாய்ஸ்...

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இந்தியாவை பொறுத்தவரையில் தற்பொழுது பி ஜெ பியின் மதிப்பு கிட்டத்தட்ட 65 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. காரணம் மக்களுக்கு அந்த கட்சியின் நடவடிக்கைகள் பிடித்துப்போயின என்றும் கூறலாம், அல்லது பழைய கட்சிகளை கண்டு வெறுப்புற்று இருக்கலாம் என்று கூறலாம். ஆனால் தமிழகத்தில் பல பெயர்களின் கருத்து கூறும் பலரும் எதோ கடுப்பில் இருப்பது ஏன் என்று புரியவில்லை. பி ஜெ பி யினால் இவர்கள் பாதிக்கப்பட்டார்களா அது எந்த வகையில் என்பதை விளக்கி கூறவும்.

 • Balaji - Khaithan,குவைத்

  இதென்ன புது விளக்கமா இருக்கு பிடிபட்டது வெறும் காகிதமாக இருந்தாலும் அது எப்படி அவரிடம் வந்தது, அதற்கு வருமான வரியை செலுத்திவிட்டாரா, இதுவரை எதனால் புதிய நோட்டுக்களாக மாற்றாமல் வைத்துக்கொண்டு இருக்கிறார் என பல கேள்விகள் இயற்கையாக வருகிறதே இதற்கெல்லாம் யார் விடை தேட வேண்டும்?????? இதெல்லாம் வருமான வரித்துறையின் கீழ் வராதா????? பாஜக சார்ந்தவர் என்று செய்திகள் வந்ததால் இந்த அணுகுமுறையோ என்ற சந்தேகம் எழத்தானே செய்கிறது..........

 • dharma - chennai,இந்தியா

  அவரு தமிழ்நாட்டுக்காரரா இருந்தா அல்லது எதிர்கட்சின்னா வருமான வரித்துறை களத்தில் இறங்கும். நாட்டிலேயே வரி ஏய்ப்பில் முன்னணியில் உள்ளவர்கள் குஜராத்திகள் தான், அங்கே வாரம் ஒரு முறை அல்லது தினம் 500 பேர் கொண்ட டீம் சோதனை நடத்த வேண்டும்.ஆனால் தமிழ்நாட்டைதான் வருமானவரித்துறை நோண்டுகிறது., கோக் பெப்ஸியை பிடிக்காமல் உள்ளூர் குளிர் பானமான பவண்டோவை நெருக்குகிறார்கள்.

 • Only Real No politics - Chennai,இந்தியா

  இந்த செல்லாத நோட்டுகளை பற்றி விசாரிக்க வேண்டியது புதிய சட்டத்தின் படி ரிசர்வு வங்கியின் கடமையாக இருக்கலாம். ஆனால் ஒருவருக்கு இந்த வருமானம் எப்படி வந்தது என்பது பற்றி விசாரிக்க வேண்டியது வருமான வரித்துறையின் கடமை ஏன் இவர்கள் தட்டிக்கழிக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை, ஒரு வேல இவர் ஆளும் கட்சியினர் என்பதால் இதை விசாரித்தால் நம் பதவி போய்விடும் என்று பயப்படுகிறார்களோ, மாற்ற முடியாமல் போன பணமே இவ்ளோன்னா அப்போ மாற்றிய பணம் எவ்வளவோ இருக்கும் ஏன்னா இவர் ஆளுங்கட்சி பிரமுகர் அதான் இந்த சந்தேகம் நல்லா விசாரியுங்கள் உண்மை வெளியில் வரும். தமிழ் நாட்டில் உடனடியாக ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று சொல்லுங்கள் மக்கள் இந்த விஷயத்தை மறந்து விடுவார்கள் நாமும் எளிமையாக மூடி மறைத்து விடலாம். எதிர்க்கட்சியினர் வைத்திருந்தால் மட்டும் தாம் அது கருப்பு பணம் அதையே ஆளும் கட்சியினர் வைத்திருந்தால் அதை பற்றி விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ன ஒரு நேர்மை. ஊழலற்ற அரசாங்கத்தை அமைப்பது தான் எங்கள் கடமை........... நாங்கள் நம்பிட்டோம்.

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  அதையும் சிபிஐ விட்டு கண்டு பிடியேன்.. இதுல வேற ஏதோ உள் குத்து இருக்கு.. அது பிஜேபி க்காரனுங்களுக்கு தான் தெரியும்..

 • smoorthy - bangalore,இந்தியா

  இது தான் இந்தியாவின் அவலம் / ஏன் எந்த அமைச்சகமும் பொறுப்பேற்று பிடி பட்ட பணத்தை பெற்று கொள்ள தயக்கம் காட்டுகிறது / பணம் பிடி பட்டது பிஜேபி ஆளிடம் என்பதாலா / பணம் பிடி பட்டது பிஜேபி ஆளிடம் என எல்லா ஊடகங்களும் வெளியிட்டது / இந்திய நிதி அமைச்சகம் ஏன் கண்டும் காணாதது போல் உள்ளது / இதை தான் அரசியல் செய்கிறார்கள் என சொல்லும் படி உள்ளது /

 • JeevaKiran - COONOOR,இந்தியா

  அது இப்போ வெறும் காகிதம்தான். ஆனால் அவ்வளவுப்பணம் அவனிடம் எப்படி வந்தது. அவனுக்கு அந்தளவுக்கு வருமானமா? அப்போ அந்தளவு வரி கட்டியிருக்கின்றானா? இதையெல்லாம் யார் விசாரிக்கணும்?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஏன் ஏன் ஏன் பொறுப்பில் இருந்து வழுக்கிக்கொண்டு போகிறார்கள்....எல்லாமே அரசு நிறுவங்கங்கள் தானே ...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இதில் காமடி - இந்த தண்டாயுதபாணி பாஜக தலைவர் என்று கதை வேறு விட்டு மோடி எதிர்ப்பாளர்கள் தீவிரமாக வதந்திகளை பரப்பினார்கள்... இப்பொழுது அவர்களை பொறுத்தமட்டில் மோடி தும்மினால் கூட உடனே அதற்கும் ஏதாவது செய்து கதை கட்டி விடுவார்கள்... வெட்டிக்கூட்டத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இதனை விசாரிக்கவேண்டியது ரிசர்வ் வங்கியும் அமலாக்கத்துறையும்தான் பழைய நோட்டுக்களை வைத்திருந்தால் அபராதம் மட்டுமே விதிக்க சட்டத்திலிடமுள்ளது அது கடத்தல் அல்லது ஹவாலா பணம் என ரிசர்வ் வாங்கி கருதினால் அமலாக்கத்துறையைவிட்டு விசாரிக்கலாம் இந்த ஆள் பாஜக உறுப்பினர் என்பதே சந்தேகம் எந்தப் பதவியிலும் இருப்பதாக ஆதாரமில்லை போலீசிடம் தப்பிக்க அப்படியொரு பொய்யைச் சொல்லியிருக்கலாம் இதில் மோசமான விஷயம் இந்த விவகாரத்தில் தனக்கு விசாரிக்க அதிகாரமில்லை எனது தெரிந்தும் தமிழகக் காவல் துறை விளையாடுவதேன் ? எடப்பாடியின் விளையாட்டோ?

 • R.Nagarajan - CHENNAI,இந்தியா

  இதே பிரமுகர் வேறு கட்சியாக இருந்தால் வருமான வரித்துறை இந்நேரம் அவருடைய ஜட்டியை உருவி இருக்கும். இவர் பிஜேபி ஆயிற்றே என்ன செய்வது?

 • Veeraiyah[Modi Piriyan] - KUALA LUMPUR,மலேஷியா

  பத்தாயிரத்துக்குமே வைத்திருந்தால் தண்டனை என்று அறிவித்தார்கள், ஓ அதெல்லாம் சாதாரண மக்களுக்குத்தானா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement