Advertisement

10ம் வகுப்பு தேர்வு முடிவு: பிரின்ஸ் பள்ளிகள் சாதனை

சென்னை:மடிப்பாக்கம் மற்றும் நங்கநல்லுார் பிரின்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில்,10ம் வகுப்பு தேர்வு எழுதிய, அத்தனை மாணவர்களும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 174 மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில், எஸ்.சாய் கிருபா மற்றும் எஸ். சங்கரி, 495 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் இடம் பெற்றனர். இதில், சங்கரி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில், சென்டம் பெற்றார்; சாய் கிருபா, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் சென்டம் பெற்றார்.

மாணவி, கே.பிரியதர்ஷினி, 494 மதிப்பெண்களும்; சி.ஜே.அனுஷ் ரஞ்சித் ரெய்பீன், 493 மதிப்பெண்கள் பெற்று, அடுத்த இரண்டு இடங்களை பெற்றனர்.இப்பள்ளி மாணவ மாணவியர், பாடப் பிரிவுகளில், மொத்தம், 83 சென்டம் மதிப்பெண் பெற்றுள்ளனர். நங்கநல்லுார் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்,10ம் வகுப்பு தேர்வு எழுதிய, 156 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவி, எம்.பிரியதர்ஷினி, 498 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதல் இடம் பிடித்தார். பி.ஹரிபிரியா, 496 மதிப்பெண் இரண்டாம் இடமும், பி.பூஜிதா, 495 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement