Advertisement

எஸ்.சி.எஸ்., மெட்ரிக் பள்ளி சாதனை

குரோம்பேட்டை:குரோம்பேட்டை, எஸ்.சி.எஸ்., மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய, 84 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், ஒன்பது மாணவர்கள் பல்வேறு பாடங்களில்,100 க்கு, 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். 28 மாணவர்கள், 450க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 54 மாணவர்கள், 400௦க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தேர்வு வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி முதல்வர் பேபி சரோஜா, செயலர் சந்தானம், தாளாளர் கிருஷ் சந்தானம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அகாடமிக் உறுப்பினர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement