Advertisement

வெளிநாட்டுக்கு தப்பியோடும் குற்றவாளி சொத்துக்களை பறிமுதல் செய்ய மசோதா

புதுடில்லி:பொருளாதார குற்றங்களில் ஈடு பட்டு, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
சமீப காலமாக, பொருளா தார குற்றங்களில் ஈடுபடுவோர், வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வது அதிகரித்து வருகிறது. ஐ.பி.எல்., எனப்படும் இந்திய பிரீமியர் கிரிக்கெட் போட்டியில் முறை கேடுகள் செய்ததாக, தொடரப்பட்ட வழக்கில், அதன் தலைவராக இருந்த லலித் மோடி, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

அதேபோல், வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் நிலுவை வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா,
லண்டனுக்கு தப்பிச் சென்றார்.மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வருவதற் கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வரு கிறது. இது போன்ற பொருளாதார குற்றவாளிகள், சட்டத்தில் இருந்து தப்பிக்க, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதுதடுக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்திருந்தது.

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, 'இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்' என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். அதன்படி, பொருளாதார குற்றங் களில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச் செல்வோரின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யும் வகையில், சட்டத் திருத்தம் செய்யும் மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.

இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட் டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

இந்த வரைவு மசோதா, அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதன் மீது, ஜூன், 3ம் தேதி வரை கருத்துக் களை தெரிவிக்கலாம்.பொருளாதார குற்றங் களில் ஈடுபட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி செல் வதன் மூலம், நம் சட்டங்களை மதிக்காதவர் கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய, புதிய மசோதா வழிவகுக்கிறது. இந்த மசோதாவின்படி,
ஒருவர் பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றால், அவரை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக, சிறப்பு கோர்ட் அறிவிக்கும். அதைத் தொடர்ந்து, அவருக்கு சொந்தமான சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய முடியும். மேலும், இது போன்ற குற்றவாளிகள், இயக்குனர்களாக உள்ள நிறுவனங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன.

அதிக அளவில் வழக்குகள் சேருவதை தடுக் கும் வகையில், 100 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மோசடிகளில் இந்த நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (23)

 • Sivagiri - chennai,இந்தியா

  ப.சி அன் கம்பெனிக்காக வைக்கப்பட்ட ஆப்பு . ? ? ? . .

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  கொடநாடு, போயஸ் கார்டன், சிறுதாவூர் போன்ற உள்நாட்டு சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாதவர்கள், வானம் ஏறி வைகுண்டம் போக போகிறார்களாம்.

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  அடேய் ஒருத்தன் வெளிநாட்டுக்கு தப்பித்து செல்லணும்னு முடிவு பண்ணிட்டா அவன் எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு தான்யா போவான், மல்லையாவும் அப்படி தான் ஆனால் இவர்கள் தான் அவரை பற்றி தினமும் ஒரு செய்தியை போட்டு நம்மை மடையர்கள் ஆக்குகிறார்கள். அப்போ இந்த சட்டத்தில் ஒருவர் தப்பித்து போக அனுமதி உண்டு எந்த தடையும் இல்லை ஆனால் அவன் போன பிறகு இந்த சட்டத்தை பயன்படுத்தி அவனுடைய கோமணம் ஏதேனும் இங்கே இருந்தால் அதை அரசாங்கம் முடக்கி வைக்கலாம் அப்படி தானே, காக்காவை பிடிக்க துப்பில்லை அதோட கக்காவை பிடிக்கறதுக்கு ஒரு சட்டமா...........விளங்கிடும் நம் தேசம்.

 • Balaji - Khaithan,குவைத்

  வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருப்பதற்கு சட்டங்களை கடுமையாக்குவதை விட்டுவிட்டு தப்பி சென்று விட்டால் என்ன செய்யவேண்டும் என்று யோசித்து சட்டம் இயற்றுவது என்று முடிவெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்....... இந்த சட்டத்துக்கு குறைந்த பட்சம் என்று தகுதி வேறு, அருமய்யா..................

 • தமிழ் - ஈரோடு,இந்தியா

  வெளிநாட்டிற்கு ஓடுவது என முடிவு செய்றவன், எல்லாவற்றையும் முடிந்த அளவிற்கு சுருட்டிக்கொண்டு, வேறு ஏதாவது முன்னேற்பாடு செய்துவிட்டுத் தானே ஒடறான். மல்லையாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தால் வட்டிக்காவது ஆகுமா?

 • B.Indira - thane,இந்தியா

  நூறுகோடி என்பது கூடாது.தவிர அவர்கள் சொத்துக்கள் விலை போவதே இல்லை

 • gk -

  No need for exemptions. No need for minimum limit. No need for submitting bill in Parliament. Release emergency act immediately.

 • krishna - cbe,இந்தியா

  மல்லையா, கார்த்தி சிதம்பரம் போன்றோரின் சொத்துக்கள் பறி முதல் செய்ய படுமா ?

 • krishna - cbe,இந்தியா

  கார்த்திக் சிதம்பரம் மாட்டி கொள்ள வாய்ப்பு உண்டா???

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பொருளாதார குற்றங்களில் ஈடு பட்டு, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அப்பிடிய்யே லஞ்சலாவண்யத்தில் வாங்கிய சொத்துக்களையும் பறிமுதல் செய்ய ஏதாவது செய்யுங்களேன்...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பெரிய கமிஷன் மண்டி நடத்தும் பசி போன்றவர்கள் நூறு கோடிக்கெல்லாம் வேலை செய்யமாட்டார்கள் என்றாலும் கூட - நூறுகோடி வரை விதிவிலக்கு என்பது 'தவறு செய்யலாம்' என்று சொல்வது போல இருக்கிறது..

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இந்த சட்டத்தையும் கோர்ட் தள்ளுபடி செய்யும் வாய்ப்பே அதிகம் பெரிய பாக்காக்கிரிமினல்கள் அரசியல்வாதிங்களையும் சாதாரணக் குற்றவாளிகள்போல் சமமாக பாவித்து அவர்களுக்கு சலுகைகளைக்கொடுத்து அதிக பட்ச ஆதாரங்களைக்கேட்டு தப்பிக்கவிட கோர்ட் காரணமாகிவிடுகிறது கோர்ட்டின் வேலை சட்டத்தை அமல் படுத்துவதுமட்டுமல்ல நாட்டினமுன்னேற்றமும் ஒழுங்கும்கூடபல வகைகளில் கோர்ட்டின் கையிலுள்ளது

 • Shiva Kumar - Chennai,இந்தியா

  குற்றவாளியின் உறவினர்கள் அனைவரையும் கைது செய்யுங்கள்.. 30 நாட்கள் கெடு விதியுங்கள்... வரவில்லை என்றால் ஒவ்வொருவராக ஒவ்வொரு மாசமும் வெவ்வேறு நாடுகளுக்கு நாடு கடத்தி விடுங்கள்...

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  கண்ணுக்கு தெரிந்தே கார்த்தி சிதம்பரத்தை தப்பவிட்டுள்ளார்கள்.

 • Karthik - Chennai,இந்தியா

  உதாரணம்களா கூறப்பட்டவர்கள் ஆளும் கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் தான் என்பது இதில் ஆச்சிரியம். குற்றசாட்டு வந்தவுடன் அவர்களின் பாஸ்ப்போர்ட்டை முடக்கவேண்டும். அது மாதிரியாக சட்டம் கொண்டு வர வேண்டும். அதை விட்டு அவர்களை ஓடவிட்டபின் அவர்களின் சொத்தை பறிமுதல் செய்வது தும்பை விட்டு வாலை பிடிப்பது போல்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அசையா சொத்துக்கள், பத்திர பதிவின் பொழுது, வாங்குபவர் மற்றும் விற்பவர், ஆதார் எண்கள், பத்திர தாள்களின் அனைத்து பக்கங்களிலும் பிரிண்ட் செய்யப்படனும், சாட்சிகளின் ஆதார் எண் உட்பட. இதற்கு பிரதமர் மோடிஜி தகுந்த நடவடிக்கையை எடுப்பாரா?. இதைக்கொண்டு, ஆன்லைனில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை அரசாங்கங்கள் எளிதாக கைப்பற்றலாமே?.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement